காதல் 10 | Ezhilanbu Novels/Nandhavanam

காதல் 10

Anu Chandran

✍️
Writer
அத்தியாயம் 10


காணும்

ஒவ்வாரு பொழுதிலும்

இந்த கந்தர்வனை

கவர்ந்திழுக்கும் வல்லமை

உன் காந்தக் கண்களிடம்

மட்டுமே உண்டென்பதை

அறிவாயா நீ?


ஷக்தியின் தூக்கத்தை தூர விரட்டியவன் தன் தூக்கத்தை ஐ மாஸ்க் அணிந்தபடி தொடர்ந்தான். இங்கு ஷக்தியோ எப்போதும் போல் தன்னுள் பேசத்தொடங்கினாள்.

“அப்போ வேதாளம் உண்மையாகதான் சொன்னானா? அப்போ நாம ஹனிமூன் போறோமா? ஹய்யா நான் ஹனிமூன் போறேன்... ஹே சூப்பரு.. ஹனிமூன் போற சாக்கை வச்சி அப்படியே லண்டன் ப்ரிஜ்ஜிக்கு கீழே இருந்து ஒரு செல்ப்பி எடுத்துட்டு வந்திடனும். ஆமா லண்டன் ப்ரிஜ் அமெரிக்காலயா இருக்கு? இல்லையே லண்டன் ப்ரிஜ் லண்டன்ல தானே இருக்கு. அப்போ லண்டன் அமெரிக்கால இருக்கோ? என்று யோசிக்க அப்போது அங்கு வந்து சரியாக ஆஜரானது அவளது மனசாட்சி.

“இப்படி யோசிச்சா நீ லண்டன் எங்கயிருக்குனு சரியாக கண்டுபிடிச்சிருவியா? வீட்டு பக்கத்துல இருந்த மாதா சிலையை யாரே அமெரிக்கா சுதந்திர தேவி சிலைனு சொன்னதை நம்பி உன் டீச்சரகிட்ட நான் அமெரிக்காவுல தான் இருக்கேனு சொல்லி அடிவாங்குன அறிவாளியாச்சே நீ”

“என்னை அசிங்கப்படுத்துறதுனா முதல் ஆளாக ஆஜராகிடுவியே நீ. அறியா வயசுல ஒரு அரைகிறுக்கன் சொன்னதை நம்பி அப்படி கேட்டுட்டேன். அப்போ கூட பாரு. அமெரிக்கால தான் அமெரிக்கா சுதந்திர தேவி சிலை இருக்கும்னு கரெக்டா கண்டுபிடிச்சிருக்கேன். அதை பாராட்டுவியா...”

“ஆமா ஏதோ கொலம்பஸ் கண்டுபிடிக்காததை இவ கண்டுபிடிச்சிட்ட மாதிரி. ஒழுங்கா படிக்கும் போதே ஜாக்கிரபியை சரியாக படிச்சிருந்தா இதெல்லாம் தெரிஞ்சிருக்கும்.”

“ இப்போ எது எங்க இருந்தா என்ன பிரச்சன.. எப்படியும் ப்ளைட்ல தான் போகனும். போற வழியில நாம இறங்க வேண்டிய ஸ்டேஷன்ல இறங்கிட வேண்டியது தான்.”

“என்னது ஸ்டேஷனா? சத்தியமா முடியல... எந்த காலத்துல செய்த பாவமோ உனக்கு மனசாட்சியாக வந்து இப்படி மாரடிக்க வேண்டியிருக்கு..”

“இங்கு பாரு செல்லம். எப்போதாவது வருவதற்கு பெயர் தான் மனசாட்சி. ஆனா நீ என்னை டேமேஜ் பண்ணுறதுக்காக ஒரு நாளைக்கு நூறு தடவையாவது வந்திடுற. அதனால நீ இதெல்லாம் அனுபவிச்சு தான் ஆகனும் உனக்கு வேற ஆப்ஷன் இல்லைடா செல்லம்.”

“வர வர நீ ரொம்ப ஓவரா பண்ணுற...”

“எல்லாம் சகவாச தோஷம் தான்டி செல்லம்.. இப்போ நீ என்ன பண்ணுற நான் சொல்லுறதுக்கெல்லாம் மறு பேச்சு இல்லாமல் ஆமா போட்டுட்டு வர... இல்லைனா சேதாரத்துக்கு கம்பெனி பொருப்பேற்காது.”

“போறேன். போய் தொலையிறேன்...” என்று அவள் மனசாட்சி விடைபெற்றிட மீண்டும் தன் ஹனிமூன் ஆராய்ச்சியில் இறங்கினாள் ஷக்தி.

“ஆமா பாஸ்போட்டுக்கு இந்த வேதாளம் என்ன பண்ணியிருக்கும்? பாஸ்போட் இல்லைனா பக்கத்துல இருக்க அந்தமானுக்கு கூட போக முடியாதே. அப்போ எப்படி அமெரிக்கா போறது? அப்படினா அமெரிக்கா ப்ளான் அம்போவா...? டேமிட்... இது தெரியாமல் சுதந்திர தேவி சிலைக்கு ப்ளயிங் கிஸ்ஸெல்லாம் கொடுக்க ரெடியாகிட்டியே ஷக்தி. உன் இரண்டு நிமிஷ கனவு இரண்டாயிரம் பீஸாக உடைந்து போயிடுச்சே... டிஸ்ஸபாயிண்டட் இன் தவுஸன் லேங்குவேஜஸ்...” என்று தன் அமெரிக்கா கனவு அரைநொடி கூட நிலைக்காததை எண்ணி வருத்தப்பட்டவளுக்கு இப்போது தன்னை வேதாளம் எங்கு கூட்டிச்செல்கிறான் என்ற ஐயம் எழுந்திட அது பற்றிய சிந்தனையில் இறங்கினாள் ஷக்தி. நெடுநேரம் சிந்தித்தவளுக்கு எதுவும் புலப்படாமல் போக தன் மொபைலை எடுத்தாள் ஷக்தி.

அதனோடு சற்று நேரம் போராடியவள் தன் வாட்சப்பை திறக்க அதில் ஜனனியிடமிருந்து மெசேஜ் வந்தபடியிருந்தது.

நேரத்தை பார்க்க அது மணி நான்கரை என்று காட்ட ஜனனிக்கு மெசேஜொன்றை தட்டிவிட்டாள் ஷக்தி.

அவள் எதிர்பார்த்தபடியே ஜனனியிடமிருந்து உடனே பதில் வந்தது.

“ஹேய் அஸ்வி கிளம்பிட்டீங்களா?”

“எங்கடி?”

“நீயும் அண்ணாவும் இன்னைக்கு பூமணி பாட்டி ஊருக்கு போறதாக அண்ணா சொன்னாரே?”

“ஓ... அதை கேட்கிறியா? நாங்க ஆன்தி வே தான்.”

“அப்புறம் எதுக்கு எங்கனு கேட்ட?”

“அது... ஆ.. உனக்கு நாங்க அங்க போறது தெரியாதுனு நினைச்சேன். அதான் எங்கனு கேட்டேன்” என்று ஷக்தி சமாளிக்க அதை உண்மையென்று நம்பினாள் ஜனனி.

“சரி நீ இவ்வளவு ஏர்லியாக என்ன பண்ணுற?”

“செமஸ்டர் எக்ஸாம்ஸ் நடக்குது அஸ்வி. அதான் படிக்கலாம்னு ஏர்லியாக எழும்பினேன்.”

“சரி. நீ படி. நான் ஆப்லைன் போறேன். ஆல் தி பெஸ்ட்.”

“தாங்க்ஸ் அஸ்வி. அப்புறம் ஹேப்பி ஹனிமூன். நல்லா என்ஜாய் பண்ணு” என்றுவிட்டு தேஜூவும் ஆப்லைன் போய்விட ஷக்தியோ மனதினுள்

“ஹேப்பி ஹனிமூனா? அதுவும் உன் அண்ணன் கூட.. ஹனிமூன்னு சொல்லி உன் அண்ணன் என்னை தனியாக தள்ளிட்டு வந்து என்ன பண்ணபோறாரோனு நானே பயந்துட்டு இருக்கேன். இவ வேற நேரங்காலம் தெரியாமல். ஜானு சொன்னதை வச்சி பார்த்தா வேதாளம் அதோட பாட்டி வீட்டுக்கு தான் அழைச்சிட்டு போகுதுனு கன்பார்ம் ஆகிடுச்சு. யாரு அந்த பாட்டினு தெரியலையே. நேத்து ரிசப்ஷனுக்கு வந்தாங்களோ? இல்லையே அப்படி யாரையும் வேதாளம் அறிமுகப்படுத்தலையே. யாராக இருக்கும்?” என்று யோசித்தபடியே தன் அலைபேசியை ஓரமாய் வைத்தவள் அப்படியே கண்ணயர்ந்தாள்.

சில மணிநேரங்களுக்கு பின் யாரோ தன்னை அழைக்கும் சத்தத்தில் கண்விழித்தாள் ஷக்தி.

மெதுவாக கண்களை கசக்கியபடியே விழி விரித்தவள் எதிரேயிருந்த சந்திராவை பார்த்து

“குட்மார்னிங்க.. அமெரிக்கால லேண்டாகிட்டோமாங்க?’ என்று ஷக்தி கேட்க அவளை விசித்திரமாக பார்த்த சந்திரா

“அமெரிக்காவா?”

“ஆமாங்க. இப்போ தான் ப்ளைட் ஏறுன மாதிரி இருக்கு. அதுக்குள்ள லேண்டாகிட்டோமா?” என்று கேட்க சுற்றும் முற்றும் பார்த்த சந்திரா

“லூசா நீ? நாம எப்போ ப்ளைட் ஏறுனோம்? கனவு ஏதும் கண்டுட்டு உளறுறியா?”

“என்னது கனவா? ஏங்க கனவுனா ஏர்போட்ல பேசுற மாதிரி டிங் டிங் டிங் அமெரிக்கன் ஹேர்லயன்ஸ் இப்போது அமெரிக்கா நோக்கி புறப்படத்தயாராக உள்ளது அப்படினு எல்லாமா வரும்?”

“ஓ மை காட். நல்லா கண்ணை திறந்து பாரு. நாம இப்போ நம்ம காருல இருக்கோம்.”

“இல்ல நீங்க பொய் சொல்லுறீங்க. அப்படி நாம கார்ல இருக்கோம்னா எப்படி காருக்கு வெளியில இப்படி வெள்ளையா இருக்கு? நாம ப்ளைட்ல தான் இருக்கோம். இப்போ ப்ளைட் வானத்துல பறந்துட்டு இருக்கு. அதான் வெளிய வெள்ளையாக தெரியிது.” என்று ஷக்தி வெளியே தெரிந்த பனிக்கூட்டத்தை பனியென்று கூற அதில் கடுப்பான சந்திரா

“பொண்ணை கட்டி வைக்கிறதுக்க பதிலாக ஒரு பைத்தியத்தை என் தலையில கட்டிவச்சிட்டாங்க.”

“சாரிங்க நீங்க சொன்னதுல ஒரு திருத்தம். நீங்க கட்டிக்கிட்டீங்க.”

“அப்போ நீ பைத்தியங்கிறதை ஒத்துக்கிற?”

“உங்க கூட சேர்ந்தபிறகும் ஒத்துக்காட்டி எப்படிங்கிற?”

“உன்கிட்ட வாய்கொடுத்தது தப்பு தான் ஆளை விடு.”

“புரிஞ்சிக்கிட்டா சரி தான். ஆமா எதுக்கு என்னை எழுப்புனீங்க? கிஸ் அடிக்கப்போற நேரத்துல எல்லாத்தையும் கொடுத்துவிட்டுட்டீங்க.”

“என்னது கிஸ்ஸா?”

“ஆமாங்க ப்ளயிங் கிஸ்.” என்று ஷக்தி கூற உள்ளுக்குள் புகைந்தபடியே

“யாருக்கு?”

“அது என் ட்ரீம் ஆளுக்கு..”

“அதுதான் யாருக்குனு கேட்கிறேன்?” என்று சந்திரா யாரென்று அறிந்கொள்ளும் ஆவலுடன் மீண்டும் கேட்க

“அதை ஏங்க நான் உங்களுக்கு சொல்லனும்?” என்று ஷக்தியும் அவனை வெறுப்பேற்றுவதற்கென்று ஏடாகூடமாக பதில் சொல்ல அதில் கடுப்பானவன்

“ஏன்னா நான் உன்னோட ஹஸ்பண்ட். உன்னை கேள்வி கேட்குற உரிமை எனக்கு இருக்கு.”

“ஆனா பதில் சொல்லுறதுக்கு எனக்கு விரும்பமில்லையேங்க. ஏன்னா அது என்னோட ட்ரீம்மு. அதுல வந்தது என்னோட ஆளு.”

“பைன். லீவ் இட். சாப்பிட ஏதாவது வேணுமா?”

“ஆமாங்க ரொம்ப பசிக்கிதுங்க. ஏதாவது பார்த்து பதமா பன்னாட்டு ஐயிட்டமா வாங்கிட்டு வாங்க."

“பன்னாட்டு ஐயிட்டமா அப்படினா?”

“பன்னாட்டு ஐயிட்டம்னா என்னனு தெரியாதா உங்களுக்கு? எனக்கும் சத்தியமா அப்படினா என்னான்னு தெரியாதுங்க. சும்மா ஒரு ப்ளோல சொல்லிட்டேன். இதையெல்லாமா நின்று நிதானிச்சு ஆராய்ச்சி பண்ணுவீங்க? போய் வயித்த நிரப்ப ஏதாவது வாங்கிட்டு வாங்க. போங்க. போங்க” என்று ஷக்தி சந்திராவை விரட்ட ஷக்தியை முறைத்தபடியே காரிலிருந்து இறங்கினான் சந்திரா.

அவன் இறங்கியதும் ஷக்தி

‘தூக்க கலக்கத்தில் கொஞ்சம் ஓவராக தான் உளறுறோமோ? ஆமாதான் போல. அதான் வேதாளம் அப்படியொரு லுக்கு விட்டுட்டு போச்சு. ஆனாலும் இந்த வேதாளத்தை கதறவிடுறது கூட நல்லா தான் இருக்கு. கிஸ் பண்ண போனேன்னு சொன்னதும் வேதாளத்தோட முகத்தை பார்க்கனுமே. ஹாஹா.. இதைதான் பாசசிவ்னஸ்னு சொல்லுவாங்களோ? அப்படியாக தான் இருக்கும். ஆனா நான் என் ஆளுனு சொன்னது சுதந்திர தேவி சிலையை தான்னு வேதாளத்துக்கு தெரிஞ்சிது அவ்வளவு தான். என்னை வச்சி செஞ்சிடும்.” என்று தனக்குள் பேசிக்கொண்டவளது கவனத்தை ஈர்த்தது வெளியே பெய்துகொண்டிருந்த அடைமழை.

ஷக்திக்கு மழை என்றால் கொள்ளைப்பிரியம். அதுவும் அடை மழையென்றால் ஷக்திக்கு அத்தனை இஷ்டம். மெதுவாக கார்கதவை திறந்துக்கொண்டு கீழே இறங்கியவள் கொட்டும் மழையில் நனையத்தொடங்கினாள்.

வானம் சற்று இருண்டிருக்க மழையோ குளிர்காற்றுடன் தன் ஆட்டத்தை தொடங்கியிருந்தது. ட்ரைவரும் சந்திராவும் அங்கிருந்த சிறு கடையில் டீயும் ஸ்நாக்ஸ_ம் வாங்கிவிட்டு குடையின் உதவியோடு காரிற்கு வந்தவர்கள் ஷக்தியை காணாது குழம்பினர்.

வெளியே மழை கொட்டுவதை உணர்ந்த சந்திரா கண்ணாடியை மெதுவாக இறக்கிவிட்டு பார்க்க அவன் எதிர்பார்த்தது போல் ஷக்தி மழையில் கொட்டமடித்துக்கொண்டிருந்தாள். அதை கண்டு சிரித்தவன் கண்ணாடியை ஏற்றிவிட்டு அவளது ஆட்டத்தை ரசிக்கத்தொடங்கியவனுக்கு பழைய நினைவுகள் படையெடுத்தது.

ஒரு முறை மழை நேரத்தில் அவனது கார் ப்ரேக் டவுனாகி ஓரிடத்தில் நின்றுவிட்டது. ட்ரைவர் வேறு கார் வரச்சொல்வதாக கூற அதை மறுத்தவன் ட்ரைவரிடம் தன் உடமைகளை கொடுத்து வீட்டில் ஒப்படைக்குமாறு கூறிவிட்டு காரிலிருந்த குடையை எடுத்து விரித்துப்பிடித்தவன் மழையை ரசித்தபடியே நடைபயில தொடங்கினான்.

மழை ஓவென்று கொட்டியபடியிருக்க அதை ரசித்தபடியிருந்தவனது உடலைத்தழுவிச் சென்ற குளிர்காற்று அவனின் இத்தனை நேர களைப்பை ஒரு நொடியில் இல்லாமல் செய்தது. அவன் கை தாங்கியிருந்த குடையின் ஒவ்வோர் விளிம்பிலுமிருந்து சிதறித்தெளித்த மழைத்துளிகள் இடையிடையே அவன் சட்டையை ஈரப்படுத்தியப்படியே இருக்க அவனோ அதை சட்டை செய்யவில்லை.

மழையினால் தூசுகள் தூக்கி வீசப்பட்டு மினுமினுத்த கட்டடங்கள் ஒருபுறமிருக்க மறுபுறம் மழையின் வருகையால் சிலிர்த்துக்கொண்டிருந்த தாவரங்கள் நீர்திவலைகளை தம்மீது சுமந்துகொண்டு அதன் குளிர்ச்சியை அனுபவித்துக்கொண்டிருந்தது.

சூழல் இவ்வாறு இருக்க சற்று தள்ளி ஒரு கும்பல் ஒரு ஐஸ்கிரீம் வண்டியை மறித்து அதன் வியாபாரியிடம் வம்பு பண்ணிக்கொண்டிருந்தது.

இதை தூரத்திலிருந்து பார்த்த சந்திரா என்னவென்று பார்க்க அருகில் செல்ல அங்கு ஷக்தி நின்றிருந்தாள்.

அவளை பார்த்ததுமே சந்திராவின் உதட்டில் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது. ஏற்கனவே ஷக்தியின் லூட்டியை கண்ணால் கண்டிருந்தவனுக்கு இன்று என்ன வம்பு காத்திருக்கிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திட ஓரமாய் ஒதுங்கி நின்று நடப்பதை கவனிக்கத்தொடங்கினான்.

அங்கு ப்ரணவியும் ப்ரதாப்பும் இன்னும் சில வாண்டுகளும் அந்த ஐஸ்வண்டியை சுற்றி நின்றுக்கொண்டு

“எனக்கு வெண்ணிலா”

“எனக்கு சாக்லெட்”

“எனக்கு மின்ட்”

“எனக்கு மேங்கோ”

“எனக்கு சாக்லட் வித் நட்’ என்று ஆளாளுக்கு ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டிருக்க ஷக்தியோ அந்த ஐஸ்கிரீம் வண்டிக்காரனிடம்

“உனக்கு போன தடவையே சொன்னேன். ஸ்ராபரி ப்ளேவர் கொண்டுவானு.”

“ஐயோ என்ன மேடம் உங்ககூட ஒரே வம்பாப்போச்சு. இன்னைக்கு இப்படி மழை பெய்யும் உங்ககிட்ட வந்து சிக்குவேன்னு நான் என்ன கனவா கண்டேன்”

“ஓ அப்படியே கண்டிருந்தா மட்டும் எடுத்துட்டு வந்திருப்பியா?”

“இல்ல மேடம். இந்த ஏரியா பக்கமே தலைவச்சி படுத்திருக்கமாட்டேன்.”

“என்னடா நக்கலா? ஓவராக பேசாமல் இவங்க கேட்கிற ஐஸ்கிரீமை எடுத்துக்குடு.” என்று கூற அந்த ஐஸ்கிரீம் வண்டிக்காரன் ஒவ்வொன்றாய் எடுத்துக்கொடுத்ததும் ஒவ்வொரு வாண்டும் ஷக்திக்கு நன்றி கூறிவிட்டு ஐஸ்கிரீமோடு அங்கிருந்து ஓட கடைசியாக ப்ரணவிக்கும் ப்ரதாப்பிற்கும் ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்த ஷக்தி பணம் குறைவாய் கொடுக்க

“மேடம் என்ன மேடம் உங்க ஐஸ்கிரீமிற்கு பணமே கொடுக்கல?”

“நீ தான் நான் கேட்ட ப்ளேவர்ல ஐஸ்கிரீம் தரலேயே?”

“ என்ன மேடம் இது அதுக்குனு?”

“ நான் ஏற்கனவே சொன்னபடி நீ என்னைக்கு நான் கேட்ட ப்ளேவர்ல ஐஸ்கிரீம் தர்றியோ அன்னைக்கு தான் உன் மொத்த பைசாவும் செட்டில் பண்ணுவேன். அதுவரைக்கும் உன்கிட்ட பாக்கி வச்சிட்டே தான் இருப்பேன்.” என்று கூறியவள் குடையோடு ப்ரதாப்பையும் ப்ரணவியையும் அழைத்துக்கொண்டு அருகிலிருந்த கடற்கரைக்கு செல்ல அவளை தொடர்ந்து சந்திராவும் சென்றான்.

கடற்கரைக்கு சென்ற மூவரும் கொட்டும் மழையை பொருட்படுத்தாது ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டு குடையை பிடித்தபடியே ஐஸ்கிரீமை உண்ணத்தொடங்கினர்.

அப்போது ப்ரணவி

“ஏன்கா நாமலும் ஏன் ஆதி பட த்ரிஷா மாதிரி மழையில நனைந்திட்டே சாப்பிடக்கூடாதா. அது இதைவிட இன்னும் நல்லா இருக்கும்கா.”

“குட்டிமா மழையில நனைந்துட்டே ஐஸ்கிரீம் சாப்பிட்டா ஐஸ்கிரீம் கரைஞ்சிடாதா? த்ரிஷாவிக்கு ஐஸ்கிரீமை விட மழை தான் முக்கியம். ஆனா நமக்கு ஐஸ்கிரீம் தான் பஸ்டு. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்டு தான். அதானால ஐஸ்கிரீமை ரசித்து ருசித்து சாப்பிட்டுட்டு அப்புறம் ஜோரா மழையில நனையலாம். அதோடு கொட்டுற மழையில இப்படி பீச்சுல உட்கார்ந்து குடையை பிடிச்சிக்கிட்டு ஐஸ்கிரீம் சாப்பிடறது கூட ஒரு தனி பீலிங் தான். இப்போ இரண்டு பேரும் ஐஸ்கிரீமை சாப்பிடுங்க.” என்றவள் தன் ஐஸ்கிரீமை மெதுவாய் பிரித்து கொட்டும் மழையை ரசித்தபடியே உண்டாள். தூரத்திலிருந்து அதை பார்த்திருந்தவனது மனதில் அவள் அமர்ந்திருந்த நிலையும் ரசித்து உண்ணும் அழகும் ஓவியமாய் பதிந்து போனது.

மூவரும் உண்டு முடித்ததும் குடையை மடித்துவைத்துவிட்டு மழையில் நன்றாக ஆடினர். அது போதாதென்று கடல் நீரிலும் விளையாடியானர்.

அன்றைய நினைவுகளிலிருந்து மீண்டவனது அதரங்கள் புன்னகையை தவழவிட்டது.

மீண்டும் ஷக்தியை கவனிக்கத்தொடங்கியவனது கவனத்தை கலைத்தது அவனது அலைபேசி.
 

Latest profile posts

Good morning Friends 😃😃😃
காதல் சிறகைத் தாராயோ -1 பதிவிடப்பட்டது. எனக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் கமென்ட் செய்யுங்க.
Thread 'காதல் சிறகைத் தாராயோ -1' https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-சிறகைத்-தாராயோ-1.812/
இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊

New Episodes Thread

Top Bottom