காதல் சிறகைத் தாராயோ -1

மீ.ரா

✍️
Writer
eiQ1G8E73863.jpg








இறகு 1





கட்டுப்படுத்த முடியாத



விதியின் காரணமாக



இந்தக் கூண்டுக்குள்



அடைபட்ட பறவையன்றோ...



கதவுகள் விலகக்



காத்திருக்கும் காரிகையன்றோ..



வானம் குங்குமம், மஞ்சள், திருநீறு , சந்தனம் ஆகியனவற்றைக் கலந்து செய்த ஓவியம் போலக் காட்சியளித்த மாலை நேரம். மாலைக் கதிரவன் தன் கடமை முடிந்தது எனக் கிளம்பிவிட்டான். ஈரோட்டின் அருகிலுள்ள மிகப்பெரிய திருமண மண்டபம். மண்டபத்திற்கு வெளியே அத்தனை விதமான கம்பெனிகளின் கார்களும் நிறுத்தப்பட்டு ஒரு கார் ஸோரூம் மாதிரி காட்சியளித்தது. வரபேற்றில் நின்றிருந்த பெண்கள் இனிதாய் புன்னகைத்து வருபவர்களை வரவேற்றனர். எந்த ஒரு தவறும் நடந்து விடக் கூடாது என்பதில் பணியாளர்களும் மிகுந்த கவனம் செலுத்தினர். கதிரவனுக்குப் போட்டி போடும் வகையில் வண்ண மின் விளக்குகள் ஒளிர்ந்தன. அம்மண்டபத்தில் குழுமியிருந்தவர்களின் அணிகலன்களும் நாங்கள் ஒன்றும் சளைத்தவர்களில்லை என மின்னின. எங்கும் மகிழ்ச்சி பொங்கியது.

“ பவித்ரா weds பிரவீண் “ தங்க எழுத்துகளில் சிவப்பு வண்ணம் கொண்ட போர்டில் மின்னியது. மலர் அலங்காரம் கண்ணைக் கவர்ந்து கொண்டிருந்தது. மண்டபத்திற்கு உள்ளே நுழையும் வாயில் சிவப்பு கார்பெட் விரிக்கப்பட்டு , கோபுர வடிவில் தூண்களை வைத்து வெள்ளையும் தங்க வண்ணமும் கொண்ட மின் விளக்குகள் சுகமான ஒரு வெளிச்சத்தை உமிந்து அதில் நடந்து போகிறரவர்களின் முகத்தின் சோபையைக் கூட்டின.

அதில் தாடியும் மீசையும் வைத்து அடையாளமே தெரியாமல் ஒருவன் பணியாட்கள் உடையில் முன்னேறினான். அவன் தென்னிந்தியாவின் யூத் ஸ்டார் என்பது அங்கிருந்தவருக்கு தெரியாத வண்ணம் நன்றாக மறைத்திருந்தான். திருமண நிகழ்வை ஒரு மூலையில் நின்று ஏக்கத்துடன் அவன் பார்த்தான். அவனால் பார்க்கத்தான் முடியும்.





பவித்ரா ஈரோட்டில் புகழ்பெற்ற ருக்மணி அம்மாளின் பேத்தி. அழகும் அறிவும் நிறைந்த பெண். ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தையையும் தாயையும் இழந்தவள். கோவையில் பிஹச்.டி படித்துக் கொண்டிருக்கிறாள். இருபத்தியைந்து எழில் மங்கை அவள். அமைதியான குணமுடையவள்.

பிரவீன் இருபத்தி எட்டு வயது இளைஞன். பார்ப்பவரைக் கவருபவன். கோயம்புத்தூரில் பெரிய தொழிலதிபர். சிறுவயதிலேயே தாய்தந்தையை இழந்தவனைப் பாட்டி தாத்தா தான் வளர்த்தனர். அவனும் நன்றாகப்படித்து தாத்தாவிடமிருந்து அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று உழைத்து முன்னேறியுள்ளான். பீரவீனும் அமைதியான வாழ்க்கையை விரும்புபவன். யாரிடம் எளிதில் பழகிவிடுவான். அவன் செய்யும் வியாபாரம் அவனுக்கு பல அனுபவங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. இவர்கள் இருவருக்கும் தான் திருமணம்.



மூகூர்த்தக்கால் நட்ட பின்பு வரவேற்பு நிகழ்விற்காக மேடையில் பொண்ணும் மாப்பிள்ளையும் ஏறினர். இருவரும் முகத்தை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொண்டிருந்தனர். சிரிப்பு இருவரின் கண்களை எட்டவில்லை. வாழ்த்த வந்தவர்களை இருவரும் புன்னகையுடன் வரவேற்று போட்டோ எடுத்துக் கொண்டனர். பரிசுகளை வாங்கிக் கொண்டனர்,

இரவு தேவன் எனக்கு உன்னிடம் இருக்கப் பிடிக்கவில்லை என்பது போல் பூமியை விட்டு விலகினான். இல்லை அவன் கதிரவனுக்கு பயந்து கொண்டு சென்றானோ யாருக்குத் தெரியும். சீக்கிரம் விடிந்துவிட்டது. காலையில் திண்டல் முருகன் கோயிலில் மூகூர்த்தம். திருமணம் நல்ல படியாக முடிந்தது.

பகல் பொழுது திருமணம் மற்றும் அதை சேர்ந்த சடங்குகளில் சென்றது. பவித்ராவின் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று சாமியை மாப்பிள்ளை பெண் இருவரும் தரிசனம் செய்துவிட்டு வந்தனர். பீரவீன் பவித்ராவின் பாட்டிகள் இருவரும் கல்யாண வேலைகளை சீறும் சிறப்புமாக மேற்பார்வைப் பார்த்து ஒய்வெடுத்து கொண்டிருந்தனர்.

பவித்ராவின் குடும்பம் ஜமீன் என்பதால் அவள் பாட்டியை மீறி யாரும் எந்த சச்சரவும் செய்துவிட முடியாது. சில விருந்தினர்கள் மட்டுமே இருந்தனர். பவித்ராவின் வீட்டில் முதலிரவு ஏற்பாடு செய்திருந்தனர். அவளை அலங்காரம் செய்து அறைக்குள் அனுப்பிவைத்தனர்.



பிரவீன் அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். பவித்ரா நுழைந்தவுடன் அலமாரியை நோக்கிச் சென்றாள். அதிலிருந்து ஒரு பத்திரத்தை எடுத்து பிரவீனிடம் கொடுத்தாள். அதை வாங்கிப் படித்தவனின் முகம் அதிர்ச்சியில் உறைந்தது. பீரவீன் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு இந்த திருமணத்தில் பெரிதான எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை.

ஆனால் பவித்ரா இந்தளவு செல்லக் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்து மண்டை காய்ந்தான். இந்த உணர்வுகளை அவன் முகத்தில் வெளிப்படுத்தவில்லை. பவித்ராவை உற்று நோக்கினான் . அவள் முகம் கிணற்றிலிட்ட கல் போன்று அமைதியாக இருந்தது.



அவள் மனநிலையை கணிக்க முடியாமல் தடுமாறினான். அவள் உடலில் எந்தவித நடுக்கமோ , பயமோ இல்லை. என்முடிவு இதுதான். இனி உன்பாடு என்று போல் நிர்மலமான முகத்துடன் நின்று கொண்டிருந்தாள். அவனுக்கும் வேறு வழி எதுவும் இருக்கிறதா என்ன? அவனால் இந்த திருமண பந்ததை தற்போதைக்கு முடித்துக் கொள்ள இயலாது.


.........சிறகு விரியும்.
 
Last edited:

மீ.ரா

✍️
Writer
டைவர்ஸ் உண்டு. இது கட்டாய கல்யாணம் கிடையாது.
 

Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom