காதல் கடன்காரா 25

அபிராமியின் வீட்டிற்கு அவசரமாக வந்த கார்த்திக் வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினான்.

தாத்தா அவனை ஹாலில் மடக்கி நிறுத்தினார். "எங்க வீட்டுக்கு வராதிங்கன்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. என் பேத்திக்கும் கூட உங்களை பார்க்க பிடிக்கல.. அவளை ஒரேடியா கொன்னுட்ட பிறகுதான் உங்களுக்கு நிம்மதியா இருக்குமா.?" என்று கேட்டார் அவர்.

கார்த்திக் கெஞ்சலாக அவரை பார்த்தான். "ப்ளீஸ் தாத்தா.. இந்த ஒரு முறை மட்டும் நான் அவளை பார்த்துட்டு போயிடுறேன்.. எனக்கும் அவளை ரொம்ப பிடிக்கும்.. இது மிஸ்அண்டர்ஸ்டேன்டிங்.. அவ என்னை புரிஞ்சிக்க மாட்டேங்கிறா.. நான் என் பக்கத்து நியாயத்தை விளக்கி சொல்ல நீங்களாவது சந்தர்ப்பம் கொடுங்க.." என்றான்.

அவனது கெஞ்சலை கண்டுவிட்டு தயக்கமாக தள்ளி நின்றார் தாத்தா.

அபிராமியின் அறைக்கு ஓடினான் கார்த்திக். கதவு ஒரு பக்கத்தில் உடைந்து விரிசலோடி கிடந்தது.

அபிராமி கண் மூடி கட்டிலில் படுத்திருந்தாள். அவளின் வலது கையில் டிரிப்ஸ் இறங்கிக் கொண்டிருந்தது. மேஜையின் மீது சில மருந்து பொருட்கள் இருந்தன.

சத்தம் கேட்டு கண் விழித்த அபிராமி பார்வையை திருப்பிக் கொண்டாள். அவளின் விழிகளில் இருந்து கண்ணீர் சிந்தியது.

அபிராமியின் அந்த பக்கத்தில் அமர்ந்திருந்த முத்தமிழ் கார்த்திக்கை ஆத்திரத்தோடு பார்த்தான்.

"இன்னும் என்னவெல்லாம் ஆசை உனக்கு.? கல்யாணம் பண்ணிக்க இருந்தவளை கடத்திட்டு போன.. கட்டிக்கிட்ட பிறகும் நீ இவளை நல்லா வச்சிருக்கல.. இப்பவும் அதேதான்.. நீ ஒரு ப்ளேபாயா இருப்பன்னு கனவுல கூட நான் நினைக்கல.. என் தங்கச்சி உனக்காக என்னையே எதிர்த்துட்டு உன்னோடு வாழ்ந்தா.. அவளை எத்தனை முறை எங்க வீட்டுக்கு வர சொல்லி கூப்பிட்டேன் தெரியுமா.? ஆனா உன் மேல இருந்த லவ்வுல எங்க வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டா.. முத நாள் நான் அவ கழுத்துல இருந்த தாலியை கழட்டியதுக்கே என்னோடு சண்டை போட்டா..

உங்க அளவுக்கு நாங்க ஒன்னும் மாடர்ன் பேமிலி கிடையாது கார்த்திக்.. என் தங்கைக்கு தாலி, புருசன், பதிவிரதம் இது மேல எல்லாம் ரொம்ப நம்பிக்கை.. எங்க பாட்டி இவளையும் பழமாவே வளர்த்துட்டாங்க.. நீ அதை யூஸ் பண்ணி இவளோட மனசை உடைக்கிற.." என்றான் கோபத்தோடு.

தனக்காக இந்த வீட்டிற்கு வர மாட்டேன் என்று அவள் மறுத்ததை கேட்ட பிறகு கார்த்திக்கிற்கு மனம் இன்னும் பாரமானது. "அபிராமி.." என்றான்.

அபிராமி இவன் பக்கம் திரும்பவே இல்லை. அவளின் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் சிந்திக் கொண்டே இருந்தது.

"என் மனசுல உன்னை தவிர சத்தியமா வேற யாருமே இல்ல அபிராமி.. என்னை நம்பு.. ப்ளீஸ்‌‌.." என்றான்.

"ஓ.. அப்படின்னா இதெல்லாம் என்ன.?" என்று சில புகைப்படங்களை எடுத்து கார்த்திக்கின் முன்னால் வைத்தான் முத்தமிழ். கார்த்திக் வேறு சில பெண்களோடு நெருக்கமாக இருப்பது போல இருந்தது அது அனைத்திலும்.

"இதையும் பொய்யுன்னு சொல்ல போறியா.? உன் லட்சணம் எல்லாத்தையும் எவனோ ஒருத்தன் போட்டோவா எடுத்து எங்க வீட்டுக்கு பார்சல்ல அனுப்பி வச்சான். இதை பார்த்த பிறகு இந்த அரை மெண்டல் சூஸைட் பண்ணிக்க டிரை பண்ணிட்டா.. இதே பேன்லதான் துப்பட்டாவை மாட்டி கழுத்துல மாட்டினா.. கதவை உடைச்சி இவ கழுத்துல இருந்த துப்பட்டாவை பிடுங்கி எறியறதுக்குள்ள எங்க வீட்டுல இருந்த எல்லோருக்கும் உயிரே போயிடுச்சி.." என்று முத்தமிழ் சொல்ல கார்த்திக்கின் மூச்சு சில நொடிகள் சுவாசிப்பதை நிறுத்தி விட்டது.

உடைந்த கதவையும் அபிராமியையும் மாறி மாறி பார்த்தான். தன் முன் இருக்கும் புகைப்படங்களையும் பார்த்தான்.

"அ.. அபிராமி யாரோ விளையாடுறாங்க.. இது நான் கிடையாது.. எனக்கு இந்த போட்டோவுல இருக்கற பொண்ணுங்க யாருன்னு கூட தெரியாது.."

அபிராமி அவன் பக்கம் திரும்பும் இல்லை. அவனோடு பேசவும் இல்லை. விம்மல் மட்டும் அதிகரித்திருந்தது இப்போது.

"தமிழ் நீயாவது என்னை நம்பு.." என்றான் நண்பனை ஏறிட்டு பார்த்து.

முத்தமிழ் தங்கையை பார்த்தான். "சாரி கார்த்திக்.. எனக்கு என் பாப்பாவோட நம்பிக்கைதான் முக்கியம்.. அவ ரொம்ப உடைஞ்சி போயிட்டா.. உங்களை போல ப்ரீடமா வளர்ந்தவ இல்ல அவ.. இந்த வீட்டுக்குள்ளயே வச்சி முயல் குட்டியை வளர்த்துவது மாதிரி வளர்த்துட்டோம்.. நல்லது கெட்டது கூட முழுசா தெரியாது இவளுக்கு‌. சின்னதா யாராவது பாசம் காட்டிட்டா கூட உடனே விழுந்துடுவா.. அவ்வளவு அப்பாவி.. அதே மாதிரி யாராவது இவ மனசை உடைச்சாலும் அதை இவளால தாங்கிக்க முடியாது.. நீ இவளுக்கு டைம் தருவதுதான் பெட்டர்.. இவளை ப்ரியா விடு.. இவளை நாங்க பத்திரமா பார்த்துப்போம்.." என்றான்.

கார்த்திக்கிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவளிடம் என்னவென்று சொல்லி புரிய வைப்பான் அவனின் ஏகபத்தினி விரத தன்மையை.

சில நிமிடங்கள் அதே இடத்தில் அமர்ந்து அபிராமியை பார்த்துக் கொண்டிருந்தான்‌. அவள் இவனை ஒரு முறை கூட திரும்பி பார்க்காமல் அழுதபடியே உறங்கி விட்டாள்.

"நீ சொன்ன மாதிரியே நான் இவளுக்குன்னு டைம் தரேன் தமிழ்.. பத்திரமா பார்த்துக்க இவளை.." என்றுவிட்டு எழுந்து நின்றான் கார்த்திக்.

அவன் கதவருகே சென்ற நேரத்தில் "கார்த்திக்.." என்று அவனை அழைத்து நிறுத்தினான் முத்தமிழ்.

"இந்த போட்டோஸ் உண்மையான்னு எனக்கு தெரியாது. ஆனா இது பொய்யா இருந்தா உனக்கு யாரோ எதிரி இருக்காங்கன்னு அர்த்தம். அந்த எதிரி யாருன்னு கண்டுபிடி.." என்றான்.

கார்த்திக் புரிந்ததாக தலையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

மன குழப்பமும் மன அழுத்தமும் அதிகமாக இருந்தது கார்த்திக்கிற்கு. அவனுக்கென்று இருக்கும் ஒரே எதிரி ஈஸ்வர்தான். பெரியப்பன் மகன் மீது ஆத்திரமாக வந்தது அவனுக்கு.

கார்த்திக்கின் பைக் அங்கிருந்து கிளம்பி செல்லும் சத்தம் கேட்டபிறகு படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தாள் அபிராமி.

"எப்படிண்ணா சிரிக்காம வசனம் பேசின.. எனக்கே சிரிப்பு வந்துடுச்சி.. ரொம்ப கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிட்டு இருந்தேன்.." என்றாள் அபிராமி. இதை சொல்லுக்கையிலேயே சிரிப்பாக வந்தது அவளுக்கு.

முத்தமிழ் பெருமூச்சி விட்டான். "நான் பேசிய வசனத்தை பார்த்துட்டு இதை படிச்சவங்களே சிரிச்சிருப்பாங்க.. அடுத்த முறையாவது குட்டியா டயலாக் சொல்லு அபி.. லென்தியா இருக்கு.. தடுமாறாம பேச ரொம்ப டிரை பண்ணேன்.‌." என்றான்.

"அன்னைக்கு இந்த புண்ணாக்கு ஹாஸ்பிட்டல்ல கன்டிசன் போட்டபோது அவ்வளவு டென்சன் மனசுக்குள்ள.. இப்ப அதுல இவன் பாதி கூட அனுபவிச்சிருக்க மாட்டான்.. நிறைய நிறைய பழி வாங்கணும்ண்ணா.." என்று சொல்லி கை சைகை செய்தாள்.

"அதை அப்புறம் பார்த்துக்கலாம்.. எழுந்து வா.. சாப்பிட போகலாம்.." என்றவன் அவளின் கையில் வெறுமனே ஒட்டியிருந்த டிரிப்ஸ் ஊசியை பேண்டேஜ்ஜோடு பிரித்து எடுத்தான்.

"உன் நாடகத்துல எங்க எல்லோரையும் நடிக்க வைக்கிற.. பாவமா தெரியலையா எங்களை பார்த்தா.." என்றான்.

"இருண்ணா.. நான் கொஞ்சம் விளையாடிட்டு அவன் மனசை சுக்கு நூறா உடைச்சிட்டு அப்புறம் உங்கிட்ட ஒப்படைக்கிறேன்.. அவனை நீ தீர்க்கும்போது நான் குறுக்கே வர மாட்டேன்.. அதுக்கு பதிலா இன்னைக்கு எனக்கு ஹெல்ப் பண்ணு.." என்றாள்.

கார்த்திக் ஈஸ்வரின் வீடு நோக்கி பைக்கை விரட்டினான். அவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே அவன் மீதுதான் சந்தேகம். அவனின் வீட்டில் வேலை செய்த வேலைக்கார பெண்ணை கூட்டிச் சென்று அபிராமியிடம் உண்மையை சொல்ல வைக்கலாம் என்று திட்டமிட்டிருந்தான் இவன். ஆனால் அந்த பெண் அடுத்த நாளிலிருந்து அவனது வீட்டிற்கு வரவில்லை. அந்த பெண் குடியிருந்த வீட்டிற்கு சென்று விசாரித்தால் அவள் அங்கிருந்து காலி செய்து போய்விட்டதாக தகவல் கிடைத்தது.

அப்போதே இது ஈஸ்வரின் வேலையாக இருக்குமோ என்றுதான் யோசித்தான் இவன்‌. இன்று மார்பிங் புகைப்படங்களை கண்டதும் அவனுக்குள் இருந்த சந்தேகம் ஊர்ஜிதமாகி விட்டது.

கார்த்திக் ஈஸ்வரின் வீட்டிற்கு வந்தபோது ஈஸ்வர் வழக்கறிஞருக்கு பணம் தந்து வழியனுப்பி வைத்துக் கொண்டிருந்தான்.

கார்த்திக்கை கண்டவன் "என்ன இந்த பக்கம்.?" என்றான்.

கார்த்திக் ஈஸ்வரின் தாடையில் ஒரு குத்து விட்டான். "எதுக்குடா என்னையும் அபிராமியையும் பிரிச்சி விட டிரை பண்ற.?" என்றான்.

ஈஸ்வர் தாடையை தேய்த்து விட்டுக் கொண்டான்.

"அந்த ரதியையும் இந்த மன்மதனையும் நான் ஏன்டா பிரிச்சி விட டிரை பண்றேன்‌.? எனக்கு என்ன வேற வேலையா இல்ல.?"

ஈஸ்வர் கார்த்திக்கை திருப்பி தாக்கினான். இவனின் கை அவனின் கழுத்தில் குத்தியது. அவனின் கை இவனின் பல்லில் மோதியது. இவன் அவனை இடுப்பில் உதைத்தான். அவன் இவனை தொடையில் உதைத்தான்.

சிறு சிறு காயங்களோடு இருவரும் சண்டை போட்டு பிரிந்து நின்றனர்‌.

"இன்னொரு முறை எங்க விசயத்துல தலையிட்ட உன்னை கொன்னுடுவேன் நான்.." என்றான் கார்த்திக்.

"அதேதான்.. இன்னொரு முறை எங்க வீட்டு பக்கம் காலெடுத்து வச்ச உன்னை உயிரோடே விட மாட்டேன் நான்.." என்று எச்சரித்தான் ஈஸ்வர்.

வீட்டுக்கு திரும்பி வந்தான் கார்த்திக். மனம் முழுக்க சோர்வு‌. அவனின் மனதை மிகவும் மெல்லிய பூ போல மாற்றி விட்டாள் அபிராமி. இவனால் முன்பு போல கோபப்பட கூட முடியவில்லை. மொத்தமாக மாறி விட்டது போலிருந்தது.

அவள் தூக்கு போட முயன்ற காட்சியும், அவள் பசியால் பாத்ரூமில் மயங்கி விழுந்த காட்சியும் மீண்டும் மீண்டும் நினைவில் வந்தது.

அம்மா அவனது காயத்திற்கு மருந்து போட்டு விட்டாள். "அவளுக்கு கோபம் தீரும் வரை நீயும்தான் கொஞ்சம் அமைதியா இரேன்டா.." என்றாள்.

அவனால் இருக்க முடியவில்லை. அவனின் மனம் அவளின் நெருக்கத்தை கேட்டது. அவளின் முகம் பார்த்து விழித்து, அவளின் வாசனையில் உறங்கி, அவளின் சிரிப்பில் வாழும் பழைய வாழ்க்கையை கேட்டது அவனின் மூளை.

ஈஸ்வரும் கார்த்திக்கும் சண்டை போட்டுக் கொண்டார்கள் என்ற செய்திக் கேட்டு முத்தமிழும் அபிராமியும் கிண்டல் செய்து பேசி சிரித்தார்கள்.

ஒருநாள் புவனா இவளை தேடி வந்தாள். முத்தமிழ் புவனாவை கண்டதுமே தனது அறைக்குள் சென்று புகுந்துக் கொண்டான்.

"அண்ணி.. அன்னைக்கு நான் பேசியதுக்கு சாரி.. ப்ளீஸ் வீட்டுக்கு வாங்க.. அண்ணன் ரொம்ப பீல் பண்றான்.." என்று அபிராமியை அழைத்தாள் புவனா.

அபிராமி அலமாரியை ஏக்கமாக பார்த்தாள். 'நேரம் கெட்ட நேரத்துல வந்திருக்கா.. கிளிசரின் வேற பீரோவுல இருக்கே.. அழுதா வேற சட்டுன்னு கண்ணீர் வராதே..' என்று கவலைக் கொண்டவள் "உனக்கு என் வலி புரியாது புவனா.. என் உயிரே அவர்தான்.. ஆனா அவரை இன்னொரு பொண்ணு கூட பார்த்த பிறகும் நான் எப்படி பீல் பண்ணாம இருப்பேன்.? உண்மையை சொல்லணும்ன்னா எனக்கு வாழ கூட விருப்பமே இல்ல.. எதுக்கு இந்த உயிரை பிடிச்சி வச்சிட்டு இருக்கேன்னே தெரியல.. ரொம்ப நொந்துட்டேன்.. என் புருசன் ஈகோ பிடிச்சவனா, என்னை தினம் அடிச்சி உதைச்சி திட்டுறவனா இருந்தா கூட தாங்கிட்டு போயிடுவேன்.. ஆனா இன்னொரு பொண்ணை மனசால நினைச்சவனையோ இல்ல இன்னொரு பொண்ணு மேல சபலத்துல விழுந்தவரையோ என்னால ஏத்துக்க முடியாது.." என்றாள் அழுத்தம் திருத்தமாக.

நடிப்பு தொடரும்...அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
  • Like
Reactions: dsk

Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom