கன்னிப்பூவே!!

மனோஜா

✍️
Writer
கன்னிப்பூவே:

ஹாய் வணக்கம். நான் சில நாட்களுக்கு முன்பு ஒரு நாவல் படித்துக் கொண்டிருந்தேன். அதில் நாயகன் நாயகியின் கன்னித்தன்மையைச் சந்தேகப் படுவான். தன்னுடன் இருக்கும் போதே தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைப்பான். அவனுக்கு நீருபிக்க முயன்று அவள் தோற்றுப் போவாள். இருந்தாலும் நாயகியைத் திருமணம் செய்து முதலிரவில் அவள் பீளிடிங்க் ஆன பின் அவளை நல்லவள் என்று நம்பி வருந்துவான்.

முதல் முறை உடலுறவு கொள்ளும் போது பெண்கள் பீளிடிங்க் ஆவது அவள் கன்னித்தன்மையை அன்றுதான் இழக்கிறாள் என்பதற்கு அடையாளம் என்று மிகப்பெரிய மூடநம்பிக்கை ஒன்று நிலவி வருகிறது.

எதனால் இரத்தக் கசிவு ஏற்படுகிறது?
பெண் இனப்பெருக்க மண்டலத்தில் ஒரு பகுதியான வைஜைனா எனப்படும் யோனியின் வெளிப்புறத்தில் உள்ள சவ்வுதான் ஹைமன். இந்த ஹைமன் ஆணும் பெண்ணும் முதல் முறை உறவு கொள்ளும் போது கிழிந்து இரத்தக்கசிவு ஏற்படும் என்று கூறுகிறார்கள். இதற்கு ஆங்கிலத்தில் பாப்பிங்க் தி செர்ரி என்று சொல்வார்கள்.

இதனால் பெண்ணின் கன்னித்தன்மை உறுதி செய்யப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசைப் பரிந்துரைக்கலாம்.

இந்த ஹைமன் மாதவிடாய் வெளியே வரவும், யோனியிலிருந்து மற்ற திரவங்கள் வெளியேறவும் ஒரு பாதித் திறப்பு போலிருக்கும் பகுதி. இது கண்களுக்கு தெரியாது.
இது இருந்தாலும் இல்லை என்றாலும் ஒரு பிரச்சினையும் இல்லை.

இந்த ஹைமன் விளையாடுதல் , சைக்கிள் ஓட்டுதல் போன்ற நிகழ்வுகளில் ஹைமன் நெகிழ்ந்துவிடும். அதனால் முதல் முறை உறவு கொள்ளும் போது இரத்தக்கசிவு ஏற்படும் நிகழ்வு அனைத்துப் பெண்களுக்கும் நிகழாது.

இதெல்லாம் இருக்கட்டும் இந்த ஹைமனே இல்லாமல் பிறக்கும் பெண்களும் உண்டு. இவர் எப்படி கன்னித்தன்மையை நீருபனம் செய்ய முடியும்?

ஹைமன் ஒரு எலாஸ்டிக் ரப்பர் போன்றது. உடலில் எதாவது ஒரு சவ்வு இப்படி நெகிழ்ந்தால் இரத்தக்கசிவு இயல்புதான். ஹைமன் நெகிழ்ந்தாலும் பழைய நிலையை மறுபடியும் அடைந்து விடும். அது கிழியாது.

டெட் டாக்ஸில் ஒரு வீடியோவில் ஹைமன் ஆராய்ச்சியைப் பற்றி பேசியிருந்தார்கள். அதில் ஒரு பாலியல் தொழிலாளிக்கு ஹைமன் எந்தவித சேதமில்லாமல் விடலைப் கன்னிப்பெண்ணைப் போல் இருந்தது.

ஹைமன் பற்றிய அடிப்படை மூடநம்பிக்கைகள் எல்லாம் அடிபட்டுப் போகின்றன. இந்த உண்மை மருத்துவ உலகிற்கு 1900 –ல் தெரிய வந்துள்ளது.
கன்னித்தன்மை , கற்பு போன்ற அற்புதமாக கருத்துகள் பெண்களைக் கட்டுப்படுத்த ஆண்களால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு ஆயுதங்களில் ஒன்றாகும். பெண்களை உடமைகளாக்க பயன்படுத்தப்பட்டவை.

கன்னித்தன்மை என்பது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களில் நம்பப்ட்டுவருகிறது.
இதைக் காரணமாகக் காட்டி கௌரவக் கொலைகள், ஆணவக் கொலைகள் அதுமட்டுமில்லாமல் பெண்கள் பல்வேறு அவமானங்களையும் காலம் காலமாகச் சந்தித்து வருகின்றனர்.

ஒரு சிறிய மெல்லிய கண்ணுக்கு புலப்படாத சவ்வு. இதை வைத்து பெண்ணின் குணத்தை மொத்தமாக எடைபோட முடிகிறது. கன்னியா இல்லையா என்பதை எல்லாம் சோதித்து அறிந்து கொள்ள முடியாது. பிளாஸ்டிக் சிகிச்சை மூலம் போலியான ஹைமனை உருவாக்க முடியும்.
கன்னித்தன்மை என்ற மூடநம்பிக்கையால் பெண்கள் இன்னும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆண்களுக்கு எப்படி அவர்கள் கன்னித்தன்மையை உறுதி செய்ய முடியாதோ அதே போல் தான் பெண்களுக்கும்.
இந்த கட்டுரையை சிலர் படிக்கும் போது ஆபாசமாக முகம் சுளிக்கலாம். இது உடலைப் பற்றிய அறிவியல். ஆபாசம் இல்லை. நான் சைன்ஸை சிறுவயதிலிருந்தே சைன்சாக மட்டும் பார்க்கக் கூடிய ஆள்.

அன்புடன் மனோஜா.

இதை கிளிக் செய்யுங்கள்.

கன்னித்தன்மை ஏமாற்றுவேலை டெட் டாக்ஸ் வீடியோ.
 

Attachments

  • ei2LAXN27088.jpg
    ei2LAXN27088.jpg
    400.4 KB · Views: 6

Latest profile posts

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 25😎👇

ஓம் சாயிராம்
எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை அன்புடன் பகிருங்கள்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 24😎👇

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 23😎👇

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
முப்பத்திரண்டாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

New Episodes Thread

Top Bottom