கனிந்தமனம் - 43

மீராவை ஊருக்கு அனுப்பிவிட்டு தனது அலுவலகத்திற்குத் திரும்பினான் விஷ்வா. உடல் தன்னிச்சையாக வேலையைச் செய்து கொண்டிருந்ததே தவிர, மனம் அவள் கங்காவை பற்றிச் சொல்லி சென்ற விஷயத்திலேயே உழன்று கொண்டிருந்தது.

அவன் அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் வரவேற்பாளினி சாவியைக் கொடுத்துவிட்டுக் கிளம்பத் தயாராக, "ஒரு நிமிஷம் மா”

"சொல்லுங்க சார்"

"இரண்டு நாளைக்கு வர வேண்டாம்"

அவள் புரியாமல் பார்க்க, "பேரண்ட்ஸ்ஸ பாக்க ஊருக்கு போறேன்"

புன்னகைத்தவள், "ஓகே சார்" என்று விடைபெற்று சென்றாள்.

தன் அறைக்குச் சென்றவன் குளித்து உடைமாற்றிவிட்டு, கால் டேக்ஸியில் ஏறி ரயில்நிலையத்தை அடைந்தான். எப்போதும் போல் தன் கைப்பேசியை அணைத்துவிட்டு எவரிடமும் சொல்லாமல் பெங்களூருக்கு ஒரு டிக்கெட் வாங்கியவன், அங்கிருந்த மனிதர்களோடு தானும் ஒருவனாகப் பொதுப்பெட்டியில் ஏறி அமர்ந்து கண்களை மூடி கொண்டான்.

எங்கிருந்து தான் வந்ததோ அந்தத் தூக்கம், அவனின் விழிகளை இதமாய்த் தழுவிக்கொள்ள, இதழ்களின் ஓரத்தில் மெல்லிய புன்னகையும் ஒட்டி கொண்டது.

விஷ்வா எதையும் விட்டு விலகி செல்பவனோ, பயந்து ஓடுபவனோ இல்லை. அதற்கு அவன் வேலைக்காகத் தேர்ந்தெடுத்த துறையே சாட்சி.

அவனது திருமண வாழ்க்கையில் தோல்வியைச் சந்தித்த போதும், சுற்றியிருந்த பலரின் பேச்சுக்கு ஆளான சமயத்திலும் பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. அதற்கு மாறாகத் தன்னை மாற்றிக் கொண்டான். எந்தச் செயலை செய்தாலும் அதில் முழுதாக ஈடுபடுத்திக் கொள்பவன், சில நேரங்களில் தன்னை வேலைகளில் தொலைத்தும் விடுவான்.

அவனது வாழ்வை புரட்டி போட்ட அந்த நிகழ்விற்குப் பின் தன்னை வேறொருவனாக மாற்றி, தன்னிடம் வரும் பணிகளை விளையாட்டாகக் கையாள தொடங்கினான்.

ஆணென்றாலும் பெண்ணென்றாலும் வலி என்னவோ ஒன்றுதான். அவனைப் பொறுத்தவரை கங்காவும் அவனைப் போலத்தான்.

விஷ்வா தன்னைப் பிரிந்து சென்ற வனிதாவின் மேல் குற்றம் சுமத்தாமல், அவளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்காத அவளின் பெற்றோரைத் தான் வெறுத்தான்.

கங்கா வரதனால் பாதிக்கப்பட்டது ஒருமுறை தான் என்றாலும், அதை ஊரார் பேசி பேசியே அவளை உயிரோடு வதைத்திருந்தனர்.

கிருஷ்ஷின் வாய் மூலமாக ஊர் பஞ்சாயத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் அறிந்திருந்தான். அவளை எப்படியேனும் மீட்டுவிட வேண்டும் என்ற நோக்கில்தான் மீராவின் முயற்சிக்குத் துணையாக, கங்காவிடம் இயல்பாகப் பேசி பழகினான்.

ஆனால் இன்று அவளது மனமாற்றம், கடந்து வந்த வலியை முழுவதுமாக மறந்து தன் வாழ்க்கையைப் பற்றிய யோசனையில் வந்து நிற்கிறது.

இரண்டு ஆண்டுகளாகத் தாய்தந்தையர், சகோதரி, வாசுகி என இத்தனை பேர் சொல்லியும் விஷ்வாவால் இன்னொரு திருமணத்தைப் பற்றி யோசிக்க முடியவில்லை. ஏனோ எந்த ஒரு பெண்ணையும் மனம் நினைக்கத் துணியவில்லை.

ஆனால் இரண்டே மாதத்தில் அனைத்தையும் மறந்து, தன் மனதிற்குப் பிடித்தவனை எந்தத் தயக்கமும் இன்றி நேசிக்கவும் தொடங்கி விட்டாள் கங்கா.

கவுன்சிலிங் அழைத்துச் செல்லும் போதே அவளிடம் தெரியும் மாற்றங்கள் விஷ்வாவை வியக்க வைக்கும். இன்று அவளின் எண்ணங்களில் தானும் நுழைந்திருப்பதை எண்ணி, அவனுக்குச் சிரிப்புதான் வந்தது.

இரண்டு நாட்கள் தன் குடும்பத்தாருடன் தங்கிவிட்டு வந்தவனின், நினைவுகளில் கங்காதான் முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தாள்.

'அவளிடம் பேச வேண்டும். இது எந்த அளவிற்குச் சரிவரும் என்று தெரியவில்லை. தற்சமயம் அவளின் மனநிலை என்னவாக இருக்கும்? தன்னால் முழுமனதோடு இன்னொரு வாழ்வை ஏற்கமுடியுமா..?' என்று அவன் மனம் அரித்துக் கொண்டிருந்தது.

எப்போதும் நினைப்பதை உடனே செய்து முடித்து விடுபவன், தன்னுள் எழுந்த கேள்விகளுக்கு விடையைத் தேடி கங்காவின் கல்லூரி நோக்கி சென்றான்.வாசுகியின் அறை வாயிலில் நின்று, "மே ஐ கம் இன் மேம்..?"

வேலையில் கவனமாய் இருந்தவர், "எஸ் கம் இன்"

உள்ளே வந்த அரவம் உணர்ந்து, "என்ன வேணும்?"

"உங்கக்கூடக் கொஞ்சம் டைம் ஸ்பென் பண்ணனும்!"

"வாட்?" நிமிர்ந்து பார்த்தவர் கோபத்தோடு கையில் இருந்த பேனாவை விஷ்வாவின் மேல் வீசி, "பேச்ச பாரு, கொஞ்சமாவது சித்தின்ற மரியாத இருக்கா?"

தன்னை நோக்கி வந்த பேனாவை சரியாகப் பிடித்து, புன்னகையுடன் எதிரே அமர்ந்து பேனாவை அவரிடம் நீட்டினான்.

அவனிடம் இருந்து பிடுங்கி கொண்டவர், "எங்கடா போன, ரெண்டு நாளா போன் ஆஃப்ன்னு வந்தது?"

"வெளியூருக்கு.."

"எந்தூரு?"

"பெங்களூர்..."

"ஏன்டா, அக்காவ பாக்க போயிருக்க. என்கிட்ட ஒரு வார்த்த சொல்லவே இல்ல?"

"ஏன், நீங்க உங்க அக்காட்ட பேசலையா?"

"போன வாரம்தான் பேசுனேன், அதான் கால் பண்ணல. சரி எப்டி இருக்காங்க?"

"ம்ம், நல்லா இருக்காங்க. உங்களையும் கேட்டாங்க, ஹாஸ்டல்ல சமச்சு போடுறத சாப்ட்டு சாப்ட்டு ரெண்டு சுத்து பெருத்திருக்கீங்கன்னு சொன்னேன்!"

"நெஜமாவாடா, குண்டாவா இருக்கேன்?"

"பின்ன, பொய்யா சொல்றேன்?"

"என்ன பண்றது, நாங்கெல்லாம் சூதுவாது தெரியாம வளந்துட்டோம். உன்ன மாதிரியா? அண்டா அண்டாவா உள்ள கொட்டிகிட்டாலும் உடம்புல ஒட்டாம, எலும்பெல்லாம் வலுவேத்திகிட்டு.."

பதில் பேசாமல் விஷ்வாஅமைதியாகப் புன்னகைக்க, "அத்தான் எப்டி இருக்காரு, என்ன பண்றாரு?"

"எப்பவும் போலத்தான், பேரன் பேத்தியோட பொழுத போக்கிட்டு இருக்காரு"

"எப்டியும் நீ ஊருக்கு போயி, ஒரு வருஷம் இருக்காது..?"

"என்னைவிட நீங்க கணக்குல புலியா இருக்கீங்க சித்தி? சரியா பதினொன்றரை மாசம் ஆகுது"

அவர் சிரித்து, "உன்னய ஏதும் சொல்லலியா?"

"அதெப்டி சொல்லாம இருப்பாங்க? எப்பவும் கேக்குற அதே கேள்வி, எப்ப கல்யாணம் பண்ணிப்ப? ப்ச்ச், இதுக்குத்தான் நான் அந்தப் பக்கமே போறது இல்ல"

"ம்ம், நீ என்ன சொன்ன?"

"பண்ணிக்கிறேன்னு சொன்னேன்!"

வியப்பில் விழிகள் விரிய தன்கையைத் தானே கிள்ளிக்கொண்டவர், "விஷ்வா, நிஜந்தானா?"

அவனும் அதேபோல் எட்டி அவரைக் கிள்ளிவிட்டு, "சித்தி நிஜந்தான்!"

அவனது செய்கையில் முகம்மலர சிரித்து, "சரி சரி, அக்காவும் அத்தானும் என்ன சொன்னாங்க?"

"அவங்களுக்குச் சந்தோஷம்தான், உடனே பொண்ணு பாக்குறேன்னு கிளம்புனாங்க. நான்தான் கொஞ்சம் சொல்லீட்டு வந்திருக்கேன்"

பார்வையில் குழப்பத்தோடு, "என்னன்னு?"

"பொண்ணு என்னோட செலக்சன் தான்னு!"

"எப்டினாலும் சரி, நீ சந்தோஷமா இருந்தா எங்களுக்கும் சந்தோஷம்!"

மெல்லிய புன்னகையை உதிர்த்து, "அதுக்கென்ன குறைச்சல், நான் சந்தோஷமா தான் இருக்கேன்!"

பேசிக்கொண்டிருக்கும் போதே அறையின் வெளிப்புறம், "எக்ஸ்கியூஸ் மீ மேடம்"

வாசுகி பார்வையைத் திருப்ப, வாயிலில் கங்கா நின்றிருந்தாள்.

"உள்ள வாம்மா"

வந்தவள் அவரிடம் ஒரு பேப்பரை நீட்ட, வாங்கிப் பார்த்துவிட்டு, "என்னம்மா இது?"

"உங்க சைன் வேணும் மேடம்"

கங்காவின் கவனம் முழுவதும் வாசுகியிடம் இருக்க விஷ்வாவை கவனிக்கத் தவறிவிட்டாள். அவனோ தன் முன்னிருந்த வாசுகியின் மேஜையின் மீது கரத்தை பதித்து, அதில் தன்முகத்தைத் தாங்கி அவளின் மீது பார்வையைப் பதித்திருந்தான்.

வாசுகி, "இப்ப தான ரெண்டு நாள்ல லீவுல ஊருக்கு போயிட்டு வந்த? அதுக்குள்ள திரும்பவும் என்ன, பன்னெண்டு நாள் லீவு?"

"திருவிழா மேடம் கண்டிப்பா போணும். ஹச்.ஓ.டி.ட்ட கேட்டேன். அவங்க உங்களோட சைன் வேணும்ன்னு சொல்லீட்டாங்க.." கண்களில் கெஞ்சுதலோடு, "ப்ளீஸ் மேடம்?"

"இப்டி லீவு போட்டா, எப்டி ஒழுங்கா படிக்கிறது? ஏன்டா இதெல்லாம் நீ கேக்க மாட்டியா, நீதான இவளுக்குச் சிபாரிசு பண்ணது?"

வாசுகியின் பேச்சில் இடதுப்பக்கம் திரும்பியவள், விஷ்வா புன்னகை தவழ்ந்த முகத்தோடு தன்னைப் பார்த்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள்.

வாசுகி, "என்னடா சிரிச்சுகிட்டு இருக்க?"

"இது உங்களுக்கும் உங்க ஸ்டூடண்டுக்கும் நடுவுல இருக்கப் பிரச்சினை, என்னை ஏ இழுக்குறீங்க? சரி சித்தி, நா கெளம்புறேன்..."

"அடப்பாவி, எப்டி நழுவுறான்னு பாரு. எதிர்ல இருக்கும் போதே கண்ணுல மண்ண தூவிடுறான், கேடி!"

சின்னதாய் சிரித்தவன், "அப்புறம் எப்டி, என்கிட்ட வர்ற கேஸ் எல்லாம் சக்ஸஸ் புல்லா முடிக்கிறது?" என்றவன் புன்னகை மாறாமலேயே, கங்காவை ஒருபார்வை பார்த்துவிட்டு வெளியேறினான்.

"ஏ கங்கா பன்னெண்டு நாளா திருவிழா நடக்கும்?"

"பதினோரு நாள் மேடம், நா மறுநாள் தான் கிளம்ப முடியும்"

"ஓ சரி, எப்ப கிளம்பணும்?"

"அடுத்த வாரம்தான், இன்டர்னெல் வருது அதான் முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணீடலாம்ன்னு…"

"ஓகே, இனிமே லீவு எதுவும் போடாத. அன்டன்டென்ஸ் பிரச்சினை வந்துரும்!"

"சரிங்க மேடம்.."

கையெழுத்து போட்டு அவளிடம் கொடுத்தவர், "உனக்கும் விஷ்வாக்கும் ஏதும் சண்டையா?"

பார்வையில் குழப்பத்தோடு, "இல்லையே மேடம், ஏ கேக்குறீங்க?"

"இல்ல, வழக்கமா உன்கிட்ட ரெண்டு வார்த்த பேசீட்டுத்தான் போவான். இன்னிக்கு ஒன்னுமே பேசல, லாஸ்ட் டைம் வந்தப்பவும் உன்ன வந்து பாக்கலேல?"

தன்னுள் உண்டான உணர்வுகளிலேயே சிக்கித்தவித்த கங்கா, இதுநாள் வரை அதைக் கவனிக்க வில்லை.

‘அவன் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாகத் தன்னால்தான் அவனின் முகம் பார்த்து இயல்பாகப் பேச முடியவில்லை? அவனும் ஏன் தன்னைத் தவிர்க்கிறான்?’ என மனம் கேள்வி கேட்க.. வெளியே வாசுகி, "வனிதாவ பத்தி அவன்கிட்ட ஏதும் கேட்டியா கங்கா?"

"இல்ல மேடம், நா எனக்குத் தெருஞ்ச மாதிரியே காட்டிக்கல"

"சரி போ" என்றவர், யோசனையுடனே தன் வேலையில் கவனத்தைப் பதிக்க, விஷ்வாவை பற்றிய எண்ணங்களுடனே அறையிலிருந்து வெளியே வந்தாள்.

"ஹலோ மிஸ் கங்கா.."

திடீரென்று கேட்ட குரலில் முகம் வியர்க்க பதற்றத்துடன் அவள் பார்க்க, சுவற்றில் சாய்ந்து ஒருகாலை தரையில் ஊன்றி மற்றோரு காலை மடக்கி சுவற்றின் மீது வைத்து, இடது கையைப் பேண்ட் பாக்கெட்டினுள் நுழைத்து வலது கையை மடக்கிய காலின் மீது பதித்தவாறு நின்றிருந்தான் விஷ்வா.

அவள் பதில் பேசாமல் பார்த்திருக்க, "என்ன மேடம், என்கிட்ட பேச மாட்டீங்களா?"

"அது அது..."

அவன் புன்னகைத்து, "பயந்துட்டியா என்ன?"

நிதானத்திற்கு வந்திருந்தவள், "நா ஏதோ நியாபகத்துல வந்தேன். நீங்க திடீர்ன்னு கூப்டவும் கொஞ்சம்.." முழுதாய் முடிக்காமல் நிறுத்த, அவன் புருவங்களை உயர்த்தி, "எந்த நியாபகத்துல வந்த?"

"அது அது..."

"என்ன மறுபடியும் பழைய மாதிரி திக்க ஆரம்பிச்சுட்டியா?"

"இல்ல இப்பெல்லாம் திக்குறது இல்ல. எல்லாம் சரியாயிடுச்சு"

"ம்ம், அப்ப தைரியமான பொண்ணாய்ட்ட?"

கங்கா அவனைப் புரியாமல் பார்க்க "நிறையவே மாறிட்ட, பாக்குறதுக்கு முன்னமாதிரி இல்ல. வரவர உன்னோட கவனம் இங்க இல்லாம வேற எங்கயோ போகுது, மீராவுக்கும் வேலுவுக்கும் என்ன பதில் சொல்றது? போ, ஒழுங்கா படிக்கிற வேலய பாரு!"

தலையைக் குனிந்து கொண்டவள், "சரி சார்.." என நகர்ந்தாள்.

சிறிது நேரம் அங்கேயே நின்று அவள் செல்வதைப் பார்த்திருந்தவன், இதழ்களில் புன்னகையோடு வாசுகியின் கண்களில் படாமல் வெளியேறினான்.

அவன் பாட்டிற்குச் சென்று விட்டான். இவளுக்குத்தான் மனம் ஒரு நிலையில் நில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. வாசுகி அவளிடம் கேட்ட கேள்வியும், அவன் நடந்து கொண்ட விதமும் குழப்பத்தைதான் தந்தன.

'ஏ இத்தன நாளா என்கிட்ட பேசல? அத நானும் கவனிக்கல. இன்னிக்கு எதுக்குப் பேசுனான்? பேசுறதுன்னா மேடம் முன்னாடியே பேசிருக்கலாம், ஏ வெளிய வந்து தனியா பேசீட்டுப் போறான்?'

கைகளால் தலையைப் பிடித்துக் கொண்டவள், 'அவன் மாறீட்டானா, இல்ல நான் மாறீட்டேனா?' தன்னைத்தானே கேட்டுக் கொண்டவளுக்கு, 'லூசு, நீதான் மாறீட்ட. அவன் அப்டியே தான் இருக்கான். மீராக்கா சொன்னது தான் சரி. ஒழுங்கா படிக்கிற வேலய மட்டும் பாரு!' மனசாட்சி எடுத்துரைத்தது.

இவள், 'ம்ம், அவனும் அதத்தான் சொன்னான். அய்யய்யோ திரும்பவும் அவன்கிட்டயே வந்து நிக்கிதே? மாரியம்மா இனிமே அவன பாக்காமயே இருந்தா நல்லா இருக்கும். இத மட்டும் செஞ்சுடு, திருவிழாக்கு வர்ரப்ப உனக்கு நூத்தி எட்டுக் குடம் தண்ணி எடுத்து ஊத்துறேன், என்ன..?' ஒரு வழியாகப் புலம்பி கொட்டி தன் குலதெய்வத்திடம் வேண்டுதலை வைத்துவிட்டு, புத்தகத்தைப் பிரித்துத் தன் கவனத்தைப் பதித்தாள்.

எல்லாம் சரியாகத்தான் சென்றது, அடுத்த இரண்டு நாட்களுக்கு. மறுபடியும் அவன் வந்தான், மறுபடியும் இவள் குழம்ப, ஏனோ அவளின் வேண்டுதலை அரசநல்லூர் சந்தன மாரியம்மன் ஏற்றுக் கொள்ளவில்லை போலும்!அன்று ஞாயிற்றுக்கிழமை. மாலை ஆறு மணியைப் போல் ஹாஸ்டலுக்கு வந்தவன் வாசுகியிடம், "சித்தி, கங்காவ ரெண்டு மணிநேரம் வெளிய கூட்டிட்டுப் போகப் பர்மிசன் வேணும்"

அவனை ஒருமாதிரியாகப் பார்த்தவர், "எதுக்குடா?"

"திருடன பாக்குற மாதிரி, இது என்ன பார்வ?"

"ம்ம், நீ கொள்ளகாரன்ன பிடிக்கிறவன். அவனைவிட நீ பெரிய கொள்ளகாரன்னால்ல இருப்ப அதான்!"

"அதான் என்கூடப் பொண்ண அனுப்ப யோசிக்கிறீங்களா, விஷ்வா என்னடா உனக்கு வந்த சோதன?"

அவனைப் பார்த்து சிரித்தவர், "எத்தன பொண்ணுங்களையும் உன்ன நம்பி அனுப்பலாம்"

"ஐ, சித்திக்கு எம்மேல எவ்ளோ நம்பிக்க?"

"ம்ம், ஏன்னா நீ அதுக்கெல்லாம் சரிபட்டு வர மாட்ட!"

"என்ன?"

அவனைக் கவனியாதவர் போல் எழுந்து சென்று, இரண்டு அறை தள்ளி தங்கியிருந்தவளை அழைத்து வந்தார்.

"விஷ்வா எட்டு மணிக்கு கங்காவ ஹாஸ்டல்ல விட்ரணும். இருபது வருஷமா இங்க வேலைப்பாத்து நல்ல பேர சம்பாதிச்சு வச்சிருக்கேன். நீ கேட்ட ஒருஉதவிய செய்யப்போயி, ஒரே வருஷத்துல என்னோட மொத்த பேரும் டேமேஜ் ஆயிரும் போலருக்கு?"

"விடுங்க சித்தி, நா என்னோட ஹய்யர் ஆபிஸர்ட்ட சொல்லி உங்களுக்கு வேற காலேஜ்ல வேலைக்கு ஏற்பாடு பண்றேன்!"

"அடப்பாவி, நா இந்தக் காலேஜ்ஜோட வைஸ் பிரின்சிபெல் டா"

"அதுனால என்ன, நா பிரின்சிபெல்லா வேல வாங்கித் தரேன்!"

"திமிரு திமிரு போடா. பாத்து போய்ட்டு வா கங்கா, எதுக்கும் ஜாக்கிரதையாவே இரு. ஏதாவது முக்கியமான வேல வந்தா, பாதி வழிலயே உன்னை விட்டுட்டுப் போய்டுவான். போன், பர்ஸ் எல்லாம் கைல வச்சுருக்கேல?"

விஷ்வா வாசுகியை பார்த்து முறைக்க, கங்கா இருவரையும் பார்த்து சிரித்துவிட்டு அவனோடு கிளம்பினாள்.வண்டியை ஓட்டி சென்றவனின் கவனம் சிலநிமிடங்களில் பாதையில் இருந்து மாறி, அருகிருந்த கடைகளில் பதிந்தது.

அதைக் கவனித்தவள் சிரிப்பை அடக்கமுடியாமல், "என்ன சார், வயிறு சத்தம் போடுதா?"

சட்டென்று வண்டியை நிறுத்தியவன், "வாவ், எப்டி கண்டுபிடிச்ச?"

"அதான் ஏற்கனவே பாத்திருக்கனே?"

"ஓகே ஓகே, ஒரு பத்தே நிமிஷம். இந்தத் தடவ பில்லுக்கு நானே பணம் கொடுத்திடுறேன். உன்ன கேட்க மாட்டேன், சாப்ட்டு போயிடலாமே"

அவள் சிரித்து ‘சரி’ என்பதுபோல் தலையாட்ட, இருவரும் அருகிருந்த உயர்தர ஹோட்டலினுள் சென்றனர்.

ஏனோ கங்காவிற்கு நீண்ட நாட்கள் கழித்துப் பழைய விஷ்வாவாகத் தெரிந்தான் அவன். இருவர் மட்டுமே அமரும் தனி ஏசி அறையினுள் அமர்ந்தனர்.

பேரரிடம் தனக்கு வேண்டியவற்றை ஆர்டர் செய்தவன் கங்காவிடம், "உனக்கு?"

"எனக்கு வேண்டாம், நீங்க சாப்டுங்க"

தோளை குலுக்கி கொண்டவன், "ஓகே.."

அடுத்த இரண்டு நிமிடத்தில் அவனுக்கு உணவு பரிமாறப்பட, அவளின் எதிரே ஒரு ஆரஞ்சு ஜீஸ் வைக்கப்பட்டது.

அவன் உணவில் கவனமாக, "குடி கங்கா"

அவள் சிரித்து, ஜீஸ் இருந்த கண்ணாடி டம்ளரை கையில் எடுத்து கொண்டாள்.

பாதி உணவை முடித்திருந்தவன், "என்னடா இவன் இவ்ளோ சாப்டுறானேன்னு தோணுதா?"

"இல்ல, உங்களவிட மூணுமடங்கு அதிகமா சாப்டுற ஒருஜீவன் நியாபகத்துக்கு வருது!"

"பாருடா.. சாப்டுறதுல நம்மல மிஞ்சுன ஒருஆளா, யாரது?"

"காசி அண்ணே"

"அந்தக் கண் தெரியாத பொண்ணோட அண்ணன் தான..?"

அவள் சிரித்து, "ஜெயந்திக்கு ஆப்ரேஷன் பண்ணியாச்சு. இப்ப அவளுக்கு நல்லாவே கண்ணு தெரியும்"

"ம்ம், காசிய பத்தி சொல்லு"

"என்ன சொல்றது?"

"நீதான அவன என்னைவிடப் பெரிய சாப்பாட்டு ராமன்னு சொன்ன?"

சிரித்தவள், "அண்ணே ஊருல யாரு சாப்ட கூப்டாலும் வேணான்னு சொல்லவே சொல்லாது. எவ்வளவு சாப்டுதுன்னு, அதுக்கே அளவு தெரியாது. ஆனா சாப்டுறதவிட ரெண்டு மடங்கு அதிகமா உழைக்கும். எங்க ஊருல அது வேகத்துக்கு எவனும் தென்னமரம் ஏற முடியாது, சைக்கிளும் மிதிக்க முடியாது"

"காசின்னா ரொம்பப் பிடிக்குமோ?"

"எனக்குக் கூடப்பிறந்தவங்க யாரும் இல்ல. அதுனால மீராக்கா, ஜெயந்தி, வேலுண்ணே, காசிண்ணே எல்லாரையுமே பிடிக்கும்!” குரல் உள்ளே போக, "பஞ்சாயத்து நடந்தப்ப காசியண்ணே வீட்லதான் ரெண்டு வாரம் தங்கி இருந்தேன்"

அவளையே பார்த்திருந்தவன், சின்னச் சிரிப்புடன், "மீராக்கிட்ட என்ன சொன்ன?"

அவள் புரியாமல் பார்க்க.. சாப்பிட்டுக் கொண்டே, "ஊருக்கு போனப்ப, மீராக்கிட்ட என்னய பத்தி என்ன சொன்ன?"

பதில் சொல்ல முடியாமல் திணறலுடன் அவனைப் பார்க்க, தன் வேலையை முடித்தவன் பில்லிற்குப் பணத்தைச் செலுத்திவிட்டு, "கெளம்பலாமா?"

அவள் அமைதியாக எழுந்து வர, சில நிமிடங்களில் விஷ்வாவின் அலுவலகத்தின் முன் அவனது பைக் நின்றது.

"வா.." என்றவன் அலுவலகத்தைத் திறக்க.. அவள் பார்வையில் கேள்வியை உணர்ந்து, "முகுந் மும்பை போயிருக்கான், வரற்துக்கு ரெண்டுநாள் ஆகும். உன்கிட்ட கொஞ்சம் பேசணும், அதான் கூட்டிட்டு வந்தேன்"

அவள் அசையாமல் வெளியிலேயே நிற்க, "உள்ள வா கங்கா, என்மேல நம்பிக்கை இல்லயா?"

அவனைக் கடந்து உள்ளே சென்றவள், "என்ன பேசணும்?"

"நா ஹோட்டல்ல கேட்ட கேள்விக்கு நீ பதிலே சொல்லலலியே?"

"மீராக்காட்ட நா எதுவும் சொல்லல"

"பொய், ஊருக்கு போறப்ப மீரா என்கிட்ட சொல்லிட்டு தான் போனா"

அவள் திகைத்து விழிக்கத் தன் அறையில் நாற்காலியில் அமர்ந்தவன், அவளுக்கு எதிரே இருந்த நாற்காலியைக் காட்டினான்.

அமர்ந்தவள், "அக்கா என்ன சொல்லுச்சு?"

"நீ முதல ஓ மனசுல இருக்குறத சொல்லு, அப்புறம் மீரா சொன்னதச் சொல்றேன்!"

அவள் அமைதியாக இருக்கச் சற்று முன்னே வந்து, குனிந்திருந்த கங்காவின் முகத்தை நிமிர்த்தி, "கொஞ்சம் மனசு விட்டு பேசலாமா?"

அவள் அவனையே பார்த்திருக்க, பெண்பாவையின் விழிகளை மறைத்துக் கண்களில் நீர் திரண்டு வழிந்தது.

"நா உன்கிட்ட என்ன கேட்டேன், இப்ப எதுக்கு அழற?" என்றவன், இன்னும் நெருங்கி அவளை அணைத்துக் கொண்டான்.

அவனின் நெருக்கத்தில் மெல்லியதாய் தோன்றிய கங்காவின் உடல் நடுக்கம் அதிகரித்துக் கொண்டே செல்ல, விஷ்வாவின் கைகள் அனிச்சையாய் அவளின் முதுகை வருடி கொடுத்தன. நடுக்கம் குறைந்து அவள் இயல்பு நிலைக்குத் திரும்பச் சிலநிமிடங்கள் பிடித்தது.

வார்த்தைகளைத் தட்டு தடுமாறிட, "என்னை விட்டுடுங்களேன்?"

"நா இப்ப விட்டா, நீ விழுந்துடுவ மா. மீரா கைக்கொடுத்துத் தூக்கிவிட்ட உன்னை, மறுபடியும் நா கீழ தள்ளிவிடத் தயாரா இல்ல!"

அவனின் மார்பில் பதித்திருத்த தன் முகத்தை நிமிர்த்தி விஷ்வாவை பார்த்தாள். அவளின் முகம் மறைத்த குழலைப் புன்னகையுடன் ஒதுக்கிவிட்டு, கங்காவின் நெற்றியில் இதழ்களை மென்மையாய் ஒற்றி தன்மனதை உரைத்தான் விஷ்வா.

Sivakamisiva

New member
Member

மிக அருமை.
 
Wowwww, super viswa, ellaaam athiradi thaaan!!! Ganga now happyyaaa???? Appadiye intha technique ka krish kku solli kudu viswa, unakku munnaadiiii yosikka aarambicha aalu innum munnerala????
ஏன்னா கங்காவும் மீராவும் ஒண்ணுல்லயே.🤣🤣. இப்பதான யோசிக்க ஆரம்பிச்சிருக்கான். மெதுவா ஒரு முடிவுக்கு வரட்டும். நன்றி மா..❤️❤️
 
Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

அன்பு நெஞ்சங்களே,

எல்லாரும் எப்பிடி இருகீங்க. மனதோடு வீசும் தென்றல் பகுதி 5 இதோ உங்களுக்காக. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்.

அன்புடன்
உமா நாதன்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
வெய்யோனின் தண்மதி அவள் அத்தியாயம் 7😎👇
ஓம் சாயிராம்.
திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.

எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

New Episodes Thread

Top Bottom