கனிந்தமனம் - 39


"கிருஷ்.. கிருஷ்.."

அவனிடமிருந்து எந்தப் பதிலும் இல்லாமல் போக, "டேய்?"

ஜார்சனை நிமிர்ந்து பார்த்தவன், மீண்டும் தன்முன் இருந்த கணினியில் பார்வையைப் பதித்தான்.

பொறுமையிழந்தவன் அருகே வந்து, கிருஷ்ணா அமர்ந்திருந்த சுழல் நாற்காலியை தன்புறம் திருப்பி, "என்னடா, என்ன பாத்தா எப்டி தெரியிது? ஒருத்தே வந்து தொண்ட தண்ணி வத்த கத்தீட்டு இருக்கேன், காது கேட்காத மாதிரி உக்காந்திருக்க?"

அவனை முறைத்தவன் நிதானமாக, "என்ன விஷயம்?"

"இரண்டு நாள் ஆபிஸ்க்கு வரமாட்டேன்.."

"ஏன்?"

"கேர்ள் ப்ரண்டோட வெளிய போறேன்"

"உனக்கு லீவ் எல்லாம் தரமுடியாது!"

"நா லீவ் கேக்கலயே நண்பா? சும்மா இன்பார்ம்தான் பண்ணேன், வரட்டுமா?"

"டேய் நில்லுடா..!"

திரும்பி பார்த்தவன், "என்ன?"

"இங்க ஒருத்தன படுகுழில தள்ளி விட்டிட்டு, கண்டுக்காம போனா என்ன அர்த்தம்? எவ்ளோ அவஸ்தையா இருக்கு தெரியுமா?"

கேலியாகப் புன்னகைத்து அவனொதிரே வந்து நின்றவன், "சார் அப்டி என்ன அவஸ்தைல இருக்கீங்க?"

"எல்லாம் உன்னால தான்!"

அவன் புன்னகை மாறாமலே, "என்ன பண்ணேன், நா ஒன்னும் உன்னைக் குழில தள்ளிவிடலயே?"

"சும்மா இருக்க வேண்டியதனடா நீ? யார் அந்தப் பொண்ணு, என்ன ஏதுன்னு கேட்டு, என்னய குழப்பி விட்டுட்டு...." கிருஷ் சலித்துக்கொள்ள, "நானா குழப்புனேன்? நீ ஆல்ரெடி அப்டிதான் இருந்த ராசா. நா தெளிய வைக்க டிரைப்பண்ணேன், அவ்ளவுதான்!"

கிருஷ் முறைக்க, "ஏன் கிருஷ், ஓ மனச நீயே கஷ்டபடுத்திக்கிற? உனக்குத் தோணுறத செய்!"

"நீ வேற, ஏற்கனவே சென்னைல அவகூட ஒருவாரம் சுத்திட்டு அவ கிளம்புனதும் அங்க இருக்க முடியாம, தூக்கம் இல்லாம, தப்புச்சோம்டா சாமின்னு இங்க வந்து சேந்தேன். இங்க வந்தும் அப்டிதான் இருந்துச்சு. எல்லாத்தையும் ஒதுக்கி தள்ளி வச்சுட்டு நார்மலான சமயத்துல.. நீ உள்ள நுழஞ்சு, தெளிய வக்கிறேன்னு சொல்லி திரும்பவும் குழப்பி விட்டுட்ட!"

"இதுல என்ன இருக்கு? நேரா அந்தப் பொண்ணுட்ட போயி ஐ லவ் யூன்னு சொல்லீடு, சிம்பிள்.."

கிருஷ் ஆழ்ந்து பார்க்க, "இதுக்கு எதுக்குடா முறைக்குற?”

"பேமிலி சென்டிமென்ஸ்ல சிக்கி, என்னைச் சின்னா பின்னமாக்குறதுக்கு வழி சொல்ற..?"

"நீ ஏண்டா அப்டி நினைக்கிற? இங்க கூட்டிட்டு வா. லீசாவோட பழகுன மாதிரி அந்தப் பொண்ணோடயும் பழகு, யாரு கேள்வி கேக்க போறா? விருப்பம் இருந்தா கல்யாணம் பண்ணிக்கோங்க, இல்லேனா பிரிஞ்சிடுங்க.."

கிருஷ் நிதானமாக, "யாருகிட்ட, மருதவள்ளிட்ட? லீசாவோட பழகுன மாதிரி..? அவள பத்தி உனக்குத் தெரியாதுடா மகனே, தெருஞ்சா இப்டி பேசமாட்ட. ஐடியா கொடுக்குற உன்னையும், அத வாயமூடிட்டுக் கேட்டிட்டிருந்த என்னையும் உயிரோட போஸ்ட் மாட்டம் பண்ணீருவா.

அதோட அவனுங்க இரண்டுபேரு வேற, அவக்கூடப் பாடிகார்ட் மாதிரி சுத்தீட்டு திரிவானுங்க. ஒருத்தே வேலு, இன்னொருத்தே காசி. இவளாவது பேசீட்டுக் கை வப்பா, அவனுங்க கைவச்சு நம்ம எலும்பெல்லாம் எண்ணீட்டுதான், வாயவே தொறப்பானுங்க?"

ஜார்ஜ் கேலியாய் புன்னகைத்து, "பயப்படுறியா கிருஷ்?"

பதிலுக்கு அவனின் முகம் தீவிரமாய் மாற, "தெரிலடா, ஆனா இப்டி அவ மேல ஆசைப்படுறது நல்லதில்லன்னு மட்டும் தோணுது!"

ஜார்ஜ் கேள்வியாய் பார்க்க, "என்னோட லைஃப் ஸ்டைல் வேற, அவளோடது வேற. இரண்டும் ஒத்து போகாது. நா நினச்சத செய்றவன், அவளும் தான். கொஞ்சம் பிடிவாதக்காரியும் கூட. இரண்டு பேருமே அவ்ளவு சீக்கிரத்துல விட்டு கொடுக்குறவங்க கிடையாது.

நா ஒன்னு சொன்னா, அதுக்கு அப்டியே ஆப்போசிட்டா வேற ஒன்ன சொல்லுவா. இது எல்லாத்தையும்விடச் சொந்தகாரங்கடா. முகுந்தோட லைஃபும் இதுல இருக்கு. அந்தக் கிராமத்துல இருக்க ஒவ்வொருத்தரும், முகுந்த தன்வீட்டு மாப்ளயா நினச்சு அவ்வளவு மரியாத கொடுக்குறாங்க.."

ஜார்ஜ் யோசனையுடன், "இதுதான் ஒ தயக்கத்துக்குக் காரணமா கிருஷ்?"

புரியாத புன்னகை ஒன்றை உதிர்த்தவன், "இதுதான்னு பர்ட்டிகுலர்ரா சொல்ல முடியல. ஆனா ஏதோ ஒன்னு, என்னைத் தடுக்குதுன்னு வச்சுக்கயேன்"

"இதுக்கு நா சொல்யூசன் சொல்ல முடியாது கிருஷ், நீயேதான் கண்டு பிடிக்கணும்!"

அவன் கேள்வியாய் பார்க்க, ஜார்ஜ் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாய் வெளியேறினான்.நாட்கள் அதன் பாட்டிற்குச் சென்று கொண்டிருக்க, கங்கா சென்னை வந்து ஒருமாதம் ஆகிவிட்டது. இடையில் அவள் ஊருக்கு செல்லவில்லை. மீராவும் வேலுவும் ஒருமுறை வந்து, அவளைப் பார்த்துவிட்டு சென்றனர்.

சில நேரங்களில் வாசுகியின் துணையுடன் வெளியே சென்று வருவது, முகுந்துடன் கவுன்சிலிங் செல்வது என இயல்பாக மாறி இருந்தாள்.

அவ்வப்போது வாசுகியை சந்திக்க வரும் விஷ்வாவும், அவளிடம் ஏதேனும் பேசி அவள் மாறுவதற்கு உதவியாக இருந்தான். இப்போதெல்லாம் கங்காவிற்கு அவனிடம் பேசுவதற்கோ பழகுவதற்கோ எந்தத் தயக்கமும் ஏற்படுவதில்லை.

அன்றும் அப்படித்தான், கங்காவுடைய கவுன்சிலிங்கின் இறுதி நாள். முகுந்தனால் அவளுக்குத் துணையாக வரமுடியாத காரணத்தினால், விஷ்வா அழைத்து வந்திருந்தான்.

இருவரும் மருத்துவமனையில் வேலையை முடித்துக் கொண்டு, கிளம்பும் நேரத்தில் விஷ்வாவின் கைபேசி ஒலித்தது.

கைபேசியின் திரையில் ஈஸ்வரின் எண்ணை பார்த்தவன் கங்காவிடம், "ஒரு நிமிஷம் இதோ வந்திடுறேன்!" என்றுவிட்டு சற்றுத்தள்ளி சென்று பேசினான்.

"சொல்லு ஈஸ்வர்"

"எங்க இருக்க விஷ்வா, உடனே ஐ.ஜி ஆபிஸ்க்கு வர முடியுமா?"

இவன் பதற்றத்துடன், "என்னடா ஏதாவது பினச்சனையா? அந்த அரவிந் சம்மந்தமா எதுவும்..?" எனப் பாதியில் நிறுத்த, "அவன் சம்மந்தமாதான், பெருசா ஒன்னும் இல்ல. ஒரு சின்ன விசாரணை, ஃபார்மாலிட்டிகாகத்தான்!"

"ம்ம் சரிடா, நா வந்திடுறேன்."

திரும்பி வந்தவன் கங்காவிடம், "ஒரு அவசர வேல, நா உடனே ஈஸ்வர பாக்க போகணும். என்கூட வர்ரியா? இல்ல ஆட்டோ பிடிச்சு தரேன், நீயா போயிடுவியா?"

ஒருநிமிடம் யோசித்தவள், "இல்லங்க, இன்னும் சென்னைல நா அவ்வளவா பழகல. உங்க வேல முடிய டைம் ஆகுமா?"

"இல்ல இல்ல, ஒரு ஆஃப் ஹவர்தான்"

அவள் தயக்கத்துடன், "சரி அப்ப நா உங்களோடயே வரேன், நீங்களே என்ன ஹாஸ்டல்ல விட்ருங்க" எனவும் புன்னகைத்தவன்.. முன்னே சென்று வண்டியை ஸ்டார்ட் செய்ய, அவள் பின்னே அமர்ந்து கொண்டாள் கங்கா.

அடுத்த இருபது நிமிடத்தில் ஐ.ஜி. அலுவலகத்தின் முன் நின்றிருந்தனர்.

வண்டியிலிருந்து இறங்கியவள் கண்களில் சிறிது கலக்கத்துடன், "ஏதாவது பிரச்சினையா இங்க வந்திருக்கீங்க?"

மெல்லிய புன்னகையுடன், "அதெல்லாம் ஒன்னுமில்ல. நா அடிக்கடி வந்து போற இடம்தான், வா.." என்று அவன் செல்ல, கங்காவும் உடன் சென்றாள்.

முன்புறம் ஓர் அறையிலிருந்த காவலரிடம் விசாரித்தவன், கங்காவின் புறம் திரும்பி அங்கிருந்த மேஜையைக் காட்டி, "நீ இங்க உக்காந்துட்டு இரு, நா போய்ட்டு வந்திடுறேன்.."

அவள் புரிந்தும் புரியாமலும் சரி என்பது போல் தலையை ஆட்ட, விஷ்வா அங்கிருந்து நகர்ந்தான்.

அரைமணி நேரம் கடந்தும் அவனைக் காணவில்லை. நேரம் சிறிது சிறிதாகக் கூடி ஒருமணி நேரமாகக் கடந்த சமயம், அங்கிருந்த காவலர் தேநீர் அருந்துவதற்காக எழுந்து சென்றார்.

யாருமில்லாத அந்த அறை கிராமத்து மங்கை கங்காவிற்குச் சிறிது மிரட்டலாகத்தான் இருந்தது. நிலவு முகத்தில் வியர்வை துளிகள் அரும்பி நிற்க, ஏற்கனவே உள்ளுக்குள் நடுக்கத்தோடு இருந்தவளை மேலும் பயப்படுத்தவே எதிரில் வந்து நின்றான் ஒருவன்.

"யாருமா நீ?"

கட்டையான கரகரத்த குரலில் அதிகாரத்தொனியில், முகத்தை மறைக்கும் பெரிய மீசையுடன் கங்காவிடம் விசாரித்தார் அந்தக் காவலர்.

அவரின் கடினமான முகத்தைப் பார்த்ததும், தன்னிச்சையாக எழுந்து நின்றவளின் பதற்றம் அதிகரித்து உடலில் மெல்ல நடுக்கம் தோன்றவே, அவர் கேட்ட கேள்விக்குப் பதில்சொல்ல முடியாமல் மௌனம் சாதித்தாள் கங்கா.

பதில் வராமல் போகவே மேலும் குரலை உயர்த்தியவர், "என்னமா பதில காணோம்? யாரையாது பாக்கணும்மா, என்ன விஷயம், எதுக்கு வந்திருக்க?"

மீண்டும் மௌனம்.

"என்னம்மா எதுவுமே சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்?" சுற்றும் முற்றும் பார்த்தவர் சந்தேகப் பார்வையுடன், "இங்க இருந்த கான்ஸ்டபுள் எங்க, நீ எப்டி உள்ள வந்த?”

மீண்டும் மௌனம்.

கங்காவின் அமைதி அவரின் பொறுமையைச் சோதிக்க, "இதுக்குமேல உன்கிட்ட என்ன பேச்சு, நீ வா, வந்து இன்பெக்டர பாரு. அவருகிட்டயே பதில சொல்லிக்க!" என்று அழைக்க, பயத்தில் கங்காவின் விழிகளில் நீர் கோர்த்துக் கொண்டது.

"நட நட.. என்ன அசையாம நிக்கிற?"

அவள் முயன்று தொண்டையிலிருந்து குரலை வெளியேற்றி, "சா சார்.."

"இவ்வளவு நேரம் வாயத் தொறக்காம, இன்ஸ்பெக்டர்ட்ட போலான்ன உடனே.. ம்ம்ம், பேசுற?"

"அது அது..." காக்கி அவளைப் பார்த்து முறைக்க, அவளின் விழிகளில் இருந்து நீர் விழுவதற்குத் தயாரானது.

"கங்கா.." என்ற அழைப்பில் நிமிர்ந்து பார்த்தவள், சட்டென்று வழிந்துவிட்ட கண்ணீருடன் இரண்டெட்டில் விஷ்வாவின் அருகே சென்று கையைப் பிடித்துக் கொண்டாள்.

அவன் இயல்பாக, மற்றொரு கையால் அவளின் கையைத் தட்டி கொடுத்து, "என்ன ஏட்டு?"

அவர் புன்னகைத்தவாறு, "உங்கக்கூட வந்தவங்களா சார்? நா கேட்டேன் சார், அவங்க எந்தப் பதிலும் சொல்லல. அதான் ஈஸ்வர்சார் கிட்ட கூட்டிட்டு போலாம்ன்னு.."

''நான் ஈஸ்வரதான் பாத்துட்டு வரேன், நீங்க போங்க"

''சரி சார்.." என்று அந்தக் காக்கி சென்றுவிட, அவளின் புறம் திரும்பியவன் மெல்லிய புன்னகையுடன், "யாராவது எதாவது கேட்டா, என்னோட பேர சொல்ல வேண்டியதன?"

தன் கையைப் பிடித்திருந்த அவளின் கைகளில் பார்வையைப் பதித்து, "பழையபடி நடுங்க ஆரம்பிச்சுட்ட. இதுல பச்சபுள்ள மாதிரி கண்ணீர் வேற? எப்பதான் இந்தச் சின்னப் பொண்ணு வளருவா?" எனப் புருவம் உயர்த்திக் கேலியாய் பேச, விஷ்வாவின் செய்கையில் கண்களைத் துடைத்துக் கொண்டு புன்னகைத்தாள் கங்கா.

அவளின் தோளில் ஆறுதலாகத் தட்டி புன்னகைத்தவாறே, "வா போலாம்.."

அவளின் கையைப் பிடித்து நடந்தவன் யோசனையுடனே, "இவ்வளவு கவுன்சிலிங் கொடுத்தும், எந்த இன்ப்ரூமென்ட்டும் இல்லயே..? நாமதான் ஏதாவது செய்யணும் போலருக்கு?" எனச்சொல்ல, கங்கா அவனைப் பார்த்து புரியாது விழித்தாள்.

சின்னதாய் சிரித்தவன், "ம்ம் வாசுகி சித்திட்ட கேட்டா, புரோபஸர் நல்லா ஐடியா குடுப்பாங்க, என்ன? வா மொதல அவங்கள போயி பாக்கலாம்.." என்று கல்லூரி நோக்கி சென்றான்.கதவுத்தட்டும் சத்தம் கேட்க ஒருவழியாகத் தூக்கம் தெளிந்து அறைக்கதவை திறந்தான் கிருஷ்ணா.

"என்னடா, ஏதோ சத்தம் கேட்டுச்சு?"எனக் கேள்வி பார்வையுடன் எதிரில் நின்றார் காஞ்சனா.

"ஒன்னுமில்ல.."

அவனை ஒருமாதிரி பார்த்தவர், "என்ன இன்னிக்கு ஆபிஸ் போலயா?"

"போகணும், ஆமா ஏ இப்டி பாக்குறீங்கம்மா?"

"ம்ம், ரெண்டு நாளா நீ ஆளே சரியில்லயே..?"

அவன் திருதிருவென்று முழித்தவாறு, "ஏன், எப்டி இருக்கேன் ம்மா?"

அவன் முகத்திற்கு நேரே கையைநீட்டி சுட்டிக்காட்டி, "இந்தா இப்டித்தான் இருக்க!"

அவன் கேள்விபார்வையுடன் நோக்க, "போய் ஓ மூஞ்சிய கண்ணாடில பாரு.."

அவன் முறைத்துவிட்டு, தலையை ஆட்டி கொண்டே, "ம்ம் ம்ம்...?"

அவர் மெலிதாய் சிரித்து, "சரி சீக்கிரம் வா, அப்பா உன்கிட்ட பேசணும்னு சொன்னாரு.."

"என்னவாம்?"

"வந்து நீயே கேட்டு தெருஞ்சிக்க!" என அங்கிருந்து நகர்ந்தார்.

அறையின் உள்ளே வந்து கண்ணாடியின் முன் நின்ற கிருஷ், அதில் தெரிந்த தன் உருவத்தை உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தான்.

சில வினாடிகளில் அது மீராவின் உருவத்தைப் பிரதிபலிக்க, ‘என்ன இது, நம்ம மூஞ்சிய பாத்தா அவ முகம் தெரியுது. ஒருவேள அம்மாக்கும் அப்டிதான் தெருஞ்சிருக்குமோ?’ தாடையை வலக்கை விரல்களால் தடவிக்கொண்டே யோசித்தான்.

தன் பின்னந்தலையில் சட்டென்று தட்டிக்கொண்டவன், "கிருஷ்ணா முத்துறதுக்கு முன்னாடி, இதுக்கு ஒரு வழி பண்ணனும். என்ன பண்ணலாம், என்ன பண்ணலாம்..?"

ஒருமுறை மூச்சை ஆழ்ந்து இழுத்து விட்டவன், "ஃபுஸ், இப்போதைக்கு ஒன்னும் பண்றதுக்கில்ல. முதல மிஸ்டர் ராகவன போய்ப் பாத்து என்னன்னு கேப்போம்?" என நகர்ந்தான்.

குளியலறைக்குள் புகுந்தவன், இருபது நிமிடத்தில் தயாராகி உணவு மேஜைக்கு வந்தான். காஞ்சனா அவனுக்கு உணவை பரிமாற, ராகவன் உணவை முடிக்கும் தருவாயில் இருந்தார்.

கிருஷ் ஒருவாய் எடுத்து வைத்துக்கொண்டே, "பேசணும்னு சொன்னீங்களாப்பா?"

"ம்ம், எப்ப கல்யாணம் பண்ணலாமான்னு இருக்கக் கிருஷ்ணா?"

"இப்ப என்ன அவசரம், பாக்கலாம்!"

"ம்ம், கல்யாணம் பண்ற எண்ணமாவது இருக்கா? இல்ல..."அவர் பாதியில் நிறுத்த, தந்தையை ஒரு பார்வை பார்த்துவிட்டு, "இப்ப உங்களுக்கு என்ன வேணும்?"

"எங்களுக்கு எங்க கடமைய செய்யணும்ல!"

"அதான் செஞ்சுடீங்களே. முகுந்துக்குக் கல்யாணம் பண்ணி பேரப்பிள்ளய பாக்க போறீங்க, அப்புறம் என்ன?"

"அப்ப நீ?"

"அப்பா உங்களுக்கு என்னைப்பத்தி நல்லாவே தெரியும்!"

"தெரியுந்தான், ஒர தடவ பேசி பாக்கலாம்ன்னு நினச்சேன். சரி ஒரு வார்த்தை மட்டும் சொல்றேன், கேட்டுக்கோ!"

"ம்ம், சொல்லுங்க.."

"நமக்கு இந்தநாட்டு பழக்கவழக்கமும், நாகரிகமும் ஒத்துவராது. உனக்கும் அது ஒருநாள் புரியும்"

"புரியறப்ப புரியட்டும், வேற..?"

அவனை முறைத்தவர், "அடுத்த மாசம் நானும் அம்மாவும் இந்தியா கிளம்புறோம்"

"தாரா டெலிவரிக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கே, ஏ முன்னாடியே கிளம்புறீங்க?"

இடைநுழைந்த காஞ்சனா, "அண்ணனும் அண்ணியும் போன் பண்ணீருந்தாங்க.."

"என்ன விஷயம்?"

"கோவில் திருவிழா, போன வருசம் சம்மந்தி இறந்ததுனால நம்மள முறையா அழைக்கலையாம். இந்தவருஷம் தாராவும் அங்க இருக்கா, அவசியம் வரனும்னு சொல்லி கூப்டாங்க"

"எத்தன தடவ இந்தியாவுக்கு அழையிறது? திருவிழா, தாரா டெலிவரி, அப்பாவோட ரிட்டயர்மென்ட்க்கு அப்புறம் ஒரேதா போயி அங்கயே செட்டில் ஆக வேண்டியதன?”

"எதுக்கு அழைய போறோம்! அப்பா வேலய விடுறதா முடிவு பண்ணீட்டாரு. அடுத்த மாசம் போனா, அப்டியே அங்கேயேதான். திரும்ப யாரு வரப்போறா?"

தாயை முறைத்தவன், "என்னைக் கேக்காம நீங்களா முடிவெடுத்தா எப்டி?"

''நானும் அவரும் போறதுக்கு, உன்கிட்ட எதுக்குக் கேக்கணும்?”

"அப்ப நான்? என்னால இந்தியால வந்து இருக்க முடியாது!"

ராகவன் அழுத்தமாக, "உன்னை வர சொல்லல கிருஷ்ணா, நாங்க போறோம். இது ஏற்கனவே எடுத்த முடிவுதான், அது உனக்கும் தெரியும்!"

"அப்பா.."

அவனைத் தடுத்தவர், "நா பேசீடுறேன். எங்களோட கடமைய முடிக்கிறதுக்குத்தான் உன்கிட்ட கல்யாணத்தப்பத்தி பேசுனோம். நீதான் பிடிகொடுக்க மாட்டீன்ற.

வருஷத்துக்கு ஒருபொண்ணோட நீ சுத்துறத, நாங்க வேடிக்கப் பாக்க முடியாது. நா உன்னை முதலயே கண்டிச்சு வளத்திருக்கணும், தோளுக்குமேல வளந்த பிள்ளய இப்ப கண்டிக்க முடியாது. உன்னோட வாழ்க்கை உன்னோட விருப்பம்..!"

அவன் காஞ்சனாவை திரும்பி பார்க்க, "உன்னயும் தான் கூப்புடுறோம், நீதான் வர மாட்டீங்கிற? கடைசிக் காலத்துலயாது சொந்த நாட்டுல மகன், மருமக, பேரபுள்ளங்கன்னு இருக்க நினைக்கிறோம். உன்ன வற்புறுத்தல, நீதான் முடிவெடுக்கணும்!"

அவன் பதில் பேசாமல், பாதிச் சாப்பாட்டிலேயே எழுந்து சென்றான்.

காஞ்சனா வாடிய முகத்துடன், "கிருஷ்ணா?"

திரும்பி பார்த்து புன்னகைத்தவன், "ஆபிஸ்க்கு டைம் ஆச்சும்மா." என்றுவிட்டு வெளியேறினான்.

கிருஷ்ணாவிற்கு மனம் பாரமாய் இருந்தது. தந்தை பேசியதையே அவன் நினைத்துக் கொண்டிருக்க, உள்மனம் அவர் சொன்னதை ஆராயத் தொடங்கியது.

'அப்பா சொன்னது நிஜம்தான், எல்லாமே ஏற்கனவே பேசி முடிவெடுத்ததுதான். நானும் இங்கயே இருக்குறதா சொல்லியாச்சு. அதுக்கப்புறம்தான் முகுந் இந்தியால கம்பெனி ஆரம்பிச்சு இவ்வளவும் செஞ்சது. பின்ன ஏன், என்ன நானே குழப்பிக்கிறேன்?

மருதவள்ளி, அவ.. அவ இங்க வர ஒத்துப்பாளா? மடையா, மொத உன்ன அவளுக்குப் பிடிக்குமா, கல்யாணம் பண்ண ஒத்துப்பாளா?

ம்ம்.. ம்கூம்ம். அப்ப உனக்குக் கல்யாணம் பண்றதுல எந்தப் பிரச்சனையும் இல்ல. அப்புறம் ஏ அப்பா கேட்டப்ப அப்டி பதில் சொல்லீட்டு வந்த?

அவளோட பேசாம எப்டி இவங்கட்ட சொல்றது? சொன்னா, இவங்க ரியாக்சன் எப்டி இருக்கும்? அவ இங்க வருவாளா, ச்சே.. சுத்தி சுத்தி அங்கயே வந்து நிக்கிதே?

என்ன பண்றது, அந்த ராட்சசிகிட்ட எப்டி பேசுறது? சும்மா பக்கத்துல போனதுக்கே, பஞ்சாயத்துல நிக்க வச்சுருவேன்னு சொன்னவ. லவ் பண்றேன்னு சொன்னா, எப்டி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியலயே!’

'அவள் என்ன பதிலளிப்பாள்?' என்ற யோசனையுடனே அன்றைய நாளின் நிமிடங்களை யுகங்களாய் கடத்தி கொண்டிருந்தான் கிருஷ்ணா.

 

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

அன்பு நெஞ்சங்களே,

எல்லாரும் எப்பிடி இருகீங்க. மனதோடு வீசும் தென்றல் பகுதி 5 இதோ உங்களுக்காக. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்.


அன்புடன்
உமா நாதன்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
வெய்யோனின் தண்மதி அவள் அத்தியாயம் 7😎👇
ஓம் சாயிராம்.
திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.

எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

New Episodes Thread

Top Bottom