கனிந்தமனம் - 37

"கிருஷ்"

தன் கையிலிருந்த பைலில் தலையை விட்டிருந்தவன் புன்னகையுடன் நிமிர்ந்து, "வா ஜார்சன்"

"என்னடா பண்ணீட்டிருக்க?"

"ஏ, பாத்தா எப்டி தெரியிது?"

அவனை முறைத்தவன், "ஈவ்னிங் பார்ட்டி இருக்கு, ரெடியா இருன்னு சொன்னனா இல்லியா?"

"ஓ, வேலையில மறந்துட்டேன்!"

ஒருமாதிரி பார்த்தவன், "என்னமோ தெரியல, ரொம்ப நல்லவனா மாறீட்ட..!"

பைலை மூடிவிட்டு, இருக்கையில் இருந்து எழுந்தவன் புன்னகையுடன், "அப்டி என்னடா, நல்லவனா மாறீட்டேன்?"

"முன்ன எல்லாம் ஆபிஸ் பக்கமே எட்டி பாக்க மாட்ட, இப்ப என்னடான்னா..!"

"அப்ப முகுந் இருந்தான், ஆபிஸ் வர்ரதுக்கான அவசியம் இல்ல. ஆனா இப்ப, ஏ கையிலல பொறுப்ப கொடுத்துருக்கான்..?"

"இருந்தாலும் இது ரொம்பப் பொறுப்பால இருக்கு? இந்தியா போய்ட்டு வந்ததுல இருந்து நிறையச் சேன்ஞ் ஆயிட்ட கிருஷ்"

கண்கள் சிரிக்கத் தன் மேல்கோட்டை எடுத்துப் போட்டுக்கொண்டு, "சரி வா கெளம்பலாம், ஆமா எதுக்குப் பார்ட்டி?"

"தம்பி பிரான்ஸ் போறான். அதான் எல்லா ஃப்ரண்ட்ஸையும் கூப்ட்டு, சின்னதா கெட் டூ கெதர் மாதிரி.."

"ம்ம், வீட்டுக்கு போயி டிரஸ் சேன்ச் பண்ணீட்டு போயிடலாம்.."

"ஓகே ஓகே, ஏ திடீர்ன்னு நம்ம ரூம்ல இருந்து வீட்டுக்கு போயிட்ட?"

"அம்மா அப்பா தனியா இருக்காங்கல்ல?"

அவன் 'புரிந்தது' என்பதுபோல் தலையசைக்க, அடுத்த இருபது நிமிடத்தில் கிருஷ்ஷின் வீட்டை அடைந்தனர்.இருவரும் அரங்கில் நுழைய ஆண் பெண் வித்தியாசமின்றி அனைவரது கைகளிலும் மது கோப்பைகள் இருக்க, ஏற்கனவே அங்கே ஆட்டமும் பாட்டமும் ஆரம்பமாகி இருந்தது.

ஜார்ஜின் சகோதரனை சந்தித்துச் சில நிமிடங்கள் பேசிய கிருஷ், சற்றுத்தள்ளி வந்து ஓர் இருக்கையில் அமர்ந்து கொண்டான். தன்கையிலும் மதுவை எடுத்து கொண்டவன், அங்கிருந்த கூட்டத்தில் பார்வையைச் சுழலவிட்டான்.

அரைமணி நேரம் கழித்து அவனருகே வந்தமர்ந்த ஜார்ஜ், "என்னடா, இங்க வந்து உக்காந்துட்ட?"

கிருஷ் புன்னகைக்க அவனைக் கூர்ந்து பார்த்தவன், "யாருடா அந்தப் பொண்ணு?"

நண்பனின் புறம் திரும்பியவன், பார்வையில் கேள்வியுடன் மீண்டும் கூட்டத்தினுள் பார்வையால் ஆராய்ந்து, "எந்தப் பொண்ண சொல்ற?"

அவனைப் பார்த்து புன்னகைத்தவன், "அங்க இல்ல"

கிருஷ் நண்பனிடம் பார்வையை இடம் மாற்ற, ஜார்ஜ் அவனது இதயம் இருக்கும் இடத்தைச் சுட்டிககாட்டி, "இங்க!"

அவன் புரியாத புன்னகையுடன், "என்னடா சொல்ற?"

"யூ ஆர் இன் லவ் கிருஷ்"

"வாட்?"

"ஏ இவ்ளோ ஷாக் ஆகுற?"

"உளறாத நமக்கு லவ்வெல்லாம் செட் ஆகாது. நானாவது லவ் பண்றதாவது? நா பொண்ணுங்களோட ஃப்ரண்ஷிப் வச்சுக்குறதே டைம் பாஸ்க்கு. இந்தக் கிருஷ், ஒரு பொண்ண லவ்வா?”

"அது நாமளா நினச்சுக்கிறது. ஆனா நமக்கே தெரியாம, அது நமக்குள்ள வந்திடும்"

ஜார்ஜை அவன் கேள்வியோடு பார்க்க, அவனின் கண்கள் வாயில்புறம் இருந்தது. இவனும் பார்வையைத் திருப்ப, லீசா வந்து கொண்டிருந்தாள்.

இடையில் பேசிய நண்பர்களிடம் எல்லாம் புன்னகை பூத்த முகத்துடன் பதிலளித்துவிட்டு இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தவள், "ஹாய் ஜார்ஜ்"

"ஹாய் டியர்" என்று அவளை அணைத்து விடுவித்தான் அவன்.

"ஹாய் கிருஷ், ஹவ் ஆர் யூ?"

"ஐம் ஃபைன், யூ?"

புன்னகைத்து, "சூப்பர்ப், ஒன் மினிட்.." என்றவள் கூட்டத்திற்குள் இருந்த ஒரு அமெரிக்கனை கைப்பிடித்து அழைத்துவந்து, "ஹி இஸ் நெல்சன், மை பாய் ஃபிரண்ட்" என இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.

கிருஷ் இயல்பான புன்னகையுடன், "ஹலோ ஃப்ரண்ட்" எனக் கைநீட்ட, அவனும் இயல்பாகக் கை குலுக்கினான்.

சில நிமிடங்கள் பேசிவிட்டு லீசாவும் அவளது ஆண் நண்பனும் நகர்ந்துவிட.. யோசனையுடன் திரும்பிய ஜார்ஜ், "உனக்கும் லீசாவுக்கும் என்ன பிரச்சன?"

"பிரச்சனையா? அதெல்லாம் ஒன்னும் இல்ல"

"அப்புறம் ஏன் ரெண்டு பேரும் பிரிஞ்சீங்க?"

தோளை குலுக்கியவன், "தெரில ஜார்ஜ். ஒருநாள் வந்தா, நீ மாறிட்ட கிருஷ். உனக்கும் எனக்கும் சரி வராது, லெட்ஸ் பிரேக் அப்ன்னா. நானும் ஓகே சொல்லீட்டேன், அவ்வளவு தான்!"

"அவளுக்கு இஷ்டமில்ல சரி, நீ ஏனா ஓகே சொன்ன?"

ஒருமாதிரியாகப் பார்த்தவன், "இஷ்டமில்லாத பொண்ண ஃபோர்ஸ் பண்ண சொல்றியா? எனக்கு எப்பவும் யார்கிட்டையும் எதையும் கேட்டு வாங்கிப் பழக்கம் இல்ல ஜார்ஜ். நா தப்பும் பண்ணமாட்டேன், சாரியும் கேட்க மாட்டேன்!"

அவன் சிரித்து, "அதான் எனக்குத் தெரியுமே, நீ ஓகே சொன்னதுக்கான காரணத்த நா சொல்லட்டுமா?"

கிருஷ் பார்வையில் கேள்வியைத் தேக்க, "உனக்கு லீசாகிட்ட இருந்த இன்ட்ரஸ்ட் போயிருச்சு. ஏன்னா, உன்னோட பார்வை மாறீடுச்சு!"

"என்ன சொல்ல வர்ர?"

புன்னகைத்தவன், "பொண்ணுங்க எல்லாம் ரொம்ப ஷார்ப் கிருஷ். எனக்கு இப்பதான் உன்கிட்ட இருக்கச் சேன்சஸ் தெரியுது. ஆனா லீசா, எட்டு மாசத்துக்கு முன்னாடியே அத கண்டுபிடிச்சு விலகிட்டா பாத்தியா?"

அவன் புரியாமல் பார்க்க, “ஐம் ஹன்ரண்ட் பர்சன்ட் ஸுயர், யு ஆர் இன் லவ் அன் மோர் ஓவர் டீப்லி" (நூறு சதவிகிதம் உறுதியா சொல்றேன், நீ காதல்ல விழுந்துட்ட அதுவும் ஆழமா!)

யோசனையுடன் சிரித்தவன், "உளராதடா.!"

"நா உளர்றனா, இந்தியால அப்டி எந்தப் பொண்ணடா மீட் பண்ண?"

"புதுசா யாரையும் மீட் பண்ணலடா, ரிலேசன்ஸ் மட்டுந்தான்"

"ஏ உங்க ரிலேசன்ல வயசு பொண்ணுங்க இல்லையா? சரி யாரு யாரு, உனக்கு ரொம்ப நெருக்கம்ன்னு சொல்லு.!"

சிரித்தவன், "பிரியா, ரமேஷோட வொய்ஃப்!"

"டேய், கல்யாணமாகாத பொண்ணுங்கள சொல்லுடா"

"எனக்குப் பழக்கமான எல்லாப் பொண்ணுங்களையும் சொல்றேன், நீயே கண்டுபுடுச்சு சொல்லு..!"

"நல்ல வேலடா எனக்கு, சொல்லு சொல்லு!"

"ரேணு, அவளுக்கு என்கேஜ்மென்ட் ஆயிடுச்சு. இன்னும் நாலு மாசத்துல மேரேஜ். ம்ம்.. கங்கா, பாவம்டா அந்தப் பொண்ணு"

"ஏ என்னாச்சு?"

கங்காவை பற்றிச் சுருக்கமாகச் சொன்னான்.

"ம்ம் ஓகே நெக்ஸ்ட்.."

"அடுத்து இருக்குற ஒரு பொண்ணு, ம்ம்.. அவள பொண்ணுன்னு சொல்ல முடியாது, சரியான ராட்சசி..!"

ஜார்ஜ் சுவாரஸ்யத்தோடு, "யாருடா அந்த ராட்சசி?"

கிருஷ் கண்கள் மிளிர, "மருதவள்ளி.."

"ம ரு த வ ள் ளி?"

"ஏண்டா, இப்டி இழுக்குற?"

"ஏ சாருக்குக் கோபம் வருதா?"

அவன் புன்னகைக்க, "சரி பொண்ணு யாரு, என்ன பண்ணுது, நீ எப்டி அவகிட்ட விழுந்த?"

"கன்ஃபார்மே பண்ணீட்டியா?"

"பின்ன, ஓ முகத்த பாத்தே சொல்லிடலாம். அவ பேர சொல்றப்பயே, கண்ணுல ரசன தெரியுதே?"

"எந்தப் பொண்ண பாத்தாலும் ரசிக்கிறவன்டா நான்!"

"அப்டியா? ஓகே, இங்க இத்தன பொண்ணுங்க இருக்காங்கல்ல, யாரு அழகா இருக்கான்னு சொல்லு!"

பார்வையைச் சுழலவிட்டவன், "எல்லாப் பொண்ணுங்களுமே அழகாதான் இருக்காங்க, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான அழகு..!"

"சரிடா, எந்தப் பொண்ண உன்னோட கேள்ர்ப்ரண்டா சூஸ் பண்ணுவ?"

சட்டென்று ஜார்ஜின் புறம் திரும்பியவன், "லூசாடா நீ, இது என்ன மாதிரியான கேள்வி? நா பொண்ணுங்களோட எண்ணங்களுக்கும் மதிப்பு கொடுக்கிறவன். உனக்கு விளையாட்டா இருக்கா?"

நண்பனை பார்த்து புன்னகைத்தவன், "போன தடவ, லீசாவ இதே ஹோட்டல்ல வச்சு இதே மாதிரிதான் செலக்ட் பண்ண. உனக்கு லீசாவ பிடிச்சது. அவகிட்ட கேட்ட, அவ ஓகே சொன்னா. இரண்டு பேரும் பழக ஆரம்பிச்சீங்க, அவ்வளவு தான். எனக்குத் தெரிஞ்ச கிருஷ் இப்டித்தான்.

போன வருஷம் சரின்னு தோணுன ஒரு விஷயம், இப்ப உனக்குத் தப்பா தெரியுது! அதுக்குக் காரணம் உன்னோட பார்வ மாறீடுச்சு. நீ சொன்னியே ஒரு பொண்ணு, அவ மாத்திருக்கா!"

கிருஷ்ணா குழப்பத்தோடு, "இல்ல ஜார்ஜ், இது லவ் இல்ல. அதுவுமில்லாம அவளுக்கும் எனக்கும் ஒத்துவராது!"

"ஏன்?"

"அவள நேர்ல பாத்தா, உனக்கே புரியும். அவள அவ்வளவு சீக்கிரம் நெருங்க முடியாது. சாதாரணமா பேசி பழகுனாலும், ஒவ்வொருத்தரோட பழகுறதுக்கும் ஒவ்வொரு எல்லை வச்சிருப்பா. நாம அத கிராஸ் பண்ண டிரை பண்ணோம், அவுங்களுக்குத் தகுந்த மாதிரி புரியவப்பா!"

"என்னடா சொல்ற?"

"பேசியே மனுசன கொல்லுவா, அதையே சமாளிக்க முடியாது. இதுல மேடம்க்குக் கை வேற நீளம்!"

அவள் கிள்ளிச்சென்றது நினைவில்வர, கிருஷ்ஷின் இடக்கை தன்னிச்சையாக வலது முழங்கையைத் தடவிக்கொண்டது.

ஜார்ஜ் அவனின் செய்கையில் புன்னகைத்து, "என்னடா கை நீளம்ன்னு சொல்ற? டிரை பண்ணி, ஏதாவது வாங்கினியா என்ன?"

அவன் புன்னகைக்க, "ஏ யோசிக்கிற? பிடிச்சிருந்தா, அவகிட்ட பிடிச்சிருக்குன்னு சொல்லீட வேண்டியது தான!"

"இல்லடா, எனக்கு அப்டி தோணல. அவள பிடிக்கும் தான், ஆனா காதல் அப்டீன்ற ஒன்னு? ம்கூம்ம்.. மேரேஜ் பேமிலி இதெல்லாம் செட் ஆகாது..!"

"முகுந் மேரேஜ் பேமிலின்னு நல்லாதான இருக்கான். ஏ இவ்வளவு தயங்குற? ஏதாவது பிரச்சனையா..?"

கிருஷ் சிரித்து, "எங்க ரெண்டு பேரோட எண்ணங்களும் கருத்துக்களும் வேற வேற ஜார்ஜ்.."

அவன் புரியாமல் பார்க்க, "அவள தண்ணின்னு நினைச்சு, அசால்ட்டா தொட்ரவும் முடியாது. நெருப்புன்னு நினச்சு, தள்ளி நிக்கவும் முடியாது. நா இதுவரைக்கும் பழகுன பெண்கள்ல இருந்து ரொம்பவே வித்தியாசமானவ.

உண்மைய சொல்லணும்னா, அவள பாத்த முதல் நாள்ல இருந்து புருஞ்சுக்க முயற்சி பண்றேன், ஆனா முடியல. என்னோட பக்கத்துல தான் நிப்பா, அவள பிடிக்கிறதுக்குக் கைய நீட்டுனா எட்டாத தூரத்துல இருப்பா! சரி தூரமா தான இருக்கா, நாம நம்ம வேலய பாப்போன்னு நினச்சோம்ன்னா, பக்கத்துல வந்து இம்ச பண்ணுவா!"

ஜார்ஜ் சிரிக்க, "ஏன்டா சிரிக்கிற, என்னைப் பாத்தா உனக்கு எப்டி தெரியுது?"

அவன் புன்னகை மாறாமலேயே அவனின் இதயத்தைச் சுட்டிக்காட்டி, "இங்க மட்டும் இல்ல…" கண்கள் மூளை இருக்கும் இடத்தையும் காட்டி, "இங்கேயும் நுழஞ்சு உன்ன நல்லாவே படுத்துறா போலருக்கு?"

கிருஷ்ணா அவனையே பார்த்திருக்க.. குரலில் தீவிரத்தோடு, "உன்ன அறியாமயே, கொஞ்ச கொஞ்சமா அவள நேசிக்க ஆரம்பிச்சுட்ட கிருஷ். அது உனக்கும் புரியுது, ஆனா ஏத்துக்கத்தான் மறுக்குற. நா அந்தப் பொண்ண பாத்ததில்ல. ஆனா நீ சொன்னத வச்சு சொல்றேன், உன்னால அவள மறக்க முடியாது!

மனைவி, குழந்தை, குடும்பம்ன்னு வாழ்றது நீ நினைக்கிற மாதிரி ஜெயில் இல்ல. அத அனுபவிக்கறப்ப தான், அதுல இருக்க அழகும் சந்தோஷமும் புரியும். சரி வா கெளம்பலாம், டைம் ஆச்சு.." என்றதும், பதிலேதும் பேசாமல் கிளம்பி சென்றான்.ஜெயந்திக்குக் கண் அறுவைசிகிச்சை முடிந்து இன்று கண்கட்டை பிரிக்கின்றனர். தாமரை மீராவை மதுரைக்குச் செல்ல அனுமதிக்காததால், வேலு மட்டும் சென்றிருந்தான்.

கட்டை பிரித்துச் சோதித்த மருத்துவர், ஜெயந்திக்கு பார்வை வந்துவிட்டதை உறுதி செய்தார். வேலு மீராவுக்கு விஷயத்தைச் சொல்லி, நாளை ஊர் திரும்பி விடுவதாகத் தகவல் தெரிவித்தான்.

இதற்கிடையில் அன்று மதியம் முகுந் தாராவை பார்க்க வந்திருந்தான். அவனை அழைத்துக் கொண்டு தாமரையும் மீராவும் தாராவின் மாத பரிசோதனைக்காக டவுனில் இருந்த மருத்துவமனைக்குச் சென்றனர்.

அவர்களைப் பார்த்த பெண் மருத்துவர், "என்ன மீரா, கொஞ்ச நாளா உன்ன பாக்கவே முடியல?"

புன்னகைத்தவள், "சென்னைக்குப் போயிருந்தேன்க்கா. வந்ததுல இருந்து தோட்டத்துல வேல, அதான் டவுன்பக்கம் வரல"

"ம்ம், யாரிது?"

"அக்காதான், இது அத்தான்.." அறிமுகம் செய்து வைத்தவள், "அக்காவ வளைகாப்பு போட்டு இங்க கூட்டிட்டு வந்துட்டோம், இங்க தான் பிரசவம் பாக்கணும். ஏழுமாசம் ஆகுது செக்கப் பண்ணலாம்ன்னு.."

"சரி சரி, நல்லபடியா பாத்துடலாம்.." என்றவர் தாராவை பரிசோதனைக்காக அழைத்துச் சென்றார்.

பத்து நிமிடத்தில் திரும்பி வந்தவர், "எல்லா நார்மலா இருக்கு, குழந்தையோட அசைவும் நல்லா தெரியுது. கீரை, பழம்ன்னு சத்தான சாப்பாடா எடுத்துக்கோங்க. மாத்திரையெல்லாம் தேவையில்ல, அப்பப்ப நடக்குறது நல்லது.

ஏழு மாசம் ஆயிட்டதால வீட்ல சின்னச் சின்ன வேல பாருங்க, நார்மல் டெலிவரி ஆயிடும். எதுக்கும் பயப்டாம, நல்லதயே பேசி நல்லதையே நினைக்கணும். அப்பதான் உள்ள இருக்கப் புள்ளையும் நல்லா ஆரோக்கியமா இருக்கும், என்ன..?"

அவர் பேசி முடிக்கும் வரை அமைதியாய் கவனித்துவிட்டு, தங்களுக்கிருந்த சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவு செய்துகொண்டு வீடுவந்து சேர்ந்தனர் நால்வரும்.

உள்ளே நுழைந்தவுடன் முகுந்தின் கைப்பேசி ஒலிக்கக் காதுக்குக் கொடுத்தான். பேசி முடித்தவனின் முகம் குழப்பத்தைக் காட்ட அருகே வந்த தாரா, "என்னாச்சுங்க?"

"கங்காவோட கவுன்சிலிங்கு வர சொல்றாங்க"

"இப்பவா?"

"இல்ல, ஈவ்னிங் ஆறுமணிக்கு. நா உடனே கிளம்புனாலும் டைம் ஆயிடும்"

"எப்ப அப்பாய்ண்மென்ட்ன்னு முதலயே கேட்டுட்டு, நீங்க நாளைக்கு வந்திருக்கலாம்ல முகுந்?"

"என்ன மா நீ, அவளுக்கு எப்பவும் வெள்ளிக்கிழம தான கவுன்சிலிங்?"

"இன்னைக்குப் புதன்கிழம தான, ஏ ரெண்டு நாளைக்கு முன்னாடியே கூப்பிடுறாங்க?"

"டாக்டர் ஏதோ கான்ஃப்ரன்ஸ்காக மும்பை போறாராம், வர்ரதுக்குப் பத்துநாள் ஆகும். அதான் முன்னாடியே அப்பாய்ண்மென்ட் எல்லாம் பாக்குறாரு.."

சமையலறையில் இருந்து வெளிவந்த மீரா, "என்ன அத்தான், எத பத்தி பேசீட்டு இருக்கீங்க?"

அவன் விவரத்தை சொல்ல, "சரி விடுங்க அத்தான், டாக்டர் திரும்ப வந்ததும் பாத்துக்கலாம்..."

"இல்லமா, அடுத்து எப்ப அப்பாய்ண்மென்ட் கிடைக்கும்ன்னு சொல்லமுடியாது. அதுவும் இல்லாம, இப்பதான் அந்தப்பொண்ணோட முகமே தெளிவா இருக்கு. பேச்சும்கூட அவ்வளவா திக்குறதில்ல, ஓரளவுக்கு நல்லாவே பேசுறா. தொடர்ந்து கவுன்சிலிங் கொடுத்தா சீக்கிரமே பழைய மாதிரி ஆயிடும்.."

அவன் யோசனையுடன் இருக்க, "என்ன பண்றது அத்தான், உங்களாலயும் போக முடியாதே. நாளைக்குப் பஞ்சாயத்து வேற கூட்றாங்க, வேலு அண்ணே உங்கள இருக்கச் சொல்லுச்சு.."

‘சரி’ என்பது தலையசைத்தவன், "நா விஷ்வா சென்னைல இருக்கானான்னு கேட்டு பாக்குறேன். அவன் இருந்தா, அவன கூட்டிட்டுப் போகச் சொல்லலாம்.." என்றவன் அழைப்பு விடுக்க, எதிர்புறம் பேசியவன் தான் பாத்துக் கொள்வதாகத் தெரிவித்தான்.

மீராவும், வாசுகியின் மூலம் கங்காவை தொடர்பு கொண்டு விஷ்வா வரும் விஷயத்தைச் சொன்னாள்.
 

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

அன்பு நெஞ்சங்களே,

எல்லாரும் எப்பிடி இருகீங்க. மனதோடு வீசும் தென்றல் பகுதி 5 இதோ உங்களுக்காக. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்.


அன்புடன்
உமா நாதன்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
வெய்யோனின் தண்மதி அவள் அத்தியாயம் 7😎👇
ஓம் சாயிராம்.
திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.

எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

New Episodes Thread

Top Bottom