• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கண்ணின் மணியே............

மனோஜா

✍️
Writer
கண்ணின் மணியே :

நானும் என் தம்பியும் பேசிக் கொண்டு இருந்தோம். நான் கொஞ்சம் அதிகம் வாய் பேசக் கூடிய ஆள். அதுமட்டுமில்லாமல் பொதுவான பாஷையில் திமிரு , என் பாஷையில் சுய மரியாதை என்று அழைக்கப்படும் செல்ஃப் ரெஸ்பெக்ட் எனக்கு உண்டு. அவனை விட நான் படித்தவள். என் தம்பியும் படித்தவன் தான்.

எதற்கோ பேசும் போது அவன் சொல்கிறான். “நீ போற இடத்தில் எப்படி அடி மிதி வாங்கப் போறயோ?” என்று.

நான் கூறினேன் “ அப்படி நடந்தா அவங்க குடும்பம் மொத்தமும் அடுத்த நாளில் ஜெயிலில் இருப்பாங்க.” என்று பதில் கொடுத்தேன்.

இது விளையாட்டுக்குப் பேசப்பட்டதுதான். ஆனால் பெண் என்பவள் கணவன் வீட்டில் அடித்து மிதிக்கப்படுவாள் என்பது ஆண்களின் மனதிலும் , பெண்களின் மனதிலும் பல நூற்றாண்டுகளாக உருப்போடப்பட்ட ஆணாதிக்க மனநிலையைக் காட்டுகிறது. இது நல்லதா?

ஒருத்தர் அடிப்பது வன்முறை இல்லை என்ற மனநிலை எப்படி சரி? பெண்கள் கணவனிடம் அடிவாங்கலாம். இது எப்போதும் நடப்பதில்லை. இது எப்படி சரியாகும்?

இது எல்லாம் பரவாயில்லை. நீ திருமணத்திற்கு முன்பு வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் சந்தோஷமாக இருந்தால், திருமணத்திற்குப் பின்பு வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கும். இப்படிப்பட்ட கருத்துகளும் நிலவுகின்றன. இந்த உலகத்தில் இந்த நொடி இருப்போமா? வாழ்வோமா? என்று தெரியாது. இப்போதெல்லாம் இளவயதிலே பல நோய்கள் வருகின்றன.

இப்ப எதுக்கு நீ இவ்ளோ நேரம் இதெல்லாம் பேசிட்டு இருக்கனு கேட்கிறது புரியுது.

ஜெண்டர் ரோல்ஸ் ( GENDER ROLES) அதுக்காகத்தான் இவ்வளவு நேரம் பேசினேன்.

அதாவது ஒரு பாலினமானது இதை மட்டும்தான் செய்ய வேண்டும். ஆணென்றால் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். பெண்ணென்றால் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்.

ஆண்கள் என்பவர்கள் வலிமையானவர்கள், தைரியமானவர்கள் , கோபமிகுந்தவர்கள் , பொருளீட்டுவது இவர்களின் கடமை என்றும் பெண்கள் பூ போன்றவர்கள் , கரப்பான் பூச்சியைப் பார்த்தால் கத்த வேண்டியவர்கள் , வீட்டு வேலைகளை சிறப்பாக செய்து கணவன் , பிள்ளைகளை தாங்க வேண்டும். எதிர்த்துப் பேசக் கூடாது.

ஆண்கள் அழுதால் ‘ என்னடா பொட்டை மாதிரி அழற?’ என்ற கேள்வியும் பெண்கள் வாகனம் ஸ்கூட்டியைத் தவிர்த்து ஓட்டினால் ‘அவளைப் பாறேன். ஆம்பிளை மாதிரி வண்டி ஓட்டுறா?’ என்று கூறப்படும் வார்த்தைகள் பாலின வேலைகளைச் சுட்டிக் காட்டுகின்றன.

இப்படி குறிப்பிட்டு பேசப்படுபவை ஜெண்ட்ர் ரோல்ஸ் ஆகும். ஆணோ பெண்ணோ பிறந்ததும் சூட் மாதிரி இந்த வேலைகளும் மாட்டிவிடப் படுகின்றன.

ஜெண்டர் ரோல்ஸை உடைத்தவர்கள் உண்டு. அவர்களைப் பற்றி அடுத்த எபியில் பார்ப்போம்.















 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom