கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்-8 | Ezhilanbu Novels/Nandhavanam

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்-8

Yuvanandhini

✍️
Writer
"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அத்தியாயம் 14,15 &16 பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள் சகோஸ்!

******************
அத்தியாயம் 14 :

காலை எழுந்ததும்என் கண்கள் முதலில்

தேடிப்பிடிப்பதுந்தன் முகமே

தூக்கம் வருகையில் கண்பார்க்கும்

கடைசி காட்சிக்குள்நிற்பதும் உன்முகமே!!!
உண்மையிலேயே ஆர்யனும் ,ஆதவனும் வள்ளியின் அறிவுரையை கேட்காமல் அவள் 'பிராணனை வாங்கினார்கள் அதனால் "கீர்த்தி உயிரை வாங்குனாமாறி என் உயிரையும் வாங்க பாக்குறீங்களா !" என்று கேட்டுவிட்டாள்.அதில் ஆர்யனும் ,ஆதவனும் ஸ்தம்பித்து போய் நிற்க, வள்ளி மேலும் தொடர்ந்தாள் "கீர்த்தியோட நிலைமைக்கு நீங்க தான் முழுக்காரணம் ஆர்யன் " என்று கூற ஆர்யன் "நானா ஆனா அன்னைக்கு அவள் என்னை பார்க்கவே வரலையே அவகிட்ட நான் 'ப்ரொபோஸ் ' பண்ணப்போ கூட அது புரியாதமாதிரியே இருந்தா ..........என் காதலை அவ கடைசி வரைக்கும் புரிஞ்சுக்கவே இல்ல " என்று கூறியவன் ,இறுதியாக கூறியது மிகுந்த வேதனையை வெளிப்படுத்தியது.அதில் வள்ளிக்கே சிறிது வருத்தமாக இருந்திருக்க வேண்டும் எனவே "யாரு சொன்னா கீர்த்தி உங்கள காதலிக்கலைனு ....கீர்த்தி வாழ்க்கைல ரொம்ப கஷ்டப்பட்டுட்டா "என்று கீர்த்தியின் கதையை கூற துவங்கினாள் வள்ளி."கீர்த்தி பிறந்தது இங்கே தான் அவ பிறந்தப்போவே அவ அம்மா இறந்துட்டாங்க ,அவ அப்பா கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாத மனுஷன் குடிச்சுட்டு எங்கேயாவது ஏதாவது பிரச்சனை பண்ணிக்கிட்டு திரிவாரு .....கீர்த்தி எங்க வீட்லதான் அதிகமா இருப்பா ! நானும் அவளும் கூட பிறக்காத அக்கா தங்கச்சி மாதிரிதான் பழகினோம்! என் அம்மாவும் அப்பாவும் கீர்த்தியையும் அவங்க பொண்ணு மாதிரிதான் பார்த்தாங்க!!கீர்த்தியும் நானும் ரொம்ப சந்தோஷமாதான் இருந்தோம்,எல்லாம் நீங்க வர்ரதுக்கு முன்னாடி வரைக்கும் தான்." என்று கூற இப்போது ஆதவனுக்கு கடும் கோபம் வந்துவிட்டது "ஏய் ! என்ன நீ எப்பப்பார்த்தாலும் நீ வந்ததுக்கு அப்புறம் தான் அப்புறம் தான்னு சொல்லிக்கிட்டு இருக்க உன் பிரெண்டு மட்டும் என்ன நல்லவளா அவளே விஷத்தை வைப்பாளாம் அவளே அதை தடுத்து நிறுத்துவாளாம் !!....யாருன்னே தெரியாதவன் கூட ஊர் சுத்துவாளாம்!! அடுத்தநாள் காணாம போய்டுவாளாம் !! ...ஆர்யா ! இது வேலைக்காகாது வா நாமளே போய் கீர்த்தியை கண்டுபிடிச்சிரலாம் ! இவளை நம்புனா கடைசில எல்லா பழியையும் தூக்கி உன் மேல தான் போடுவா !" என்று பொங்கி எழ ஆர்யன் "கொஞ்சம் அமைதியா இருடா மாப்பி அவ அப்படி என்ன தான் சொல்றானு கேப்போம் " என்று அவனை அமைதி படுத்தினான்.வள்ளிக்கு கோபம் வந்துவிட்டது "கீர்த்தியை பத்தி ஏதாவது சொன்னீங்க !!...." என்று இழுத்த அதற்கு மேல் அவர்களை திட்ட வார்த்தை கிடைக்காமல் தேட ஆதவன் "சொன்னா ?....சொன்னா !...என்ன பண்ணுவ எங்களை குழம்பு வச்சு குடிச்சிருவியா !" என்று நக்கலாக கேட்க வள்ளி அவனை முறைத்துக்கொண்டே "குழப்பு வச்சாலும் !.....கண்றாவியாதான் இருக்கும் அதைவிட உங்கள தோலைஉரிச்சு ஆலமரத்துல கட்டிவிட வேண்டியது தான் !.....இப்போ போனவங்கள கூப்பிடவா !" என்று மிரட்ட 'இந்த குட்டச்சிஎல்லாம் நம்மள மிரட்டுதே டேய் ஆர்யன் ஏண்டா என்ன மாட்டிவிட்ட !" என்று புலம்பினாலும் வெளியே கெத்தாக "என்னது தொங்கவிட்டுடுவியா !...அது வரைக்கும் எங்க கையென்ன பூ பறிக்குமா !...அவங்க அருவாளை வாங்கி ஒரே போடு போற்றுவேன் !....." என்று இல்லாத விருமாண்டி மீசையை முறுக்கிவிட ஆர்யனுக்கு பொறுமை காற்றில் பறந்தது "போதும் நிறுத்தி தொலைங்க இல்லனா கொன்றுவேன் !" என்று பொங்கிவிட வள்ளி ஒரு பெருமூச்சுவிட்டு,வள்ளி "சரிங்க உங்க வழிக்கே வரேன் !! ஏனுங்க உங்களுக்கு நியாபகம் இருக்க நாலு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ரிசார்டு கட்ட அறுபது ஏக்கர் நிலம் வாங்குனீங்கல்ல " என்று கேட்க ஆர்யனுக்கு அது நன்றாகவே நினைவிருந்தது, காரணம் நான்கு வருடங்களுக்கு முன்னால் வாங்கிய நிலத்தில் ஒரு வருடத்திற்கு முன்னால் தான் வேலையை துவங்கும் படி முடிந்தது காரணம் அங்கே இருந்த மக்கள் பிரச்சனை செய்து கொண்டிருந்தார்கள், அதில் கோர்ட்டில் கேஸ் நடக்க, மூன்று வருடம் இழுத்தபின் சென்ற வருடம் தான் ஆர்யனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது, இல்லை அவன் வரவைத்தான் என்றே கூறலாம்.ஆர்யன் திகிலடைந்த குரலில் "ஆமா !...அதுக்கும் கீர்த்திக்கும் என்ன சம்பந்தம் !" என்று கேட்பதற்குள் அவன் குரல் குற்றவுணர்ச்சியில் சிறிதாக உடைந்திருந்தது.வள்ளி தொடர்ந்தாள் "அந்த கிராமத்து மக்கள் அறுபது பேரோட பத்து ஏக்கர் நிலத்துல கால் ஏக்கர் நிலம் கீர்த்தியோடது !" என்று கூற ஆர்யன் அதிர்ந்தான்.வள்ளி "அந்த நிலத்தை வைச்சு தான் செழியன்கிட்ட கீர்த்தி அப்பா கடன் வாங்குனாரு !......நீங்க நிலத்தை வாங்குனதால கீர்த்தி அப்பாவை செழியன் மிரட்டினான்...அப்போ எதிர்பாராத விதமா கீர்த்தி அப்பா குடல் கெட்டு இறந்துட்டாரு ! அதுல செழியன் கீர்த்தியை மிரட்ட, நான்தான் அவளை கொடைக்கானல் அனுப்புனேன் ஆனா விதி அவளை அங்கேயும் விடல அந்த செழியன் அவனோட ஆளுங்கள அங்கேயும் அனுப்பி கீர்த்தியை கண்டு பிடிக்க சொன்னான் !." என்று கூற ஆர்யன் மீண்டும் அதிர்ந்தான்.அவனால் தான் கீர்த்திக்கு இப்படி ஆனது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை மீண்டும் மீண்டும் யோசித்தவனுக்கு அனைத்தும் குழப்பமாகவே இருந்தது.அதனால் வள்ளியை நோக்கி "நீங்க அறுபது பேரும் உங்க நிலத்தை 'ப்ரொப்பரா ' பட்டா போட்டு வைத்திருக்கவில்லையே அதனால தான் அந்த ப்ரோக்கர் கன்வின்ஸ் பண்ணி கவர்மெண்ட் அப்ரூவல் வாங்கினோம் நீங்க அதுல நாங்க வேலை செய்யுறோம் மட்டும் தான சொன்னீங்க " என்று கேட்க வள்ளி " அப்போ எங்களுக்கு தெரிஞ்சுருக்களை (தெரிந்திருக்கவில்லை ) ஏதோ காலம் காலமா வேலை செய்ஞ்சு அத அறுவடை செய்ஞ்சு சாப்பிட்டுட்டு இருந்தோம் நீங்க தீடீர்னு வந்து அது 'பிரைவேட் ப்ரொபேர்ட்டினு போட்டா நாங்க என்ன பன்னுரதுங்க !" என்று கேட்க, ஆர்யனுக்கு குழப்பமாக இருந்தது, இருந்த அந்த குழப்பத்தை விட்டுவிட்டு கீர்த்தியின் விஷயத்திற்கு வரநினைத்தவன் வள்ளியை நோக்கி "கீர்த்திக்கு என்னாச்சு ! நான் அவளை பார்க்கணும் " என்று கூற வள்ளி மீண்டும் தொடங்கினாள்.வள்ளி " அப்போ ஒருநாள் தீடீர்னு கீர்த்தி எனக்கு போன் பண்ணி உங்கள பத்தி சொன்னா !"

*********************

அன்று (கீர்த்தியின் பார்வையில் ):வள்ளியின் போன் அலற ஆவலாக வந்து அதை எடுத்து காதில் வைத்து, "கீர்த்தி சொல்லுடி அங்கே எல்லாம் பழகிடுச்சா " என்று ஆவலாக கேட்க, கீர்த்தி மிகுந்த பதட்டம் நிறைந்த குரலில் "வள்ளி !!....அந்த செழியனோட ஆளுங்க என்னை பார்த்துட்டாங்கடி !!....இன்னைக்கு என்னை பிடிக்க வந்துட்டாங்க !!....நான் அவங்க கிட்ட இருந்து தப்பிச்சு வரும் போது கீழ விழுந்து வசமா மாட்டிக்கிட்டேன் !" என்று கூற வள்ளி "முருகா ! அப்புறம் என்னாச்சுடி இப்போ எங்கே இருக்க எடுபட்ட பயலுங்க உன்னை எதுவும் செய்யலையே !" என்று பதட்டமாக கேட்க, கீர்த்தி "இல்லடி அங்கே தாண்டி ஒரு அதிசயம் நடந்துச்சு !!" என்று கூறும் போதே கீர்த்தியின் குரலில் ஒருவித பரவசம் தெரிய வள்ளி "அடியே உன் குரலே சரியில்ல அந்த சீமதுரைய பாத்தியா அவனை பார்த்தா மட்டும் ஏன் தான் உனக்கு புத்தி இப்படி போகுதோ !!" என்று திட்ட துவங்கினாள்.கீர்த்தி "ஏய் ! என்னடி நீ கூட இப்படி பேசுற நான் சொல்றத நம்புடி அவரை பார்த்தா அப்படி தெரியலடி !! இன்னைக்கு கூட அவர்தான் என்னை காப்பாத்துனாரு தெரியுமா, என்னை எவ்வளவு மரியாதையா நடத்துனாரு தெரியுமா! அவர் நல்லவரு தாண்டி ......அந்த ரௌடி பசங்கள அடிச்சு அவரே கார்ல பின் பக்க கதவை திறந்து என்னை உட்கார சொன்னாரு!! எனக்கு அவர் முகத்தை பார்த்துகிட்டே இருக்கலாம்னு தோணிச்சு !!" என்று ஆர்வத்தில் உளறிவிட வள்ளி "அடியே ! அந்த ஆளுடை காருல ஏறுனியாடி ! கூறு கெட்டவளே !....அவன் யாரு எவருனு தெரியாமயே ஏறுனீயா ?...ஆமா அவன் நல்லவன் தான்னு எப்படிடி நம்புற ?" என்று வறுத்து தாளித்து எடுத்தாள்கீர்த்தி "பொறுடி ....அவரு உயிருக்கே ஆபத்து இருக்கு தெரியுமா ! இன்னைக்கு ஒரு கான்ஸ்டபிள் வந்து ஏதோ பௌடேர அவர் சாப்பிடற பாயாசத்துல கலக்க சொன்னாரு எனக்கு ஒரே பயமா இருந்தது ஆனால் அந்த கான்ஸ்டபிள் நான் கலக்குறத பக்கத்துலயே நின்னு பார்த்துகிட்டு இருந்தார், சதாசிவம் ஐயாவும் அது 'ஏன் னு ' ஒரு வார்த்தை கேக்கல தெரியுமா ? நான் வேண்டாம்னு சொன்னா எப்படியும் வேற முயற்சி நடக்கும் அதனால அவர் கிட்ட அந்த பாயசத்தை சாப்பிடாதீங்கன்னு சொல்லிடலாம்னு நினைச்சேன்! ..." என்று அன்று நடந்ததை கூற வள்ளி வெகு ஆர்வமாக "அவன் அந்த பாயசத்தை குடிச்சானா ?" என்று கேட்டாள்.கீர்த்தி "போதும் நிறுத்து வள்ளி இந்த மாறி பேசுறதா இருந்தா தயவை செய்ஞ்சு எனக்கிட்ட பேசாத " என்று கூறிவிட்டாள்.வள்ளி "பாருடா! சப்போர்ட்ட சொல்லு அப்பறம் என்னாச்சு !" என்று கேட்க கீர்த்தி "நான் அந்த சாப்பாட்டை எடுத்துட்டு போனேன் அங்கே அவர் என்ன அப்படியே தத்ரூபமா வரைஞ்சு இருந்தாரு !...உண்மையிலேயே கண்ணாடில கூட நான் அழகா இருக்கமாட்டேன் !!....அத வரைஞ்சு நீயே வச்சுக்கோன்னு சொல்லிட்டாரு !...எனக்கு அப்படியே காத்துல பறக்குராமாதிரி இருந்துச்சு இப்போவே அந்த பாயசத்தை சாப்பிடாதீங்கன்னு சொல்லிடலாமா னு யோசிச்சேன் ஆனா அந்த கான்ஸ்டபிள் அவர் ரூம்க்கு வெளியே தான் நின்னுட்டு இருந்தான் அந்த ஜன்னல் வழியா பார்த்தா உள்ள என்ன நடக்குதுன்னு வெளியே தெரியும்! அதனால் அப்போ சொல்ல முடியல " என்று கூறியவளின் குரலில் துக்கம் அப்பட்டமாக தெரிந்தது.வள்ளி "நல்ல மனுஷன் அங்கே நின்றார் " என்று கூற கீர்த்தியின் கோப குரல் மீண்டும் ஒலித்தது,"வள்ளி .......இந்த மாறி பேசிகிட்டே இருந்தீனா நான் போனை வாங்குறேன்டி" வள்ளி பதறி "இல்ல இல்ல சொல்லுடி " என்று கூற கீர்த்தி மீண்டும் தொடர்ந்தாள் "அவர்கிட்ட குடுத்துட்டு நான் வெளிய வந்து பார்க்க அந்த கான்ஸ்டபிள் அப்போ தான் போனாரு கொஞ்சம் கூட லேட் பண்ணாம அவர் ரூம்க்கு போனேன் அப்போ தான் அவர் பாயாசத்துக்கு வந்துருப்பார் போல பட்டுனு தட்டிவிட்டுடேன் !!.....அதுக்கு அவர் என்ன அடிச்சுட்டாரு !" என்று கூற அதில் அவ்வளவு வலி இருந்தது, வள்ளி "உன் கையென்ன பூ பறிச்சுதா உனக்கு தான் சிலம்பம் தெரியும்ல அவனை நாலு சாத்தவேண்டியது தான் " என்று பயங்கரமான யோசனை கொடுத்தாள்.

கீர்த்தி "இதுல என் தப்பும் இருக்கு டி " என்றாள்.

வள்ளி "ஆமா அவனை எதுக்கு காப்பாத்துன !" என்றாள்.கீர்த்தி "நிறுத்துறியா ! ....அவர் கஷ்ட பட்டு வரைஞ்ச ட்ராயிங் எல்லாத்துலயும் அந்த பாயசம் விழுந்துருச்சு " என்று கூற வள்ளிக்கு 'அய்ய்ய்ய இதுலாம் ஒரு விஷயம் இதுக்கு இம்புட்டு அலப்பறை ' என்று எண்ணினாள்.கீர்த்தி "என்னடி சத்தத்தையே காணோம் !" என்று கேட்க வள்ளி "சரி அதைவிடு நீ இருக்குற இடம் அந்த செழியனோட ஆளுங்களுக்கு தெரிஞ்சுருச்சா? " என்று கேட்டுவிட்டு பதிலுக்காக காத்திருக்க , கீர்த்தி "இல்லடி அதுக்குள்ள இவர் என்ன காப்பாத்திட்டாரு !.....அப்புறம் இன்னொரு விஷயம் ! நான் அவர்கிட்ட பேசலாம்னு இருக்கேன் ! எப்படியாவது நம்ம நிலத்தை குடுக்க சொல்லி கேட்க போறேன் " என்று அந்த பேதை பெண் கூற வள்ளி சிரிக்கும் சத்தம் கேட்டது. கீர்த்தி"ஏண்டி சிரிக்குற " என்று அப்பாவியாக கேட்க வள்ளி "நீ அப்பிடியே போய் முகத்தை நல்லா கழுவிக்கோ கொஞ்ச மெதப்புல இருக்குறாமாறி தெரியுது !" என்று கூற கீர்த்தி "போதும் நிறுத்து அவர் கண்டிப்பா சம்மதிப்பாரு நம்ம கஷ்டத்தை சொல்லி அவர் கிட்ட வழி கேக்கலாம் அவரை பார்த்த அநியாயம் பண்றவர் மாதிரி தெரியல !" என்று நம்பிக்கையாக கூற வள்ளிக்கு அந்த நம்பிக்கையே இல்லை.அப்போது கீர்த்தி இருந்த பக்கம் நன்றாக கதவு தட்ட பட கீர்த்திக்கு பயம் உண்டாயிற்று , வள்ளிக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை, கீர்த்தி "ஐயோ அவனுக தான் போலையே ! இந்த கொடுமையை அனுபவிக்குறதுக்கு நான் மொத்தமா போய் சேர்ந்திடலாம் போல " என்று அழும் குரலில் கீர்த்தி பேச வெளியே இருந்து ஆர்யனின் குரல் கேட்டது, கீர்த்தி விரைந்து சென்று கதவை திறக்கலாம் என்று எண்ண வள்ளி அவள் எண்ணத்தை அறிந்தவாறே "தயவை செய்ஞ்சு அந்த தப்ப மட்டும் செய்ஞ்சுராதடி !" என்று எச்சரித்தாள்.பிறகு ஆர்யன் கூறு அனைத்து வசனங்களுக்கும் வள்ளி பதிலடி கொடுக்க கீர்த்திக்கு சிரிப்பு வந்தது.இறுதியாக ஆர்யன் "கீர்த்தி ஐ அம் சாரி " என்று கூறியது, வள்ளி "கொழுப்பை பாத்தியா பன்றதையும் பண்ணிட்டு பச்சை புள்ளமாறி சாரி கேக்குறான்!! எதுக்கு அவனை தூக்கி இடுப்புல வச்சுக்கணுமா !" என்று கேட்க கீர்த்தி பலமாக சிரித்துவிட்டாள், அது ஆர்யனுக்கு கேட்டு "அவன் "ஏய் ! அப்போ விளையாடுறியா கதவை திறடி "என்றதும் கீர்த்தி "அப்பறம் பேசுறேன்டி " என்று அவள் பதிலையும் எதிர்பாராமல் கட் செய்துவிட்டாள்.************************

இன்று :இதையெல்லாம் கூறி முடித்த வள்ளி ஆர்யனை பார்க்க ஆர்யனுக்கு கீர்த்தி மனதில் என்ன இருந்தது என்பதுஎல்லாம் இப்போது நன்றாக புரிந்தது, வள்ளியை நோக்கி "வள்ளி நீங்க சொல்றத கேக்குறத பார்த்த கீர்த்திக்கு என்ன முன்னாடியே தெரியுமா " என்று வினவ வள்ளி "தெரியும் !" என்று கூறினாள்.ஆர்யன் "ஆனா எப்படி !!" என்று கேட்க அவனுக்கு கீர்த்தியை அதற்கு முன்பு பார்த்தது போல நினைவே இல்லை இப்படி நினைத்தவன் 'உனக்கு தான் அவ முகமே நியாபகம் இல்லையே ' என்று அவன் மனது கேலி செய்தது.வள்ளி ஆர்யனை பார்த்து "அன்னைக்கு கீர்த்தி அப்பாவை அடிசீங்களே அப்போ !" என்று கூற , ஆர்யனுக்கு சட்டென்று நினைவு வரவில்லை "எப்ப அடிச்சேன் " என்று அவளையே கேட்டுவிட்டு, யோசித்தவனுக்கு நினைவு வர "ஐயோ !! அன்னைக்கு நான் அடிச்சது கீர்த்தி அப்பாவா ? கீர்த்தி என்னை பற்றி என்ன நினைச்சுருப்பா ?" என்று சோகமாக பேசினான்.

தொடரும் !..
 

Yuvanandhini

✍️
Writer
அத்தியாயம் 15 :

வள்ளி கூறியதை கேட்ட ஆர்யன் "அப்போ கீர்த்திக்கு என்ன முன்னாடியே தெரியுமா ?" என்ற கேள்வியை தொடுத்து அதற்கான பதிலாக கீர்த்தியின் தந்தையை தான் அடித்துவிட்டதை தெரிந்து கொண்டவன் அன்றைய நாளை நினைத்து பார்த்தான்.

*********************************

நான்கு வருடங்களுக்கு முன்பு : (ஆர்யன் கொடைக்கானலுக்கு செல்வதற்கு முன்பு )அப்போது தான் ஆர்யன் தொழிலில் இறங்கி ஒரு வருடம் ஆகி இருந்த நிலை, தொழிலில் அவனது வேகம் அபரிமிதமாக இருந்தது அவனது தொழில் எதிரிகள் எல்லாம் அவனிடம் மோதவேண்டும் என்று யோசிப்பதை கூட நிறுத்தி இருந்தனர்.அப்போது தான் கொடைக்கானலில் அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்ட ஒரு ரிசார்ட் கட்டலாம் என்ற யோசனை அவனுக்கு வந்தது அதை வெற்றியிடமும் கூற அவரும் அதற்கு சம்மதித்து இருந்தார்.கேசவன் தான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்த்து கொடுத்தார், ஆர்யன் ஒரு முறை நிலத்தை பார்த்துவிட்டு வருவதற்காக அங்கே சென்றான்.அவன் அங்கே சென்ற பொது தான் தெரிந்தது அங்கே இருக்கும் மக்கள் சிலர் பிரச்சனை செய்கிறார்கள் என்று உடனே அவன் கேசவனை அழைக்க அவர் அவனிடம் அனைத்து பேப்பர்களையும் கொடுத்தார், அதை ஒருமுறை சரி பார்த்தவன் அனைத்தும் சரியாக இருக்க, ஆர்யனுக்கு அந்த மக்கள் மீது கோபம் வந்தது 'இவங்களுக்கு என்ன தான் பிரச்சனை ' என்று அந்த மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அதன் படி செய்ய வேண்டும் என்று எண்ணினான்.அதில் ஒரு நாள் அவன் வாங்க விருந்த நிலத்திலேயே அவர்களை ஒன்று திரட்டி பேசுவதற்காக வந்திருந்தான்.அன்று காலையில் சூரியன் பிரகாசமாக தனது கதிர்களை பாய்ச்சி கொண்டிருந்தது, அது அந்த மலை பிரதேசத்தின் குளிரை சற்றே தணிக்கும் வகையாக இருக்க ஆர்யன் தனது காரை அந்த கரடு முரடான பாதையில் ஓட்டிச்செல்ல, அந்த அல்ட்ரா மார்டன் கார், மலையின் கரடு முரடான பாதையை அவ்வளவு எளிதாக கடந்து செல்லவில்லை அதனால் விளைவு பாதியிலேயே அந்த கார் நின்றுவிட்டது, ஆர்யனுக்கு கோபம் தலைக்கேறியது அக்சிலேட்டரை நான்கு முறை மிதித்தவன் அதற்கு மேல் பயனில்லை என்று காரில் இருந்து இறங்கி பட்டென்று கதவை அடித்து சாத்தினான்.அதில் போகிறவர், வருகின்றவர் அனைவரும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தனர், அப்போது தான் அது நடந்தது, அவன் நின்று கொண்டிருந்த சாலை முழுவதும் இப்போது ஆட்டு கூட்டம் நிறைத்தது ஆர்யன் மனதில் தன்னை தானே நொந்து கொண்டான் ' யாரையாவது துணைக்கு கூட்டிட்டு வந்திருக்கலாமோ !...இப்படி வந்து மாட்டிகிட்டோமே !' என்று எண்ணினான்.அந்த ஆட்டு கூட்டம் சற்றும் நகர்ந்தபாடே காணோம் ! ஆர்யனை உரசிக்கொண்டு அந்த ஆடுகள் நகர ஆர்யன் இப்படியும் அப்படியுமாக நகர்ந்தான்,ஆனால் வெளியே வந்தபாடில்லை, அங்கே தூரத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த பெரியவரை பார்த்து "பெரியவரே !!பெரியவரே !!" என்று அழைக்க அவர் திரும்பவில்லை " ஏங்க ! உங்களுக்கு காது கேக்காதா !" என்று கேட்டு அவர் பதில் ஏதும் கொடுக்காததால் அதனை உறுதி செய்து கொண்டான்.அப்போது அவனுக்கு ஒரு சிரிக்கும் குரல் கேட்டது, அந்த குரலின் இனிமை அவன் காதில் நாராசமாக விழுந்தது, அதில் சிலிர்த்து கொண்டு திரும்ப அவனை திரும்பவிடாமல் அந்த ஆட்டு கூட்டம் மந்தை மந்தையாக அவனை மோதியது, அவன் நினைத்திருந்தால் ஆடாவது மாடாவது என்று அந்த ஆடுகளை காயப்படுத்திவிட்டு சென்றிருக்கலாம் ஆனால் ஆர்யன் அவ்வாறு செய்யாமல், நடுவில் தள்ளாடி கொண்டிருக்க அதை பார்த்தே அந்த பெண் சிரித்திருக்கவேண்டும்.ஆர்யன் "எங்க சிரிக்கிறத விட்டுட்டு கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாமே " என்று கேட்க, அவள் கையில் இருந்த நீண்ட காம்பை ஆர்யனை நோக்கி வீச அதை லாவகமாக பிடித்தவன் அந்த ஆட்டு கூட்டத்தில் இருந்து வெளியே வந்தான்,அதுவரை அந்த காம்பை பார்த்து கொண்டிருந்தவன் அந்த பெண்ணின் முகத்தை பார்க்கலாம் என்று திரும்ப, அவள் பட்டென்று அந்த குச்சியை வாங்கிக்கொண்டு ஓடிவிட்டாள், ஆர்யனால் அவளது முகத்தை பார்க்கவே முடியவில்லை சிகப்பு தாவணி தான் தெரிந்தது, அதில் அவன் மனதில் ஏதோ ஒரு ஏக்கஉணர்வு தோன்ற அவன் வேறு வழியில்லாமல், மேலே நடக்க துவங்கினான்.தனது வாகனத்தை பற்றி ராகுலிடம் கூறிவிட்டு புதிய கார் அனுப்பும் படி கூறிவிட்டு மீண்டும் நடந்தான்.அவனது சட்டையில் ஆடுகள் உரசியதால் கறையானதை போல உணர்ந்தான், தண்ணீரில் கழுவினால் நன்றாக இருக்கும் என்று அவனுக்கு தோன்ற அங்கே யாரிடம் சென்று அவன் தண்ணீர் கேட்பான்.ஆனால் அவன் எண்ணத்தை அறிந்தத்தாற்போன்று ஒரு சிறுவன் அவனுக்கு ஒரு பானையில் தண்ணீர் கொடுக்க ஆர்யன் அவனை அதிசயமாக பார்த்தான், அவனோ ஆர்யனிடம் எதையும் பேசாமல் வைத்துவிட்டு செல்ல ஆர்யன் "தம்பி நீயே கொட்டுவந்தாயா பா !" என்று கேட்க சிறுவன் "நான் தான் எடுத்துட்டுவந்தேன் முதல அந்த கண்ணாடியை கழட்டிட்டு பாருங்க !! ....கண்ணு நல்லா தெரியும் " என்று கூற ஆர்யனுக்கு 'கிரேட் இன்சல்ட்டாக 'போய்விட்டது.ஆர்யன் "அது இல்லப்பா ! வேறுயாராச்சும் சொன்னார்களா எனக்கு தண்ணி வேணும்னு " என்று கேட்க அவன் "யக்கா !! வெளிய வாக்கா !" என்று கூறிவிட்டு அவன் சென்றுவிட்டான், ஆர்யன் 'மீண்டும் அவளா !!' என்று திரும்ப இப்போதும் சிவப்பு தாவணி தான் அவன் கண்களில் பட்டது, அதில் மீண்டும் ஏமாற்றமடையை அவளை துரத்தி பிடித்துவிடலாம் என்று ஒரு கணம் நினைத்தவன் 'இல்லை நாம் வேலை விஷயமா வந்துருக்கோம் அதை பார்க்கவேண்டும் ' என்று நினைத்துவிட்டு, தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு மீண்டும் சென்றான். அங்கே அவன் நிலம் வாங்கிய இடம் வந்துவிட அடுத்த ஐந்து நிமித்தில் ராகுலும் புதிய வாகனமும் வந்தது.சிறிது நேரத்திலேயே அங்கு மக்கள் அனைவரும் ஒன்றுகூடிவிட ஆர்யன் அவர்கள் முன்பு வந்து பேசினான்ஆர்யன் "எல்லாருக்கும் வணக்கம் !! ... நான் உங்க நிலத்தை அநியாயமா வாங்கிட்டதா நினைக்கறீங்க சரியா !...ஆனா என்னை பொறுத்த வரைக்கும் அது அநியாயமா தெரியல !" என்று கூற கூட்டத்தில் பெரும் சலசலப்பு கேட்டது, அது ஒருவாறு அடங்கிய பின்பு நிமிர்ந்து நின்று " உங்க எல்லாருடைய நிலத்தையும் நானே வாங்கிக்குறேன்!!...... உங்க நிலம் இப்போ எவ்ளோ ரூபாய்க்கு விலை போகுதோ அதைவிட இரண்டு மடங்கு கொடுத்து உங்க நிலங்களை வாங்கிக்குறேன் !" என்று கூற மீண்டும் கூட்டத்தில் சலசலப்பு அப்போது தீடீரென்று ஒருவர் ஆர்யனை நோக்கி பாய்ந்து வந்தார் "ஏய் ! எங்களுக்கு சோறு போடுற பூமியை உனக்கு குடுத்துட்டு நாங்க வேத்தாளு மாறி இருக்கணுமா இது எங்க நிலம் விலையுதோ இல்லையோ இது எங்களுக்கு தான் !!" என்று கூறிக்கொண்டே ஆர்யனின் சட்டையை பிடிக்க ஆர்யன் 'பட்டென்று ' ஓர் அறைவிட்டான், அந்த மனிதர் அப்படியே மயங்கிவிழ, அதில் கூட்டத்தில் இருந்தவர்களுக்குள் பரபரப்பு ஏற்பட, அங்கே இருந்து ஒரு பெண் ஓடிவந்து "அப்பா !! எழுந்துருங்கப்பா !!" என்று கத்த அந்த பெண்ணின் முகத்தை கூட பார்க்காமல் ஆர்யன் திமிராக "ஸ்டாப் திஸ் ட்ராமா !" என்று கூறியவன். தனது காரில் ஏறினான்.அந்த பெண் அழுத்திக்கொண்டே இருந்தாள், ஆர்யன் காரில் விரைந்து செல்லும் பொது அந்த பெண்ணின் அழு குரலை கேட்க நேர்ந்தது அதில் அவனது அன்னை " பசங்கன்னா பொண்ணுகளை கண்கலங்காம பார்த்துக்கணும் " என்று கூறியது நினைவில்வர, மறுநாளே முகம் தெரியாத அந்த பெண்ணின் வீட்டிற்கு அழைத்தான், முதல் ரிங்கிலேயே அவள் எடுத்துவிட அந்த குரல் அவனை ஏதோ செய்தது அதனால் "ஐ அம் ஆர்யன் ! சாரி ஃபோர் தி கமோஷன் தட் ஹப்பெண்ட் எஸ்டெர்டே !" என்று முழு ஆங்கிலத்தில் கூற கீர்த்தி அமைதியாக இருந்தாள் சத்தியமாக அவளுக்கு எதுவும் புரியவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது. அதை உணர்ந்த ஆர்யன் "என்னை மன்னிச்சுடு !" என்று கூறி கட் செய்துவிட்டான்.***********************இதையெல்லாம் யோசித்து பார்த்தவன், வள்ளியை நோக்கி திரும்பி "அன்னைக்கு நான் பார்த்தது கீர்த்தியை தான ...கண்டிப்பா அவ கண்ணனுக்கு நான் கொடூரமானவனா தான் தெரிஞ்சுருப்பேன் !" என்று கூறிக்கொண்டே தலையை பிடித்துக்கொண்டான் , "டேய் ஆதவா ! தலை பயங்கரமா வலிக்குதுடா முடியல " என்று தலையை பிடித்து கொண்டே அமர்ந்துவிட்டான்.பிறகு சிறிது நேரத்திற்கு அவர்கள் எதுவும் பேசவில்லை தண்ணீர் அருந்தி ஆர்யன் தன்னை ஆசுவாச படுத்தி கொண்டான்.ஆர்யன் "கீர்த்தி உண்மையிலேயே என்னை காதலிச்சாளா !!" என்று சந்தேகமாக கேட்க வள்ளி "நியாயப்படி காதலிச்சுருக்க கூடாது தான் ...ஆனா அதுக்கு அப்பறம் நீங்க அவ வீட்டுக்கு ஒரு மன்னிப்பு கடிதம் அனுப்புனீங்கல்ல அதுல தான் அவ மனசு மாறியிருக்கா போல நிஜத்த கீர்த்தி தான் சொல்லணும் !........அதுவும் இல்லாம நீங்க அந்த செழியனோட ஆட்டத்தை கொஞ்சநாள் அடக்கிவச்சிங்கல்ல அதுவும்தான் இருக்கலாம் !.....அன்னைக்கு பேசிட்டு போனதுக்கு அப்பறம் எல்லாரும் உங்கள எதிர்த்தங்கதான் !!....ஆனா நீங்க சொல்றதுளையும் ஒரு நியாயம் இருக்குனு அப்போதான் புரிஞ்சுது !.....விளையாத பூமியை வச்சு என்னத்த செய்யுறது " என்று கூற வள்ளி கூறிய தொனியில் ஆர்யனுக்கு சிரிப்பு வந்துவிட்டது, அதே சமயம் அந்த மக்களின் அறியாமையை நினைத்து வருந்தவும் செய்தான்.ஆர்யன் "ஆனா இதை அவ என்கிட்ட சொல்லிருக்கலாமே .....அன்னைக்கு ஃபுல்லா அவ என்கூட தான் இருந்தா ஆனா ஒருவார்த்தை என்கிட்ட சொல்லல! உனக்கு என்ன புடிக்குமா னு கேட்டபோ கூட நீ எப்போ கிளம்ப போறன்னு கேட்டா, நா அவளுக்கு கிப்ட் பண்ணும் போதுகூட அவ அதா ஏத்துக்கிட்டா மாதிரியே தெரியலையே !" என்று கேட்கவள்ளி "அது ஒரு பெரிய கதைங்க !!...அன்னைக்கு அவ நல்ல மனநிலைல இல்லன்றது உண்மைதான் ஆனா உங்கள வேறுகல அத நான் ஆணி தரமா சொல்லுவேன்.....அன்னைக்கு உங்க கூட வெளியே போயிட்டு வந்து எனக்கு போன் பண்ணா ! ரொம்ப பதட்டமா பேசுனா...." என்று கூறி ஆர்யன் முகத்தை பார்த்தாள்.ஆர்யனும் தீவிர யோசனையில் இருந்தான், வள்ளியே தொடர்ந்தாள் " அன்னைக்கு நீங்க அவளை வெளிய கூட்டிட்டு போனப்போ அங்க அந்த செழியனோட ஆளுங்கள பார்த்திருக்கா .....நீங்க கனவு உலகத்துல இருந்தாலும் அவன் நினைவு உலகத்துல தான் இருந்தா அதுனால அவங்க உங்கள ஃபோலோ பண்ணிட்டு வருகிறதை பார்த்துட்டா !!....அப்படியே நீங்க இருந்த இடத்தையும் கண்டுபிடுச்சுட்டாங்களாம்!!....ஆனா அவளை தேடி வரவே இல்லை அது ஏன்னு தான் இப்போவாரைக்கும் புரியல இதை அவளே அன்னைக்கு நைட்டு சொன்ன!! நான் பதறிட்டேன் ! இனி அங்கே இருக்குறது உனக்கு ஆபத்து உடனே கிளம்பி வந்துருனு சொன்னேன் " என்று கூற, ஆர்யன் "உங்க மனசுல என்ன பெரிய வீராங்கனைனு நினைப்பா ஒரு கம்பெடுத்து சுத்துனா நீங்க நாலு பெரு ஒண்ணா வந்தாக்கூட அடிச்சுடுவீங்களா " என்று கோபத்தில் கத்தினான்."போதும் நிறுத்துங்க அவ ஊரை விட்டு ஓடுனதே உங்களால தான் " என்று கூறினாள்."ஆமா!......." என்று இழுத்துவிட்டு மீண்டும் "இன்னும் நான் கீர்த்தி எங்க இருக்கானு சொல்லவே இல்லை உங்களுக்கு அத தெரிஞ்சிக்க ஆசையே இல்லையா " என்று கேட்க, ஆர்யன் ஒரு புன்னகை பூத்து "என்னோட கீர்த்தி எங்க இருக்கானு எனக்கு தெரியும் " என்று கூறி வள்ளியின் முகத்தை பார்க்க அவளது முகம் வெளிறி போனது அதை பார்த்த "ஆர்யன் ! கவலைப்படாதீங்க வள்ளி கீர்த்தியை நான் இப்போ பார்க்கமாட்டேன் ! அவ காதலிச்ச ஆர்யனா தான் அவ முன்னாடி நிற்பேன் ! அப்போ கீர்த்தியை யாரு நினைச்சாலும் என்கிட்டே இருந்து பிரிக்க முடியாது !" என்று கூற வள்ளிக்கு அவனது காதலை நினைத்து புல்லரித்து போனது.ஆர்யன் "அப்பறம் கீர்த்தி இங்கே வந்தாளா ? அவளுக்கு என்னாச்சு " என்று கேட்க வள்ளி மீதம் இருந்ததை கூறினாள்.வள்ளி "அன்னைக்கு நைட் தான் நான் கடைசியா கீர்த்தி கிட்ட பேசுனேன் !! அதுக்கு அப்புறம் ......" என்று வள்ளியின் கண்களில் இருந்து கண்ணீர் அருவி கொட்டியது.ஆதவன் "அழாதீங்க அட அழாதம்மா !! அதான் உங்க கீர்த்தி கிடைச்சுட்டாளே அப்பறம் என்ன அழுகை " என்று கேட்க அவனுக்கு உண்மையில் எதுவும் புரியவில்லை ஆனால் ஒன்றை மனமார எண்ணினான், அது அவனது நண்பன் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழவேண்டும் என்பதே ,அதுவும் இல்லாமல் தேவையில்லாத பிரச்சனையில் ஆர்யன் மாட்டிக்கொள்ள கூடாதே என்ற பயமும் இருந்தது அதனால் விரைவிலேயே அவனை அழைத்து கொண்டு அந்த ஊரை விட்டு சென்றுவிட வேண்டும் என்று எண்ணினான்.வள்ளி ஒருவாறு அழுவதை நிறுத்திவிட்டு "அப்பறம் ஆறு நாள் கழிச்சு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் இருந்து கூப்பிட்டு பேசுனாங்க, கீர்த்தியோட போன்ல என்னோட நம்பர் இருந்துதாம் ....அத பார்த்துட்டு எனக்கு போன் பண்ணாங்க ! நான் பதறி அடிச்சுட்டு போனேன் அதே சமயம் கீர்த்தி இருக்குறது அந்த செழியனுக்கு தெரியாம பார்த்துக்கிட்டேன்!.......அவன் கீர்த்தி எங்கேயோ ஓடி போய்ட்டதா எங்க வீட்டுக்கு வந்து பிரச்சனை பண்ணான் ! எப்படியோ அவனை சமாளிச்சு ......கீர்த்தி பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வந்துட்டேன் " என்று கூற ஆர்யனுக்கு ரத்தம் சூடேறியது.ஆர்யன் மிகுந்த வருத்தம் தொனித்த குரலில் "நான் பார்த்தது கீர்த்தியை தான்னு அன்னைக்கே ஏன் சொல்லல வள்ளி, தெரிஞ்சிருந்தா அன்னைக்கே நா கீர்த்தியை கண்டுபிடிச்சிருப்பேனே !!.....என்னோட கீர்த்தியை நானே கூட இருந்து பார்த்துகிட்டு இருந்திருப்பேனே !" என்று வருத்தத்துடன் கூற வள்ளி "அது ....அது அன்னைக்கு நீங்க கீர்த்தியை யாரோ மாதிரி பார்த்தீங்க! .....ஒருவேளை கீர்த்தியை நீங்க மறந்துட்டிங்கலோ நினைச்சேன் !... அதனால தான் !" என்று கூறி முடிக்க ஆர்யன் மனதில் வேதனை சூழ்ந்தது, ஆதவன் மனத்திலும் அதே அளவு வேதனை சூழ்ந்தது தான் அவன் மனதில் 'அடி பாவி இதை அன்னைக்கே .....சொல்லிருந்தா ......தேவையில்லாம அங்கே போய் வாங்கி கட்டிருக்க மாட்டோமே டி !......அதுவும் இல்லாமல் இந்த கிராமத்துக்கு வேற வந்து !....அடி வாங்கியிருக்க மாட்டோமே டி !......ஒரு நிமிஷத்துல மரண பயத்த காட்டிட்டியே பாதகத்தி !!!' என்று நினைத்து கொண்டான்.பிறகு சிறிது நேரம் அவர்களுக்குள் நீண்ட மௌனம் நிலவியது!!.அதற்குள் மீண்டும் வள்ளியின் வீட்டு கதவு தட்டப்பட ஆதவன் "நாங்க திருப்பியும் அந்த ரூம் க்கு போய் மறைஞ்சுக்கணுமா !" என்று கேட்க வள்ளி புன்னகைத்து கொண்டே "வேண்டாம் வேண்டாம் !! ஊருக்கு போயிட்டு அம்மாவும் அப்பாவும் தான் வந்துருப்பாங்க " என்று கூற ஆதவன் முகத்தில் அப்போது தான் கவரம் பிறந்தது,"ஐயோ இது தான் ரொம்ப ஆபத்து ! நாங்க அப்படியே பின் பக்கமா ஓடிட்டாடா !" என்று கூற ஆர்யனும் சிரிக்க துவங்கினான்.வள்ளி அவளது பெற்றோரை எதிர்பார்த்து வள்ளி கதவை திறக்க அந்த இரவு பத்து மணிக்கு அவள் வீட்டு வாசலில் பாண்டிய நெடுஞ்செழியன் நின்றிருந்தான்.அவன் வள்ளியின் கழுத்தை பிடித்து உள்ளே தள்ளிக்கொண்டு வர ஆர்யன் விரைந்து சென்று வள்ளியை அவனிடம் இருந்து விடுவித்தான்.ஆர்யன் "ஏய் ! உனக்கு எவ்ளோ வாங்குனாலும் புத்தி வராதா எதுக்கு பொண்ணுக கிட்ட உன் வீரத்தை காட்டுற !" என்று கூற செழியன் "எது நான் பொண்ணுக கிட்ட என்வீரத்த காட்டுறேனா நீதாண்டா ஒரு பொண்ணு தாவணிக்கு பின்னாடி ஒளிஞ்சுக்கிட்டு இருக்க !......நீ செத்துட்டதா நாடகமாடி எங்களை சுத்தல விட்டல்ல இப்போ அத நிசமாகுறேன் டா !!" என்று ஆர்யனின் கோபத்தை கிளப்பிவிட ஆர்யன் செழியனை அடிக்க வந்தான். முன்பு ஒருமுறை அவனிடம் தனியாக மோதி அடிபட்டதை செழியன் மறக்கவில்லை அதனால் இம்முறை தனது மூளையை பயன் படுத்தி அவனது ஆட்களை அனுப்பினான்.சிறிது நேரத்தில் வள்ளியின் வீடு ரணகளம் ஆனது ஆர்யனும், ஆதவனும் முடிந்த அளவு வள்ளியை பாதுகாத்தனர்.ஆனாலும் பத்து பேருக்கு மேல் செழியனின் ஆட்கள் வந்தனர், ஆர்யன் விரைந்து பின் கதவை நோக்கி வள்ளியை இழுத்து கொண்டு ஓட அவனை அவ்வளவு எளிதில் அவர்கள் விட்டுவிடவில்லை இருந்தும் பத்திரமாக ஆர்யன் வள்ளியை வெளியே விட்டு "யாரையாவது உதவிக்கு கூப்பிடு உடனே !!...முடிஞ்சா ஏதாவது வண்டிக்கு ஏற்பாடு பண்ணு !!" என்று அவளை வெளி பக்கம் தள்ளினான்.வள்ளி அக்கம் பக்கத்தில் இருந்தவர்களையெல்லாம் அழைத்துக்கொண்டு தெரிந்த ஒருவரிடம் இருந்து பழைய வண்டியை வாங்கிக்கொண்டு வர ஒருமணி நேரம் ஆனது, அதற்குள் வள்ளியின் வீடு சிதைந்து போனது என்றே கூறவேண்டும் ஆங்காங்கே நெல் மூட்டைகள் சிதறி இருக்க அந்த வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் ஒவ்வொரு மூலையில் இருந்தது ஆங்காங்கே மனிதர்கள் மிகுந்த கவலை கிடமான நிலையில் இருப்பதை வள்ளி கண்டாள் ஆனால் அந்த கவலைக்கிடமான நிலையில் ஆர்யனும், ஆதவனும் இல்லை, அதை நினைத்து பெருமூச்சுவிட்டவள், செழியனை தேட அவனும் அங்கே இல்லை !!!வெளியே வந்து பார்த்தாள் தெரிந்த ஒருவரிடம் இருந்து வாங்கி வந்த அந்த பழைய மொடல் காரையும் காணவில்லை !!

தொடரும் !!..
 

Yuvanandhini

✍️
Writer
அத்தியாயம் 16 :வள்ளியின் வீட்டில் கலவரம் நடந்த அதே வேளையில், பூம்பாறைக்கு வெளியே இருக்கும் நெடுஞ்சாலையில், ஒரு பழைய மாடெல் கார் அதன் அதிக பட்ச வேகத்தை தாண்டி கோய்ம்பத்தூருக்கு செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்தது.அதில் இருந்தவர்கள் வேறு யாரும் இல்லை ஆதவனும், ஆர்யனும் தான், ஆதவன் ஒருமுறை பின் சீட்டில் திரும்பி பார்க்க அங்கே மயக்க நிலையில் தலையில் வடியும் ரத்தத்தோடு செழியன் மயங்கி கிடந்தான்,'இவனுக்கு இது நல்லா வேண்டும் !' என்று நினைத்துக்கொண்டு அப்போது நடனத்தையும் ஒரு முறை நினைத்துப்பார்த்தான்.****************************************செழியனும் அவனது ஆட்களும் சண்டையில் இறங்க ஆர்யனும் ஆதவனும் இறங்கினார்கள், அப்போது தான் ஆர்யன் ஒரு வினோதமான காரியத்தை செய்தான் அங்கே சமையல் அறைக்குள் சென்று ஒரு பெரிய டப்பாவில் மீளகாய் தூள் இருந்தது அதை எடுத்துக்கொண்டு வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களை நோக்கி தூவினான், ஆதவன் அவன் செய்ய போகும் காரியம் முன்பே தெரிந்திருந்ததால் தனது கண்களை இறுக்கி மூடிக்கொண்டான். கொஞ்ச நேரத்திற்கு அங்கே மிளகாய் தூள் மழை பெய்தது அதில் மனிதர்கள் அலறும் சத்தம் பெரியதாக கேட்க ஒரு பத்து நிமிஷத்தில் அலறல் நிற்க ஆனால் கண்ணெரிச்சல் நிற்கவில்லை அப்போது தான் அது நிகழ்ந்தது அந்த கண்ணெரிச்சலிலும் செழியன் கத்தியை எடுத்துக்கொண்டு ஆர்யனை நோக்கி வர ஆதவன் ஒரு பெரிய நெல் குத்தும் உலக்கையை எடுத்துவந்து செழியனுக்கு பின்னால் இருந்து அடித்துவிட்டான், அதில் நிலை தடுமாறி செழியன் கீழே விழ அப்போது தான் ஊர்மக்கள் வரும் சத்தம் கேட்டது சற்றும் தாமதிக்காமல் செழியனை தோள்மீது போட்டுகொண்டு பின்பக்க தோட்டத்திற்கு சென்று ஒளிந்து கொண்டார்கள், வள்ளி வந்து அனைவரையும் பார்க்க அவர்கள் எரிச்சல் தாங்க முடியாமல் தரையில் விழுந்து கிடந்தனர்.அதற்குள் வீட்டை சுற்றிக்கொண்டு செழியனை கடத்தி இருந்தனர் இருவரும்.*******************ஆர்யன் "ஆதவா உன்னோட போனை ஆன் பண்ணு!! உடனே ராகுலிற்கு கால் பண்ணு ! நம்மளோட கோயம்பத்தூர் ஃபேக்டரி மானேஜரை ஃபேக்டரிக்கு வரச்சொல்லு !" என்று கூற ஆதவனும் அவ்வாறே செய்தான்.அடுத்த மூன்று மணி நேரம் பறந்து ஓடிப்போனது, ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்த 'எ வி ' ஸ்டீல் ஃபேக்டரிக்கு வந்து சேர்ந்தது அவர்களது கார்.ஆர்யன் அசால்டாக இறங்கி அவனை தோளில் போட்டுகொண்டு அந்த யாருமற்ற ஃபேக்டரி கோடௌனிற்குள் சென்றான்.தனது பெரிய முதலாளி ஊரில் இருந்து வந்ததை நினைத்து பதறியடித்து கொண்டு வந்தான் ஜார்ஜ் ...'எ வி ' ஸ்டீல்ஸ் தற்போதைய மேனேஜர்.ஆர்யனை கண்டதும் "ஹலோ சார் என்று விஷ் செய்ய அப்படியே அவன் பார்வை பின்னால் செல்ல அங்கே ஒருவனை அடித்து நெத்தியில் ரத்தம் வந்து கொண்டிருக்க அதை பார்த்தவன் "ஐயோ ! என்ன இது " என்று பதற ஆதவன் "அட பதறாதடா நீ வேற ! முதல ஃபிரஸ்ட் எயிட் கிட் எடுத்துடுவா " என்று கூற ஜார்ஜ் அதே போன்று செய்தான்.ஆர்யன் "ஆதவா அவனுக்கு ஃபிரஸ்ட் எயிட் பண்ணு , மிஸ்டர் ஜார்ஜ் நீங்க அவன் முகத்துல தண்ணீர் தெளிச்சு அவனை மயக்கத்துல இருந்து எழுப்புங்க " என்று கட்டளைகளை பிறப்பித்து எங்கோ வெளியே சென்று கையில் ஒரு பாட்டிலோடு வந்து அங்கே ஒரு நாற்காலியில் செழியனுக்கு எதிரில் அமர்ந்தான்.கொஞ்ச நேரம் கழித்து செழியன் தனது கண்களை திறக்க, அவன் முன்பு காலனை போல ஆர்யன் அமர்ந்திருந்தான்.

செழியன் இரண்டு முறை அவனிடம் நன்றாக வாங்கியதால் அவன் கண்களுக்கு காலன் எதிரில் அமர்ந்திருப்பதை போன்ற பிரமை உண்டாயிற்று.ஆர்யன் "இந்தா தண்ணீர் குடி !" என்று ஜார்ஜிடம் ஒரு பாட்டிலை நீட்ட அவன் அந்த மூடியை திறந்து செழியனுக்கு தானே புகட்டினான். அதனை ஒரு புன்னகையோடு பார்த்து கொண்டிருந்தான், ஆர்யன்.ஆர்யன் "நான் புதுசா எதுவும் கேக்க போறது இல்ல நான் கேக்கபோறது உனக்கே தெரியும் அன்னைக்கு கீர்த்தியை அடிச்சது யாரு !.....கீர்த்தியோட அந்த நிலைமைக்கு காரணம் யார்?" என்று கேட்க , செழியன் கூறும் வழிதெரியவில்லை, ஆர்யன் தனது நெற்றியில் கைவைத்து "ஒன்னும் சொல்ல மறந்துட்டேன் பாரேன் ! நீ குடிச்சது தண்ணீர் இல்லை விஷம் இன்னும் இரண்டுமணி நேரம் தான் உனக்கு டைம் அதுக்குள்ள உண்மையா சொல்லல நிச்சயமா நீ உயிரோட போகமாட்ட" என்று கூறி அவனது வாட்சை பார்த்தான் நேரம் மூன்றுமணியை குறித்தது.செழியன் "சொல்லிடுறேன் தயவை செய்ஞ்சு என்னை விட்டுடு,.....கீர்த்தியை அன்னைக்கு எங்க ஆளுங்க ஒரே ஒருதடவை மட்டும் தான் பார்த்தாங்க ......அதுக்கப்பறம் அவளை அடிச்சது ......உங்க ஆளுங்க தான் !!!", என்று கூற ஆர்யனுக்கு அது ஆச்சரியத்தை கொடுக்கவில்லை வெகு நேரமாக அவனது மனதை அடித்து கொண்டிருந்த சந்தேகத்தை மட்டுமே அது நிவர்த்தி செய்தது. ஆனால் ஆதவனும் ஜார்ஜ்க்கும் பேரதிர்ச்சி, "என்டா சொல்ட்றா !" என்று அவனையே பார்த்து கொண்டிருந்தனர். செழியன் கதையை கூற துவங்கினான்.

***************************

இவ்வளவு நேரம் கதையை ஆர்யனின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தோம் இப்போது கதையின் இறுதியை நெருங்கிவிட்டதால் பொதுவாக என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அன்று இரவு நேரத்தில் ஆர்யனையும்,கீர்த்தியையும் ஃபோலோ செய்த்து கொண்டு வந்தவர்கள் செழியனின் ஆட்கள் என்று தவறாக புரிந்து கொண்டவள் கொடைக்கானலை விட்டு செல்ல முடிவு செய்தாள், விரைந்து தனக்கு தேவையான பொருட்களையெல்லாம் எடுத்து கொண்டு கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டிற்கு சென்றாள்.

உண்மையில் அந்த கணம் கீர்த்தி பயந்தாள் என்றே கூறவேண்டும், ஆனால் அவளுக்குள் ஏதோ ஒன்று சொல்லியது 'வாழ்க்கையில எவ்வளவோ பார்த்துட்டோம் இனி இதுக்கு போய் யா பயப்படணும்......ஆனா அவர் ..அவரை பிரிந்து போகணுமா ?......" என்று எண்ணியவளுக்கு அந்த எண்ணம் உயிர்வரை சென்று வலித்தது "ஆனால் நான் அவர் கூட இருக்குறதைவிட இல்லாமல் இருக்கறதுதான் அவருக்கு நல்லது !.....இன்னும் எத்தனை வருஷம் ஓடுறது !...... ஆர்யன் உங்களுக்கு நான் எந்த பதிலும் சொல்ல முடியாது !.......ஆனா என் மனசுல நீங்க தான் நிறைஞ்சு இருக்கீங்க !.....இதை சொல்ல தான் முடியல !" என்று அவளது நிலையை நினைத்து அவளுக்கே கோபம் வர ஒரு முறை ஆர்யன் தங்கி இருந்த அறையை வெளியே இருந்து பார்த்துவிட்டு "போறேன் ஆர்யன் விதி மேல நம்பிக்கை இருந்தால் !நாம் மறுபடியும் பார்க்கலாம் !" அவளுக்குளேயே கூறிக்கொண்டு வேகமாக நடை போட தீடீரென்று ஒரு குறிப்பிட்ட வீதியை கடக்கும் நேரம் அவளை யாரோ தொடர்வது போல உணர்ந்தாள், இரவு தந்த இருள் சாதாரண அந்த சாலையை மேலும் பயங்கரமாக காட்ட, ஆந்தைகள் கத்தும் சத்தும் கேட்டது தான் போர்த்திக்கொண்டிருந்த சால்வையை மேலும் இறுக்கமாக பிடித்து கொண்டு, பிரதான சாலைக்கு வந்தாள், அங்கே இருந்து மலையடிவாரத்துக்கு செல்லும் பேருந்தை பிடித்து அங்கிருந்து பழனிக்கு பொய்விலாம் என்று எண்ணி இருந்தாள், அங்கே அவளுக்கு தெரிந்தவர்கள் சிலர் இருக்கிறார்கள், வள்ளியும் கீர்த்தியும் பொது சேவையில் ஆர்வம் மிக்கவர்கள், பழனி ஆண்டவர் சித்த மருத்துவ சாலைக்கு அடிக்கடி சென்று தங்கள் பொது தொண்டுகளை செய்வார்கள் , அங்கே இருக்கும் தலைமை மருத்துவருக்கு கீர்த்தியையும், வள்ளியையும் நன்றாகவே தெரியும் அதனால் அங்கே சென்றுவிடலாம் என்று முடிவு செய்து கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டை நெருங்கினாள்.

ஆனால் அங்கே தான் சிக்கல் ஆரம்பித்தது, அங்கே உண்மையான செழியனின் ஆட்கள் நின்றிருந்தார்கள். அவர்களை பார்த்ததும் கீர்த்திக்கு ஒருகணம் என்ன செய்வது என்றே தெரியவில்லை, அங்கே அவர்களை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை, ஆட்கள் வெகு குறைவாக இருந்த அந்த சாலையில் கீர்த்தியை அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளும்படியாக நேர்ந்துவிட்டது.

அதில் ஒருவன் "டேய் ! அவளை பிடிங்கடா அங்கே தாண்டா இருக்கா அவ !" என்று கத்த, கீர்த்திக்கு திகில் உண்டானது விரைந்து அங்கிருந்து ஓட துவங்கினாள் அவள் கொண்டுவந்த மற்ற பைகள் எல்லாம் அங்கேயே விட்டுவிட்டு, அவள் கைபையை மட்டும் சுமந்து கொண்டு ஓடினாள்.

அந்த பிரதான சாலையில் இருக்கும் தெருக்களில் அவர்களுக்கு தெரியாமல் மறைந்து கொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா என்று பார்ப்பதற்காக செல்ல அங்கே அப்படி ஏதும் அவளது கண்களுக்கு தென்படவில்லை, சாலையோரங்களில் நிறுத்தி வைக்க பட்டிருந்த ஒரு கார் அருகில் சென்று மறைந்து கொண்டாள், அப்போதுதான் அந்த சாலையின் ஒரு முனையில் வந்துகொண்டிருந்தவர்கள் "எங்கே போயிருப்பா எங்கே போனா !" என்று கேட்பது அவளுக்கு நன்றாகவே கேட்டது. அதனால் எங்கே தன்னையும் அறியாமல் கத்திவிடுவோமோ என்று தனது வாயில் கையை வைத்து கொண்டு மறைந்தாள் "கத்திடாத கீர்த்தி கீர்த்தி ! " என்று அவளுக்குலேயே கூறிக்கொண்டிருந்தாள்.பிறகு சிறிது நேரத்தில் அவர்கள் அங்கே இருந்து சென்றுவிட, இப்போது கீர்த்தி எங்கே செல்வது என்ன செய்வது என்ற மனக்குழப்பத்தில் இருந்தாள்.

அவளுக்கு அப்போது தான் மணியடித்ததை போல ஒன்று நினைவிற்கு வந்தது, அங்கே அருகில் தான் அவளுக்கு தெரிந்தவர்கள் வீடு இருக்கிறது, அவள் கொடைக்கானலுக்கு வந்து கொஞ்ச நாட்கள் தான் ஆகிறது, வள்ளி அவளுக்கு ஒரு புதிய சிம்மை கொடுத்து இனி இந்த நம்பருக்கு தான் நான் போன் பண்ணுவேன், பழைய சிம்மை உடைத்து போட்டுட்டு அந்த சிம் மாதிரியே உன் பழைய வாழ்க்கையும் உடைச்சு புது வாழ்க்கையை வாழு என்று கூறி இருந்தாள், அந்த சிம் போட்ட போனில் பதிவாகி இருந்த இரண்டாவது நம்பர், அங்கே கொடைக்கானலில் தங்கி இருந்த ரோஸியின் நம்பர், ஒரு நாள் கீர்த்தி ரோஸியின் நான்கு வயது மகனை ஒரு சாலை விபத்தில் இருந்து காப்பாற்றினாள், அதற்கு ரோஸி உனக்கு என்ன உதவி வேணும்னாலும் தயங்காம கேளு என்று அவளது நம்பரை கொடுத்துவிட்டு சென்றாள்.

இங்கே அருகில் தான் அவளது வீடு இருக்கிறது என்று கீர்த்திக்கு நினைவு வந்தது, அதனால் சற்றும் தாமதிக்காமல் அவள் ரோஸிக்கு அழைக்க அவள் மறுபுறம் "நீ கவலை படாத கீர்த்தி நீ எங்கே இருக்க அத முதல சொல்லு !" என்று கூற கீர்த்தி அவள் இருந்த இடத்தின் அடையாளத்தை கூறினாள். ரோஸி உடனே "கவலைபடாத இன்னும் பத்து நிமிஷத்துல அங்கே இருப்பேன் " என்று கூறி அவளது கணவனை எழுப்பி அவர்களது கார் எடுக்க கூறினாள்.கீர்த்திக்கு அந்த பத்து நிமிடம் அவளது வாழ்க்கையில் மறக்க முடியாத நிமிடமாக சென்றது, சுற்றி ஆட்கள் நடப்பதை போலவே இருந்தது ஆனால் அங்கே யாருமே இல்லை, அனைத்தும் அவளது கற்பனைதான் ஆனால் அந்த சாலையும் வெகு பயங்கரமாகவே இருந்தது, விரைவிலேயே தூரத்தில் ஒரு கார்வர அது ரோஸி தான் என்று கீர்த்தி கண்டுகொண்டாள்.கீர்த்தி இருக்கும் இடத்தை நோக்கி அந்த கார்வர ரோஸி உள்ளே இருந்து "சீக்கிரம் வா கீர்த்தி " என்று கூறி அவளை ஏற்றிக்கொண்டாள்.அந்த கார் ரோஸி வீட்டிற்கு சென்றது, ரோஸியின் கணவன் அந்த காரை அரை தூக்கத்தில் ஓடினான் என்பதற்கு சான்றாக அவர்களது காரில் ஒரு கீறல் விழுந்து இருந்தது.ரோஸி "நீ இங்கே சேஃப் தான் கீர்த்தி நைட் இங்கேயே தங்கிக்கோ காலையில ஊருக்கு போய்க்கலாம் !" என்று கூறி அவர்கள் வீட்டிலேயே தங்கவைத்தனர்.கீர்த்தியின் கண்களில் நன்றி ததும்பிய கண்ணீர் தழும்பியது"ரொம்ப தேங்க்ஸ் ரோஸி " என்று கூறியவள் ரோஸியின் வீட்டில் தாங்கிக்கொண்டாள்.கீர்த்தியின் மனதில் ஒரு எண்ணம் மட்டும் அரித்து கொண்டே இருந்தது 'ஆர்யன் வந்தது அவளிடம் அவன் காதல் சொன்னது , ............ நான் இப்படி வந்துவிட்டோமே அவர் என்னை தேடுவாரா !....இல்ல மறந்துடுவாரா !..............நிஜமா அவர் என்னை காதலிச்சுருப்பாரா ?' என்று அடிக்கடி கேட்டு அவள் கைகளில் மின்னிய பச்சை நிற மரகத கல் மோதிரத்தை பார்த்து கொண்டாள், நிஜம் தான் என்று அது நிரூபித்தது.கீர்த்தி அன்று அவ்வளவாக தூங்கவில்லை,ஆர்யனை பற்றியும் அவனை கொல்ல நடந்த முயற்சியை பற்றியும் யோசித்து கொண்டிருந்தாள், இனி ஆர்யன் முகத்தில் எப்படி முழிப்பேன் !......என்னை மன்னிச்சுடுங்க ஆர்யன் என்று அவனிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டாள் ! அவளது கேள்விகளுக்கான பதில் தான் அவளுக்கு கிடைக்கவே இல்லை.

தொடரும் !!..
 

Latest profile posts

இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும்II-37👇

New Episodes Thread

Top Bottom