ஒளி 8

S_Abirami

✍️
Writer
"இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்." வினய் கூற அனைவரும் அதிர்ந்துவிட்டனர். குமார் கோபமாக வினயிடம் வந்து அடைந்துவிட்டார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத வினய் அதிர்ந்துவிட்டான். தன் தந்தை சிறு வயது முதல் எதற்கும் தன்னை அடிக்காதவர் இன்று அடித்ததை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

"அப்பா!!"

"என்னடா அப்பா?? இப்படி ஊர கூட்டிவச்சு அசிங்கப் படுத்த எத்தன நாள் திட்டம் போட்ட??"

"அப்பா நான் உங்க பையன். என்னைப் போய் இப்படி பேசுறீங்க??"

"வேற என்னடா பண்ண சொல்ற?? இப்படி ஒரு வசதி வாய்ப்போடு உனக்கு பொண்ணு கிடைக்குமா?? நானும் உன் அம்மாவும் எவ்ளோ சந்தோஷத்தில இருந்தோம் தெரியுமா??"

"அப்பா நான் சந்தோஷமா இல்லை."

"உனக்கு என்னடா சந்தோஷம் இல்லை??"

"அப்பா நம்மளை பத்தி உண்மையைச் சொல்லாமல் பணக்காரங்கனு சொல்லி வச்சிருக்காங்க. இதிலேயே தெரியலையா அவங்களை பத்தி??"

"இதுல என்னடா தப்பு?? அவங்க நம்மைவிட வசதி அதிகமா இருக்கிறவங்க. அவங்க நம்மை மத்தவங்க தப்பா பேசா கூடாதுனு ஒரு நல்ல எண்ணத்தில இப்படி சொல்லிருப்பாங்க. அதுக்காக எதுக்கு கல்யாணத்தை நிறுத்தனும்??"

"அப்பா உங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது?? சரி அவங்க பண்ணதுலாம் சரி தான். எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை. அவ்ளோதான். வாங்க நம்ம வீட்டுக்குப் போகலாம்."

"இங்க பார் வினய் இவ்ளோ நேரம் நீ பேசுறதலாம் கேட்டுட்டு இருந்தது போதும். இந்த கல்யாணம் நடக்கலைனா அப்புறம் நிறைய விளைவுகளை நீ சந்திக்க நேரிடும். ஜாக்கிரதை." ஷங்கர் கூற. வினய்க்கு கடுப்பாக இருந்தது.

"அம்மா நீங்களாவது அப்பாவிடம் சொல்லுங்க. இந்த கல்யாணம் வேண்டாம்."

"அப்பாகிட்ட வாங்கினது பத்தாதா?? நான் வேற உனக்கு தரனுமா?? உன்னால எங்க வாழ்க்கை எவ்ளோ சந்தோஷமா மாற போகுதுனு கனவு கண்டோம். இப்ப எல்லாத்துலயும் மண் அள்ளி போடுற மாதிரி பேசுற??"

"அம்மா நீங்களா இப்படி பேசுறீங்க?? என்னை விட இந்த வசதியான வாழ்க்கை முக்கியமா??"

"நீ எப்படி வேணாலும் எடுத்துக்க. ஆனால் இந்த கல்யாணம் நடக்கனும்."

"போதும். இதுக்கு மேல் நீங்கப் பேச வேண்டாம். உங்களுக்கு என்னை விடக் காசு பணம் முக்கியம்னு புரிஞ்சுக்கிட்டேன். நானும் உங்க பிள்ளை தான. அதனால் உங்களை விட எனக்கு என் வாழ்க்கை தான் முக்கியம். நான் இந்த ஊரவிட்டுப் போகிறேன்." என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

"பாருங்க இதுக்கு தான் சொன்னேன் தராதரம் பார்க்காமல் சம்மதம் வைக்காதீங்கனு. அப்பாவும் பொண்ணும் எங்க கேட்டீங்க?? இப்பவாவது நான் சொல்றத கேளுங்க. என் அண்ணன் பையனுக்கு திவ்யாவை அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் பண்ணி வச்சுடலாம்."

இதைக் கேட்ட திவ்யா சைகோ போல் கத்தினாள்."டாடி எனக்கு அவன் வினய் தான் வேண்டும். அவன் இல்லாட்டி நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது. வேற யாரையாவது எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சுங்கீ அப்புறம் நான் என்ன பண்ணுவேனு எனக்கேத் தெரியாது. டாடி எப்படியாவது அவனை கூட்டிட்டு வாங்க. அவனைத் தான் நான் கல்யாணப் பண்ணிக்குவேன்.

"கவிதா கொஞ்ச நேரம் சும்மா இரு. திவி நீ வருத்தப்படாத. அவனை எப்படி இங்க கூட்டிட்டு வந்து உனக்குக் கல்யாணப் பண்ணி வைக்கணும்னு எனக்குத் தெரியும்." என்று கூறிவிட்டு ஷங்கர் தன் ஃபோன் எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார். கவிதா தன் தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

வசந்தியும் குமாரும் திவ்யாவிடம் வந்து,"திவ்யா உனக்கு நாங்க துணையா இருக்கோம். நீ எதுக்கும் கவலைப் பட வேண்டாம். வினய் உன் கழுத்தில் தான் கண்டிப்பா தாலி கட்டுவான்."

"ஆமாடா அவனுக்கு இப்ப வேற வழியில்லை. நான் அதுக்கான வேலைலாம் செஞ்சுட்டேன்." ஷங்கர் திமிரோடு கூற. திவ்யா சந்தோஷப்பட்டால்.

வீட்டுக்கு வந்த வினய் மிகுந்த வருத்தத்துடன் இருந்தான். அவன் கனவிலும் நினைக்கவில்லை தன் அம்மா மற்றும் அப்பா காசு பணத்துக்கு அடிமை ஆவார்கள் என்று. கனத்த இதயத்துடன் துணியை எடுத்து பைக்குள் வைத்து தன்னிடம் இருந்த காசை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவன் அதிர்ச்சியானான்.

"நீங்க தான Mr.வினய்?"

"ஆமா சார். நான் தான் வினய்."

"கான்ஸ்டபிள்ஸ் அவனை அரெஸ்ட் பண்ணுங்க."

"சார் என்னை எதுக்கு அரெஸ்ட் பண்றீங்க??"

"Mr.ஷங்கர் ஓட பொண்ணு திவ்யாவைக் கல்யாணம் பண்ணிக்கிறேனு சொல்லி ஏமாத்திட்டு அவங்கள மானபங்கம் படுத்திருக்க!!! அதுக்காக தான்டா உன்ன அரெஸ்ட் பண்றோம்."

"சார் அவங்க பொய் சொல்றாங்க. நான் அவங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொன்னதுக்குப் பழி வாங்குறாங்க சார்."

"அவங்க பழி வாங்குறாங்க சரி எதுக்கு உன் அம்மா அப்பா பொய் சொல்லனும்??" இதைக் கேட்ட வினய் ஸ்தம்பித்துப் போனான்.

ஸ்டேஷனில் வினய் கல்லு மாதிரி உட்கார்ந்திருந்தான். எதுக் கேட்டாலும் அவன் எந்த பதிலும் சொல்லவில்லை.

"சார் பாருங்க எப்படி உட்கார்ந்திருக்கானு. நாலு அடியாவது இவனை அடிக்கனும் சார். அந்த பொண்ண தப்பா பார்க்கிறதுக்கு முன்னாடி அவன் கண்ணுக்கு அவன் அம்மா தான வந்திருக்கனும். இந்த மாதிரி பெண் பித்தனைலாம் நிக்க வைத்துச் சுட வேண்டும்." என்று அங்கிருந்த ஒரு கான்ஸ்டபிள் சொல்ல வினய்க்கு அப்படியே செத்துற மாட்டோமானு இருந்தது.

அந்த நேரம் திவ்யா,ஷங்கர் மற்றும் வினயின் பெற்றோர் அங்கு வந்தனர். வினயிடம் வந்த ஷங்கர்,"என்னைப் பத்தி தெரிஞ்சுச்சா? நான் நினைச்சா எதுவானாலும் பண்ணுவேன். இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. என் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேனு சொல்லு. இந்த கேஸ்ல இருந்து உன்ன வெளில கொண்டு வந்துடுறேன்." என்று கூற. வினய் எதுவும் கூறாமல் இருந்தான். இதைப்பார்த்த ஷங்கர் கடுப்பாகி,"உனக்கு அவ்ளோ திமிரா?? இந்த திமிரை நான் அடக்கி காட்டுறேன்." என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

வசந்தியும் குமாரும் வினயிடம் வந்து,"எதுக்கு கண்ணா இந்த தேவையில்லாத வேலை? திவ்யா நீ வேண்டாம்னு சொன்னதும் எவ்ளோ அழுதா தெரியுமா?? பெண் பாவம் பொல்லாதது. சரினு சொல்லிடு ராஜா." என்று கூற வினய் அவர்கள் முகத்தைக் கூட பார்க்கவில்லை. அவர்கள் பெருமூச்சு ஒன்று விட்டுவிட்டுச் சென்றனர்.

திவ்யா வினயிடம் வந்து,"டார்லிங் நான் அப்படி என் ஃபிரண்ஸ்ட சொன்னது தப்பு தான். அவங்களிடம் நான் உண்மையை சொல்லிடுறேன். இப்போ உங்களுக்கு ஓகே தான??" அவன் எதுவும் பேசவில்லை. திவ்யா கோவமாகி,"உன்ன ஜெயில்ல வச்சும் திமிரு அடங்களல. நீ சரினு சொல்ற வரை உன்னால வெளில வர முடியாது. அதனால் உனக்கு வேற சாய்ஸ் இல்லை." என்று கூறிவிட்டுச் சென்றாள்.

வெகு நேரம் வினய் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். அவனை அடிக்கக் கூடாதென ஷங்கர் கூறியதால் அவனை அங்குப் போடப் பட்டிருந்த பெஞ்சில் உட்கார வைத்திருந்தனர். இரவு ஒரு மணி போல் வினய் நிமிர்ந்து பார்த்தான். மூன்று போலிஸ் இருந்தனர். அதில் இரண்டு பேர் தூங்கி வழிந்து கொண்டிருந்தனர். ஒருத்தர் மட்டும் முழித்திருந்தார். அவருக்கு ஏதோ ஃபோன் வரவும் எந்திரிச்சு வெளியில் சென்றார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வினய் அங்கிருந்து வெளியில் வந்துவிட்டான். வந்தவன் எங்கும் நிற்காமல் வேகமாக ஓடினான். அவனது அதிர்ஷ்டம் ஸ்டேஷன் , பேருந்து நிலையம் பக்கத்திலிருந்தது. அங்குப் போய் கிளம்பும் பேருந்தில் ஏறினான். அது சேலம் போகும் பேருந்து. சேலம் வரை போகாமல் நடுவில் இறங்கி சென்னைக்கு இரண்டு மூன்று பேருந்து மாறி வந்து சேர்ந்தான்.

எங்கும் வேலைக்குச் சென்றால் யாரும் பார்த்து அவர்களிடம் கூறிவிடுவார்களோ என்ற பயத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்தான்.

வினய் ரித்விகாவிடம் நடந்ததைக் கூறிவிட்டு,"நிறையப் பெண்கள் ஆண்களால் பாதிக்கப் படுகிறார்கள். அவர்களுக்கென்று சில சட்டங்களும் வந்து விட்டன. திவ்யா போன்ற பெண்களால் என்னைப் போல் சில ஆண்களும் பாதிக்கப்படுகின்றோம். எங்கள் தரப்பு நியாயத்தைக் கூறினாலும் அதை நம்ப மறுக்கிறார்கள். அதனால் தான் என்னை நிரூபிக்காமல் கோழை மாதிரி ஓடி வந்துவிட்டேன். தயவு செய்து என்னை மறந்துவிடு. என்னை எப்பொழுது வேண்டுமானாலும் அவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை என்னால் கூற இயலாது. அந்த திவ்யா எதுவானாலும் செய்வாள். அதனால் நீ என்னை மறந்திரு." என்று கூறினான். ரித்விகா எதுவும் கூறாமல் அங்கிருந்து சென்று விட்டாள். வினய் ஒரு விரக்தி சிரிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு வேலையைப் பார்க்கச் சென்றான். அன்று முழுவதும் ரித்விகாவை அவனால் பார்க்க முடியவில்லை. சோகமாக தன் வீட்டிற்குச் சென்றான்.

ஒரு வாரம் கடந்துவிட்டது. வினய் ஏனோ ரித்விகா தன்னை அழைப்பாள் என்று ஏதோ குருட்டு நம்பிக்கையுடன் அடிக்கடி தன் ஃபோனையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவள் அழைக்கவே இல்லை. வினய்க்குத் தான் எதற்கு அவள் அழைப்பை எதிர்பார்க்கிறோம் என்று புரியாமல் இருந்தான். அப்பொழுது யாரோ அவன் வீட்டுக் கதவைத் தட்டுவது போலிருந்தது. அதை பிரம்மை என்று விட்டுவிட்டான். சிறிது நேரத்தில் திரும்பவும் கேட்கவும் நிஜமாகவே யாரோ கதவைத் தட்டுகிறார்கள் என்று புரிய வேகமாக வந்து கதவைத் திறந்தான். வெளியில் நின்றவர்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். ஏனெனில் வந்தது திவ்யா,ஷங்கர்,குமார்,வசந்தி மற்றும் சில காவல் அதிகாரிகள். அவர்களுடன் ரித்விகாவும் நின்றிருந்தாள்.
 

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

அன்பு நெஞ்சங்களே,

எல்லாரும் எப்பிடி இருகீங்க. மனதோடு வீசும் தென்றல் பகுதி 5 இதோ உங்களுக்காக. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்.


அன்புடன்
உமா நாதன்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
வெய்யோனின் தண்மதி அவள் அத்தியாயம் 7😎👇
ஓம் சாயிராம்.
திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.

எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

New Episodes Thread

Top Bottom