ஒளி 7

S_Abirami

✍️
Writer
ரித்விகா வினய் தான் ஒரு சிறை கைதி என்று கூறியதிலே உறைந்துவிட்டாள்.

"இப்பவாவது புரிந்து கொள். நான் உனக்கு வேண்டாம்."

"நீங்கப் பொய் தான சொல்றீங்க??"

"அய்யோ இல்லை. நிஜமா தான் சொல்கிறேன்."

"எதுக்கு உங்களை போலிஸ் கைது பண்ணாங்க??"

"சொல்றேன் என்னுடைய ஊர் திருச்சி பக்கத்தில் முசிறி கிராமம். நான் எங்க அப்பா அம்மாகு ஒரே பையன். அதனால் என்னை நல்லா படிக்க வைத்தார்கள். திருச்சியில் இருக்கும் ஒரு பிரபல நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்...."

இரண்டு வருடங்களுக்கு முன்,

வினய் தன் வீட்டில் தயாராகிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனது அம்மா வசந்தி அவனிடம் வந்து,"கண்ணா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கிறது. இந்த ஊரிலே நிறையப் படித்து பெரிய நிறுவனத்தில வேலைப் பார்க்க போறது நீ தான் கண்ணா அதனால் நிறையக் கண்ணு இருக்கும் உன் மேல. வா உனக்குத் திருஷ்டி சுத்திப் போடுறேன்."

"என்னமா நீங்க?? இன்னுமா அதலாம் நம்புறீங்க??"

"கண்ணா நீ சும்மா இரு. உன் அம்மா சொல்றது சரி தான். இதெல்லாம் நீ எதுவும் சொல்லக் கூடாது." என்று கூறிக் கொண்டே வந்தார் குமார், வினயின் தந்தை.

"அப்பா நீங்களுமா?? சரி எது செய்றதுனாலும் சீக்கிரம் செயுங்க. இன்னைக்கு எங்க முதலாளி ஓட பொண்ணு கம்பெனிக்கு வராங்க. இனிமே அவங்க தான் கம்பெனிய பாத்துக்க போறாங்க. முதல் நாளே நான் கெட்ட பெயர் வாங்கக் கூடாது."

"சரி கண்ணா. இதோ முடிந்தது. வா சாப்பிடலாம்."

பின் வினயும், குமாரும் சாப்பிட்டு விட்டு வேலைக்குச் சென்றனர். குமார் அவரது வயலுக்குச் சென்றுவிட்டார்.

வினய் தன் அலுவலகத்திற்குச் சென்றான். எல்லாரும் பிசியாக இருந்தனர். இவனும் தன் இடத்துக்குச் சென்று வேலையைத் தொடர்ந்தான்.

ஷங்கர் அந்த நிறுவனத்தின் முதலாளி. அது ஒரு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம். அதில் கம்ப்யூட்டர் பிரிவில் வினய் வேலை செய்கிறான். ஷங்கரின் ஒரே மகள் திவ்யா. லண்டனில் தன் மேற்படிப்பை முடித்துவிட்டு சில நாட்கள் முன்பு தான் திருச்சி வந்தாள். இன்று தான் தன் அலுவலகத்திற்கு வந்து பொறுப்பை ஏற்றுக் கொள்ளப் போகிறாள். அதனால் அலுவலகம் முழுவதும் பரபரப்பாக இருந்தது.

சில நிமிடங்களில் திவ்யா அங்கு வந்துவிட்டாள். எல்லாரும் வந்து அவளை வரவேற்றனர். மேனேஜர் எல்லாரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

"மேடம் இவர் தான் வினய். இங்க கம்ப்யூட்டர் டிபார்ட்மென்ட்ல வேலை பார்க்கிறார். ரொம்ப திறமையானவர்."

"ஆமாடா திவ்யா. நம்ம சாஃப்ட்வேர் கம்பெனி ஆரம்பிக்கலாம்னு யோசிச்சோம்ல?? வினயை பார்த்துக்க சொல்லலாம்னு யோசிச்சுருக்கேன். நீ இப்ப தான வந்த நீயும் வினயோட திறமையை தெரிஞ்சுக்குவ." ஷங்கர் கூற, வினய் திவ்யாவைப் பார்த்துச் சிரித்தான். அந்த சிரிப்பு திவ்யாவை ஈர்த்தது. அவனை முதல் சந்திப்பிலே திவ்யாவுக்குப் பிடித்துவிட்டது.

நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. வினயின் திறமையைப் பார்த்து திவ்யா வியந்தாள். திவ்யாவின் பார்வை வினய் மேல் அதிகமாகப் படிந்தது. வினய் இதை எதையும் உணராமல் வேலையிலே மும்முரமாக இருந்தான்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை போல் திவ்யா சொல்லாமல் வினயின் வீட்டுக்கு வந்துவிட்டாள். அவளை அங்கு எதிர்பார்க்காத வினய் அதிர்ச்சியுடன்,"வாங்க மேடம். நீங்க எங்க வீட்டுக்கு, எதாவது முக்கியமான விஷயமா மேடம்?? அப்படினா நீங்க என்னைக் கூப்பிட்டிருந்தாலே வந்திருப்பேன் மேடம்." என்று மூச்சு விடாமல் வினய் கூறினான்.

திவ்யா சிரித்து விட்டு,"கூல் கூல் வினய். நான் இந்தப் பக்கம் வந்தேன். இங்க தான் உங்க வீடு இருக்குனு கேள்விப் பட்டேன். அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன். வேற ஒன்னுமில்லை. நீங்க டென்ஷன் ஆக வேண்டாம்."

மகன் பேசும் விதத்தை வைத்தே வந்தவள் வினயின் கம்பெனி முதலாளி என்பதை வினயின் பெற்றோர் அறிந்து கொண்டனர்.

"என்ன வினய் உங்க பேரன்ட்ஸ்கு என்னை அறிமுகப் படுத்தி வைக்க மாட்டீங்களா?"

"அய்யோ அப்படி இல்லை மேடம். நீங்க திடீரென வந்தவுடன் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை." என்று கூறிவிட்டு தன் தாய் மற்றும் தந்தையைப் பார்த்து,"அம்மா அப்பா இவங்க பெயர் திவ்யா நான் வேலை பார்க்கிற கம்பெனியோட முதலாளி."

"வணக்கம் அத்தை மாமா." என்று திவ்யா கூற, வினய்க்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவனின் பெற்றோர்க்கோ மகிழ்ச்சியாக இருந்தது. வினயின் முகத்தைப் பார்த்து,"ஏன் வினய் அப்படி பார்க்கறீங்க?? ஓ நான் அத்தை மாமானு சொன்னதாலையா?? அது ஒன்னுமில்லை நாம நாளைக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்டா இவங்களை நான் அத்தை மாமானு தான சொல்லனும் அதான் இப்பவே கூப்பிட்டு பலகிக்கிறேன். என்ன சொல்றீங்க அத்தை??"

"அடியாத்தி நீ எங்களோட மருமகளா வந்தால் என் பையன் ரொம்ப கொடுத்து வைத்தவன். நீ எப்படி வேணாலும் எங்களை கூப்பிட்டுக்க ஆத்தா." என்று வசந்தி கூற, வினய் அதிர்ச்சியாகி விட்டான்.

"அம்மா நீங்கக் கொஞ்சம் சும்மா இருங்க. மேடம் சாரி நீங்க ஏதோ விளையாடுரீங்கனு புரியாமல் அம்மா ஏதோ பேசிட்டாங்க. நீங்க மனசுல எதுவும் வச்சுக்காதீங்க."

"இல்லை வினய். நீங்க தான் தப்பா புரிஞ்சூக்கிட்டீங்க. நான் இங்க வந்ததே உங்கிட்ட என் மனசுல இருக்கிறதைச் சொல்லத் தான். எஸ் ஐ லவ் யூ. நான் வெளிநாட்டில போய் படிச்சுவ. அங்கு நான் நிறைய ஆண்களை பார்த்திருக்கேன். ஆனால் யார் மேலயும் தோனாத ஒரு உணர்வு உங்க மேல் எனக்குத் தோன்றி இருக்கிறது. அதனால் நான் விளையாடுகிறேன் என்று நினைக்க வேண்டாம்." வினய்க்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

"நீங்க உங்கள் பதிலை உடனே சொல்லனும்னு சொல்ல மாட்டேன். யோசித்து நல்ல பதிலா எனக்கு பொறுமையா சொன்னால் போதும். இப்ப நான் கிளம்புகிறேன்."

"என்ன மா நீ வீட்டுக்கு வந்துட்டு எதுவும் சாப்பிடாமல் போற?"

"இல்லை மாமா வினய் மட்டும் சரினு சொல்லட்டும் விருந்தே சாப்பிடுவேன். இது நம்ம வீடு தான." என உரிமையாகக் கூறிவிட்டுச் சென்றாள்.

அவள் சென்றவுடன் குமார் வினயிடம்,"அந்தப் பொண்ணுக்கு எவ்ளோ வசதி இருக்கு. இருந்தும் உன்னை பிடிச்சுருக்குனா அந்தப் பொண்ணு நிஜமாகவே உன்னைக் காதலிக்கிறாள். நீ அவளுக்கு சரினு சொல்லிடு கண்ணா."

"அட என்னங்க நீங்க இதப் போய் அவனிடம் சொல்லிக் கொண்டு. நாளுக்கே நாம் திவ்யாவை அழைத்து சரியென்று சொல்லிவிடலாம்."

"அம்மா என்ன இப்படி சொல்றீங்க?"

"கண்ணா நம்மளே தேடினாலும் இது மாதிரி பெரிய இடத்துச் சம்மதம் கிடைக்காது. வாழ்க்கையில் அதிர்ஷ்டம் எல்லாருக்கும் இருக்காது. ஆனால் நமக்கு இருக்கிறது. அதைக் கோட்டைவிட்டால் நம்மைவிட முட்டாள் யாருமில்லை."

"சரியா சொன்ன வசந்தி, நம்ம பையன் காசு பணத்தோட வசதியா இருப்பான் இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா. வினய் நாங்க சொல்றத கேள். நாளை திவ்யாவிடம் சரியென்று கூறிவிடு." அவ்ளோதான் என்பது போல இருவரும் எழுந்து சென்றுவிட்டார்கள். வினய்க்கு தான் குழப்பமாக இருந்தது. எப்படி இருந்தாலும் யாரையாவது திருமணம் செய்யப் போகிறோம் அது ஏன் திவ்யாவாக இருக்கக் கூடாது என்று நினைத்து அவளிடம் அடுத்த நாள் திவ்யாவிடம் சரியென்று கூறிவிட்டான்.

ஷங்கர் திவ்யாவிடம்,"என்னமா திவ்யா சொல்ற?? நீ அந்த வினயை லவ் பண்றியா??"

"ஆமா டாடி. எனக்கு வினயை ரொம்ப பிடிச்சிருக்கு. நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா அது வினயை மட்டும் தான்."

"சரிடா. உன் விருப்பத்துக்கு மாறாக டாடி எதுவும் செய்ததில்லை. நாளைக்கே அவங்க வீட்டில் போய் பேசுறேன்."

"தாங்க்ஸ் டாடி." திவ்யா மகிழ்ச்சியுடன் அங்கிருந்து சென்றாள்.

அடுத்த நாள் ஷங்கர் மற்றும் அவனின் மனைவி கவிதாவுடன் வினய் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் குமாரும் வசந்தியும் மகிழ்ச்சியாக வரவேற்றனர்.

"நான் நேரிடையாக விஷயத்துக்கு வரேன். என் பெண் திவ்யாவுக்கு வினயை ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கும் சரி என் பொண்டாட்டிக்கும் சரி திவ்யாவோட ஆசை தான் முக்கியம். அதனால் தான் எங்க தகுதிக்குத் குறைவா இருந்தாலும் பரவாலைனு இந்த கல்யாணத்தை முடிச்சுரலாம்னு வந்தோம்."

"ரொம்ப சந்தோஷம். எங்க வினய்க்கு இவ்ளோ பெரிய இடம் அமஞ்சது நாங்க பண்ணின புண்ணியமா தான் பார்க்கிறோம்." குமார் சொன்னார்.

"எங்க பொண்ண நாங்க ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்திருக்கிறோம். அதனால் இவங்க கல்யாணம் முடிந்தவுடன் நாங்க திருச்சில பெரிய வீடு ஒன்று வாங்கி குடுக்குறோம். நீங்க அங்க வந்துடுங்க." இதைக் கேட்டவுடன் வினய்க்கு கோவம் வந்தது. ஆனால் அவனின் பெற்றோர் அதை மறுத்துப் பேசுவார்கள் என்று இவன் எதிர்பார்க்க அவர்களோ எல்லாத்துக்கும் சரி சரி என்றே கூறினர். அவர்களும் வந்த வேலை முடிந்தது என்று கிளம்பிவிட்டார்கள்.

அவர்கள் கிளம்பியதும் வினய் தன் பெற்றோரிடம்,"என்ன அப்பா நீங்க அவங்க சொன்ன எல்லாத்துக்கும் சரி சரினு தலை ஆட்டுரீங்க?? அவங்க பணத்திமிர காட்டிட்டு போறாங்க. அப்படி ஒன்னும் நம்ம குறைஞ்சு போகலை!!"

"டேய் என்ன பேசுற நீ?? இப்படி யாருக்கும் அதிர்ஷ்டம் அடிக்காதுனு நாங்க சந்தோஷத்துல இருக்கோம். நீ என்னடா இப்படி பேசுற?? அவர் பொண்ணு எந்த கஷ்டமும் இல்லாம இருக்கனும்னு நினைக்கிறாங்க அதுல என்ன தப்பு?? அவங்க ஒன்னும் உன்னை மட்டும் வீட்டோட மாப்பிள்ளையா வரச் சொல்லலையே. உனக்குனு மட்டும் பார்க்காமா எங்களையும் சேர்ந்து தான வர சொல்றாங்க. உன்னால நாங்க சொகுசா வாழலாம்னு நினைத்தால் நீ இப்படி பேசுற!!!" தன் தந்தையா இப்படிப் பேசுவது என்று வினய் மிகுந்த வேதனை அடைந்தான். அவர்களை மணம் நோக வைக்கக் கூடாது என்று எதுவும் கூறவில்லை.

அன்று நிச்சயதார்த்தம். வினய்க்கு ஏனோ இந்த கல்யாண பேச்சு ஆரம்பத்திலிருந்தே மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. மாறாக ஒரு வித பயம் இருந்தது. அதற்கு மற்றொரு காரணம் எல்லாமே விரைவாக நடப்பது தான். திவ்யா தன் வீட்டிற்கு வந்து அவள் விருப்பத்தைக் கூறிய ஐந்து தினத்தில் நிச்சயதார்த்தம். திவ்யாவோடு பேசவும் அவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டிருந்தான். அப்பொழுது திவ்யா அங்கு வந்தாள்.

"என்ன டார்லிங் என்னை பார்க்கமா மூட் அப்ஸட்ல இருக்கீங்களா??" என்று கேட்டுக் கொண்டே அவன் கையைப் பிடித்தாள். வினய்க்கு சங்கடமாக இருந்தது.

"சரி வாங்க என் ஃப்ரண்ட்ஸ அறிமுகப் படுத்துறேன்." என்று கூறி இழுத்துக் கொண்டு சென்றாள்.

அவளின் நண்பர்களிடம் வினயை அறிமுகப் படுத்தினாள்.

"ஹேய் உன் ஆளு செம ஹான்ட்ஸமா இருக்கார். ரொம்ப நல்ல மாதிரியாகவும் இருக்கார். பாரு அவ்ளோ பெரிய கோடிஸ்வரர் எந்த பந்தாவும் இல்லாம இருக்கார் பார். அதான் திவ்யா மடக்கிட்டா." என்று கூற வினய்க்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் எதையும் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.

சிறிது நேரத்தில் அவர்கள் சென்றவுடன் திவ்யாவிடம்,"என்னைப் பத்தி அவங்ககிட்ட உண்மையைச் சொல்லலையா??"

"என்ன உண்மை??"

"என்ன ஏன் ஒரு பணக்காரன் மாதிரி சொல்லனும்?? "

"அதுல என்னை இருக்கு?? நான் எங்க குடும்பத்தை விடக் கம்மியா சொத்து இருக்கிற குடும்பத்துல கல்யாணம் ஆகி போறேனு எப்படி சொல்றது?? அதான் நீங்க பணக்காரங்கனு சொன்னேன். எனக்கு இதில் எதுவும் தப்பா தெரியலை."

வினய் இதற்கு எதுவும் பேசவில்லை. அவனிற்கு முதல் முறை தப்பு செய்கிறோமோ என்று தோன்ற ஆரம்பித்தது. ஆனால் அவனை யோசிக்க விடாமல் திவ்யா மேடைக்கு அழைத்துச் சென்றாள். நிச்சயமும் நல்லபடியாக முடிந்தது. எல்லாரும் சென்று விட்டனர். திவ்யா மற்றும் வினய் குடும்பம் மட்டும் தான் இருந்தனர்.

"இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்." வினய் கூற அனைவரும் அதிர்ந்துவிட்டனர்.
 

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

அன்பு நெஞ்சங்களே,

எல்லாரும் எப்பிடி இருகீங்க. மனதோடு வீசும் தென்றல் பகுதி 5 இதோ உங்களுக்காக. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்.


அன்புடன்
உமா நாதன்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
வெய்யோனின் தண்மதி அவள் அத்தியாயம் 7😎👇
ஓம் சாயிராம்.
திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.

எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

New Episodes Thread

Top Bottom