ஒளி 10 (Final)

S_Abirami

✍️
Writer
ரித்விகா, அஸ்வத் மற்றும் ஹரிதா வினயை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தனர். அந்த வீட்டைப் பார்த்து மலைத்து விட்டான் வினய். வீடா இல்லை அரண்மனையா என்ற சந்தேகம் அவன் மனதில் உழன்றது. அவன் திவ்யா வீட்டைப் பார்த்திருக்கிறான் ஆனால் இவ்ளோ பெரியதாக இல்லை. இப்பொழுது வினய்க்கு பயம் எழுந்தது. எங்க ஷங்கர் போல் ரித்விகாவின் குடும்பத்தாரும் தன் நிலையை மட்டம் தட்டிவிடுவார்களோ என்று.

வினய் அங்கேயே நிற்பதைப் பார்த்த ரித்விகா அவனிடம் சென்று,"என்னாச்சு வினய்?? எதுக்கு இங்கேயே நிக்கீறீங்க??"

"இல்லை ரித்விகா... ஒன்னுமில்லை." என்று தயங்கிக் கொண்டே கூறினான். அஸ்வத் வினய் நிற்பதைப் பார்த்து விட்டு அவனிடம் வந்து,"வினய் எதுவும் நீங்க நினைக்க வேண்டாம். உங்கள் பயம் எனக்கு புரியுது. உங்களோட மறியாதை கண்டிப்பா குறையாது. நாங்களும் அந்த ஷங்கர் மாதிரி இருப்போம்னு நீங்கப் பயப்பட வேண்டாம். தைரியாம வாங்க." என்று கூற வினய் ஆச்சரியமாக அஸ்வத்திடம்,"எப்படி நான் அதைத் தான் நினைத்தேனு உங்களுக்குத் தெரிந்தது??"

"வினய் உங்களது முகம் பளிங்கு போல நீங்க நினைப்பதைக் காட்டிவிட்டது. "

"அது வந்து!!."

"வினய் நீங்க உள்ள வாங்க. உங்களுக்கே புரியும். எங்களிடம் வசதி இருக்கலாம் ஆனால் எங்களுக்குப் பகட்டு இல்லை."

"அது எனக்குத் தெரியும். ரித்விகா ஆஃபிஸ்ல வேலை செய்கிறவர்களிடம் தன்மையோடு தான் பேசியிருக்கிறாள்."

"அப்புறம் எதுக்கு அண்ணா தயக்கம். உள்ள வாங்க. உங்க மனசு நோகும் படி கண்டிப்பா யாரும் பேச மாட்டாங்க. நீங்க என்னை நம்பி வரலாம்." என்று ஹரிதா கூற ஏனோ அவளைக் கண்டவுடன் அவனுக்கு தனக்கு இப்படி ஒரு தங்கை இல்லையே என்று தான் என்னத் தோன்றியது. அவள் பேசியது கொஞ்சம் தெம்பைத் தர ரித்விகாவைப் பார்த்தான். அவளுக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்ற அவர்களுடன் உள்ளே சென்றான்.

ராகவன்,பூர்ணிமா மற்றும் மரகதம் வினய் வருவதைப் பார்த்து எழுந்து நின்றனர். மரகதம் பாட்டி ரித்விகாவிடம் வந்து,"வந்ததும் ஃபோன் பண்ண மாட்டியா?? நாங்களாம் எவ்ளோ பயந்துட்டோம் தெரியுமா?? ஏன்டி இப்படிப் பண்ண??"

"எமரால்டு எனக்குத் தெரியும் உன் செல்லப் பேத்தி உனக்கு ஃபோன் பண்ணி விஷயத்தைச் சொல்லிட்டானு. அதனால் உன் வேஷம் கலைஞ்சு போச்சு."

"என்ன ஹரிதா இப்படி இவகிட்ட பல்ப் வாங்க வச்சுட்டியே!!!"

"அம்மா சும்மா இருங்க. பாருங்க மாப்பிள்ளை வந்திருக்கிறார். அவரை கவனிங்க." என்று ராகவன் சொல்லவும், பூர்ணிமா,"நீங்க வாங்கத் தம்பி அம்மா இப்படி தான். அவங்களுக்கு ரித்து கூட வம்பிழுக்காட்டி தூக்கமே வராது." என்று கூற அனைவரும் சிரித்தனர். வினய்க்கு இப்பொழுது தான் அவனின் எண்ணம் எவ்வளவு மடத்தனம் என்பது புரிந்தது.

"ஏன் இவ்ளோ லேட்?? அப்பவே ஃபோன் பண்ணீங்களே வந்துட்டேனு."

"அதுவா மாமா அங்க ஒரே லவ் ஸீனா ஓடுச்சு. அதான் வர லேட் ஆயிடுச்சு."

"அண்ணி நீ கொஞ்ச சும்மா இருக்கியா!! அதலாம் ஒன்னுமில்லை அப்பா. உங்க மாப்பிள்ளையிடம் நடந்த எல்லாத்தையும் விளக்கி கூட்டிட்டு வர நேரமாயிடுச்சு."

"சரி சரி. மாப்பிள்ளை ரித்து சொன்னா உங்களைப் பத்தி. எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். அவ வாழ்க்கை எங்களுக்கு ரொம்ப முக்கியம். அதனால் உங்களைப் பத்தி விசாரிக்கனும்னு நினைச்சேன். விசாரிக்கவும் செஞ்சேன். அந்த ஷங்கர் குடும்பம் உங்க வாழ்க்கையில வரதுக்கு முன்னாடி வரைக்கும் உங்க பேர்ல யாரும் தப்பு சொல்லலை. அப்புறம் தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. எங்க வீட்டு பொண்ணுங்க எப்பவும் தப்பு செய்யமாட்டங்கனு இன்னொரு வாட்டி புரிஞ்சுக்கிட்டேன்."

"ராகவா நம்ம வீட்டு பொண்ணுங்க தப்பு பண்ண மாட்டாங்க. ஆனால் இந்த தம்பி தப்பு பண்ணிட்டாரே.!!!" மரகதம் பாட்டி சொல்ல எல்லாரும் அவரை அதிர்ச்சியாகிப் பார்த்தனர்.

"என்ன மா சொல்றீங்க??"

"அப்புறம் இப்படி வந்து இவளிடம் மாட்டிக்கிட்டாரே!!! பாவம் மாப்பிள்ளை நீங்க!!" என்று கூற அனைவரும் சிரித்தனர். ரித்விகா பாட்டியை முறைத்துப் பார்த்து,"கிழவி உனக்குக் கொழுப்பு ஜாஸ்தி ஆகிடுச்சு. இரு பூரிகிட்ட சொல்லி உனக்கு சோத்தையே கண்ணுல காட்டதானு சொல்றேன்."

"ஏய் போடி போடி!! அவ இல்லாட்டி எனக்குச் சமைக்கத் தெரியாதா?? போடி உன் வேலையைப் பார்த்துக்கிட்டு."

"என்னைக்காவது ரித்துனு வருவல அன்னைக்கு இருக்கு உனக்கு. வினய் நான் ஃபிரஷ் ஆகிட்டு வந்துடுறேன் அது வரைக்கும் எல்லார்கிட்டேயும் பேசுங்க. இந்த எமரால்டுகிட்ட மட்டும் பேசாதிங்க." என்று பாட்டியிடம் ஆரம்பித்து வினயிடம் முடித்தாள்.

"என்னடா இப்படி சண்டைப் போட்டுகிறாங்கனு யோசிக்காதீங்க. கொஞ்ச நாளா அவ சோகமாவே இருந்தா அதான் அம்மா அவளைச் சீண்டி விட்டாங்க." என்று பூர்ணிமா கூறிக் கொண்டே வினய்க்கு சிற்றுண்டி தந்தார். வினய்க்கு இது எல்லாம் புதுசாக இருந்தது. இவர்களை எல்லாம் அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது.

"எனக்கு உங்க எல்லாரையும் ரொம்ப பிடிச்சிருக்கு. நான் இங்க வரதுக்கு முன்னாடி ரொம்ப பயந்தேன். பணக்காரங்கனாளே திமிரா இருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனால் நீங்க எல்லாரும் ரொம்ப இயல்பா பழகுவது எனக்கு பிடித்திருக்கிறது. நானும் உங்க குடும்பத்தில் ஒருத்தன் ஆக போகிறேன்னு நினைக்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு."

"தம்பி ஒருத்தர் வச்சு எல்லாரும் அப்படி தான்னு நீங்க நினைக்கக் கூடாது. எல்லா பணக்காரர்களும் ஷங்கர் போல இருக்க மாட்டாங்க. அவன்லாம் மனுஷனே கிடையாது. அவன் ஒரு பணப் பேய். பணத்துக்காகச் சொந்த தம்பியை நடுத் தெருவில் நிக்க வைத்தவன். அவனைலாம்..."

"அம்மா போதும் அவங்களைப் பத்தி பேச வேண்டாம். நாம இப்ப சந்தோஷமா இருக்கோம் அது போதும்." என்று ராகவன் கூற பாட்டி தலையாட்டி விட்டு அமைதியாகி விட்டார்.

"மாப்பிள்ளை உங்க அம்மா அப்பாகிட்ட நாளைக்கு நாங்க போய் பேசலாம்னு இருக்கோம் நீங்களும் வரீங்களா??" பூர்ணிமா கேட்க வினய் கோவத்துடன்,"அதலாம் ஒன்னும் வேண்டாம் மா. அவங்களுக்கு என்னை விட பணம் பெரிசா போச்சு. என்னைப் பத்தி தப்பா புகார் கொடுத்த போது கூட நான் இவ்ளோ வருத்தப்படலை ஆனால் அவங்களும் என் மேல இப்படி ஒரு புகார் குடுத்தாங்கனு கேட்கும் போது நான் வெறுத்துடேன். அதனால் நீங்க எதுவும் அவங்கிட்ட பேச வேண்டாம்."

"மாப்பிள்ளை என்ன இருந்தாலும் அங்க உங்க அம்மா அப்பா. அவங்ககிட்ட சொல்லாம எப்படி??"

"இல்ல மா ப்ளீஸ் வேண்டாம்."

"விடு பூர்ணி அவர் வேண்டாம்னு ஃபீள் பண்றாரு. பார்த்துக்கலாம்."

"சரி அண்ணா."

"அப்ப நம்ம நாளைக்கே போய் ஜோசியரைப் போய் பார்த்துட்டு வந்துரலாம். இரண்டு கல்யாணத்தையும் ஒன்னா வச்சுக்கலாம்."

"ஹப்பா பாட்டி இப்பவாவது தோணிச்சே உங்களுக்கு. வினய் நீங்க வந்த வேலை எனக்கும் என் ஹரிகுட்டிக்கும் கல்யாணம் நடக்கப் போகுது ரொம்ப சந்தோஷம்."

"அய்யோ சும்மா இருங்க அத்தான்."

"டேய் அண்ணா வலியாத. எமரால்டு அண்ணாக்கும் ஹரி அண்ணிக்கு மட்டும் இப்ப நடக்கட்டும். எங்களுக்கு வேண்டாம்."

"ஏன்டி இப்படி சொல்ற??"

"அவன் மட்டும் வருஷ கணக்கா லவ் பண்ணிட்டு கல்யாணம் பண்ணிக்குவான் நான் மட்டும் இப்பவே பண்ணிக்கணுமா?? அதலாம் முடியாது. நாங்க கொஞ்ச நாள் லவ் பண்ணிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்குறோம். என்ன வினய்??"

"ஆமா பாட்டி நான் இப்ப சும்மா ஏனோ தானோனு தான் வேலை பார்க்கிறேன். இனிமேல் அப்படி இருக்க முடியாதுல. கொஞ்சம் நானும் செட்டில் ஆகிடுறேன். அதுக்கு அப்புறம் நாங்க கல்யாணம் பண்ணிக்குறோம்."

"மாப்பிள்ளை இந்த ஒரு வாட்டி நீங்க சொல்றத நாங்க அக் அக்ஸப்ட் பண்ணிக்குறோம். ஆனால் ஒரு விஷயம் மட்டும் நான் சொல்லிடுறேன். இவ சொல்றதுக்குலாம் நீங்க ஆமா சாமி போட்டீங்க அவ்ளோதான். அதனால இப்பவே கண்டித்து வைங்க இவளை."

"ஏய் கிழவி உனக்கு அப்படி என்ன வைத்தெரிச்சல். வினய் நான் சொல்றத கேட்பார். உன்னை மாதிரி கிடையாது. நல்லா இருக்குற மனிஷன கெடுக்க பார்க்காத."

"போடி போடி." சந்தோஷமாகக் கழிந்தது அந்த நாள். வினய் நினைத்துப் பார்த்ததைவிட இவர்கள் இருந்தது மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

வினய் அன்று நாள் முழுவதும் அவர்களுடன் தான் இருந்தான். அவன் கிளம்பும் போது ரித்விகா அவன் கூடவே வந்தாள் வழி அனுப்பி வைக்க.

"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. கடவுள் எனக்கு ஏன் இவ்ளோ கஷ்டத்தை தந்தாருனு நான் நினைக்காத நாள் இல்லை. இன்னைக்குத் தான் புரிஞ்சது உன்ன மாதிரி ஒரு தேவதை என் வாழ்க்கைல வரதுக்கு தான் இவ்ளோ கஷ்டத்தை கடவுள் எனக்கு குடுத்துருக்காருனு. தாங்கஸ்டா என் லைஃப்ல வந்ததுக்கு."

"அய்யோ வினய் அப்படிலாம் ஒன்னுமில்லை. அப்புறம் நமக்குள்ள தாங்க்ஸ்லாம் சொல்லாதீங்க சரியா."

"சரிங்க மேடம்." என்று கூறிவிட்டு அக்கம் பக்கம் பார்த்துவிட்டு ரித்விகாவை அனைத்து அவள் கண்ணம் பிடித்து ஒரு முத்தம் தந்துவிட்டு ஓடி விட்டான். ரித்விகா சிரித்துக் கொண்டே உள்ளேச் சென்றாள்.

இப்பொழுது....

வினய் பேக்காரட் சொகுசு விடுதியில் ஒரு அறையின் பால்கனியில் நின்றிருந்தான். அவன் கையில் தன் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பார்த்து,"மூன்று வருடம் ஆகி விட்டது உன்னை முதலில் பார்த்து ரித்து. நமக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. முதலில் நான் வேற ஒரு கம்பெனியில் வேலைக்குப் போக போறேன் என்று சொன்னதும் ரித்துவின் முகம் மாறியது. அவள் என்னை T.M.சாஃப்ட்வேரிலே பணி செய்யச் சொன்னாள். ஆனால் எனக்கு அது சரியென்று படவில்லை. அதனால் மறுத்துவிட்டேன். அதுமட்டுமில்லாமல் திருமணம் ஆனதுடன் அவளை அவள் குடும்பத்திடம் இருந்து பிரித்துக் கூட்டிட்டு வந்துட்டேன். எல்லா பெண்களும் திருமணம் ஆனதுடன் அவர்கள் குடும்பத்தைப் பிரிந்து தான் வருகிறார்கள். அதனால் முதலில் எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் என் ரித்து கம்பெனியையும் பார்த்துக் கொண்டு வீட்டையும் பார்த்துக் கொண்டு ரொம்ப கஷடப்பட்டாள். பின் அவள் கர்பமாக இருந்த பொழுது அவளின் கஷ்டம் அதிகமானது. பின் தான் புரிந்தது நாம் தேவையில்லாமல் பயப்படுகிறோமென. பின் அவளுடன் நானும் அவர்கள் வீட்டிற்கேச் சென்றுவிட்டேன். ரித்துவும் அவள் குடும்பமும் என்னிடம் காட்டிய அன்பில் நான் முட்டாள் தனமாக நடந்து கொண்டது புரிந்தது. வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பது ஒன்றும் தப்பில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். இப்பொழுது அவளும் சந்தோஷமாக இருக்கிறாள். நானும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். இந்த சந்தோஷத்தை எனக்கு அளித்தது என்னுடைய பொண்டாட்டி. அவளை நான் இதுவரை ஒரு நாள் கூட பிரிந்து இருந்ததில்லை. ஆனால் இந்த பத்து நாட்கள் அவளைப் பிரிந்து இருந்து விட்டேன். எங்கள் கம்பெனி முன்னேற்றத்துக்காக நான் இங்கு வருவது அவசியம். எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து ஒரு மாதம் தான் ஆகிறது. அதனால் அவளால் இங்கு வர முடியவில்லை. இந்தப் பத்து நாள் எனக்கு நரகமாகத் தான் இருந்தது. நாளை அவளையும் என் பையனையும் பார்த்துவிடுவேன். இன்னும் சிறிது நேரத்தில் எனக்கு விமானம். நான் இப்பொழுது கிளம்ப வேண்டும்."

சென்னையில் வந்திறங்கிய வினய் விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தான். வந்தவன் அங்கிருந்த ரித்விகாவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். வேகமாக அவளிடம் வந்து,"என்ன செல்லம்?? நீ எதுக்கு வந்து?? அதான் அஸ்வத் வந்துருக்காருல??"

"என்னால நீ வீட்டுக்கு வர வரை வெயிட் பண்ண முடியாது. அதான் நானே வந்துட்டேன்."

"அச்சோ என்ன குட்டிமா நீ?? சரி வா போகலாம்." என்று கூறிவிட்டு கார் நின்ற இடத்துக்குச் சென்றனர். அங்கு அஸ்வத் நின்று கொண்டிருந்தான். இவர்கள் வந்தவுடன் எல்லாரும் வீட்டிற்குச் சென்றனர்.

வீட்டிற்குச் சென்றவுடன் அவர்கள் அறைக்குச் சென்றனர். வினய் தன் பையனை கையில் ஏந்தி கொஞ்சினான்.

"ம்க்கும் உன் பையன் மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரியுறான். நாங்களாம் தெரியலைல உனக்கு??"

"ஏய் குட்டிமா உன்னை எப்படி டா தெரியாம இருக்கும்?? அவனை ஒரு நிமிஷம் கொஞ்சிட்டு வந்துட்டேனா உன்ன இன்னைக்கு ஃபுல்லா கொஞ்சலாம்ல." என்று கூறிக் கொண்டே வந்து அவளை அனைத்தான். அவளும் அவன் நெஞ்சில் தலை வைத்து,"நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணிணேன் தெரியுமா??"

"நீயாவது இங்க எல்லார்கூடவும் இருந்த. என்னை நினைச்சு பாரு?? நான் மட்டும் தான் அங்கிருந்தேன். எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா??"

"சரி விடு வினய். அதான் இப்ப நீ வந்துட்டல. இனிமே என்னை விட்டுவிட்டு எங்கயும் போக கூடாது சரியா??"

"சரி குட்டிமா. என் இருண்ட வாழ்க்கைல ஒளியைத் தந்தவளை விட்டு நான் எங்கயும் போக மாட்டேன். சரியா." என்று கூற ரித்து அவன் கண்ணத்தில் முத்தம் தந்தாள்.

முற்றும்.
 

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
முப்பத்தி மூன்றாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 25😎👇

ஓம் சாயிராம்
எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை அன்புடன் பகிருங்கள்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 24😎👇

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 23😎👇

New Episodes Thread

Top Bottom