ஐயோ! அவள் வந்துவிட்டாள்!

Jensi rani

✍️
Writer
அத்தியாயம்-2
கார் தன் விசுவாசத்தை காட்டும் விதமாக 30நிமிடத்தில் அந்த பிரமாண்டமான பங்களாவின் முன்பு நின்றது.

சிவா காரை விட்டு இறங்கிய நொடி அவன் முன்பு புயலை போல் வந்து நின்றாள் அவனின் இதய ராணி இளையினி.

(இளையினி பார்வதிக்கும் செல்வராஜ்க்கும் பிறந்த மூன்றாவது மகள். இளையினியின் அப்பா செல்வராஜ் பரந்தாமனுடய நெருங்கிய நண்பர். இளையினிக்கு 3வயது இருக்கும் போது ஒரு கார் விபத்தில் செல்வராஜ் இறந்தார். இளையினிக்கு 5வயதில் இருந்தே தன் அன்பு அண்ணன் அபி மற்றும் தன் தாய் மாமன் பரந்தாமனே Hero. அதனாலயே சிவா எவ்வளவு தடுத்தும் தன் அண்ணன் படித்த அதே சட்ட படிப்பை எடுத்தாள் இளையினி. இளையினி சிறு வயதில் இருந்தே ரொம்ப சுட்டியாகவும் படிப்பில் மந்தமாகவே இருப்பாள்.அந்த வீட்டில் அவள் கட்டுபடும் ஒரே ஆள் சிவா. சிவாவின் கண்டிப்பாக இருக்கும் போது மட்டுமே அவள் இளையினியாக இருப்பாள். சிவா வீட்டில் இல்லாத போது அவள் வால் இல்ல குரங்காவே இருப்பாள். இளையினி அக்கா பூங்கொடியே தன் தங்கையின் சுட்டித்தனத்தை விரும்பி ரசிக்கும் ரசிகை. அதே நேரம் தன் மாமா மகன் சிவாவின் கண்டிப்புக்கும் ரசிகையே.இளையினி வளர வளர சிவாவின் காட்டும் கண்டிப்பு அவளின் உள் காதலாக மாறியது. அதே நேரம் பூங்கொடி மனதிலும் அதே காதல் சிவாவின் மேல் தேன்றியதே வீதி செய்த விளையாட்டாக முடிந்தது)

நான்கு வருடத்திற்கு முன்பு எந்த கண்கள் அவனை காதலோடு நோக்கியதே அதே கண்கள் இன்று அவனை பகைவனை காணும் கோபத்துடன் நோக்கியது.

சிவாவை தொடர்ந்து இறங்கிய தன் உடன்பிறந்த அண்ணானான அபியை துரோகியை பார்க்கும் அருவருப்பான பார்வை பார்த்தால் இளையினி.

இளையினிக்கு பின்னால் நின்ற அவளின் தாய் பார்வதி தன் மூத்த மகள் பூங்கொடி இறந்த நினைவில் கதறி அழுத தன் மனதை தன் இளைய மகள் நிலை கருதி மற்றும் தன் மகன் மீது உள்ள கோபத்தை முன்னிருந்தி "இளா அந்த பச்சை துரோகிகளிடம் உனக்கு என்ன வீண் பேச்சு உள்ளே வா "என்றார்.

தன் அன்பு தங்கையின் பார்வை மற்றும் தன் தாயின் வார்த்தைகளை கேட்ட அபிக்கே" தன் மனதை ஆயிரம் போர் வீரர்கள் தம் போர் வாளை கொண்டு தன் மனதை குத்தி கிழித்ததாக உணர்ந்தான் ".

அங்கு நின்ற சிவாவிற்கோ தன் தாயிற்கு நிகரான இடத்தில் வைத்த தன் அத்தையின் பேச்சு மற்றும் தன் மனதை 24 வருடம் ஆட்சி செய்த தன் மனைவியின் பார்வை மற்றும் இந்த உலகமே தன்னை ஒரு குற்றவாளி என்று சொன்ன போது தன் நண்பன் ஒரு குற்றவாளி இல்லை என்று சொன்ன அபியின் மனதை புண்படுத்திய வார்த்தைகளை கேட்டு தன் மனதின் உள் கொதித்து கொண்டு இருந்ததான். அதை அவன் தன் பற்களை கடித்த விதத்தைஉணர்ந்த அபி சிவாவின் கைகளை இருக்கி பிடித்து அவனை ஒரு நிலை படுத்தினான்.

"உண்மை ஒரு நாள் வெல்லும்" என்ற கூற்றை உணர்ந்து கொண்ட அபி தன் மனதை கட்டுபடுத்தி சிவாவை பார்த்து " சிவா நாம் நம்முடைய நேரத்தை வீணாக்காமல் உள்ளே போலாம். சட்டமே உன்னை குற்றவாளி இல்லை என்று சொன்ன பிறகு யார் என்ன சொன்ன நமக்கு என்ன " என்றான்.

அப்போது கோபத்துடன் அபியை பார்த்த இளையினியே "நிங்க ரெண்டு பேரும் சட்டத்துக்கு முன்பு இருந்து தப்பிச்சி இருக்கலாம் ஆனால் நியாயம் தர்மம் அதோடு இந்த இளையினிகிட்ட இருந்து தப்பிக்க முடியாது தப்பிக்கவும் விட மாட்டேன்" என்றாள்.

சிவா கோபத்துடன் இளையினியின் தாடையை பிடித்து இழுத்து "நீ சொல்ற நியாயம் தர்மம் அதைவிட என் நண்பன் என்னோடு இருக்குற வர உன்னால என்ன ஒன்னும் செய்ய முடியாது" என்றான் உதட்டில் ஒரு சின்ன புன்னகையுடன்.

அங்கு இருந்த எல்லோரின் மனநிலையை கோபம் ஆட்சி செய்ய அதில் இருந்த இருவரான மதன் மட்டும் அவன் அம்மா சித்ரா இருவர்க்கு மட்டும் அந்த கோபத்தை மேலும் பகையாக்க வேண்டும் என்ற மனநிலையில் இருந்தனர்.

( அவள் வருவாள் )
 
சூப்பர் சிஸ்...
குட்டி எபி தான்... நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கிறது சிஸ்... அடுத்த பதிவில் சரிபார்த்து விட்டு பதிவிடுங்கள் சிஸ்..
கதை அருமையாக நகர்கிறது...
 

Jensi rani

✍️
Writer
சூப்பர் சிஸ்...
குட்டி எபி தான்... நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கிறது சிஸ்... அடுத்த பதிவில் சரிபார்த்து விட்டு பதிவிடுங்கள் சிஸ்..
கதை அருமையாக நகர்கிறது...
நன்றி சிஸ்... அடுத்த முறை சரி பார்த்து பதிவு செய்கிறேன்.
 

Latest profile posts

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 🤩
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 7 😎👇

New Episodes Thread

Top Bottom