• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

எபிலாக்

Viswadevi

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் இசைக்காதலி என்னைக் காதலி கதையின் இறுதிப்பதிவுடன் வந்து விட்டேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். பரிசை வெல்லுங்கள்.

IMG-20210430-WA0029.jpg



எபிலாக்

ஐந்து வருடங்களுக்குப் பிறகு…

அந்த வீடே மிகப் பரபரப்பாக இருந்தது. நிர்மலா, தனது பேரன்,பேத்திகளின் பின்னே ஓடிக் கொண்டிருந்தாள். அப்படி பொதுவாக சொல்லிட முடியாது.அம்ரு, அபியின் மைந்தன் அபூர்வன் நான்கு
வயது... அவன் மட்டும் தான் நிர்மலாவை ஓட வைத்துக் கொண்டிருந்தான்.

கௌதம், ஆராதனாவின் மகள் ஆரபி… தத்தக்கா, பித்தக்கா என நடக்கும் ஒரு வயதான சிட்டு... அருண், யாழினியின் குழந்தை சுகாஷினி, அபூர்வனை விட ஆறு மாதங்களே பெரியவள், அவன் செய்வதைப் பார்த்து அவர்களும் ஓட… நிர்மலாவால் சமாளிக்க முடியவில்லை…

"இங்க குடுங்க மா… நான் பார்த்து கொள்கிறேன்." என்று யாழினி வர...

அப்பாடா என்று பெருமூச்சு விட்டுக் கொண்ட நிர்மலா, " சரி டா… நான் நாளைய பங்ஷனுக்கு போட்டுட்டு போற ட்ரெஸ்ஸெல்லாம் சரியா இருக்கா என்று செக் பண்ணி எடுத்து வைக்குறேன். இந்த ஆரு கழுதை எனக்கு உதவி செய்யுறேன் என்று அவ மாமியார் கிட்ட சொல்லிட்டு வந்து எங்கே போனான்னே தெரியவில்லை.

நான் பெத்ததும் சரி கிடையாது. வந்த மருமகளும் சரி கிடையாது. நானே நாளைய விழா பரபரப்புல டென்ஷனா இருக்கேன். இந்த டைம்ல டூர் அவசியமா… இல்லை போனோமா… வந்தோமோ என வர வேண்டியது தானே… பத்து நாளாச்சு… நாளைக்கு காலையில தான் வருவாங்களாம்… வந்து ரெஸ்ட் எடுப்பாங்களா? இல்லை ட்ரெஸ் ஃபிட்டிங் பார்ப்பாங்களா? எனக்கு ஒன்றும் புரியவில்லை." என்று புலம்ப…

அவ்வளவு நேரமும் எங்கிருந்தாலோ தெரியவில்லை. தன் அண்ணியை பேசவும் அங்கு ஆஜர் ஆகி விட்டாள் ஆராதனா…" ஏன் மா அண்ணி என்ன பண்ணாங்க… அண்ணா தான் சர்ப்ரைஸா டூர் ஏற்பாடு பண்ணியது. அண்ணனை திட்டாமல், அண்ணியை திட்டுறீங்க‌...திஸ் இஸ் டூ மச் மா…" என சண்டைக்கு நிக்க…

"அதானே… ஆருவாவது, அவங்க அண்ணியை விட்டுக் கொடுக்கிறதாவது. எங்க அண்ணனை எவ்வளவு வேணாலும் திட்டலாம்… ஆனா அம்ருவை மட்டும் எதுவும் சொல்லக் கூடாது‌. எங்க அண்ணா தான் டூருக்கு சர்ப்ரைஸா கூட்டிட்டு போனாங்க... பட் ஃபைவ் டேஸ் தான் பிளான் பண்ணாங்க… அதை எக்ஸ்டென் பண்ணதற்கு காரணம் அம்ருவா தான் இருக்கணும். நீ இப்ப எதுக்கு அம்மாக் கிட்ட கோபப்படுற…" நிர்மலாவுக்கு சப்போர்ட் பண்ணிக் கொண்டு யாழினி வந்தாள்.

ஆம் யாழினி இந்த வீட்டிற்கு இன்னொரு மகள் தான்... வெளிநாட்டில் வேலை முடிந்து‍ இருவரும் இந்தியா வந்தவுடன், யாழினியை வளைகாப்பு போட்டு தனியாக இருக்க வேண்டாமென நிர்மலா இந்த வீட்டிற்கு அழைத்து வந்து விட்டாள். குழந்தை பேறு நான் தான் பார்ப்பேன் என்றவள், தயங்கிய அருணை திட்டி சம்மதிக்க வைத்தனர். அதற்கு பிறகு நிர்மலா தான் யாழினிக்கு அம்மாவாக இருந்தார். எப்பொழுதெல்லாம் சுகாஷினியைப் பார்க்க வேண்டுமோ, உடனே போய் பார்த்து விட்டு வருவார். அவருக்கு முடியவில்லை என்றால், யாழினியையும், சுகாஷினியையும் இங்கு வரச் சொல்லுவார். அப்படி வந்தால் இரண்டு நாள் கழித்து தங்க வைத்து தான் அனுப்புவார். பிறகு யாழினியும், குழந்தையும் இல்லாமல் அருணுக்கு தான் திண்டாட்டமாக போய் விட்டது.

இதே போல் அம்ரு மாசமாகி விட, அவளுக்கு யாழினி அம்மாவாக இருந்து பிள்ளை பேரு, முதற்கொண்டு எல்லாமே பார்த்தாள்.

ஆராதனா தன் தவறை உணர்ந்த பிறகு, அண்ணியிடம் இன்னும் நெருங்கி விட்டாள். எதுவாக இருந்தாலும் அம்ருவிடம் தான் பகிர்ந்து கொள்வாள். கௌதமை காதலித்ததைக் கூட முதலில் அம்ருவிடம் தான் கூறினாள். அம்ருதா தான் அபிநயனிடம் கூறி இருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்தாள். அவளும் நாளைய விழாவிற்காகத் தான் அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறாள்.

நாளைய விழாவின் முக்கிய கதாநாயகன், கதாநாயகி தான் இன்னும் வரவில்லை.நாளை காலையில் தான் வருவார்கள்.

அதற்குத் தான் நிர்மலா சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள். வழக்கம் போல ராஜன் அமைதியாக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

இவர்கள் யாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்களோ,அவர்கள் இருவரும் இப்பொழுது மொரிசியஸ் தீவில் இருந்து கிளம்புவதற்கு மனமே இல்லாமல் இருந்தார்கள்.

"ராகா ஒரு நிமிஷம் இரு வரேன்." என்ற அபி, அவளை அந்த கடற்கரையில் அமர வைத்து விட்டு அவன் மட்டும் அந்த குடிலுக்குச் சென்று கையில் எதையோ எடுத்து வந்தான்.

அவன் எடுத்து வந்ததைப் பார்த்த அம்ருவோ, ஆச்சரியமாகப் பார்த்து விழிகளை விரித்தவள்," ஐ! அபு… இது… இந்த ஃபைல் உங்க கிட்ட தான் இருக்கா… அண்ணிக் கிட்ட கேட்டால் ஒழுங்காவே பதில் சொல்லலை… உங்க கூட கூட்டு சேர்ந்துக் கிட்டாங்களா? போய் அவங்களை கவனிச்சுக்கிறேன்."

"ராகா டியர்… நீ பழசெல்லாம் மறந்து இருந்தாலும், இங்க வந்தப் பிறகு,நம் காதலை உன்னை மீறி உணர்ந்து இருந்த… அதான் அந்த இடத்திலே உன்னோடு சேர்ந்து இந்த ஃபைலைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப் பட்டேன். அதான் யாழுக்கிட்ட சொல்ல வேண்டாம் என்று தடுத்து வைத்திருந்தேன்."

அம்ருவோ கண்கள் கலங்க," சாரி அபு...உங்கள ரொம்ப படுத்தி எடுத்துட்டேன்ல...அதனால் தான் இத்தனை வருஷமா நீங்க என்னை இங்க அழைச்சிட்டு வராமல் இருந்தீங்களா? ஒவ்வொரு தடவை டூர் போகும் போது இங்கே தான் அழைச்சுட்டு வருவீங்க என்று ரொம்ப எதிர்ப்பார்ப்பேன். அப்புறம் நீங்க வேற எடத்துக்கு அழைச்சிட்டு போகவும் ஏமாற்றமாக இருக்கும். உங்க கிட்ட அஞ்சு வருஷமா இதைப் பற்றி கேட்போமா என்று நினைப்பேன். அப்புறம் பயமா இருக்கும் விட்டு விடுவேன்."

" லூசு… இந்த தீவை உனக்குஷ கிஃப்டா வாங்கிக் கொடுத்துட்டு தான் வரணும் என்று காத்திருந்தேன். உன் மேல கோவமா இருந்தா, நான் ஏன் உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேன். உனக்கு கண் முன் நடந்த ஆக்ஸிடென்டால, அதிர்ச்சியில் சில விஷயங்களை மூளை ஏத்துக்க மறந்துருச்சு... ஆனால் மறந்தவ முழுசா என்னை மறந்து இருந்திருக்க வேண்டியது தானே… அதை விட்டுவிட்டு கரெக்டா நான் உன்னிடம் சண்டைப் போட்டதை மட்டும் ஞாபகம் வச்சுக்கிட்டு என்ன எவ்வளவு பாடுபடுத்துன? அதுக்கு மட்டும் உனக்கு பனிஷ்மென்ட் உண்டு. நான் வாழும் காலம் முழுமைக்கும் உன்னை பனிஷ் பண்ணுவேன்." என்று கண்ணடித்துக் கொண்டே கூற…

" ப்ச் சும்மா இருங்க அபு." என வெட்கப் பட்டுக் கொண்டே சிணுங்கினாள்

" ஐயோ‌! வெட்கப்படாதே செல்லம்... அப்புறம் கிளம்ப லேட் ஆயிடும். வா முதலில் இதைப் பார்ப்போம்." என்ற அபி, அம்ருவை தன் கைவளைவில் வைத்துக் கொண்டு அந்த ஃபைலை புரட்டினான்.

ஒவ்வொரு பக்கமாக அபி புரட்டிப் பார்த்துக் கொண்டே வந்தான். எந்த அளவுக்கு அம்ரு தன் மேல் பைத்தியமாக இருந்திருக்கிறாள், என்பதை உணர்ந்தவன் அவ்வபோது அவளுக்கு சில பல பரிசுகளை வழங்கிக் கொண்டே வந்தான். அதை முழுவதுமாக பார்த்து முடித்தவன், "அடியே... என்னை இவ்வளவு திட்டி இருக்க... உன்னை சும்மா விடமாட்டேன்…" என அம்ருவை துரத்த…

அவள் தான் ஏற்கனவே உஷாராகி அவனிடமிருந்து மெல்ல நகர்ந்தவள், பிறகு ஓடிக் கொண்டே, "உண்மை தானே ...அப்ப நீங்க உங்க தங்கைக்கு தானே சப்போர்ட் செய்தீர்கள்…" என்று கத்தியவள் குடிலுக்குள் நுழைந்துக் கொண்டாள். அவள் பின்னே வந்தவன், அவளை இறுக்கி அணைத்து, " ஐ லவ் யூ சோ மச் ராகா… " என விடாமல் பிதற்ற...

"அபு… ஃப்ளைடுக்கு டைம் ஆகிடும். இது நம்மோட தீவு தானே… இனி நாம அடிக்கடி வரலாம்... இப்போ வாங்க கிளம்பலாம்" என இழுத்துக் கொண்டு ஒரு வழியாக கிளம்பினாள்.

இந்தியா வந்தவர்கள் சற்று நேரம் மட்டுமே ஓய்வு எடுக்க முடிந்தது. பிறகு மாலை நேர விழாவிற்கு இருவரும் தயாராகிக் கொண்டிருந்தனர்.

அபிக்கு முன்பே கிளம்பி விட்ட அம்ரு அறையிலிருந்து வெளியே வந்து, ஹாலில் அபிக்காக காத்திருந்தாள்‌. அவள் அமர்ந்து இருந்த ஸோபாவிற்கு எதிரே மாட்டியிருந்த புகைப்படத்தை பார்த்தவுடன் அவளுக்கு சிரிப்பு வந்தது.

அது ஆராதனாவிற்கு பரிசாக அம்ரு வரைந்த ஓவியம்… ஆருவும், அபியும் இருக்குமாறு இருந்த ஓவியம். அன்று பிறந்தநாளில் தர்ஷனா தூக்கி போட்டு உடைத்து விட, அதை அபி பத்திரமாக எடுத்து வைத்து இருந்தவன், அம்ருவிற்கு பழசெல்லாம் ஞாபகம் வந்தவுடன் பெரிது படுத்தி இங்கு மாட்டி விட்டான். ஆராதனாவோ, அண்ணா… இது எனக்கு அண்ணி கிஃப்டா கொடுத்தது. எனக்கு தாங்க என்று எவ்வளவோ, கேட்டும் குடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டான்.

ஆரு முகத்தை தூக்கி வைத்து கொள்ள, அம்ரு வேறு வரைந்து அவளுக்கு கொடுத்து விட்டாள்.

"ஏன் அபி … இப்படி அவளை வம்பு பண்றீங்க ?" என்று கேட்டா…

"இந்த ஓவியம் எனக்கு மிகவும் முக்கியம் டா… இதைப் பார்க்கும் போதெல்லாம், நீ என் மேலே வைத்த காதல் தான் தெரியும். என்னை எந்த அளவுக்கு நேசித்திருந்தால், இப்படி என்னை தத்ரூபமாக வரைந்திருப்ப… அதான் எனக்கு இது ஸ்பெஷல் என்றுக் கூறி விட்டான்."அதை நினைத்தவள் தான் சிரித்துக் கொண்டிருந்தாள்.

சினிமா துறையினருக்கான தேசிய விருது வழங்கும் விழா… சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அபிக்கும், சிறந்த பின்னணிபாடகன், பாடகிக்கான விருது அவர்கள் இருவருக்கும் கிடைக்க… அதை கொண்டாடுவதற்காக தான் மொரீஷியஸ் தீவிற்கு அம்ருவை அழைத்துச் சென்றான்.

இதற்காகவே காத்துக் கொண்டிருந்தான் அபிநயன், எப்படியும் அம்ருவிற்கு இருக்கும் திறமைக்கு, அவளுக்கு சீக்கிரமே இந்த விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தான். அதற்கு பரிசு அளிக்கவே அபி அவளை மொரிசியஸ் தீவிற்கு அழைத்துச் சென்று, இவர்கள் வாழ்க்கையை ஆரம்பித்த சிறு தீவை அவளுக்கு வாங்கி பரிசளித்திருந்தான்.

குழந்தை பிறந்த ஒரு வருடம் வீட்டில் தான் இருந்தாள் அம்ருதா. அதற்கு பிறகு சினிமா துறையில் நுழைந்து விட்டாள் . அதற்குப் பிறகு அவளுக்கு ஏறுமுகம் தான்… அவள் தேன் குரலில் பாடும் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் தான்...

இதோ,இன்று விழாவிற்கு தயாராகி இருவரும் கீழே இறங்கி வந்தனர்.

இந்த விழாவிற்காகவே அவளது தோழி ஸ்வேதா அவளது கணவருடன் கனடாவிலிருந்து வந்திருக்கிறாள். அவர்களும் இவர்கள் வீட்டில் தான் தங்கியிருந்தனர். காலையிலே கௌதம் தன் அப்பாவையும்‍, அம்மாவையும் அழைத்து வந்திருக்க… இவர்கள் எல்லோரும் மூன்று கார்களில், வீட்டில் இருந்து கிளம்பி விழா நடக்கும் இடத்திற்கு சென்றனர். அபூர்வன் இவ்வளவு நாட்கள், பெற்றோரைப் பிரிந்து இருந்ததால் அவர்களை விட்டு நகரவே மாட்டேன் என்று இருந்தான்.

ஒரு வழியாக விழா நடக்கும் இடத்திற்கு சென்றவர்கள்,இவர்களுக்கு ஒதுக்கிய இடங்களில் அமர்ந்து இருந்தனர். ஸ்வேதா,அம்ரு,ஆரா மூவரும் ஒன்றாக அமர்ந்து தங்களுக்குள்ளே கிசுகிசுத்துக்கோண்டே இருந்தனர்.இந்த ஐந்து வருடக் காலத்தில் நெருங்கிப் பழகியிருந்தனர்.மூவரும், அவ்வப்போது கான்பிரன்ஸ் கால் போட்டு பேசுவார்கள்.

விழா மேடையில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் என ஒவ்வொருவராக அழைத்து விருதுக் கொடுத்துக் கொண்டிருந்தனர். இடையிடையே ஆடல்,பாடல் நிகழ்ச்சி வேறு நடைப்பெற்றுக்கொண்டிருந்தது.

"அடுத்ததாக, சிறந்த பின்னணி பாடகர், பாடகி விருது கோஸ் டூ அபிநயன் அன்ட் மிஸஸ் அம்ருதவர்ஷினி அபிநயன்…" என காம்ப்பியர் அழைக்க…

அபி, அம்ருவின் கையை ஸ்டைலாக பற்றிக் கொண்டு மேடையேறினான்.

கருநீல நிறத்தில் இருவரும் ஆடை அணிந்திருக்க, அவர்கள் இருவரையும் பார்த்த எல்லோரும் அவர்களின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து வியந்தனர். இருவருக்கும் விருதை வழங்க, எல்லையில்லாத மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டனர்.

முதலில் அபியைக் கேள்விக் கேட்க… புன்முறுவலுடன் எல்லாவற்றுக்கும் பதில் அளித்தான் அபிநயன்.

அதற்குப் பிறகு அம்ருவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன… "சொல்லுங்க மிஸஸ் அம்ருதவர்ஷினி அபிநயன்… நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பாடிய பாடல் தேசிய விருதுக்கு செலக்ட் ஆகி இருக்கு… இன்னைக்கு நீங்க எப்படி ஃபீல் பண்றீங்க…" என காம்பியர் வினவ…

" என்னுடைய சின்ன வயசுல இருந்தே சினிமாவுல பாடணும் என்று விருப்பம். அப்புறம் அபியோட இசையில் பாட வேண்டும் என்பது கனவு தான்." என்றவள் அபியைப் பார்த்து ஒரு புன்முறுவலை சிந்தி விட்டு மீண்டும் ஆரம்பித்தாள், " அவரது இசை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் அவரது ஸ்டுடியோவில் ஒரு தடவையாவது பார்க்க வேண்டும் என்பது என்னுடைய வாழ்நாள் லட்சியம். என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் சேலஞ்ச் பண்ணிருக்கேன். அவரோட சேர்ந்து பாடுவேன் என்று நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. இன்னைக்கு அவரோட இசையில், அவருடன் சேர்ந்து பாடி, அதற்கு தேசிய விருதும் கிடைத்தது இருக்கிறது என்பதை நம்பவே முடியலை. இது மிக மிக முக்கியமான தருணம் எனக்கு...தேங்க் காட்… அப்புறம் இந்த விருது, எனக்கு சப்போர்ட்டா இருந்த என் கணவருக்கும், என்னோட ஃபேமிலிக்கும், என்னை விட்டு பிரிந்தாலும் என்னைச் சுற்றியே இருக்கும் என்னுடைய பெற்றோருக்கும் சமர்ப்பணம்…" என உணர்ச்சிவசப்பட்டுக் கண்கள் கலங்க, அதற்கு நேர்மாறாக முகமெல்லாம் புன்னகையுடன் கூறினாள்.

"சூப்பர்… மிஸஸ் அம்ருதவர்ஷினி… இப்போ, அதே மகிழ்ச்சியுடன் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எங்களுக்காக ஒரு பாடல் பாடணும்…" என...

அரங்கம் மீண்டும் ஒருமுறை ஆர்ப்பாட்டம் செய்ய… அம்ரு அபியை பார்த்தாள். அபி கண்மூடி சம்மதம் சொல்ல… இருவரும் சேர்ந்து பாட ஆரம்பித்தனர்.

"நீ தானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ" என இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே பாடி முடித்தனர்.

இருவரையும் ஆசீர்வதிப்பது போல் மீண்டும் அரங்கத்தில் கரகோஷம் ஒலித்தது. எப்போதும் இவர்கள் இருவரும் இதே மகிழ்ச்சியுடனும்,காதலுடனும் இருப்பார்கள் என்று எண்ணி நாமும் விடைப்பெறுவோம்.

முற்றும்…..
 

Baby

Active member
Member
ஆனாலும் இந்த அபிக்கு இவ்ளோ ஆகாது..

ஆத்தி அம்ரூக்கு ஆரா இவ்ளோ சப்போர்ட்டா...

நம்ப முடியவில்லை. வில்லை.... வில்லை😂😂😂😂😂😂
 

Lakshmi

Well-known member
Member
அருமையான கதை.அபிநயன் அம்ரு சூப்பரான ஜோடி.நிர்மலாம்மா கதாபாத்திரம் அருமை.ஆராதனா கொஞ்சம் அப்பாவி அதனால் தான் தர்ஷாணாவைப் பற்றி தெரியாமல் இருந்து இருக்கிறாள்.கௌதம் நல்ல நண்பன் மொத்தத்தில் விறுவிறுப்பாக சென்றது கதை.
 

Viswadevi

✍️
Writer
ஆனாலும் இந்த அபிக்கு இவ்ளோ ஆகாது..

ஆத்தி அம்ரூக்கு ஆரா இவ்ளோ சப்போர்ட்டா...

நம்ப முடியவில்லை. வில்லை.... வில்லை😂😂😂😂😂😂
நம்பனும் சிஸ். நம்பிக்கை தான் வாழ்க்கை. ரொம்ப நன்றி சிஸ்.
 

Viswadevi

✍️
Writer
அருமையான கதை.அபிநயன் அம்ரு சூப்பரான ஜோடி.நிர்மலாம்மா கதாபாத்திரம் அருமை.ஆராதனா கொஞ்சம் அப்பாவி அதனால் தான் தர்ஷாணாவைப் பற்றி தெரியாமல் இருந்து இருக்கிறாள்.கௌதம் நல்ல நண்பன் மொத்தத்தில் விறுவிறுப்பாக சென்றது கதை.
Thank you so much sis ❤️
 

பிரிய நிலா

Well-known member
Member
கதை தொடங்கிட்டு இடையில் படிக்க முடியல. ஆனாலும் கதையின் தலைப்பு படிக்க தூண்டிட்டு இருந்துச்சு.. இன்னைக்கு தான் முடிச்சேன்.. சூப்பர் சிஸ்...
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom