• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என் சிந்தனை_💬🗯️💭Anne Frank's Diary_டியர் கிட்டி🖊️

Nithya Mariappan

✍️
Writer
📝Anne Frank's Diary _ டியர் கிட்டி🖊️
உங்கள்ல யாருக்குலாம் டைரி எழுதப் பிடிக்கும்? எனக்கு அது ரொம்ப பிடிச்ச விசயம்... அந்தப் பழக்கம் எப்போ ஆரம்பிச்சுதுனு எனக்கு நியாபகம் இல்ல... ஆனா டைரினு சொன்னதும் எனக்கு நியாபகம் வர்ற பெயர் ஆன் ஃப்ராங்க்... நாஜிகளோட வதைமுகாம்ல சிக்கி இறந்த எண்ணற்ற யூதர்கள்ல ஆன் ஃப்ராங்கும் ஒருத்தர்... மிடில் ஸ்கூல் படிக்கிறப்ப ஆன் ஃப்ராங்கோட டைரி குறிப்பு இங்க்லீஸ்ல லெசனா வந்தப்ப டைரி மேல தனி ஈர்ப்பு வந்துச்சு (90s Kidsகு நியாபகம் இருக்கும்😉)...

ஆன் ஃப்ராங்கோட டைரியோட ஒவ்வொரு நாள்குறிப்பும் ஆரம்பிக்கிற விதம் "Dear Kitty"... Kittyங்கிறது அவளோட டைரிக்கு அந்தப் பொண்ணு வச்ச நேம்... சரி, ஆன் ஃப்ராங்க் வெறும் டைரி மட்டும் தான் எழுனுனாங்களானு கேட்டா இல்லனு தான் பதில் வரும்... ஏன்னா அந்தப் பொண்ணு சில கதைகளையும் எழுதி வச்சிருந்தாங்களாம்... ஒன்னு ரெண்டு இல்ல, கிட்டத்தட்ட 34 ஃபேரி டேல்ஸ்... இதை எழுதுறப்போ அந்தப் பொண்ணுக்கு என்ன வயசு இருக்கும்னு நினைக்கிறீங்க? வெறும் பதிமூனு வயசு தான்...

சரி குட்டிப்பொண்ணு ஃபேரி டேல்ஸ் படிச்சு வளர்ந்ததால அதை எழுதிருக்கலாம்னு நினைக்கலாம்... பட் அந்தப்பொண்ணு ஒரு நாவலும் எழுதிருக்காங்க... அதோட நேம் "Cady's life", இதை பெரியளவுல எழுதாம சில சேப்டர்ஸ்ல முடிச்சிட்டாங்க....



ஆன் ஃப்ராங்க்​




அதுக்கு அப்புறம் அவங்க படிச்ச புத்தகங்கள்ல அவங்களை பாதிச்ச அழகான வார்த்தைகளை மட்டும் வச்சு ஒரு புக் எழுதுனாங்க... அதோட நேம் 'The beautiful sentences'...

கடைசியா எழுதுனது 'The secret annex'... Annexனா மெயின் பில்டிங்கோட இணைக்கப்பட்ட இன்னொரு பில்டிங்னு அர்த்தம்... எல்லாம் சரி, அது என்ன சீக்ரேட்?

அங்க தான் விசயமே! இவ்ளோ நேரம் நம்ம எழுதுனாங்க எழுதுனாங்கனு நீளமா சொன்ன எல்லாத்தையும் அந்தப் பொண்ணு எழுதுனது எப்போ தெரியுமா? ஹிட்லரோட ஆளுமைக்கு கீழ நெதர்லாந்து இருந்தப்போ யூதர்களான ஆன் ஃப்ராங்கோட ஃபேமிலி நாஜிக்களுக்குப் பயந்து ரகசிய இடத்துல மறைஞ்சிருந்தப்போ எழுதுனது தான் இந்த டைரிகுறிப்புகள், ஃபேரி டேல்ஸ், நாவல் எல்லாமே!

எல்லாரையும் போல பிறந்தோம் வாழ்ந்தோம்னு சராசரி பொண்ணா நான் வாழ விரும்பலனு சொன்ன ஆன் ஃப்ராங்குக்கு ரைட்டராவோ ஜர்னலிஸ்டாவோ வரணும்னு ஆசையாம்... ஆனா எந்த எட்டப்பனோ அவங்க மறைஞ்சிருக்குற விசயத்தை போட்டுக்குடுத்துட்டான்... சோ அவங்க முழு குடும்பமும் சிறை பிடிக்கப்பட்டாங்க...

அந்தப் பொண்ணும் அவங்க சகோதரியும் அவங்க அம்மாவோட சேர்த்து கேஸ் சேம்பருக்கு பதிலா நாஜிக்களோட முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டாங்க... அங்க டைபஸ் (typhus) என்ற கொள்ளைநோயால பாதிக்கப்பட்டு ஆன் ஃப்ராங்கும் அவங்க சிஸ்டர் மர்காட் ஃப்ராங்கும் இறந்து போயிட்டாங்க... அந்தப் பொண்ணு இறந்து சில வருடங்கள் கழிச்சு ஹிட்லரோட சர்வாதிகாரம் முடிவுக்கு வந்த பிறகு முகாம்ல இருந்து விடுதலை ஆன ஆன் ஃப்ராங்கோட அப்பா அவங்களோட டைரிய புக்கா வெளியிட்டாராம்!

இக்கட்டான சூழல்ல மாட்டியிருக்கிறப்போ கூட தன்னோட மனவுணர்வுகளை தவறாம டைரியில பதிவு பண்ணுன ஆன் ஃப்ராங்கால தான் செகண்ட் வேர்ட் வார் காலகட்டத்துல யூதர்கள் நாஜிக்களால எந்தளவுக்குக் கொடுமைப்படுத்தப் பட்டாங்கனு உலகத்துக்கு தெரியவந்துச்சு...

எது எப்படியோ இந்த உலகம் ஒரு நல்ல எழுத்தாளரை தைரியமான பத்திரிக்கையாளரை இழந்துடுச்சு... எந்த விதமான சூழ்நிலையும் நம்ம கனவுக்குத் தடை போட முடியாதுங்கிறதுக்கு ஆன் ஃப்ராங்கோட டைரி குறிப்புகளும், கதை எழுதிய முயற்சிகளும் சிறந்த உதாரணம்.

இதை எதுக்கு இப்போ சொல்லுறேன் தெரியுமா? இப்போ நம்மளும் பேண்டமிக் சிச்சுவேசன்ல ஹௌஸ் அரெஸ்ட்ல தான் இருக்கோம்... ஆனா இந்த பேண்டமிக்கால நம்ம கனவுகளை, எதிர்காலம் குறித்த திட்டமிடலை தடுத்து நிறுத்த முடியாது... So Be positive, இதுவும் கடந்து போகும்!

இன்னைக்கு ஆன் ஃப்ராங்க் பத்தி பேசுறதுக்கு முக்கியமான காரணம் இருக்கு... ஏன்னா ஜூன் 12 1929 அன்னிக்கு தான் ஆன் ஃப்ராங்க் ஜெர்மனில இருக்குற ஃப்ராங்க்ஃபர்ட்ல பிறந்தாங்க... நாளைக்கு அவங்களோட பிறந்தநாள்... அதான் போஸ்ட் பண்ணுனேன்...

மரணங்கள் மலிந்தது
மனமும் மரத்தது
பயத்தின் துகள்கள்
அணுக்களில் நிறைந்தது
ஆயினும் நம்பிக்கை
ஆழியின் அலையாய்
எனக்குள் எழுகிறது
மனம் சொல்கிறது
இதுவும் கடந்து போகுமென

 

மனோஜா

✍️
Writer
நான் டைரி எழுத ஆரம்பித்தது நாலாம் வகுப்பில் ஆனி பற்றிப் படித்த பிறகுதான்.
 
ரொம்ப அருமையான பதிவு சகோதரி. நானும் ஆன் ஃப்ராங்க் கதை படிச்சிருக்கேன். மனதை உருக்கும் அழகான படைப்பு.

சென்ற வருடம், லாக்டவுன் தொடங்கிய போது, மனதில் தோன்றிய கற்பனை நிகழ்வுகளை நோட்டு புத்தகத்தில் தினமும் எழுத, அது முழு கதையாக உருவெடுத்தது. அதை வெளியில் கொண்டு வர, ஏனோ அத்தனை தயக்கம். நிலையில்லா இந்த பேண்டமிக் காலத்தில், நான் எழுதியது யார் கண்களுக்கும் தெரியாமல் போய்விடுமோ என்ற பயம் ஒரு புறம், இதெல்லாம் ஒரு சாதாரண பதிவு தானே என்ற எண்ணம் மறுபுறம்....

ஏதோ ஒரு அகத்தூண்டுதலால், ஆன்லைனில் எழுத வேண்டும் என்று தோன்றியது. இன்று சில எபிசோடுகள் எழுதி, அதை நாலு பேர் படித்து நிறைகுறைகளை எடுத்து சொல்லும் போது, மனதில் ஒரு நிம்மதி.

உங்கள் பதிவு, என் மனநிலைக்கு ஒரு பதிலாக இருந்தது போல் தோன்றியது. காலம் தாழ்த்தாமல், எதிர்காலத்தை பற்றி மிகவும் கவலைபடாமல், மனதிற்கு பிடித்த வேலையை எதிர்பார்ப்புகள் இல்லாமல் செய்தாலே வாழும் நாட்கள் சுகமாக இருக்கும் என்று புரிந்தது.
 

Nithya Mariappan

✍️
Writer
ரொம்ப அருமையான பதிவு சகோதரி. நானும் ஆன் ஃப்ராங்க் கதை படிச்சிருக்கேன். மனதை உருக்கும் அழகான படைப்பு.

சென்ற வருடம், லாக்டவுன் தொடங்கிய போது, மனதில் தோன்றிய கற்பனை நிகழ்வுகளை நோட்டு புத்தகத்தில் தினமும் எழுத, அது முழு கதையாக உருவெடுத்தது. அதை வெளியில் கொண்டு வர, ஏனோ அத்தனை தயக்கம். நிலையில்லா இந்த பேண்டமிக் காலத்தில், நான் எழுதியது யார் கண்களுக்கும் தெரியாமல் போய்விடுமோ என்ற பயம் ஒரு புறம், இதெல்லாம் ஒரு சாதாரண பதிவு தானே என்ற எண்ணம் மறுபுறம்....

ஏதோ ஒரு அகத்தூண்டுதலால், ஆன்லைனில் எழுத வேண்டும் என்று தோன்றியது. இன்று சில எபிசோடுகள் எழுதி, அதை நாலு பேர் படித்து நிறைகுறைகளை எடுத்து சொல்லும் போது, மனதில் ஒரு நிம்மதி.

உங்கள் பதிவு, என் மனநிலைக்கு ஒரு பதிலாக இருந்தது போல் தோன்றியது. காலம் தாழ்த்தாமல், எதிர்காலத்தை பற்றி மிகவும் கவலைபடாமல், மனதிற்கு பிடித்த வேலையை எதிர்பார்ப்புகள் இல்லாமல் செய்தாலே வாழும் நாட்கள் சுகமாக இருக்கும் என்று புரிந்தது.
ரொம்ப யோசிக்காம ஒரு விசயம் பிடிச்சிருந்தா அதை செஞ்சு முடிச்சிடணும் சிஸ்... பிகாஸ் லைஃப் நிலையில்லாதது... வாழுற வரைக்கும் நம்ம மனசுக்கு எது சந்தோசத்த குடுக்குமோ அதை செஞ்சு பாத்துடணும்
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

ezhil mam yennachu ud kanom r u ok?
தீம்பாவையில் தீவிரமானேன் இன்னும் யாராவது படிக்காம இருக்கீங்களா? ஏப்ரல் 14 வரை தான் லிங்க் இருக்கும்,

New Episodes Thread

Top Bottom