• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என் சிந்தனை💬💭🗯️ The Selfish Giant By Oscar Wilde👿

Nithya Mariappan

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

புதுசா எந்தச் சிந்தனையும் வரல... அதான் வீட்டுல இருக்குற பழைய ஸ்கூல் புக்சை திருப்பிப் பாத்தப்ப இந்தக் கதை கண்ணுல பட்டுச்சு... இது மோஸ்ட்லி 90ஸ் கிட்சுக்குத் தெரிஞ்ச கதை தான்... ஹையர் செகண்டரில சப்ளிமென்ட்ரி ரீடர் பகுதில இருக்குற ஆங்கில கதைகள்ல ஒன்னு தான் ஆஸ்கார் வைல்ட் எழுதுன ‘The happy prince and other tales’ங்கிற கதை தொகுப்புல இருந்த ஒரு கதையான The Selfish Giant. ஆல்ரெடி இந்தக் கதை தெரிஞ்சவங்க நிறைய பேர் இருப்பீங்க... தெரியாதவங்களுக்கு இதோ அதன் மொழிபெயர்ப்பு (ரொம்ப அக்யூரேட்டா இருக்காது மக்களே! இருந்தாலும் எனக்குப் புரிஞ்ச விதத்துல கதை சொல்லிருக்கேன்!) வாங்க கதைக்குள்ள போவோம்...

ரொம்ப வருசத்துக்கு முன்னாடி ஒரு அரக்கன் இருந்தானாம். அவனுக்கு பேரே அரக்கன் தான். அவனுக்குச் சொந்தமா ஒரு கோட்டை இருந்துச்சு. அந்தக் கோட்டையைச் சுத்தி பெரிய தோட்டம் இருந்துச்சு. அந்தத் தோட்டத்துல பச்சை பசேல் புல்வெளி, அந்தப் புல்வெளிக்கு நடுவுல ஆங்காங்கே நட்சத்திரம் மாதிரி அழகான பூக்கள் இருந்துச்சாம். அந்தப் பெரிய தோட்டத்துல இருந்த பன்னிரண்டு பீச் மரங்கள் வசந்த காலத்த்துல பிங்க் கலர் பூக்களாலும், இலையுதிர்காலத்துல சுவையான பழங்களாலும் நிரம்பி வழியும். அந்தப் பெரிய தோட்டத்தோட மரங்கள்ல பறவைகள் உக்காந்து இனிமையா பாட்டு பாடிட்டே இருக்கும்.

அப்பிடி இருக்குறப்ப அந்தக் கோட்டைக்கும் தோட்டத்துக்கும் சொந்தமான அரக்கன் தன்னோட ஃப்ரெண்ட் கார்னிஷ் ஓகரோட (Cornish Ogre – Ogre என்பது நாட்டுப்புற கதைகள்ல சொல்லப்படும் மனிதர்களை சாப்பிடும் ஒரு வகை அரக்கன்) வீட்டுக்குப் போனான்.

அவன் போனதும் கோட்டையும் தோட்டமும் காலியா கிடந்துச்சு. சோ அந்த ஊர்ல இருக்குற குட்டிப்பசங்க அந்தத் தோட்டத்துக்குள்ள விளையாட ஆரம்பிச்சாங்க. டெய்லி மதியம் ஸ்கூல் முடிஞ்சதும் அந்த அரக்கனோட தோட்டத்துக்கு வந்து விளையாடுவாங்க. அங்க இருக்குற பறவைகள் பாடுறப்போ அவங்களும் சந்தோசமா “இந்த இடத்துல நாங்க ரொம்ப சந்தோசமா இருக்கோம்”னு கோரசா கத்துவாங்க.

இப்பிடியே ஏழு வருசம் கடந்துச்சு. இந்த ஏழுவருசத்துல அந்த அரக்கன் கோட்டையைப் பாக்க வரவேயில்ல. ஃப்ரெண்ட் கூட ரொம்ப வருசம் தங்கிட்டோம்னு புரிஞ்சு அவன் தன்னோட கோட்டைக்குப் போகலாம்னு தீர்மானிச்சான்.

அப்பிடி இருக்குறப்ப வழக்கம் போல ஸ்கூல் முடிஞ்சு வந்த குழந்தைங்க அந்த அரக்கனோட தோட்டத்துல ஜாலியா விளையாடிட்டிருந்தாங்க.

அப்போ பாத்து அந்த அரக்கன் தோட்டத்துக்குள்ள வந்துட்டான். அந்தக் குழந்தைங்கள பாத்ததும் அவனுக்கு ரொம்ப ஷாக்கா இருந்துச்சு. கூடவே கோவமும் வந்துச்சு.

“நீங்க எல்லாரும் என் தோட்டத்துல என்னடா பண்ணுறீங்க?”னு கோவத்துல பல்லைக் கடிச்சிட்டு அவன் கேட்ட விதத்துல குட்டிப்பசங்க பயந்து தோட்டத்தை விட்டு ஓடிட்டாங்க. அவங்க ஓடிப்போனதும் அந்த அரக்கனுக்கு நிம்மதியாச்சு.

“இது எனக்கு மட்டுமே சொந்தமான என்னோட தோட்டம்”னு சத்தமா சொன்னான். அதுக்கு என்ன அர்த்தம்னா இங்க அவனைத் தவிர வேற யாரும் வரக்கூடாதுங்கிறது தான். யாருமே தன்னோட தோட்டத்துக்குள்ள வரக்கூடாதுனு தோட்டத்தைச் சுத்தி பெரிய சுவர் கட்டுனான்.

அப்புறம் “இங்கே அத்துமீறி யாரும் நுழையக்கூடாது”னு ஒரு போர்ட் வச்சான். அவனோட சுயநலமான எண்ணம் அவனை அப்பிடிலாம் செய்ய வச்சுது.

ஆனா அந்தக் குழந்தைங்களுக்கு விளையாட வேற இடமே கிடைக்கல. அந்த ஊர்ல இருக்குற ரோட்ல விளையாடலாம்னா அங்க தூசியும், கூர்மையான கல்லுமா இருந்ததால அவங்களுக்கு விளையாட விரும்பல. டெய்லியும் ஸ்கூல் முடிஞ்சதும் அந்தத் தோட்டத்த சுத்தி இருக்குற பெரிய சுவருக்கு வெளிய சுத்தி வருவாங்க. அங்க விளையாடுன பழைய நாட்களை நினைச்சுப் பாப்பாங்க.

“அந்த இடத்துல நம்ம எவ்ளோ சந்தோசமா இருந்தோம்ல”

பாவம்! அவங்களால அதுக்கு அப்புறம் உள்ள போய் விளையாடவே முடியல. இப்பிடியே நாட்கள் ஓடுச்சு. அந்த நாடு முழுக்க வசந்தகாலம் வந்துச்சு.

வசந்தகாலத்துக்கு அடையாளமா பாக்குற இடத்துல எல்லாம் பூக்கள், இனிமையா பாடுற பறவைகள்னு அந்த ஊரே சந்தோசமா இருந்துச்சு.

ஆனா சுயநலம் பிடிச்ச அரக்கனோட தோட்டத்துல மட்டும் இன்னும் குளிர்காலத்தோட ஆட்சி தான் நடந்துக்கிட்டிருந்துச்சு. அங்க விளையாடுற குழந்தைங்க யாரும் வரலனதும் பறவைங்க பாடுறதை நிறுத்திடுச்சு. மரம் செடி கொடிகள்லாம் பூக்குறதுக்கே விரும்பல.

ஒரே ஒரு தடவை ஒரு செடி பூ பூக்கலாமானு மெதுவா பூமிக்குள்ள இருந்து எட்டிப் பாத்துச்சு. ஆனா அங்க குழந்தைங்க இல்லாததால மறுபடியும் பூமிக்குள்ளவே போய் தூங்க ஆரம்பிச்சிடுச்சு.

சோ அந்தத் தோட்டத்துல இருந்தவங்க யார்னா பனியும் புகைமூட்டமும் மட்டும் தான். அவங்க ரெண்டு பேரும் அந்தத் தோட்டத்துல வசந்தகாலம் வரலனதும் இவங்களுக்கு ரொம்ப ஹேப்பி.

“வசந்தகாலம் இந்தத் தோட்டத்தை மறந்துடுச்சு, இனிமே இங்க நம்ம மட்டும் தான்”னு சொல்லி சந்தோசப்பட்டுக்கிட்டே அங்க இருந்த புல்வெளியை தன்னோட வெண்ணிற ஆடையால மூட புகைமூட்டம் அங்க இருந்த மரங்கள்ல சில்வர் நிற பனித்துகளால மூட ஆரம்பிச்சுது.

இது மட்டும் போதாதுனு அவங்க ரெண்டு பேரும் வாடை காற்றை (North Wind) அந்த அரக்கனோட தோட்டத்துக்கு வரவழைச்சாங்க. அது மடும் போதாதுனு ஆலங்கட்டி மழையையும் வரவழைச்சுதுங்க அந்த ரெண்டும்.

ஆலங்கட்டி மழை பெஞ்சதுல கோட்டையோட ரூஃப் டேமேஜ் ஆக புகைமூட்டம், பனி, வாடை காற்று மூனு பேருக்கும் செம கொண்டாட்டம்.

இதையெல்லாம் பாத்த அந்தச் சுயநல அரக்கனுக்கு தன்னோட தோட்டத்துக்கு மட்டும் ஏன் வசந்தகாலம் வரலனு ஒரே குழப்பம். தன்னோட அறை ஜன்னல் கிட்ட நின்னு தன் முன்னாடி வெண்பனி போர்த்தி கிடந்த தோட்டத்தைப் பாத்து “சீக்கிரம் பருவநிலைல மாற்றம் வரும்னு எதிர்பாக்கேன்”னு சொல்லிக்கிட்டான்.

ஆனா அந்தத் தோட்டத்துல வசந்தகாலமும் வரல, கோடைக்காலமும் வரல. அந்த ஊர்ல எல்லா தோட்டங்கள்லயும் பழங்களைக் கொடுத்த இலையுதிர் காலமும் சுயநல அரக்கனோட தோட்டத்தைக் கண்டுக்கல.

ஏன்னு கேட்டப்போ இலையுதிர் காலம் என்ன சொல்லிச்சு தெரியுமா?’ “அந்த அரக்கன் ரொம்ப சுயநலமானவன்”

அதனால அவனோட தோட்டத்துல குளிர்காலம் மட்டும் தான் இருந்துச்சு.

இப்பிடியே நாட்கள் கடக்க ஒரு நாள் காலையில அந்த அரக்கன் கண் முழிக்கிறப்போ ஒரு இனிமையான கானம் அவன் காதுல விழுது.

“எவ்ளோ அருமையான இசை இது! ஒருவேளை ராஜாவோட அரண்மனை இசைக்கலைஞர்கள் இந்தப் பக்கமா போறாங்களோ?”னு சந்தேகப்பட்டு ஜன்னல் வழியே எட்டிப் பாத்தான் அந்த அரக்கன்.

அவன் ஜன்னல் பக்கத்துல நின்னு பாடிட்டிருந்த குருவி வேகமா பறந்து போக அவனோட பார்வை தோட்டத்துல பதிஞ்சுது. அங்க இருந்த பனியும் புகைமூட்டமும் வாடை காற்றும் எப்போவோ காணாம போயிடுச்சு. அவனோட நாசியை மலர்களோட வாசனை நிரடிச்சு.

இதுக்குலாம் என்ன காரணம்னு பாத்தப்போ அவன் எழுப்புன சுவர்ல ஒரு சின்ன துவாரம் இருந்துச்சு. அந்த துவாரம் வழியா குட்டிப்பசங்க தோட்டத்துக்குள்ள வந்து விளையாடிட்டிருந்தாங்க. அங்க இருந்த பன்னிரண்டு பீச் மரங்களோட கிளைகள்லயும் உக்காந்து ஜாலியா விளையாடிட்டிருந்தாங்க.

குழந்தைங்களோட ஸ்பரிசம் பட்டதும் மரங்கள் தானா பூக்களை சொரிய ஆரம்பிச்சுது. புல்வெளிக்கு இடைல குட்டி குட்டி செடிகள்ல பூக்கள் மெதுவா எட்டிப் பாத்துச்சு. இத்தனை நாள் ஒலிக்காத பறவைகளோட கானம் அந்த தோட்டத்தை நிரப்புச்சு.

இப்பிடி தோட்டம் முழுக்க குழந்தைங்க கால் பட்ட இடம் முழுக்க வசந்தகாலம் தன்னோட அழகை கொட்டியிருந்த நேரத்துல அங்க ஒரே ஒரு ஓரத்துல மட்டும் இன்னும் குளிர்காலம் மிச்சம் இருந்துச்சு. அந்த இடத்துல இருந்த மரத்துல பூவும் இல்ல. அங்க எந்த பறவையும் இல்ல. அந்த மரத்துக்குக் கீழ நின்னு ஒரு குட்டிப்பையன் அழுதிட்டிருந்தான்.

அவன் ரொம்ப சின்னப்பையன்ங்கிறதால அவனால மரத்துக்கு மேல ஏற முடியல. அந்த மரம் தன்னோட கிளைகளை தாழ்த்தி அவனை ஏறச் சொன்னாலும் அவனுக்கு கிளை எட்டல.

இதை பாத்ததும் அந்த அரக்கனோட மனசு உருக ஆரம்பிச்சது.

“சே! நான் எவ்ளோ சுயநலம் பிடிச்சவனா இருந்திருக்கேன்?”னு தன்னைத் தானே திட்டிக்கிட்டான்.

“இப்போ எனக்குப் புரியுது, என்னோட தோட்டத்துல மட்டும் ஏன் வசந்தகாலம் வரலனு. முதல்ல அந்தக் குட்டிப்பையனை மரத்துல உக்கார வைக்கணும். அப்புறம் பெரிய சுவரை உடைச்சு இந்தத் தோட்டத்தை குழந்தைங்க விளையாடுற இடமா மாத்தணும்”

இதுவரைக்கும் தான் செஞ்ச தப்புக்கு வருத்தப்பட்ட அரக்கன் தன்னோட அறையிலிருந்து வெளிய வந்து தோட்டத்துக்குள்ள அடியெடுத்து வச்சான். அவனைப் பாத்ததும் குழந்தைங்க பயந்து ஓட தோட்டத்துல மறுபடியும் குளிர்காலம் வந்துடுச்சு.

அந்தக் குட்டிப்பையனால மட்டும் ஓடமுடியல. அவன் கிட்ட வந்த அரக்கன் அவனைத் தூக்கி மரக்கிளைல உக்கார வச்சான். இவ்ளோ நேரம் கண்ணீர் நிரம்பிருந்த அந்த குட்டிப்பையனோட கண் இப்போ சந்தோசத்துல ஜொலிச்சது.

அவன் உக்காந்ததும் அந்த மரம் பூக்க ஆரம்பிக்க பறவைகளும் திரும்பி வந்துச்சு, கூடவே வசந்தகாலமும் தான். அந்தக் குட்டிப்பையன் சந்தோசத்துல அரக்கனோட கழுத்தை தன்னோட கைகளால வளைச்சு அவனுக்கு முத்தம் குடுத்தான்.

இதை பாத்த மத்த குழந்தைங்க பயம் போய் உள்ள வந்தாங்க.

“இது இனிமே உங்களோட தோட்டம்”னு சொன்ன அரக்கன் தன்னோட கோடாரியால தோட்டத்தை சுத்தி இருந்த சுவரை உடைச்சான்.

அப்போ சந்தைக்குப் போயிட்டு மதியநேரம் திரும்புன ஊர்மக்கள் குழந்தைங்களும் அரக்கனும் அந்த அழகான தோட்டத்துல விளையாடுறத பாத்து ஆச்சரியப்பட்டுப்போனாங்க.

அன்னைக்கு மட்டுமில்ல, டெய்லியும் அந்தப் பசங்க எல்லாரும் தோட்டத்துக்கு வருவாங்க, அரக்கன் கூட ஜாலியா விளையாடுவாங்க. ஆனா அரக்கன் எப்போவுமே அந்தக் குட்டிப்பையனை தேடுவான்.

“உங்க கூட வந்த அந்தக் குட்டிப்பையன் ஏன் இன்னைக்கு வரல?”

“எங்களுக்குத் தெரியலயே! அவன் எங்கயோ போயிட்டான்”

என்ன தான் மத்த குழந்தைங்க வந்தாலும் அரக்கன் அந்தக் குட்டிப்பையனை மட்டும் தேடுனான். ஆனா அந்தப் பையன் அதுக்கு அப்புறம் வரவேயில்ல.

இப்பிடியே வருசங்கள் ஓடிப்போச்சு. அரக்கனுக்கும் வயசாயிடுச்சு. இப்போவும் ஊர்ல இருக்குற குட்டிப்பசங்க அந்த தோட்டத்துல விளையாடுறப்போ அவன் வராண்டால உக்காந்து அதை ரசிப்பான்.

“என்னோட தோட்டத்துல நிறைய அழகான பூக்கள் இருந்தாலும் இந்தக் குழந்தைங்க தான் ரொம்ப ரொம்ப அழகானவங்க”

பருவநிலை மாறி மாறி வர ஆரம்பிக்க இப்போலாம் முன்ன மாதிரி குளிர்காலத்தை அவன் வெறுக்கல. ஏன்னா அவனைப் பொறுத்தவரைக்கும் குளிர்காலம்ங்கிறது வசந்தகாலம் உறங்கும் நேரம், பூக்கள் ஓய்வெடுக்கும் காலம்.

அப்பிடிப்பட்ட ஒரு குளிர்கால காலை நேரத்துல அவன் அறையோட ஜன்னல்ல இருந்து பாத்தப்போ அவன் தோட்டத்தோட ஓரத்துல ஒரே ஒரு மரம் மட்டும் மலர்களால நிரம்பியிருந்துச்சு.

அதோட கிளைகள் தங்க நிறத்துலயும் பழங்கள் வெள்ளி நிறத்துலயும் ஜொலிச்சுது. அந்த மரத்துக்குக் கீழ ரொம்ப நாளா அரக்கன் ஆசையா தேடுன அந்தக் குட்டிப்பையன் நின்னுட்டிருந்தான்.

அரக்கனுக்கு ஒரே சந்தோசம். வேகமா ஓடி தோட்டத்துக்கு வந்தவன் அந்தக் குட்டிப்பையனை நெருக்கமா பாத்ததும் கோவமானான்.

ஏன்னா அந்தப் பையனோட உள்ளங்கையிலயும் கால்கள்லயும் ஆணியால அடிச்ச காயம் இருந்துச்சு.

“யாருக்கு உனக்கு இந்தக் காயத்தை உண்டாக்குனது?” ரொம்ப கோவத்தோட கேட்டான் அரக்கன்.

“யாருமில்ல! இது உண்மையான அன்பின் காயம்”னு சொன்னான் அந்தக் குட்டிப்பையன்.

அரக்கனுக்கு ஒன்னுமே புரியல. அந்தப் பையனோட உயரத்துக்கு நீல் டவுன் போட்டு நின்னவன் “நீ யாரு?”னு கேட்டான்.

அந்தப் பையன் சிரிப்போட சொன்னான் “ஒரு காலத்துல நீ என்னை உன்னோட தோட்டத்துல விளையாட அனுமதிச்ச. இப்போ நான் உன்னை என்னோட தோட்டத்துக்கு அழைச்சுட்டுப் போக வந்திருக்கேன். அதுக்குப் பேர் சொர்க்கம்”

வழக்கம் போல அன்னைக்கு மதியம் ஸ்கூல் முடிஞ்சு வந்த குழந்தைங்க அரக்கனைத் தேடுனாங்க.

அந்த அரக்கனோ வெள்ளை மலர்களால மூடப்பட்டு மரத்தடியில் இறந்து போயிருந்தான். அவனை அந்தக் குட்டிப்பையன் அவனோட தோட்டத்துக்கு நிரந்தரமா அழைச்சிட்டுப் போயிட்டான்.
🌟The end🌟

இந்தக் கதைய எங்களுக்குச் சொன்னவங்க எங்க இங்கிலீஸ் மிஸ் அனிதா. அவங்க சும்மா வாசிச்சு விட்டுட்டு போற ரகமில்ல. பொறுமையா அம்மா கதை சொல்லுற மாதிரி சொல்லுவாங்க. இந்தக் கதை முடிவுல நிறைய பேருக்கு கண்ணுல வேர்த்துடுச்சுனா பாத்துக்கோங்க.

The moral of this story 👉 சுயநலம் மனிதனை கூட இரக்கமற்ற அரக்கனா மாத்தும்; பொதுநலமோ அரக்கனை கூட மனிதனா மாத்தி அழகு பாக்கும். இந்தக் கதைல அரக்கனுக்குச் சொர்க்கத்தைக் குடுத்தது அவனோட பொதுநலமும் குழந்தைங்க மேல அவன் காட்டுன அன்பும் தான்னு நான் நினைக்கேன்.



 

பிரிய நிலா

Well-known member
Member
அடிக்கடி நானும் என் தங்கையும் இதைப்பற்றி பேசுவோம்.. ரொம்பவே பிடித்த கதை...
அழகான தமிழ் விளக்கம் சிஸ்
 

Nithya Mariappan

✍️
Writer
அடிக்கடி நானும் என் தங்கையும் இதைப்பற்றி பேசுவோம்.. ரொம்பவே பிடித்த கதை...
அழகான தமிழ் விளக்கம் சிஸ்
supplementary reader la ithu en fav sis... the gift of magi ithuvum nalla irukkum😍
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom