என் அரத்தமே கர்ணா 13

Chithu

✍️
Writer
என் அரத்தமே கர்ணா 13

அன்னையின் அன்பும் அக்கறையும் ருசித்த மனமும் நாவும் ஒருவருடம் கிடைக்காமல் சாபம் பெற்றவன். மீண்டும் அவ்விரண்டும் ருசிக்க நாவும் மனமும் சாபம் விலகினது போலானது...

மங்கை மாறி மாறி மூத்தவனை கவனித்தாலும் தன் கணவனக்கு தேவையானதை எடுத்து எடுத்து பகிருந்தாள் வளரு...

முதலில் அவள், தன் கணவன் என்று எண்ணினாலும் பின் இவ்வாறு கர்ணன் முன் இருந்தால் தான் அவனது குற்ற உணர்வு மறையும் என்றே செய்தாள். கதிரும், அண்ணனுக்காக தானே இப்படி செய்கிறாய் என கேட்கப்போவதுமில்லை ஒரு நாள் நிலை மாறும் என்றெண்ணிக் கொள்ள, ஒரு மனதின் ஓரத்தில் முரண் செய்ய, புரையேறியது. அவளும் அருகே நின்று தலையை தட்டி நீரை எடுத்து கொடுத்தாள்.

அதுவே போதுமே, கர்ணனை இறுகிப் பிடித்த குற்றவுணர்வு தளர்ந்தது.. அனைவரும் சாப்பிட்டு முடிக்க, வெளியே தோட்டத்தில் மரத்தின் நிழலில் நால்வரும் மட்டுமே அமர்ந்திருந்தனர்.

"மா, தம்பியும் வளரும் சந்தோசமா தானே இருக்காங்க...?" அன்னையின் மடியில் தலை வைத்து கயிற்று கட்டிலில் படுத்திருந்தான் கர்ணன்.


" இருக்காங்க டா, அவ, வலிய அவன் புரிஞ்சு நடந்துகறதும், அவனை அனுசரித்து அவ நடந்துகறதுமா, இருக்காங்க. போக போக எல்லாம் சரியாகி கணவன் மனைவியா வாழ ஆரம்பிச்சிடுவாங்க..." என்றார்.

இதானே வேண்டும் என்பது போல, மனதைத் தேற்றிக் கொண்டான்... " இனி லீவு விட்டா இங்க வந்திடுற, பழைய படி எல்லாரும் சந்தோசமா இருக்கலாம்...
யாரும் உன்னை இங்க வனவாசம் போனு அனுப்பல... அம்மாவோட கட்டளை இது ஒழுங்கா வர, அப்றம் உனக்கு ஒரு பொண்ணு பார்த்து கட்டி வைக்கணும். அப்ப தான் நீ
சரி பட்டு வருவா..." என மங்கை பாட்டுக்கு பேசிக் கொண்டே போல, உதட்டில் புன்னகை தவழ, படுத்திருந்தான்.

"கர்ணா!!! யார பத்தியும் எங்களுக்கு கவலை இல்லைபா, உன் சந்தோசம், நிம்மதிக்காக மட்டும் தான் உன்னை பிரிஞ்சு இருக்கோம்... நீ தான் டா, எங்க மூத்தபிள்ளை அதுல எந்த மாற்றமும் இல்ல... உனக்கு ஒரு நல்லது பண்ணி பார்க்கணும் எங்க கையில பேரனோ பேத்தியோ தவந்தால் போதும் பா..." இருவரும் தங்களின் ஆசையை அவனிடம் கொட்டினார்கள்.

" எல்லாம் சரிதான் வெற்றி, கர்ணனோட உண்மையான அப்பா வந்து அவர் பிள்ளைய கேட்டால் என்ன பண்ணுவீங்க...?" என்றவர் கேட்டதும் பட்டென எழுந்தான் கர்ணன். வெற்றிவேலும் மங்கையும் இதை எதிர்பார்க்க வில்லை..

கர்ணனுக்கு விவரம் தெரியும் வரை இருவருக்கும் அந்தப் பயிமிருந்தது. கொஞ்சம் நாள் கழித்து அவர்கள் வர மாட்டார்கள் என்று நம்ப ஆரம்பித்திருந்தனர்.


பத்மநாதனின் வார்த்தை கேட்டு மீண்டும் அப்பயம் உள்ளே உருவெடுக்க, அதை முகத்தில் காட்டினர்கள்.

"ஐயா!!! எனக்கு அப்பானு சொல்லிக்க இவர் மட்டும் தான் இருக்கார்... வேற யாரும் எனக்கு அப்பா இல்ல., அப்பானு சொந்தம் கொண்டாடிட்டு வர யாரும், எனக்கு அப்பா இல்ல... இத்தனை நாள் வராதவரு இப்ப மட்டும் ஏன் வரணும்? அப்டியே வந்தாலும் நான் ஏத்துக்க மாட்டேன்..." என்றான் தீர்க்கமாக,

" இத்தனை நாள் நீ இருக்கறதே தெரியாம இருக்கலாம்... இப்ப உண்மை தெரிஞ்சு வந்தால் என்ன பண்ணுவ கர்ணா?"

" இத்தனை நாள் என்னை தெரிஞ்சுக்க விரும்பாதவரு, இப்ப மட்டும் தெரிஞ்சிட்டு வந்திடுவாரா, அப்படியே வந்தாலும் நான் அவரை அப்பானு ஏத்துக்க போறதில்ல, இந்த ஜெனமத்துல, இவங்க தான் என் அம்மா அப்பா... அதுல எந்த மாற்றமும் இல்ல..." என்று உள்ளே சென்று விட்டான்.

வெற்றிவேலும் மங்கையின் மனம் சற்று குளிர்ந்தாலும், பத்மநாதன் போட்ட சிறு பொறி தீ, இன்னும் கொழுந்து விட்டு எரிந்தது...


" அப்பா, நீங்க சொல்றது..." மங்கை தயங்க, " மாமா, அவருக்கு கர்ணன் இருக்க இடம் தெரியுமா?" இருவரும் அவரை கேள்வி கேட்க, பதம்நாதன் நிதானமாக விஷு வைப் பற்றி சொன்னார்... இருவருக்கும் பயம் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது..

நிறைமாத கற்பிணியாய் பதம்நாதனிடம் அடைக்கலம் கேட்டு வந்தவள் தான் அன்பு . அவளை தன் மகளாக பார்த்து வந்தார் பத்மநாதன்... திடீரென்று அன்புவிற்கு பிரசவ வலி வர, மங்கை தான் அவருக்கு பிரசவம் பார்த்தார் . கர்ணன் பிறந்தான்,அவனை தொட்டு தடவி முத்தம் கொடுத்த நொடியிலே உயிர் பிரிந்தது அன்புவிற்கு.

அதன் பின் குழந்தை இல்லாத, தனது தங்கை மகனாக, வெற்றிவேலிடம் அன்புவின் குழந்தையைக் கொடுத்தார்... அவர்களும் கர்ணனை பெற்றெடுத்த குழந்தையாய் பார்த்து வளர்த்து வந்தனர்.


அன்றைய நாள் கழிய, வீட்டிற்கு தாமதமாக வந்த மேகவாணனிடம் வத்தி வைத்து கொண்டிருந்தார் சாவி, " நீங்க பெத்தது எதுவுமே சரியில்ல, ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதமாக இருக்கு... நேத்து உங்க ரெண்டாவது பொண்ணு உம் முகத்தை வச்சிருந்தா, இப்போ உங்க மூத்த பொண்ணு... முடியலங்க எது கேட்டாலும் பதில் சொல்துங்க இல்ல... என்னத்த சொல்ல...?" என புலம்ப,

"விடு சாவி, எல்லாருக்கும் எல்லா நேரமும் முகத்தில சிரிப்பிருக்கணும் அவசியம் இருக்கா என்ன? ஃபிரண்ட்ஸ் கூட பேசிட்டு இருக்கும் போது மூட் அவுட் ஆகிருப்பா, நாளைக்கு சரியாகிடுவா...! இதெல்லாம் ஒரு பிரச்சனைனு வர்றீயே சாவி... உன் பொண்ணு ஒரு நாள் சிரிக்காம இருக்கறது நினைச்சு கவலை படற, நான்
உன்னை கட்டிக்கிட்டதுல
இருந்து சிரிக்க மறந்துட்டேனே எனக்காக யார் கவலை படுவா?" பாவமாக முகத்தை வைத்துக்கொள்ள,

"அதானே, உங்களுக்காக யாருங்க இருக்கா? நீங்களே உங்களுக்காக கவலை பட்டுகோங்க" பரிமாறுவதை நிறுத்தி விட்டு அறைக்கு சென்று விட்டார்.

' தேவையா டா உனக்கு இது...?" தன் கரங்களாலே பரிமாறிக்கொண்டார்.

அலைபேசியில் கர்ணனின் புகைப்படத்தை வெகு நேரம் பார்த்தவள் அதை மெத்தையில் வீசினாள்.

' அவர் பொண்ணு பார்க்க போனால், உனக்கு ஏன் கஷ்டமா இருக்கு?' மனசாட்சி கேள்வியெழுப்ப, " உனக்கு தெரியாத மாதிரி கேட்காத? உனக்கு எல்லாம் தெரியும், என்னை நினைக்க வச்சதே நீ தான்... இப்போ ஏன்னு என்னை கேக்கற? அவரை உனக்கு பிடிச்சிருக்கனால தானே என்னை விரும்ப வச்ச, இப்போ அவர் வேற பொண்ணை பார்க்க போனதும் உனக்கு துடிக்கித்துல...!" என்றதும் அமைதியாக இருந்தது..


" அந்தப் பொண்ணுக்கு அவர பிடிச்சிருக்கும், அவருக்கு?, ஏன் அமைதியா இருக்க பதில்
சொல்லு... இந்நேரம் கல்யாணம் பேசி முடிச்சிருப்பாங்களா? கர்ணன் சாருக்கு கல்யாணமென்று நினைக்கும் போதே
" நோ, என்னால் அதை தாங்கிக்கவே முடியாது அவர் எனக்கு தான்..." பேசிக்கொண்டே போக தான் புரிந்தது "இது காதல்" கர்ணனின் மேல் தனக்கு காதல் என்று.


"விது..." என அவள் தோளைத் தொட்டாள் சித்து... " ஏன் ஒரு மாதிரி இருக்க?" எனக் கேட்கவும் " என்னை எதுவும் கேட்காத சித்து ப்ளீஸ்...!" என்று அவள் தோளில் சாய்ந்து கொள்ள, முதுகை வருடிக் கொடுத்தாள். அவள் அணைப்பிலே விம்மிக் கொண்டிருந்தாள்.
அருகே இருந்த அவளது அலைபேசியை பார்க்க, திரையில் கர்ணன் போட்டோ இருந்தது.


" விது, நீ கர்ணன் சாரை விரும்புறீயா?" எனக் கேட்கவும், பட்டென நிமிர்ந்தாள்... அவள் அலைபேசியை காட்ட, தலை குனிந்து ஆமாமென்றவள், அனைத்தையும் கூற, " விது, இது சரியா? தப்பா? எனக்கு தெரியல... கர்ணன் சார் ரொம்ப நல்லவர். நான் இல்லைன்னு சொல்லல, ஆனால், காலேஜ் சேர்ந்த இந்தக் கொஞ்ச நாள்ல, அவர் பத்தி என்ன தெரிஞ்சுகிட்டனு நீ லவ் பண்ண ஆரம்பிச்சிட்ட ?"

" அவரோட பார்வையிலும் பேச்சுலையும் கண்ணியம் தெரிந்தது அது எனக்கு
பிடிச்சது... பெண்களுக்கு ஒன்னுன்னா வரும் கோபமும், நிதானமும் நேர்மையும் எனக்கு பிடிச்சது, அவரை அவரை நெனக்க நெனக்க எனக்கு காதல் வந்திடுச்சி

"சரி, அவரை பிடிக்காதவங்கனு யாரும் இல்ல தான்... ஆனா, நம்ம அப்பா,அம்மா
ஒத்துப்பாங்க நெனைக்கிறீயா? "

" ஒத்துப்பாங்கனு நம்பிக்கை இருக்கு... அவரை பிடிக்காதவங்க யாருமில்லாதபோ, சாவிக்கும் அப்பாவுக்கும் மட்டும் பிடிக்காம போகுமா?...
நிச்சயம் எங்க காதலை அக்சப்ட் பண்ணுவாங்க..." என்றாள் உறுதியாக,
பாவம் எதிர்த்து நிற்க போகிறதே அவர்கள் தானென்று அறியாமல்.

"சரி விது, ஒரு வேள கர்ணன் சாருக்கு பொண்ணு பிடிச்சு போய் கல்யாணத்துக் ஒத்துகிட்டார்ன்னா என்ன பண்ணுவ ?"

" ம்ம்ம்... சிம்பிள் கல்யாணத்த நிறுத்துவேன்... என்னை தான் கட்டிக்கணும் போய் நிப்பேன்... இல்லையா, அவரை கடத்திட்டு போய் கட்டாய கல்யாணம் கூட பண்ணிக்குவேன் எனக்கு தான் அவர்..." என்று வில்லியைப் போல பேச,
" விது, நீ ஹீரோயின் நியாபகம் இருக்கா?"எனவும்

" சித்துபேபி, விதுவ நீ ஹீரோயினா, அக்காவா தானே பார்த்திருக்க, வில்லியா பார்த்தது இல்லேல இனி பார்ப்ப..." என வசனங்களை பேசும் விதுவை கண்டு,'எதற்கு எடுத்தாலும் அழுகும் விதுவா இவள் ' என்றேண்ணி வியந்த போனாள், ' என்ன மாற்றம் என்ன மாற்றம்...?! " விது உன் காதல்ல இவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்க நீ, வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா...!
" மனதார கூறி விட்டு, தனதறைக்குச் சென்றாள்.

மறுநாள், ஸ்டாப் ரூமில்.

பார்வை மட்டும் புத்தகத்தின் மேலிருக்க, அவளது கவனமெல்லாம், அருகே அமர்ந்திருக்கும் கர்ணன் மேலிருந்தது... அடிக்கடி அவனை பார்ப்பதும் கேட்க தயங்குவதுமென இருந்தாள்.

" பவி...பவிவிவி....!" என குணா அழைக்க, " என்ன வேணும்...?"

" விது எதுவும் உங்கிட்ட சொன்னாளா?" எனக் கேட்கவும்" அவ என்ன சொல்லணும்?"

" இல்லடி யாரையாவது காதலிக்கறதா சொன்னாளா? இல்ல உன்கிட்ட காதலைப் பத்தி எதுவும் பேசினாளா?"

"இல்லையே எதுவும் பேசலையே!ஏன் கேட்கற...?" எனவும்... நேற்று அவள் கர்ணனை பற்றி விசாரித்தை கூறினான். அவள் எதையோ யோசிக்க, " உனக்கும் அதே தானே தோணுது?"

" ம்ம்... ஆமா, ஆனா அது தான் கான்போர்ம் பண்ணிக்க வேண்டாம்.. அவகிட்ட நான் பேசறேன்..." என்றாள்.
" அது இருக்கட்டும் நாங்க எப்ப உங்க வீட்டுக்கு வந்து பேச?" என்று கேட்டு வெட்கப் பட வைத்தான் குணா.

" எப்போ வேணாம் வரலாம்..." என்றாள் குழைந்து, "சீக்கிரம் வரேன் டீ, என் சீனிகட்டி..." என இருவரும் இங்கு கடலை வறுக்க, கர்ணனோ , விதுவின்
தவிப்பை அறிந்து என்னவென்று கேட்டான்.

"ஏதாவது கேட்கணுமா மிஸ். விதுர்ஷா?" அவனே ஆரம்பிக்க, எச்சிலை விழுங்கியவள், " பொண்ணு பார்க்க போனீங்களே, பொண்ண பிடிச்சிருந்ததா?" எனக் கேட்க, " பொண்ணு பார்க்கவா? நானா? யார் சொன்னா?" எனக் கேட்க, குணாவை கைகாட்டினாள்.

அவனோ புத்தகத்தை வைத்து முகத்தை மறைத்து கொண்டான். அதைக் கண்டு சிரித்தவன், " மிஸ் விதுர்ஷா, நீங்க கேட்ட கேள்விக்கு பொய் சொல்லட்டுமா? உண்மை சொல்லட்டுமா?"

" பொய்யே
முதல்ல சொல்லுங்க...?"

" பொண்ணை எனக்கு பிடிச்சிருந்தது " என்றான் முகமெல்லாம் பல்லானது அவளுக்கு.. "அப்போ உண்மை என்ன?"

" அம்மா , அப்பாவ பார்க்க ஊருக்கு போயிருந்தேன்..." என்றான். " அப்போ அவங்க உங்க கூட இல்லையா?" எனவும் இல்லை என்றான் தலையை அசைத்து.

" மிஸ் விதுர்ஷா உங்க டவுட் கிளியர் ஆச்சா?" எனவும் வேகமாக தலையை ஆட்டியவள், அசடு வழிய சிரித்தாள்.


"ஏன்? எதற்கு?" என்று கேட்காமல் அவனும் சென்றிட,
" டோலரேரேரே.....!" பல்லை கடித்தவாறே குணாவை அழைத்தாள் விதுர்ஷா

" ஹி ஹி ஹி... சொல்லுங்க டோலி உங்களுக்கு என்ன வேணும்...?" என்று இளிக்க, பவித்ராவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

" எதுக்கு என்கிட்ட பொய் சொன்னீங்க?"

"ந... நா... நான் சும்மா சொன்னேன்...!" என்று பயந்தான் அவளது முறைப்பில்..." இனி சும்மா கூட அப்படி சொல்லக் கூடாது..." என்று மிரட்ட, " ஏய் என்ன
என்னையவே மிரட்ற... ஏன் நாங்க அவனுக்கு பொண்ணு பார்க்கக்கூடாதா? என அவன் எகிற, " பார்க்க கூடாதுஊஊஊ..."என்றிழுக்க, " ஏன் நீ பாரத்து அவனுக்கு கட்டிவைக்க போறீயா?"

"நான் ஏன் அவருக்கு பொண்ணு பார்த்து கட்டி வைக்கணும்...?"

"அப்றம் ஏன் டோலி வாய் பேசறீங்க?"

"ஹலோ! உங்க டோலர
கட்டிக்க போறதே நான் தான். நான் எப்படி இன்னொரு பொண்ணை அவருக்கு கட்டி வைப்பேன். ..?" எனக் கேட்டு இருவரின் வாயை பிளக்க வைத்தாள்.

" ஏதே, நீ கட்டிக்க போறீயா? இது அவனுக்கு தெரியுமா?"

" சொல்லனும்...சொல்லுவேன்... ஆனா அதுக்கு முன்னாடி முந்திரிக் கொட்டையாட்டம் முந்துனீங்க, அப்றம் பவித்ரா அக்காக்கு வேற மாப்பிள்ளை பார்க்க வேண்டியது வரும்... ஜாக்கிறத" என ஒரு விரல் நீட்டி எச்சரிக்கைவிட, அவளை "பே "வென பார்த்தான் அவன்.

" ஒழுங்கா உங்க டோலர என்னோட சேர்த்து வைக்க ஹெல்ப் பண்றீங்க... இல்ல நான் சொன்னத செய்வேன்..." என்று மீண்டும் மிரட்டி விட்டுச் செல்ல, இன்னும் ரியாக்ஷன் மாறாமல் அமர்ந்திருந்தான் குணா.


"என்ன குணா, நம்ம காதலுக்கு இவ தான் வில்லியா?" அவளும் மிரண்டு போய் கேட்க, " நோ...!!! நெவர்... !!!நம்ம காதல யாராலையும் பிரிக்க விட மாட்டேன்... முதல்ல உன்னை கல்யாணம் பண்ணிட்டு அப்றம் சுண்டெலிய பார்த்துகறேன்.

காலேஜ்க்கு வரும்போது மருந்து சாப்ட எலியாட்டம் சொனங்கி போய் வந்தது, இப்ப தண்ணீய குடிச்சு தெம்பான எலியாட்டம் பேசுது, என்கிட்ட சிக்காமலா போயிடும் நசுக்கி புடுறேன்..." எலி தொல்லையால் பாடுபடும் சங்கத் தலைவராட்டம் பேசிவிட்டு சென்றான்.

வேகத்தடையின்றி நாட்கள் வேகமாக செல்ல, கர்ணன், மல்லிகா, குணா, அவனது தங்கையும் பவித்ராவை பொண்ணு கேட்க பவித்ராவின் இல்லத்திற்கு வந்திருந்தனர்.

பஜ்ஜி, சொஜ்ஜி எல்லாம் கொடுத்து அவர்களை உபசரிக்க,' தாய்மாமன் வரட்டும் மேற்கொண்டு பேசலாம் ' என்று பவித்ராவின் தந்தை கூறியிருந்ததால் அவருக்காகக்
காத்திருந்தனர்.
நேரம் கடந்து வந்தவரை, கண்ட குணாவும் கர்ணனும் முழித்தனர்.

" டோலரே, காலையில தானே, என் காதலுக்கு வில்லனே இல்லைனு சொன்னீங்க... !அப்போ இது யாரு?" எனக் கண்ணீர் விடாத குறையாக கேட்டான் குணா.

"டோலரே!!!! பவித்ரா கிடைக்கலன்னு தற்கொலை எதுவும் செஞ்சிக்க மாட்டீங்கனு எனக்கு சத்தியம் செஞ்சி குடுங்க .." அவனிடம் கர்ணன் கைநீட்டி கேட்க, " ஏதே சத்தியமா? யோவ் டோலரே!!! பவி எனக்கு நஹி யா...?" என்று எதிரே அமர்ந்திருப்பவரை காண, அவர் முழு மூச்சாக இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தார்.
 

Rajam

Well-known member
Member
பவித்ராவின் தாய் மாமா யார்.
அவரைப் பார்த்ததும் குணா இபி சொல்ல காரணம் என்ன.
 

Chithu

✍️
Writer
பவித்ராவின் தாய் மாமா யார்.
அவரைப் பார்த்ததும் குணா இபி சொல்ல காரணம் என்ன.
சொல்றேன் மா
 

Baby

Active member
Member
ஆமா யார் இந்த தாய்மாமா....

இரண்டு டோழருக்கும் ரொம்ப அறிமுகம் போலயே....

அடேய் குணா நீ விதுவை அழ வச்சல... உனக்கொரு வில்லன் ரெடி🤣🤣🤣🤣🤣
 

Chithu

✍️
Writer
ஆமா யார் இந்த தாய்மாமா....

இரண்டு டோழருக்கும் ரொம்ப அறிமுகம் போலயே....

அடேய் குணா நீ விதுவை அழ வச்சல... உனக்கொரு வில்லன் ரெடி🤣🤣🤣🤣🤣
Thai maman ilango naai maman
 

Latest profile posts

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பன்னிரண்டாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்திரண்டாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தொன்றாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

ஓம் சாயிராம்.
Sorry for posting it late.
படித்து மகிழுங்கள்;பிடித்திருந்தால் தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னிடம் பகிருங்கள்.
மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினொன்றாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க... ☺️☺️☺️

New Episodes Thread

Top Bottom