• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என்ன விலை அழகே?

மனோஜா

✍️
Writer
நான் எழுதப் போகும் விஷயம் பெரும்பாலான பெண்கள் வாழ்வில் நடந்திருக்கும். பெண்களும் நாம் இப்படிதான் என்று மனதில் பதித்துக் கொண்டிருப்பர். இதைப் பற்றி யாரும் பெரிதாக பேசியிருக்ககூட மாட்டோம். அது என்னவெனில் பெண்களின் உடல் பற்றிய விமர்சனங்கள். உடனே இதை ஆண்கள் தான் செய்வர் என்று அவர்கள் பக்கம் பாய வேண்டாம்.

ஒரு பெண்ணின் உடலைப் பற்றி முதலில் கருத்துக் கூறுவது அப்பெண்ணின் வீட்டைச் சார்ந்தவர்கள்தான். அதிலும் முதலிடம் அம்மாக்களுக்கே சேரும். “ பாடி ஷேமிங்க் “ என்ற விஷயம் வீட்டிலிருந்து தொடங்குகிறது.

பாடி ஷேமிங்க் என்பது ஒருவரின் உடல் தோற்றத்தை எதிர்மறையாக விமர்சனம் செய்தல் ஆகும். இது ஆண்களுக்கும் நடக்கும். ஆனால் அதைவிட பெண்கள் அதிகமாக இதை அனுபவித்திருப்பர்.

உதாரணத்திற்கு , வீட்டில் அம்மாவே சொல்வார் “ முன்னாடி நெஞ்சு பெருசா இருக்கு. சால நல்லா போடு.”

இந்த மாதிரிக் கூறும் போது எங்கே வெளியில் சென்றாலும் ஒரு வித அசகவுரிய உணர்வை ஏற்படுத்தும்.

இதுக் கூட பரவாயில்லை. என்னுடைய தோழி ஒருவர் சொன்னது என்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர் கொஞ்சம் குண்டாக இருப்பர். அவர் உடலை குறைக்க சொல்ல அந்த பெண்ணின் அம்மா பயன்படுத்திய வார்த்தைகள் இவை , “ நீ இவ்வளவு குண்டா இருந்தா கல்யாணம் பன்னதுக்கு அப்புறம் உன் கணவன் வேறு ஒரு பெண்ணைத் தேடி போய்விடுவர்.” இது அந்த பெண்ணின் தன்னம்பிக்கைக்கு மிகப்பெரிய அடியாக அமையும்.

இந்த மாதிரி விமர்சனங்களைக் கேட்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும். தன் உடல் அப்படி உள்ளதோ ? இப்படி உள்ளதோ ? நம்மைப் பற்றி இப்படித்தான் அனைவரும் நினைக்கிறார்களா? , ஒரு வித பாதுகாப்பற்ற தன்மை, தன்னம்பிக்கை குறைவு, மன அழுத்தத்திற்கு உட்படுவர். தங்களுடைய சுயத்தில் வலுவை இழப்பர்.

ஒல்லியாக , குண்டாக , அதிக உயரமாக , உயரம் குறைவாக , குட்டை முடி , நீள முடி ,வெள்ளை நிற சருமம், மாநிறம் , கருமை எதுவும் தவறில்லை. பர்ஃபெக்ட் உடலைப்பு என்பது கிடையாது. வீட்டினருக்கு அடுத்து சமூகத்தினரும் விமர்சனம் செய்யும் வேலையை அருமையாக செய்வர்.

குறைந்தப்பட்சம் வீட்டினர் ஆதரவு கொடுத்தாலும் பெண்களுக்கு ஒரு பலம் கிடைக்கும். சிலரின் உடல்வாகு மரபியல் வழியில் வரும். ஒரு சிலருக்கு தீடிரென உடல்வாகு மாறும். இடத்தைப் பொறுத்து மாறும்.

என் மற்றொரு தோழி சொன்ன விஷயம் மனதைக் கவர்ந்தது , “ நான் ஒன்னும் காத்ரீனா கைஃப் இல்லை. நான் எப்பவும் நாந்தான்.”

பாடி ஷேமிங்க் பல வகைகளில் நடக்கிறது. பிறர் சொல்லும் விமர்சனங்களைக் கண்டு கொள்ளாமல் உங்களுக்கு எது நல்லதோ அதைச் சிந்தித்து செயல்படுங்கள். உடல்நலம் , மனநலம் இரண்டும் அவசியம். தன்னை நேசித்து தன்னம்பிக்கையோடு மிளிருங்கள்.

இப்படிக்கு உங்களில் ஒருவர்

மனோஜா

 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom