• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உ. உ -2 வன்முறை சுழற்சி

மனோஜா

✍️
Writer
உ. உ -2

வன்முறையின் சுழற்சி (cycle of abuse ):


நீர் சுழற்சி, நைட்ரஜன் சுழற்சி , கார்பன் சுழற்சி இப்படி பல சுழற்சிகளை கேள்விபட்டு இருப்பீங்க. அதே மாதிரி வன்முறைக்கும் உண்டு. டாக்ஸிக் ரிலேசன்ஷிப்பில் இது காணப்படும்.

நிலைகள் :


  • அழுத்தம் உருவாதல் ( tensions builds)
  • ஒரு உறவில் வன்முறை செய்பவர்கள் பொதுவாக வெளிக்காரணங்களை தான் செய்யும் கொடுமைகளுக்கு காரணம் என்று நியாயப்படுத்துவர். எ.கா : குடும்ப காரணங்கள் , வேலையிடங்களில் பிரச்சினைகள், உடல்நலமின்மை.
  • விரக்தியும் , அதிருப்தியும் உருவாகும். இவை கோபத்திற்கு தூண்டுதலாக அமையும்.
  • வன்முறை நிகழ்தல் :
இந்த நிலையில் கோபம் எதாவது ஒரு வகையில் வெளிப்படும். அவமானப்படுத்துதல் , தவறான பெயர் வைத்து அழைத்தல் , மிரட்டல், பொருட்களைச் சேதப்படுத்துதல் , அடித்தல் , பாலியல் வன்முறை , எமோஷனல் மேனிபுலேசன் இப்படி பலவாறு வெளிப்படும்.

சமாதானப்படுத்துதல் :

  • மேற்கண்ட நிலை நடந்து முடிந்த பிறகு வன்முறையை நிகழ்த்தியவர் எப்படியாவது பாதிக்கப்பட்ட பெண்ணை சமாதானப் படுத்த முயற்சிப்பர். பரிசுகள் வாங்கிக் கொடுத்தல், அன்பாக நடத்துதல் , பிடித்ததைச் செய்து கொடுத்தல் போன்றவற்றைச் செய்வர். இதனால் பாதிக்கப்பட்டவர் தங்களுடைய உறவு முன்பிருந்த நிலைக்குத் திரும்பிவிட்டதாக நம்பிவிடுவர்.
    அமைதி :
  • பாதிப்பை நிகழ்த்தியவர் , பாதிக்கப்பட்டவர் இருவரும் எப்படியாவது நிகழ்ந்தவற்றிற்கு ஒரு விளக்கம் மற்றும் நியாயப்படுத்த முயல்வர். மற்றவர்களைக் காரணம் காட்டுதல் , தான் செய்ததைக் குறைத்துக் கூறுதல் , பாதிக்கப்பட்டவரை தன்னை இப்படி செய்யும்படி தூண்டினார் எனக் காரணம் கூறுதல்……..
  • இதற்குமேல் இப்படி நடந்து கொள்ள மாட்டேன் கற்பூரம் அடித்து சத்தியம் செய்வர். தன் வருத்தத்தை வெளிப்படையாக காண்பிப்பர். இறுதியும் பாதிக்கப்பட்டவரும் எற்றுக் கொள்வர்.
மறுபடியும் முதலில் இருந்து :

ஒன்றை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு விஷயம் உங்களுக்கு ஒரு தடவை நிகழ்ந்தால் விபத்து. இரு தடவை நடந்தால் சரி அதையும் விட்டு விடுங்கள். அதுவே மூன்றாவது தடவை நிகழ்ந்தால் அது கண்டிப்பாக விபத்து கிடையாது . உங்களை நீங்களை வாழ்த்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு டாக்சிக் ரிலேஷன்ஷிப்பின் வாயில் ரிப்பன் வெட்டி வலதுகால் எடுத்து வைத்திருக்கிறீர்கள் .

ஒரு சமயம் நீங்கள் துன்புறுத்தப்படுவதும் , மற்றொரு சமயம் உங்களை நன்றாகப் புரிந்து கொண்டவர் போன்று உணர்வதும் ஆரோக்கியமற்ற உறவுக்கு அறிகுறிகள். பொதுவாக பூயூட்டி அன்ட் பீஸ்ட் வகை உறவுகள் இந்த வகையைச் சாரும். பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிடும் கதைதான்.

உதாரணத்திற்கு , உங்களுக்கு சாப்பாடு , தண்ணீர் எதுவும் 10 நாட்களுக்கு கிடைக்கவில்லை. அப்போது ஒரு டம்ளர் பாகற்காய் ஜீஸ் கிடைத்தால் கூட பெரும்மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வீர்கள். இப்படிதான் டாக்ஸிக் ரிலேசன்ஷிப்பும். பொதுவாக வன்முறையால் தொடர்ந்து பாதிக்கப்படுவரின் தன்னம்பிக்கை குறைவாக இருக்கும். தான் இவ்வாறு நடத்தப்படுவதைச் சரியென்றே நம்புவர். அந்தளவு ஏமோஷனல் மேனிபுலேசன் நடந்திருக்கும்.

மேற்கண்டவற்றை நீங்கள் எதிர் கொண்டால் உங்களுக்கு கவுன்சிலிங்க் தேவை. நீங்கள் உங்களுக்கு நடந்தவற்றை சில பெண்களிடம் கூறினால் அவர்கள் “இதெல்லாம் நாங்க பார்க்காத விஷயமா போமா..போய் உன் வேலையைப் பாரு. புருஷன் அப்படித்தான் அடிப்பாரு. மாமியார்னா அப்படித்தான் இருப்பாங்க. “ இந்தமாதிரி அறிவுரை கொடுத்தால் தயவுசெய்து நம்பிவீடாதீர்கள்.

நாய் ஒரு தடவை கடித்தால் திரும்பவும் கடிக்கும். அதை மறக்கக்கூடாது. எந்த ஒரு உறவாகிலும் அதில் உங்கள் உணர்வுகள் மதிக்கப்படவில்லை எனில் அது நல்ல உறவல்ல. கருத்துச் சுதந்திரம் இல்லாத உறவுகள் இதில் அடங்கும்.

நீ சொல்றது நடைமுறைக்கு ஒத்து வாராது , குழந்தைகள் என்னாவார்கள்? என்று போர்க்கொடி தூக்கும் பெண்களே , நீங்கள் கஷ்டப்படுவதை உங்கள் குழந்தைகளும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

பி.கு : ஆண்களுக்கும் இது பொருந்தும்.


அன்புடன்

மனோஜா.


source : google
 

Attachments

  • ei20HA389695.jpg
    ei20HA389695.jpg
    524.2 KB · Views: 100
Last edited:

Nithya Mariappan

✍️
Writer
வாவ்! டாக்சிக் ரிலேசன்ஷிப் பத்தி அழகா விளக்கம் குடுத்திருக்கிங்க சிஸ்... டாக்சிக் ரிலேசன்ஷிப்ல இருக்குறத விரும்புற பெண்களும் இருக்காங்க... அதோட அடிப்படை இன்செக்யூரிட்டினு நான் நினைக்கிறேன்... அதை நம்ப பொண்ணுங்க கிட்ட ஆண்கள் காட்டுற விதம் பொசசிவ்னெஸ்னு சொல்லுவாங்க... நீ எனக்குத் தான் இம்பார்டென்ஸ் குடுக்கணும்ங்கிறது ஆரம்பிச்சி அடுத்தவங்க கிட்ட பேசுறதை தடுக்குற வரைக்கும் போகும்... கேட்காத பட்சத்துல உடல்ரீதியான தாக்குதலா இது மாறும்... அந்த தாக்குதலுக்கு காரணம் உன் மேல நான் வச்சிருந்த அன்புனு ஒரு பீலா விடுவாங்க... அதையும் பெண்கள் நம்பி பூரிச்சு புளங்காகிதம் அடைஞ்சு என் புருசன் போல உண்டானு சிலிர்த்து போய் சில்லறையை சிதறவிடுவாங்க... சரி இவளை அடிச்சாலும் உதைச்சாலும் நம்மளை விட்டு போகமாட்டானு ஆண்களை நினைக்க வைக்கிறதே இம்மாதிரி பெண்கள் தான்...முதல்ல பெண்கள் கணவன் மனைவி உறவுல அடிவாங்குறது, மனரீதியான துன்புறுத்துறது இதெல்லாம் சகஜம்னு நினைக்கிறத நிறுத்தணும்... லைப் பார்ட்னர்ங்கிறவங்க வாழ்க்கைய பகிர்ந்துக்க தானே தவிர இதுல யாரும் சுப்பீரியர் இல்ல... ரெண்டு பேரும் ஈக்வல்ங்கிற பட்சத்துல ஒருத்தர் இன்னொருத்தர் மேல கைநீட்டுறதோ மனரீதியா துன்புறுத்துறதோ பெருந்தவறு... அதை ஊக்குவிக்கிற விதமா பெற்றோர் நடந்துக்கிட்டா குழந்தைகளும் இந்தக் குடும்பவன்முறை இயல்புனு நினைச்சிட்டு தான் வளருவாங்க... கடைசியா சொன்னீங்களே இது ஆண்களுக்கும் பொருந்தும்னு, நூத்துல ஒரு வார்த்தை... குடும்பவன்முறையால ஆண்களும் பாதிக்கப்படுறாங்க... உதாரணமா எனக்கு தெரிஞ்சது ஜானி டெப் தான்... ஆம்பர் ஹெட் கிட்ட சிக்கி அந்தாளு ரொம்ப கஷ்டபட்டுட்டார்... அதே போல எத்தனை ஆண்கள் கஷ்டப்படுறாங்களோ? ஆணோ பெண்ணோ வாழ்க்கைத்துணைவரை உடல்ரீதியாவோ மனரீதியாவோ காயப்படுத்துறது இயல்பு இல்ல... அது ஒரு பிரச்சனைனு சமுதாயம் புரிஞ்சிக்கணும்...
 

மனோஜா

✍️
Writer
Thank you so much for your valuable comments. It had grown up in these kind of sorroundings. Even sometimes I unintentionally supported somethings i dont wannna explain in detail. Most people hit their siblings like its a normal thing to do. But that is also wrong. I writring this to create awareness that any kind of violence wrong. But not many people are reading this.
 

Nithya Mariappan

✍️
Writer
Thank you so much for your valuable comments. It had grown up in these kind of sorroundings. Even sometimes I unintentionally supported somethings i dont wannna explain in detail. Most people hit their siblings like its a normal thing to do. But that is also wrong. I writring this to create awareness that any kind of violence wrong. But not many people are reading this.
excellent work sis🤗 don't stop this... இப்போ படிக்கலனா கூட பின்னாட்கள்ல ரீடர்ஸ் படிப்பாங்க😍
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom