உயிர் - 5

உனை கொடுத்து.. உயிர் கொடுத்தாய்..

அவர்கள் இருவருக்கும் இடையில் எல்லாம் முடிந்தது....

சைராவின் உடல் தூக்கி போடுவதை நிறுத்தி இருந்தது.... அவள் உடலின் குளிர் கொஞ்சம் குறைந்து இருந்தது... ஆனால்... அவள் கண்கள் மட்டும் விழிக்கவே இல்லை...

அப்போது....

எழிலின் வாக்கி டாக்கி கத்தியது‌....

"எழில்... எழில்.... எழிலா கேட்குதா...." என்று பதட்டமாக வந்தது இனியவனின் குரல்‌...

இனியனின் குரலை கேட்டு.... அவசர அவசரமாக வாக்கியை எடுத்தான் எழில்வேந்தன்...

"இனியா இனியா.... எனக்கு கேட்குது... உனக்கு கேட்குதா..."

"ஹான்... எனக்கு கேட்குது... நீ இப்ப உடனே வந்து ஆகனும் எழில்... எங்களால் இங்கு சமாளிக்க முடியலை.... ஏற்கனவே ரெண்டு பேரை அந்த பவனேஷ் ஷுட் பண்ணிட்டான் எழிலா... ப்ளீஸ்டா சீக்கிரம் வா..." என்று இனியன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே.... ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது....

அதைக் கேட்டு ஒரு பெருமூச்சு விட்டவன்....

"நான் அங்க உடனே வரேன் இனியன்..." என்று சொன்னான் எழில்...

"சீக்கிரம் வந்துரு எழில்..." என்று சொன்னான் இனியவன்....

அவன் இருக்கும் இடத்தில் ஆம்புலன்ஸ் வர அங்கே சென்று கையை ஆட்டினான் எழில்...

அவள் முகத்தை ஒழுங்காகப் பார்க்க கூட அவனுக்கு நேரம் இல்லை...

அவன் மனதில் அப்போதைக்கு பதிந்து இருந்தது... இன்று பவனேஷை பிடித்தே ஆக வேண்டும்... அவனை இன்று விட்டு விட்டால்... அதுவே, பல உயிர்களுக்கு ஆபத்து... என்று மூளை சொல்லி கொண்டே இருந்தது....

அவளுடைய முகத்தை கூட எழில் நன்றாக பார்த்து... கவனிக்க வில்லை....

சைரந்தரியை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பிவிட்டு....

பவனேஷ் இருக்கும் இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்றான் எழில் வேந்தன்...

*************

அங்கே விஜய் நாராயணன் வீட்டில் இருப்பவர்கள் யாரிடமும் சொல்லாமல்.... மகளுக்காக பதறிப் போய் விமானம் மூலம் லக்னோவிற்கு வந்து கொண்டு இருந்தார்....

***************

மறுநாள்.....

"அப்பா...." என்று அழுதுக் கொண்டே விஜயை அணைத்துக் கொண்டாள் ஆரா...

நவ்யாவும் அழுதுக் கொண்டே தான் இருந்தாள்....

"ஆராதனா..."

"அப்பா எங்களுக்கு ஃபோன் வந்துது... சைராவை அட்மின் பண்ணி இருக்காங்க ன்னு... டாக்டர்ஸ் கேட்டா எந்த பதிலுமே சொல்ல மாட்றாங்க அப்பா... எங்களுக்கு பயமா இருக்கு...." என்று சொன்னவளின் கண்கள் அழுது அழுது முகம் வீங்கி போய் இருந்தது...

"ஆராமா... அழாதே.... சைனா குட்டிக்கு ஒன்னும் ஆகாது... அவள் நல்லா இருப்பா... இப்ப வந்து உன் கூட சண்டை கூட போடுவா பாரு..." என்று சொல்லி அவரை சமாதானம் படுத்த முயற்சித்தார் விஜய்...

"என்னால தான் அப்பா சைராக்கு இப்படி ஆச்சு... நான் அவள் கூட இருந்து இருக்கனும்..." என்று சொல்லி நவ்யாவும் அழுக....

அப்போது டாக்டர் வந்தார்...

"அப்பா டாக்டர் வந்து இருக்காங்க... என்னன்னு கேளுங்க ப்பா..." என்று கத்திக் கொண்டு இருந்தாள் ஆரா...

"சார் நான் உங்க கிட்ட தனியா பேசணும்... ப்ளீஸ் கம் டூ மை கேபின்..." என்று சொல்லி விட்டு... டாக்டர் சென்று விட்டார்...

"அப்பா நாங்களும் வரோம்... ப்ளீஸ்..." என்று நவ்யா சொல்ல...

ஆராவும்... " ஆமா நாங்களும் வரோம்..." என்று அடம் பிடித்தால்...

"ஒன்னும் இல்ல... நீங்க இங்கேயே இருங்க... நான் போய் பேசிட்டு வரேன்..." என்று சொல்லி டாக்டர் அறைக்கு சென்றார் விஜய்...

டாக்டர் அறைக்கு சென்று.... "டாக்டர்..." என்று அழைத்தார் விஜய்...

"வாங்க கமிஷனர் சார்... முதல்ல உட்காருங்க..."

"டாக்டர்... என் மகளுக்கு இப்போ எப்படி இருக்கு..."

"உன் பெண் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை சார்... பட்..."

"என்னாச்சு சொல்லுங்க டாக்டர்..."

"அவங்களுக்கு தலையில் பலமா அடிப்பட்டு இருக்கு... ஆனால்... ஒரு துளி ரத்தம் கூட இல்ல... உள் காயம் மட்டும் தான்... சோ... ஐம் சாரி டூ சே திஸ் சைரந்தரி கோமாக்கு போயிட்டாங்க...."

"என்ன சொல்றீங்க..."

"ஆமா... ஷி இஸ் இன் கோமா... அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்... உங்க மகள் இப்போ ஒரு விர்ஜின் இல்ல சார்..."

"என் பொண்ணை யாரோ...." என்று சொல்லும் போதே விஜய்யின் கண்கள் கலங்கியது...

"ஆமா சார்... பட் இது ஒரு அப்யூஸ் மாதிரி தெரியலை...."

விஜய்க்கு குழப்பமாக இருந்தது....

"அப்போ எப்படி..."

"உயிரை காப்பாற்ற இப்படி செய்து இருக்காங்க..."

"எனக்கு புரியலை டாக்டர்..."

"தட் மீன்ஸ்... சைரந்தரி தண்ணியில் விழும் போது தான் அவங்க தலையில் அடிப்பட்டு இருக்கு... அப்பவே அவங்க சுயநினைவில் இல்லை...‌ இவங்க தண்ணியில் ரொம்ப நேரம் இருந்ததால் ஜன்னி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்... இவங்கள காப்பாற்ற நினைச்சி மேபி இந்த வேலையை பண்ணி இருக்கலாம்...."

"இதை எப்படி நீங்க இவ்வளவு சிம்பிளா சொல்றீங்க.... அவள் என் பொண்ணு அவளை ஒருத்தன் நாசம் பண்ணி இருக்கான்.... நீங்க அவனுக்கு சப்போட் பண்ற மாதிரி பேசுறீங்க.... அவன் யாரு டாக்டர் சொல்லுங்க அவனை நான் இப்பவே பார்த்து ஆகனும்..." என்று சொன்னவரின் கோபத்தை போக்க... அவர் கையை ஓங்கி அடித்ததை அங்கிருந்த சுவர் தாங்கி கொண்டது....

"ஐம் சாரி சார்... உங்க பொண்ணை ஆம்புலன்ஸ்ல தான் கூட்டிட்டு வந்ததா சொன்னாங்க... அதில் கூட யாருமே வரலை சார்...." என்று அந்த டாக்டர் மெதுவாக சொன்னார்...

"புல் ஷட்.... அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் எங்க அவனை வர சொல்லுங்க...." என்று கத்தினார் விஜய்....

ஐந்து நிமிடத்தில் அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் பதறி அடித்து அங்கே வந்தான்....

"நீ அங்க போகும் போது யார் இருந்தது...."

"ஒருத்தன் மட்டும் தான் சார் இருந்தான்..."

"யார் இவன்.... உண்மையை சொல்லு...."

"எனக்கு தெரியாது ஐயா... ஆனால்... அவன் ஏதோ அவசரத்தில் இருந்தான்... அந்த பொண்ணை ஆம்புலன்ஸ்ல ஏத்திட்டு... மொதல்ல ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க ன்னு சொன்னான்... நீங்க கூட வாங்கன்னு சொன்னதுக்கு... "நான் இப்ப அவசரமாக போயே ஆகனும்.‌.. அது முக்கியமன விஷயம்... உயிர் போகிற பிரச்சினை... நான் இப்ப போனால் தான்.... பல உயிர்களை காப்பாற்ற முடியும்... ஆனால்... எனக்கு இந்த உயிரும் ரொம்ப முக்கியம்... ப்ளீஸ்.... உடனே இந்த பொண்ணை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க..." என்று சொல்லிட்டு... அவன் வேகமாக எங்கயோ போயிட்டான் சார்.... எனக்கும் இந்த பொண்ணை பார்க்க பாவமாக இருந்தது... அந்த சார் கூட்டிட்டு வந்தேன்..." என்று சொல்லி முடித்தான் அந்த ஆம்புலன்ஸ் டிரைவர்....

விஜய்க்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை...

"அவன் யாரு எப்படி இருப்பான்... அதை சொல்லு..."

"அந்த இருட்டில் அவன் முகம் கூட எனக்கு தெரியலை சார்..."

"நீ போ...." என்று விஜய் சொன்னதும் அந்த டிரைவர் போய் விட்டான்....

"டாக்டர்..."

"சொல்லுங்க சார்..." நான் என் பொண்ணை இப்ப சென்னைக்கு அழைச்சிட்டு போகலாமா..."

"போகலாம் சார்... அவங்க கோமாவுக்கு போனதை தவிர... சைராவின் உடல் நிலையில் இப்ப எந்த பிரச்சனையும் இல்லை...."

"ஓகே டாக்டர்...." என்றார் விஜய் நாராயணன்...

************

உங்கள் பொன்னான கருத்துக்களை கமெண்ட் பெட்டியில் சொல்லிட்டு போயிடுங்க செல்லம்ஸ் 😍😍

Urs...
Kani 😍🙈

வாசகர்களுக்கு பரிசு 😍
👇👇👇👇
 

Rajam

Well-known member
Member
அடுத்து வாரிசு வருமோ.
இதுதான் டர்னிங் பாய்ண்ட்டா இருக்கும்.
 

Baby

Active member
Member
அடுத்து வாரிசு வருமோ.
இதுதான் டர்னிங் பாய்ண்ட்டா இருக்கும்.
கோமால இருந்தா குழந்தை வளருமா🙄🙄🙄🙄
 

Baby

Active member
Member
ரைட்டூ...அடுத்த டுத்த எப்பி சீக்கிரம் குடுங்க பாப்போம்
 
எழிலை கண்டுபிடிப்பாங்களா..
சைரா எப்படி தண்ணியில விழுந்தாள். அவ ஏன் நவ்யாவை போக சொன்னா..
 
தெரியல அதான் கேக்றேன்... வளருமா
நானும் கேள்விப்பட்டது இல்ல.. பட் இந்த கதையிலேயே டாக்டர் அனிதா வாய்ப்பிருக்குனு சொல்ற மாதிரி சிஸ் சொல்லி இருக்காங்களே..
 

Latest profile posts

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 🤩
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 7 😎👇

New Episodes Thread

Top Bottom