உயிர் - 4

உனை கொடுத்து.. உயிர் கொடுத்தாய்..

எழிலின் வாக்கி டாக்கியை மட்டும் அங்கு பக்கத்தில்... பத்திரமாக வைத்து விட்டு....

அவனுடைய பிஸ்டலை கையில் பிடித்து கொண்டு... அந்த நதியில் குதித்தான் எழில் வேந்தன்...

தண்ணீரின் ஆழத்தில் யாரோ சிக்கிக் கொண்டது போல முதலில் தெரிந்தது....

பிறகு... அதில் ஒரு பெண் உள்ளே விழுந்து இருப்பது போல் அவனுக்கு தோன்றியது...

அது வேறு யாரும் இல்லை... சாத்ஷாத்... நம் கதையின் நாயகி சைரந்தரியே...

எழில்... வெகு நேரம் முயற்சி செய்து அவளை அந்த நதியில் வெளியே கொண்டு வந்தான்....

அவளை பூப்போல அள்ளி எடுத்து வந்தவன்... அந்த புல் தரையிலேயே படுக்க வைத்து அவள் கை கால்களை தேய்த்து விட்டான் எழிவ்வேந்தன்...

பிறகு... அவளின் இதழோடு இதழ் வைத்து.... அவனுடைய மூச்சை அவளுக்கு அவனால் முடிந்த வரை வழங்கினான்...

இருந்தும் சைராவின் உடலில் எந்த ஒரு பலனோ மாற்றமோ இல்லை.... பேச்சு மூச்சு இல்லாமல் தான் இருந்தாள்.... அவள் முழ்கி இருந்ததில் குடித்த தண்ணீர் கூட வெளியே வர வில்லை....‌

அவள் உடலுக்கு வெப்பம் கிடைக்காமல்... குளிர்ச்சியாக மட்டுமே இருந்தது...

அந்த இருள் சூழ்ந்த காட்டில்.... பௌர்ணமி நிலவின் வெளிச்சம் மட்டுமே சிறிதாக ஒளியை தந்து கொண்டு இருந்தது...

அதனால்... அவனுக்கு அவளுடைய முகத்தை பார்க்க கூட இயலவில்லை...

எழில் அவனுடைய ஃபோனை எடுத்து.... அவசர எண்ணை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸை வர சொல்லிக் கொண்டு இருந்தான்....

அப்போது...

ரொம்ப நேரம் தண்ணீரில் முழ்கி இருந்ததால்.... சைராவின் உடல் மிகுந்த குளிரால்.... சன்னி வந்து உடல் தூக்கி போட ஆரம்பித்தது....

*************

"ஆரா நான் இந்த இடம் வரைக்கும் தான் டி நான் சைரா கூட வந்தேன்..." என்று சொன்னாள் நவ்யா...

"இதுக்கு மேல போனால் மொத்தமே காட்டுப் பகுதி மட்டும் தான டி இருக்கு..."

"அதான் ஆரா எனக்கும் ஒன்னும் புரியல..."

"என்னமோ பண்ணி வச்சி இருக்கா அவள்..." என்றால் ஆரா...

"ஆரா என்னடி பண்ண போற இப்ப எங்களுக்கு பயமா இருக்கு..." என்றால் தோழிகளுள் ஒருத்தி...

"நான் விஜய் அப்பாக்கு உடனே ஃபோன் பண்ணி சொல்ல போறேன்..." என்று சொல்லி சைரந்தரியின் அப்பா விஜய்க்கு அழைத்தாள் ஆரா....

"விஜய் அப்பாவுக்கா சரி எதுக்கும் இன்பார்ம் பண்ணிடு ஆரா...." என்றால் நவ்யாவும்...

ஆராதனா விஜய்க்கு ஃபோன் செய்ய அழைப்பு போய்க் கொண்டே இருந்ததே தவிர... அதை எடுத்த பாடு தான் இல்லை...

"என்ன டி ஆச்சி..."

"அப்பாக்கு ஃபோன் எடுக்கவே இல்லை நவ்யா...."

"மறுபடியும் டிரை பண்ணு..."

இந்த முறை அழைப்பு ஏற்கப்பட்டது...

"ஆரா பாப்பா அப்பா இம்போர்டன்ட் மீட்டிங்கில் இருக்கேன்... நான் அப்பறம் கூப்பிடவா..." என்றார் விஜய்...

"அப்பா முக்கியமான விஷயம்... ப்ளீஸ் அப்பா உங்க கிட்ட சொல்லனும்..."

"ஆரா எனிதிங் சீரியஸ்..."

"ஆமா... அப்பா... அது... வந்து... சைரா..." என்று அதற்கு மேல் சொல்ல முடியாமல் இருந்தாள் ஆரா...

விஜய் பதட்டமாக... "ஆராமா... சைராக்கு என்ன ஆச்சு டா... சைரா நல்லா தானே இருக்கா..."

"சைராவை காணும் அப்பா.... எங்க போய் இருக்கான்னு தெரியலை... " என்று தொடங்கி மொத்த கதையும் ஒருவழியாக சொல்லி முடித்தாள் ஆரா...

"ஆரா... என்னடா இப்படி பண்ணி வச்சி இருக்கீங்க... நீ ஃபோனை வை... நான் அங்க இருக்கிற கமிஷனர் கால் பண்ணி பேசி... நம்ம சைராவை தேடி சொல்றேன்... நீங்க பயப்படாதீங்க.... என் சைனா குட்டிக்கு ஒன்னும் ஆகாது..." என்று அவளுக்கு ஆறுதல் சொல்லி ஃபோனை வைத்தார்....

"ஆரா... அப்பா என்ன சொன்னாரு..."

"இங்க இருக்கிற கமிஷனர் கிட்ட ஃபோன் பண்றேன்.... போலீஸ் வந்து சைராவ தேடுவாங்க நீங்க பயப்படாதீங்க ன்னு சொன்னாங்க..."

"நாம... இந்த காட்டுக்குள்ளே போய் தேடுவோமா..." என்றால் தோழிகளுள் ஒருத்தி....

"வேணாம் டி... உங்களையும் எங்களால் பிரச்சினையில் மாட்டி விட வேணாம்னு நினைக்கிறேன்... வாங்க எல்லாரும் ரிசார்ட்க்கே போகலாம்..." என்று நவ்யா சொல்ல....

அனைவரும்.... "என்னடி இப்படி சொல்ற... நம்ம சைரா டி..."

"நவ்யா சொல்றது உண்மை தான்... வாங்க நாம போகலாம்... ப்ளீஸ் வாங்க டி..." என்று மனமுடைந்த குரலில் சொன்னால் ஆராதனா...

************

அங்கு விஜய் பதட்டமாக லக்கோவில் இருக்கும் காவல் அதிகாரியிடம் உரையாடிக் கொண்டு இருந்தார்....

*************

சைரந்தரியின் உடல் குளிரில் சன்னி வந்து தூக்கி போட... அலைபேசியில் பேசிக் கொண்டு இருந்த எழில்.... அவளைக் கண்டு ஒடி வர...

அந்த சமயம்... இருட்டில் ஒரு பெரிய கல் தடுக்கி.... எழிலின் அலைபேசி நதிக் கரையில் விழுந்து விட்டது...

ஆனால்... அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் சைராவிடம் சென்றான் எழில்...

எழிலுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை... அவளுடைய நெற்றியில் கை வைத்து பார்த்தான்....

சைராவின் உடல் ஃப்ரிட்ஜில் வைத்த ஐஸ்க் கட்டி போல ஜில்லிட்டு இருந்தது.‌‌...

அவளை கொஞ்ச நேரம் இப்படியே விட்டால்... குளிரில் சன்னி வந்தே இறந்து விடுவாள் என்று அவனுக்கு தெரிந்தது....

அந்த காட்டில்... சைராவை காப்பாற்ற அவனுக்கு ஒரே வழியே இருந்தது...

ஆனால்....

அதைச் செய்ய எழிலுக்கு சங்கடமாக இருந்தது.... அதைச் செய்ய வில்லை என்றால் அவள் உயிருக்கு ஆபத்தாகி விடும் என்றும் அவனுக்கு தெரியும்...

ஏனோ.... அவன் மனம் அவளை காப்பாற்ற துடியாய் துடித்தது...

அவன் மனதை கல்லாகிக் கொண்டு அவனுடைய சட்டையை கழட்டினான்....

"நிலா.... நீ யாருன்னு என்னன்னு எனக்கு தெரியலை.... உன் பெயர் கூட எனக்கு தெரியாது.... உன் முகத்தை கூட நான் இன்னும் பார்க்கல.... உன் சுயநினைவு இல்லாமல் உன் கூட இப்படி செய்வது தப்புன்னு எனக்கு தெரியும் நிலா... பட்... உன்னை காப்பாற்ற சொல்லி என் மனசு சொல்லுது... அதனால் நான் உன் கூட சேர போறேன்... என்னை மன்னிச்சிடு நிலா... உனக்கு நான் துரோகம் பண்ணல... உன் உயிரை காப்பாற்ற மட்டுமே இப்படி பண்றேன் நிலா... கண்டிப்பா உன்னை கை விடமாட்டேன்... உன்னுடைய கையை கண்டிப்பா பிடிப்பேன்... உன்னுடைய கணவனா... இது நான் உனக்கு பண்ற சத்தியம் நிலா.... அதுக்கு இந்த பௌர்ணமி நிலவு மட்டும் தான் சாட்சி...." என்று கண் முடி இருக்கும் சைராவிடம்.... அவனுடைய நிலாவாக நினைத்து சொன்னான் எழில்வேந்தன்...

இதைச் சொல்லி விட்டு... அவளுடைய உயிரை காப்பாற்ற... அவளோடு இரு உடல் ஒர் உயிராக கலந்தான்....

எழில்வேந்தன் உடலின் வெப்பம்... சைரந்தரியின் உடலுக்குள் குடி புகுந்தது....

எல்லாம் முடிந்தது....

சைராவின் உடலின் குளிர் கொஞ்சம் குறைந்தது... ஆனால்... அவள் கண்கள் விழிக்கவே இல்லை...

அப்போது....

எழிலின் வாக்கி டாக்கி கத்தியது‌....

**********

எனக்கே இது ரொம்ப கஷ்டமாக தான் இருந்தது 🥺🥺🥺

உங்கள் கருத்துக்களை கமெண்ட் பெட்டியில் சொல்லிட்டு போயிடுங்க செல்லம்ஸ்

Urs...
Kani 😍🙈

வாசகர்களுக்கு பரிசு 😍
👇👇👇👇👇
 

Rajam

Well-known member
Member
இதன் விளைவு என்ன ஆகுமோ.
இந்த சூழ்நிலைய எல்லோரும் புரிந்து கொள்வார்களா.
எனறாள் னு வரனும்
 

Baby

Active member
Member
ஒரு ட்ரீட்மென்டா பன்னான் ரைட்டூ.. அவள் யாரு பேர் என்னனு தெரியாது அவ முகம்கூட அவன் பாத்திருக்க வாய்ப்பில்ல... அப்டி இருக்கைல எந்த நம்பிக்கைல அவளைக் கை பிடிப்பேன்னு சொல்றான்
 

Latest profile posts

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 🤩
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 7 😎👇

New Episodes Thread

Top Bottom