உயிர் - 2

உனை கொடுத்து.. உயிர் கொடுத்தாய்..

லக்கோ...

ஒரு அழகான நவினமான ரிசார்ட்.... அங்கே ஸ்விம்மிங் ஃபூல் அருகே உட்கார்ந்து கதைப் பேசிக் கொண்டு இருந்தார்கள்.... சுற்றுலாவிற்கு வந்த கல்லூரி மாணவிகள்....

"ஏண்டி ஆரா.... நீ சைரா கூட போகாமல்.... அதிசயமா எங்க கூட உட்கார்ந்து கதை பேசிட்டு இருக்க...." என்றால் அந்த கூட்டத்தில் இருந்த ஒருத்தி...

"அப்படி எல்லாம் இல்ல டி... எனக்கு டயர்டா இருக்கு... நாளைக்கு சுத்தி பார்க்க போகலாம் இப்ப வேணாம் பேயேன்னு சொன்னால் எங்க கேக்குற இந்த சைரா பக்கி... அதான் அவகிட்ட கெஞ்சி கூத்தாடி... காலில் விழுந்து... என்னால எங்கயும் வர முடியாது ஆத்தா... நீ வேணா நம்ம நவ்யாவை கூட்டிட்டு... எங்க வேணா ஊரை சுத்த போன்னு அனுப்பி வச்சேன்...." என்று சொல்லி சிரித்தாள் ஆரா....

"துதுது.... காலில் விழுந்ததை இவ்வளவு பெருமையா சொல்ற...." என்று சொல்லி சிரித்தாள் இன்னொரு தோழி....

"ஹிஹி.... வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணம் பேபிஸ்..." என்று சொல்லி இளித்தால் ஆரா....

"ஏய் ஆரா... அங்க பாரேன்... சைரா இல்லாமல் நவ்யா மட்டும் தனியா வரா பாருடி...." என்று சொல்லி நவ்யா வரும் திசையை காட்டினால் ஒருத்தி....

"எங்கே டி..." என்று சொல்லி ஆராவும் நவ்யா வரும் திசையை பார்த்தால்....

நவ்யாவிடம்..‌‌.. "ஏய் நவ்யா... சைரா எங்க டி... நீ மட்டும் தனியா வர..."

"அவள் தான் என்னை போக சொல்லிட்டா மச்சி..." என்றாள் நவ்யா...

"அவள் அப்படி எல்லாம் சொல்ல மாட்டாளே நவி..."

"அப்படி தான் சைரா என்கிட்ட சொன்னாள் ஆரா..."

"அவளுக்கு இருட்டுன்னா ரொம்ப பயம் தான டி... அப்புறம் ஏன் உன்னை அனுப்பிட்டா அந்த பேய்...." என்று குழம்பினாள் ஆரா....

"ஆமா தான்... பட் என்னன்னு தெரியலை ஆரா... சைரா என்னை அனுப்பிட்டா... நான் இருக்கேன்னு சொன்னேன்.... பட்... அவள் என் பேச்சை கேட்கலை..." என்று சொல்லி கொண்டு இருந்தாள் நவ்யா....

"என்னமோ சரி இல்ல..." என்று மனதில் நினைத்தால் ஆரா என்ற ஆராதனா...

************

இரண்டு நாட்களுக்கு முன்பு.....

சென்னை
சைரந்தரி இல்லம்.....

ரொம்ப நேரமா ரூமை கலைச்சி போட்டு கொண்டு இருந்த மகளை கிச்சனில் இருந்து அழைத்தார் ஶ்ரீஜோதி.....

"சைரா குட்டி..."

"....."

"சைரா..."

"...."

பதில் ஏதும் வராததால்.... அவரே படி ஏறி அவளின் அறைக்கு சென்று.... "அடியேய் சைரந்தரி.... எவ்வளவு நேரம் கூப்பிடுறேன்... என்னன்னு கேட்டா வாய் வலிக்குமா உனக்கு..." என்றார் ஜோதி...

"என்ன ஜோதி ம்மா... கத்திக் கிட்டே இருக்க...." என்று சொல்லி விட்டு அவளின் வேலையை தொடர்ந்தால் சைரா..‌‌.

"ஒரு டூர் போக எவ்வளவு அலப்பறை பண்ணுற டி நீ... எப்படி ரூமை கலைச்சி போட்டு வச்சிருக்கன்னு பாரு"

சுற்றி முற்றி பார்த்து விட்டு.... "ஹிஹி..." என்று பல்லைக் காட்டினாள் சைரா...

"பல்லை காட்டாத சைரா...."

"ஹான்.‌‌... நீயும் டூர் போயி பாரு எவ்வளவு கன்பியுஷன் (confusion) வரும்னு... அப்ப தெரியும் ம்மா உனக்கு..."

"ஆமாடி... நான் பெத்த ரத்தினமே... எனக்கு ஒன்னுமே தெரியாது பாரு... நானும் காலேஜில் ப்ரோஃபசரா (professor) வேலை செய்தவள் தான்.... " என்று சொல்லி கொண்டு இருந்தார் ஜோதி....

"அட.... போ ம்மா அங்குட்டு போய் பேசிக்கோ... இங்க எனக்கு வேலை இருக்கு..."

"ஹ்ம்ம்... ரொம்ப தான்... போடி நான் போய் என் வேலையை பார்க்குறேன்..."

"போயி.... அதை செய் செல்லக் குட்டி..."

"சோத்துக்கு என் கிட்ட தான் வரணும்.... அப்ப சொல்றேன்..." என்று கத்திக் கொண்டே சென்றார் ஜோதி....

சுற்றுலாவிற்கு செல்ல தேவையான அனைத்தையும் எடுத்துக் வைத்து அவள் அப்பா விஜய் நாராயணன் அறைக்குள் நுழைந்தாள்....

"டேடி..."

"என்ன சைரா மா..."

"நான் நாளைக்கு டூர் போக போறேன்..."

"அப்படியா குட்டிமா.... பார்த்து பத்திரமா போய்ட்டு வரணும் சைரா..."

"ம்ம் சரி அப்பா... நாளைக்கு என்னை வழி அனுப்ப வர மாட்ட தான ப்பா..." என்று சோகமாக சொன்னாள் சைரா....

"அச்சோ... செல்லக்குட்டி அப்பாக்கு டியூட்டி இருக்கு... அதான் குட்டிமா... சாரி சைரா மா..." என்று காதை பிடித்து கொண்டு சொன்னார் விஜய்....

சைரா சிரித்து விட்டு... "சரி சரி... இந்த சைரா அப்பாவை மன்னிச்சிட்டா...." என்று அவரை அணைத்துக் கொண்டாள்...‌

"என் செல்ல பொண்ணு சைரா...."

"ஆமா ஆமா...
லவ் யூ விஜய் ப்பா..."

"லவ் யூ டூ சைரா குட்டி..." என்று சொல்லி சைராவின் நெற்றியில் முத்தம் கொடுத்தார் விஜய்....

அப்புறம் கொஞ்சம் நேரம் விஜய்யிடம் கொஞ்சி விட்டு பூனைக் குட்டியைப் போல் ஒரு அறைக்குள் நுழைந்தாள் சைரந்தரி....

அங்கு யாரும் இல்லை... ஆனால்.... பாத்ரூமில் மட்டும் குளிக்கும் சத்தம் கேட்டது....

அந்த நுழைந்ததுமே கண்ணில் பட்டது டைரிமில்க்... அதை எடுத்து சாப்பிட்டு... கவரை மட்டும் பத்திரமாக அங்கேயே வைத்து விட்டாள்....

பாத்ரூமில் இருந்து குளித்து முடித்து வந்தவனை பார்த்து....

"ராகி..." என்று பல்லை காட்டினால் சைரா...

"அடிங்க... ராகி... கேழ்வரகு ன்னு சொன்ன... அக்கான்னு கூட பார்க்க மாட்டேன் டி..‌ மண்டையில் கொட்டிடுவேன்.... ஜாக்கிரதை..." என்று எச்சரித்தான் அவன்....

"ஹாஹா... விட்றா விட்றா... உன் அக்கா பாவம்ல..."

"எதுக்கு... என்ன கூப்பிட்ட விளக்கு திரி..."

"டேய்.... விளக்கு திரின்னு சொல்லாத... சைரந்தரின்னு எவ்வளவு அழகான பேர் இருக்கு எனக்கு...."

"சரி சொல்லு... திங்க என்ன வேணும் உனக்கு..."

"ஹிஹி...."

"கேவலமா சிரிக்காம சொல்லுடி..."

"பிரியாணி வேணும் டா என் செல்ல ராஹித்யா தம்பி..."

அவன் கேவலமாக ஒரு லுக் விட்டான்...

"லுக்கை அப்புறம் விடு தங்கோ... இப்ப போய் பிரியாணி வாங்கிட்டு வா.... போ ராசா... போ...." என்று சொல்லி தம்பிக்கு ஐஸ் வைத்தால் சைரந்தரி....

பிறகு... பாவம் போனால் போகிறது என்று சைராவுக்கு பிரியாணியை வாங்கி வந்து கொடுத்து விட்டான் ராஹித்யா....

ஹா‌ஹா.... ஆனால்... வாங்கி வந்தவனுக்கே தராமல் ஒளித்து வைத்து சாப்பிட்டால் சைரா...

(சரி.... வாங்க நம்ம சைராவை பற்றி பார்க்கலாம் 🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️)

விஜய் நாராயணன் - ஶ்ரீஜோதி தம்பதிகளுக்கு ஒரு மகள்.... சைரந்தரி... ஒரு மகன்.... ராஹித்யா...

விஜய் நாராயணன்.... டெபுட்டி கமிஷனர் ஆஃப் போலீஸ்... ஶ்ரீஜோதி.... காலேஜ் ப்ரோபஃசர்.... ஆனால்... கொஞ்சம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வேலையை விடச் சொல்லி சைரந்தரியின் கட்டளை..... அதனால் ரீசைன் பண்ணிட்டார்....

சைரந்தரி.... 21 வயது நிரம்பிய பாவை.... எம். பி. ஏ. (MBA) இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கிறாள்.... வீட்டிற்கு சுட்டிக் குழந்தை... செல்லப் பெண்... அனைவரிடமும் அன்பை பொழிபவள்... குணமான பெண்... நட்புக்கு முதலிடம் அளிப்பவள்... காதலுக்கு தடை போட்டு இருப்பவள்...

ராஹித்யா.... 20 வயது ‌ஆடவன்.... என்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படிக்கிறான்... சைராவின் ஃபைட்டிங் பார்ட்னர்.... பட்... எவ்வளவு தான் சண்டை போட்டாலும்.... இருவருக்கும் அன்பு கடலளவு இருக்கும்....

சைரந்தரி.... ஆராதனா.... நவ்யா.... மூவரும் பள்ளியில் இருந்தே இணைப் பிரியாத் தோழிகள்.... இதில் சைராவும் ஆராவும்.... ரொம்பவே ரொம்ப நெருக்கம்....

**********

மீதியை நாளைக்கு பார்க்கலாம் 😅😅😅😅

உங்கள் கருத்துக்களை கமெண்ட் பெட்டியில் போட்டுட்டு போங்க செல்லம்ஸ்😍😍😍

Urs...
Kani 😍🙈
 

Baby

Active member
Member
சுட்டி பெண் சைரா... ரொம்ப குட்டி எப்பியா இருக்குதே
 

Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom