உயிர் ‌- 9

உனை கொடுத்து.. உயிர் கொடுத்தாய்..


டாக்டர் அனிதாவிடம்.... "டாக்டர்... என்ன நினைச்சிட்டு இருக்கீங்க... நீங்க என்ன சொல்றீங்க... இது எப்படி பாஸிபில்... என் பெண்ணுக்கு நாங்க வேற டாக்டர் பார்த்து செக் பண்ணி கொள்கிறோம்..." என்று கோபத்தில் கத்தினார் விஜய்...

"சார்... நான் சொல்ல வருவதை சொல்ல விடுங்க... ப்ளீஸ்... இப்ப எமோஷனல் ஆகி கத்தாதீங்க சார்... ப்ளீஸ் லிசன் டூ மீ சார்..‌" என்றார் அனிதா..

அவரும் தன் உணர்வுகளை கட்டுப் படுத்திக் கொண்டு... "சரி சொல்லுங்க அனிதா..." என்றார் விஜய்...

டாக்டர் அனிதா பொறுமையாக அவர்களிடம் பேச தொடர்ந்தார்....

"நீங்க சொல்வது போல... இது நிச்சயமாக பாஸிபில் இல்லை தான் கமிஷனர் சார்... பட் இது எப்படி நடந்தது என்று எனக்கும் தெரியலை... நிஜமாகவே இது மெடிக்கல் மிராக்கல்... கண்டிப்பா இது காட் கிரேஸ் தான் சார்... பிகாஸ்... இதுக்கு சான்ஸே இல்ல... ஒரு பொண்ணு கோமாவில் இருக்கும் போது குழந்தை உருவாக வாய்ப்புகள் ரொம்ப ரொம்ப கம்மி தான்... ஆனால்... அதுவே ஏற்கனவே ஒரு பொண்ணு கற்பமாக இருக்கும் போது... அதாவது ஒரு முன்று அல்லது ஐந்து ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கும் போது கூட அந்த பெண் ஏதோ ஒரு காரணத்தால் கோமாவுக்கு போயிட்டா‌‌... ஒருவேளை அந்த பெண் வயிற்றில் இருக்கும் குழந்தை பாதுகாப்பாக இருந்தால்... அம்மா கோமாவில் இருந்தாலும் குழந்தை நல்லாவே வயிற்றுக்குள் வளர்ந்து வரும்... அதுக்கான ஊட்டச் சத்து மட்டும்..‌ டாக்டர்ஸ் கொடுத்தால் போதும்... இதில் குழந்தையும் பாதுகாப்பாக பிறந்து இருக்கு....இந்த மாதிரி நிறைய கேஸ் நடந்து இருக்கு சார்... அதுவும் தாயும் சேயும் நலமாக தான் இருந்து இருக்காங்க... நிறைய கேஸில்.. குழந்தை பிறந்த பிறகு... குழந்தையால் அம்மா கோமாவில் இருந்து நினைவு திரும்பி இருக்காங்க... பட்.. உங்க சைரந்தரி விஷயம் ரொம்ப புதுசு தான் சார்..." என்று பொறுமையாக விளக்கி கொண்டு இருந்தார் அனிதா...

"என் பொண்ணு சைரா வயிற்றில் இருக்கும் குழந்தையை கலைச்சிடுங்க டாக்டர்..." என்று இறுகிய மனதோடு சொன்னார் ஜோதி...

ஶ்ரீஜோதியின் கன்னத்தில் விழுந்தது ஒரு அறை... அடித்தது வேறு யாரும் இல்லை... விஜய் நாராயணன் தான்...

"இப்ப எதுக்கு என்னை அடிக்குறீங்க... அந்த குழந்தை நமக்கு எதுக்கு... என் பொண்ணு மட்டும் எனக்கு போதும்... அதுக்கு தான் அந்த குழந்தையை கலைக்க சொன்னேன்... இப்பவே அவ சுய நினைவு இல்லாமல் கிடக்கா... நாளைக்கே அவள் கண் முழிச்சா அவ வயிற்றைப் பார்த்து என்னமா இதுன்னு என்னை கேட்டால்... நான் என்னன்னு சொல்வேன் நீங்களே சொல்லுங்க... நம்ம பொண்ணை காப்பாற்றிய மகராசன் எங்க இருக்கான்னே தெரியலை... இப்ப அவனோட குழந்தை வேற இவள் வயிற்றில் வளருது... என் பெத்த வயிறு பத்தி எரியுது... என் மக எவ்வளவு கஷ்டத்தை தான் அனுபவிப்பா... அவளும் மனுஷி தான..." என்று மனதில் உள்ள பாரத்தை சொல்லி... அழுது கண்ணீர் வடித்தார் ஜோதி...

இப்போது விஜய்யால் வாயை திறக்க முடியவில்லை... ஏனெனில்.. ஜோதி சொன்னது அனைத்தும் உண்மை தானே... அதனால்... பேச வார்த்தைகள் இல்லாமல் மௌனமாய் இருந்தார்...

பிறகு....

"என்ன இருந்தாலும் நீ இப்படி பேசுவது தப்பு ஶ்ரீ..." என்றார் விஜய்...

"எது தப்பு... என் சைரா வாழ்க்கை தான் எனக்கு முக்கியம்..."

"நீயும் ஒரு பொண்ணா இருந்து... ஒரு குழந்தையை கலைக்கனும் என்று சொல்வது ஒரு பாவம்..."

"அப்படிங்களா சரி நான் பாவம் பண்ணவளாவே இருந்து கொள்கிறேன் சாமி... இது வரை நான் செய்த புண்ணியம்... நான் என் பிள்ளைகளுக்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கியது... போதும் எல்லாமே போதும்...." என்று சொல்லி கை எடுத்து கும்பிட்டார் ஜோதி...

"நீ பைத்தியக்கார தனமான பேசிக் கிட்டு இருக்க ஶ்ரீ..."

"பரவாயில்லை... என் முடிவு இது தான்.. என் சைரா வயிற்றில் இருக்கும் குழந்தையை கலைச்சி தான் ஆகனும்..." என்று பிடிவாதமாக சொன்னார் ஜோதி...

அவ்வளவு நேரம் கணவன் மனைவியின் உரையாடலில் பேசாமல் அமைதி காத்த அனிதா... இப்பொழுது வாயை திறந்து...

"அது முடியாது மேடம்...." என்றார்

"எது முடியாது டாக்டர்..." என்று கேட்டார் ஜோதி...

"உங்கள் மகளுடைய வயிற்றில் இருக்கும் சிசுவை கலைக்க முடியாது மேடம்... கலைக்கவும் கூடாது.‌..

"ஏன்..." என்று எதுவும் புரியாமல் கேள்வி எழுப்பினார் ஜோதி..

"நார்மலா இருப்பவர்கள் கருவை கலைத்தாலே அதில் ஆயிரத்து எட்டு பிரச்சினை வருது மேடம்... சைரந்தரி கோமாவில் இருக்காங்க... அவங்க கருவை கலைக்க கூடிய நிலையில் அவங்க உடம்பு இல்ல மேடம்... அப்படியும் கருவை கலைத்தால் அது அவங்க உயிருக்கு நிச்சயமாக ஆபத்து இருக்கு..." என்று சொல்லி முடித்தார் அனிதா...

இதற்கு எந்த ஒரு பதிலையும் சொல்ல முடியாமல் சிலை போல மனமுடைந்து நின்றார் ஜோதி....

கொஞ்ச நேரம் முன்பு... நன்றி சொன்ன கடவுளுக்கு இப்போது மனதில் சாபம் விட்டு கொண்டு இருந்தார்...

"இதுக்கு வேற வழியே இல்லையா டாக்டர்..." என்று அனிதாவிடம் கேட்டார் விஜய்...

"இல்ல சார்‌.." என்று தீர்மானமாக சொன்னார் டாக்டர் அனிதா...

"சைராவுக்கு காய்ச்சல் அடிக்குதே டாக்டர்..."

"அது ஒன்னும் இல்ல சார்... இதுவும் கர்ப்பத்தின் ஒரு அறிகுறி தான்... வேற ஒரு பிரச்சனையும் இல்லை... சைரந்தரி பாடில நிறைய முன்னேற்றம் தெரியுது... எப்ப வேணும்னாலும் அவளுக்கு நினைவு திரும்பலாம்..." என்று சொல்லி விட்டு... சைராவுக்கு கொடுக்கும் மருந்து லிஸ்ட்டை கொடுத்து விட்டு... கிளம்பிவிட்டார் அனிதா...

***********

இனியவனும் எழில் வேந்தனும் பிளைட்டை கேன்சல் செய்து விட்டு... இரயிலில் தங்களின் பயணத்தை மேற் கொண்டனர்...

எல்லாம் இந்த எழிலின் பிடிவாதம் தான்....

நன்றாக உறங்கி கொண்டு இருந்த இனிவயனை சொறிந்து... "இனியன்..." என்று எழுப்பினான் எழில்வேந்தன்...

"தூங்கறியா..."

"இல்ல என் பொண்டாட்டி கூட ஹனிமூன் போறேன்..." என்று கடுப்பாகி சொன்னான் இனியன்...

"எதுக்கு இப்படி கத்துற... அங்க பாரு வானத்தில் இருக்கும் நிலா எவ்வளவு அழகா இருக்கு..."

"எப்பா சாமி.... உனக்கு காதல் வந்தாலும் வந்தது... உன் தொல்லை என்னால தாங்க முடியல எழில்... எப்பவும் நான் தான் உன்னை படுத்தி எடுப்பேன்... இப்ப என்னடான்னா நீ என்னை துண்டை காணோம் துணியை காணோம்னு ஓட வைக்குற எழில்..." என்று வெறுப்பாகி சொன்னான் இனியவன்....

"ச்சீ பே... எதுவும் பேசாமல் முடிட்டு படு..." என்று சொல்லி எழில் தூங்க விட்டான்...

தலையில் அடித்து கொண்டு... "அடப்பாவி கிராதகா... இப்படி தூக்கத்தில் இருந்தவனை எழுப்பி விட்டு... நிலாவை பாரு உங்க எதிர் வீட்டு ஆயாவை பாரு என்று சொல்லிட்டு... இப்ப என்னையே முடிட்டு படுன்னு சொல்லி... இந்த பக்கி என்னை திட்டி விட்டு தூங்குறான் எருமை மாடு.‌. இந்த கொடுமையை எல்லாம்... நான் எங்கே போய் சொல்லுவேன் கடவுளே..." என்று புலம்பிக் கொண்டே தூங்கினான் இனியவன்..‌

ஒருவழியாக புது விடியலும் வந்தது... சென்னையும் வந்தது....

இவர்கள் இருவரின் வாழ்வும் இது போல் புத்தம் புது விடியலை காணுமா....

எழில் வேந்தனை காண ஒருவர் இரயில்வே ஸ்டேஷனில் நின்று கொண்டு இருந்தார்...

யார் அந்த ஒருவர் என்று நாளைக்கு பார்ப்போம் செல்லம்ஸ்😁😁

********

ஒன்னு சொல்லனும்...

நான் கதையில் சொன்னது தான்... கோமாவில் இருக்கும் போது ஒரு பெண் கர்ப்பமாக முடியுமா அதுக்கு வாய்ப்புகள் இருக்கான்னு எனக்கு தெரியாது... ஆனால் ஏற்கனவே கர்ப்பமா இருந்து பிறகு கோமாவிற்கு சென்றால்... அந்த குழந்தை வயிற்றில் வளரும்... குழந்தையும் பிறக்கும்... அதாவது ஆப்ரேஷன் பண்ணி பேபியை எடுப்பாங்க... இது எனக்கு நிச்சயமாக தெரியும்... சைரா கர்ப்பம் தரித்தது இதை கதைக்காக நானாக கொண்டு வந்து இருக்கிறேன்...

இதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள எண்ணினேன் செல்லம்ஸ் அவ்வளவு தான் 😜😜😜😜

உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்து விட்டு போங்கள் செல்லம்ஸ் 😍😍😍😍

Urs...
Kani 😍🙈
 
நல்லா சிறப்பா பண்றீங்க சிஸ்... கடைசி வரைக்கும் சைரா கோமால இருக்கானு சொல்லிட்டே இருப்பீங்களா சிஸ்..
 

Latest profile posts

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 🤩
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 7 😎👇

New Episodes Thread

Top Bottom