உயிர் ‌- 8

உனை கொடுத்து.. உயிர் கொடுத்தாய்..

எழில் சொல்லி முடிப்பதற்குள் அதை கேட்டு இடி விழுந்ததை போல இருந்தது.... அதிர்ச்சியை தாங்க முடியாமல் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டான் இனியவன்....

"இப்ப எதுக்கு இனியன் இப்படி உட்கார்ந்து கிட்டு இருக்க.‌‌..."

"பின்னே வேற என்ன பண்ண சொல்ற எழில்... அந்த பொண்ணு யாரு என்ன எதுவும் தெரியாது... ஏன் அவளுடைய மூஞ்சி கூட உனக்கு தெரியாது... இப்போ அந்த பொண்ணை கண்டு பிடிக்க வழி எங்க டா இருக்கு..." என்று விரக்தியாக சொன்னான் இனியவன்...

"இல்ல நான் என் நிலாவை கண்டு பிடிப்பேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு..." என்று சொன்னான் எழில்...

"எப்படி எழில்... கேரளாக்கு போய் உன் முகம் தெரியாத நிலாவை வெத்தலையில் மை போட்டு கண்டு பிடிக்க போறியா..."

"ஜோக்ஸ் அபார்ட் இனியா... நான் சொல்வதை கேளு..."

"சரி சொல்லி தொலை..."

"என் நிலாவோட இடது கையில் ஒரு வித்தியாசமான ஏதோ இருந்தது... ஹ்ம்ம் அதை பார்க்கும் போது ஒரு மச்சம் மாதிரி இருந்தது..."

"அது அந்த பொண்ணு போட்டு இருக்கும் டேடோவா (tatoo) இருந்தால்..."

"இல்ல இனியன்... அப்படி இருக்க வாய்ப்பு இல்லை... சின்ன வயசுல நான் என் பாட்டி சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்.... ஒரு சிலருக்கு அவங்க குடும்பத்தோட அடையாளமா இந்த வித்தியாசமான மச்சங்கள் கூட வழி வழியாக கூட வர வாய்ப்பு இருக்காம்...."

"இதை எல்லாம் நீ நம்பிட்டு இருக்கியா எழில்..."

"நேற்று வரை இது மேல எல்லாம்... எனக்கும் நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தது... பட் இப்ப நம்ப தோணுது இனியன்..." என்றான் எழில்

"என்னமோ போ... நீ சரி இல்லை எழில்... மொத்தமா மாறி போயிட்டா.... அந்த முகம் தெரியாத பொண்ணு உன்னை மாற்றிட்டா..."

"அதை விடு நீ உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டீயா..."

"இப்ப நீ உடனே சென்னைக்கு போய் உன் போலீஸ் வேலையில் சேர்ந்தே ஆகனுமா..."

"நீயும் தான என் கூட வர போற... நான் மட்டும் தனியா போகலையே..." என்றான் எழில் வேந்தன்...

"திருந்த மாட்ட... திருந்தவே மாட்ட எழில்... வா இப்ப சென்னைக்கு பறந்து போகலாம்..." என்று சொல்லி விட்டு போனான் இனியவன்...

எழில் வேந்தனும்... இனியவனும் ஃபிளைட்டில் சென்னைக்கு பறந்தனர்....

************

சென்னை....
சைரந்தரி வீடு...

என்றும் போல் இன்றும் சைராவை பார்த்து கொள்ள ஏற்பாடு செய்த நர்ஸ் வளர்மதி வீட்டுக்கு வந்தால்...

அவள் சைரந்தரிக்கு குளுகோஸில் காலையில் போட வேண்டிய மருந்துகளை எல்லாம் சரியான அளவில் போட்டு விட்டு...

"ச்சே... இந்த பொண்ணுக்கு எப்ப தான் குணமாகுமோ தெரியலை... எனக்கு தான் இங்க ரொம்ப போர் அடிக்குது... சரி இந்த ஃபோனை ஆச்சு பார்ப்போம்..." என்று மனதில் நினைத்து விட்டு சேரில் உட்கார்ந்து ஃபோனை பார்த்து கொண்டு இருந்தாள் வளர்மதி...

கொஞ்ச நேரத்தில் கோவில் போய் இருந்த ஜோதி வீட்டிற்கு வந்தார்...

சைனாவின் அறைக்கு சென்று... தினமும் செய்வது போல் இன்றைக்கும்... அவள் நெற்றியில் திருநீறு வைப்பதற்காக அவள் அருகில் சென்றார்...

ஜோதி சைராவை தொட்டால் அவளின் உடம்பு நெருப்பு மாதிரி கொதித்து கொண்டு இருந்தது....

சைராவின் நிலையை கண்டு... "வளர்மதி... என் பொண்ணை என்ன லட்சணத்தில் பாத்துக்குற... அவ உடம்பு அனலா சுடுது... நீ உட்கார்ந்து அந்த வீணா போன ஃபோனை நோண்டிட்டு இருக்க..." என்று பதறி போய் சொல்லி அந்த நர்ஸ் வளர்மதியை திட்டினார் ஜோதி...

அவளும் சைராவின் நெற்றியை தொட்டு பார்த்து..."மேடம்.. மேடம் சாரி மேடம் நான் கவனிக்க வில்லை..." என்று சொல்லி விட்டு டாக்டருக்கு ஃபோன் செய்தாள்...

இதற்கு மேல் அந்த வளர்மதியை திட்டினால் எந்த ஒரு பலனும் இல்லை என்று நினைத்த ஜோதி... உடனே விஜய் நாராயணனுக்கு அழைத்து... உடனடியாக வீட்டிக்கு வரும் படி ஃபோனில் அழைத்தார்...

அப்போது தான் ஜோதி கவனித்தார்... சைரந்தரியின் உடலில் சிறு சிறு கை அசைவுகள் தென்படுவதை... இதை கண்டு அவருக்கு சந்தோஷமாக இருந்தது... தன் மகள் உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்து வருகிறாள் என்று மகிழ்ச்சியுடன் கடவுளுக்கு நன்றி சொன்னார்...

இந்த மகிழ்ச்சி இன்னும் கொஞ்ச நேரத்தில் இருக்கும் இடம் தெரியாமல்... காணாமல் போக போகிறது என்பதை அறியாமல் சந்தோஷமாக இருந்தார் ஶ்ரீஜோதி...

அரை மணி நேரத்தில் விஜய் காரில் பறந்து கொண்டே வீட்டிற்கு வர... அதே சமயம் டாக்டரும் வந்து கொண்டு இருந்தார்...

"கமிஷனர் சார்..." என்று சொன்னார் டாக்டர் அனிதா...

"டாக்டர்... சைரந்தரிக்கு காய்ச்சல் என்று என் மிஸஸ் சொன்னாங்க..."

"ஆமா சார்... நான் இப்பவே என்னன்னு பார்க்கிறேன்..." என்று சொல்லி சைராவின் அறைக்கு சென்றார் டாக்டரும் விஜய்யும்...

"நர்ஸ்... அவங்களுக்கு போட வேண்டிய மெடிசன்ஸ் எல்லாம் குளுகோஸில் கரெக்டா போட்டீங்களா..." என்று கேட்டுக் கொண்டே அவருடைய ஸ்டெதாஸ்கோப்பை (stethoscope) எடுத்தார் டாக்டர் அனிதா...

"எஸ் டாக்டர்... மெடிசன்ஸ் எல்லாம் இவங்களுக்கு சரியா கொடுத்துட்டேன்..." என்று சொன்னாள் நர்ஸ் வளர்மதி...

சைரந்தரியை செக் பண்ணி கொண்டு இருந்தார் அனிதா...

குழந்தையை பெற்ற அன்னையின் மனம் பதறித் கொண்டே... "டாக்டர் என் பொண்ணுக்கு எப்படி இருக்கு... நல்லா தான இருக்கு... உடம்புக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே..." என்று கேட்டார் ஜோதி....

"ஶ்ரீ டென்ஷன் ஆகாத..." என்று சொல்லி அவரின் தோளை தட்டிக் கொடுத்தார் விஜய்...

ஒரு நிமிடம் அனைவரையும் பார்த்த டாக்டர்...

"வளர்மதி..."

"சொல்லுங்க டாக்டர்... ஏதாவது வேணுமா..." என்றால் வளர்மதி...

"எனக்கு ஒன்னும் வேணாம்... நீ டோர லாக் பண்ணிட்டு வெளியே போ.‌." என்றார் அனிதா...

"ஓகே டாக்டர்..." என்று சொல்லி விட்டு வெளியே சென்றால் வளர்மதி...

"டாக்டர் நானும் வெளியே போறேன்..." என்று சொல்லி விட்டு வெளியே சென்ற விஜய்யை தடுத்தார் அனிதா....

"வேணாம் சார்... உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேச தான்... நான் வளர்மதியை வெளியே போக சொன்னேன்...." என்று தயங்கி தயங்கி சொன்னாள் அனிதா...

"அம்மாடி... என் மக சைராவை நல்லா இருக்கா தான... ஏதும் பிரச்சினை இல்லையே..." என்று பயந்து கொண்டே கேட்டார் ஜோதி...

"டாக்டர்... எனிதிங்க் சீரியஸ்..." என்றார் விஜய்...

"ம்ம் ஆமா சார்..."

"என்னாச்சு ன்னு சொல்லுங்க அனிதா.." என்றார் விஜய்...

"சைரந்தரி இஸ் பிரக்நண்ட் (pregnant)" என்று சொல்லி பெரிய குண்டை தூக்கிப் போட்டார் டாக்டர் அனிதா...

இதை கேட்டு இருவருக்குமே அதிர்ச்சி ஆகி விட்டது...

"என்னங்க... என்னங்க.. இந்த டாக்டர் என்ன என்னமோ உளரிட்டு இருக்காங்க... நீங்க என்னன்னு கேளுங்க..." என்று கத்தினார் ஜோதி...

"ஶ்ரீ... ஶ்ரீ... நீ பொறுமையா இரு... உனக்கு பிபி ரைஸ் ஆகிட போகுது..." என்று சொல்லி ஜோதியை சமாதானம் செய்து விட்டு கொண்டு இருந்த விஜய்...

அனிதாவிடம்.... "டாக்டர்... என்ன நினைச்சிட்டு இருக்கீங்க... நீங்க என்ன சொல்றீங்க... இது எப்படி பாஸிபில்... என் பெண்ணுக்கு நாங்க வேற டாக்டர் பார்த்து செக் பண்ணி கொள்கிறோம்..." என்று கோபத்தில் கத்தினார் விஜய்...

அனிதா அவர்களிடம் பேச தொடங்கினார்.....

********

நீங்களும் அதிர்ச்சி ஆகி விட்டீர்களா செல்லம்ஸ் 😯😯😯😯 வாய்க்குள் கொசு போயிட போகுது 🤣🤣🤣

உங்கள் பொன்னான கருத்துக்களை கமெண்ட் பெட்டியில் சொல்லிட்டு போயிடுங்க செல்லம்ஸ் 🤩😍😘😘

Urs...
Kani 😍🙈
 
சைரா இன்னும் கண்ணு முழிக்கலனு சொன்னா அதுக்குள்ள கரப்பம்னு சொல்றீங்க சரியில்ல சிஸ்..
 

Baby

Active member
Member
இப்ப இன்ஸிடென்ட் நடந்து எவ்ளோ நாள் ஆகுது.. கோமாக்கு போயிட்டா எப்டி பேபி வளரும் ... இட்ஸ் பாஸிபிள்....
 

Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom