உயிர் ‌- 7

உனை கொடுத்து.. உயிர் கொடுத்தாய்..

முன்று மாதங்களுக்கு பிறகு....

உத்திர பிரதேசம்

அது ஒரு பெரிய... அழகிய... நவின தரம் கொண்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை....

அங்கு ஒரு அறைக்குள் நுழைந்த டாக்டர்... அங்கிருந்த வரை பார்த்து...

"மிஸ்டர்.. எழில் வேந்தன்..." என்றார்...

"ஹாய் டாக்டர்..." என்று சொல்லி லேசாக புன்னகைத்தான் எழில்....

"ஹவ் இஸ் யூர் ஹெல்த்..." என்றார் அந்த டாக்டர்....

"ம்ம்ம்... தட்ஸ் ஃபைன் நொவ் டாக்டர்..." என்று எழில் சொல்லி கொண்டு இருக்கும் போதே...

இனியவன் உள்ளே நுழைந்தான்...

"உன்‌ ஃபைன்ல சொறி நாய் வந்து கடிக்க..." என்றான்...

"ஆராம்பிச்சிட்டீயா..." என்று சலித்து கொண்டான் எழில்...

"டாக்டர் நிஜமாகவே இவனை டிஸ்சார்ஜ் பண்ணலாமா... இல்ல இங்கேயே இருக்கலாமா???.." என்று சந்தேகம் கேட்டான் இனியன்...

"இவரை டிஸ்சார்ஜ் பண்ணலாம் இனியவன்... பட்... எழில் சார் ஓவரா ஸ்ட்ரைன் பண்ணிக்க கூடாது.... கரெக்ட் டைம்க்கு டேப்லெட் அண்ட் ஃபுட் எடுத்துக்கணும்... திருடனை பிடிக்கிறேன்... கொலைகாரனை பிடிக்கிறேன் என்று சொல்லிட்டு எதுவும் பண்ணாதீங்க... ரொம்ப அட்வென்சரான கேஸ் எல்லாம் சில நாட்களுக்கு வேண்டாம் எழில்... ஓகே நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க... எனக்கு முக்கியமான வேலை இருக்கு... சோ... நான் இப்ப போறேன்..." என்று சொல்லி சிரித்துக் கொண்டே அங்கிருந்து விடை பெற்றார் டாக்டர்...

"நான் மூணு மாசமா படுத்த படுக்கையாக இருந்தது போதாதா இனியா...." என்று கேட்டான் எழில்...

"அது தான் நானும் கேட்கிறேன் எழில்... உன் உடம்பில் ஐந்து குண்டு வாங்கி... இவ்வளவு நாள் உசுருக்கு போராட்டிக் கிட்டு படுத்து இருந்தீயே அது உனக்கு போதலையா... உன் அப்பா‌ எவ்வளவு துடிச்சி போனாரு தெரியுமா எழில்... ஆனா... நீ ஹாயாக அங்க குண்டு அடி பட்டு இங்க ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி வந்து படுத்துக் கிட்ட..." என்று சொல்லி கோபப் பட்டான் இனியன்...

அந்த கோபத்தில் உள்ள இனியனின் அக்கறையை கண்டு... மகிழ்ச்சியாக இருந்தது எழிலுக்கு...

"அன்னைக்கு என்ன தான் நடந்தது எழில்... சொல்லு... நீ ஒரு சின்ன கேஸா இருந்தாலே... அவ்வளவு கவனமா எல்லாத்தையும் பார்த்து பார்த்து மூவ் பண்ணுவ... பட்... அன்னைக்கு உன் கவனம் சுத்தமா அங்க இல்ல.... அதனால தான்... உனக்கு இந்த நிலைமை..." என்று சொல்லி எழிலை குற்றம் சாட்டினான் இனியன்

"அதான்... அந்த பவனேஷையும்... அவன் கேங்கையும் அன்னைக்கே என்கவுன்டரில் போட்டு தள்ளியாச்சே... அப்புறம் எதுக்கு இப்ப கத்திக் கிட்டு இருக்க..‌." என்று கூலாக சொன்னான் எழில்...

"அடேய் திமிர் பிடிச்சவனே‌..."

"சொல்லுங்க சார்..." என்று நக்கலாக சொன்னான் எழில்

"அன்னைக்கு என்ன தான் ஆச்சி உனக்கு... அதை என் கிட்ட சொல்லவே மாட்டீயா..."

"என்னத்த டா சொல்ல சொல்ற... ஒரு பொண்ணு உயிரை காப்பாற்ற... அவளோட கற்பை நான் எடுத்திக்கிட்டேன் என்று சொல்ல சொல்றியா இனியா..." என்று மனம் கனத்து போய் வேதனையுடன் சொன்னான் எழில்...

"என்னது...." என்று சொல்லி ஒன்றும் புரியாமல் விழித்தான் இனியவன்...

"ஆமா... அன்னைக்கு உன்னை அனுப்பிட்டு அந்த நதிக்கரை கிட்ட போனேன்... அப்போ யாரோ உள்ள விழுந்து இருந்த மாதிரி இருந்தது... அது ஒரு பொண்ணு... என் நிலா... அவளை நான் போய் காப்பாத்தி... சி. பி. ஆர் கூட டிரை பண்ணி பார்த்தேன்... பட் நோ யூஸ் இனியா..." என்று முகம் தெரியா அவனுடைய நிலாவின் நினைவில் மனம் உருகிச் சொன்னான் எழில்வேந்தன்....

இனியனுக்கும் இதற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை....

"அப்புறம் என்ன ஆச்சு எழிலா..."

"அவளுடைய உடம்பு ரொம்ப நேரம் தண்ணீரில் இருந்ததால்... ஃபிக்ஸ் வர ஆரம்பித்தது... அந்த காட்டில் அவளுடைய உயிரை காப்பாற்ற ஒரே வழி மட்டும் தான் எனக்கு இருந்தது... நான் அவ கூட தப்பா...." என்று சொன்ன எழிலுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை...

கண்ணீர் துளிகள் வெளி வராமல் இருக்க கண்களை இறுக்கி மூடி கொண்டான் எழில் வேந்தன்....

எழிலின் குணம் அறிந்தவன் இனியன் அதனால்... நண்பன் படும் கஷ்டம் என்ன என்பது இனியனுக்கும் புரிந்தது... அவனை தோளோடு அணைத்து கொண்டான் இனியவன்...

கொஞ்ச நேரம் கழித்து....

"எழில்..."

"ம்ம்ம்..."

"அந்த பொண்ணு யாருன்னு தெரியுமா... எங்க இருக்கான்னு சொல்லு... நாம போய் அந்த பொண்ணை பார்க்கலாம்..."

"எனக்கு மட்டும் அவள் நிலா...."

"உனக்கு மட்டும் நிலாவா...." என்று எதுவும் புரியாமல் கேட்டான் இனியன்...

"ஆமாம்... நிலா யாருன்னு எனக்கு தெரியாது... எங்க இருக்கா... எப்படி இருக்கான்னும் எனக்கு தெரியாது... " என்று விரக்தியில் சொன்னான் எழில்...

"சரி விடு எழில்... நாம கண்டிப்பா அந்த பொண்ணை தேடி கண்டு பிடிச்சிடலாம்... அந்த பொண்ணு எப்படி இருக்கும்னு உனக்கு தெரியும் தான... அப்புறம் என்ன..." என்று மகிழ்ச்சியுடன் சொன்னான் இனியன்....

"அந்த பொண்ணு முகம் கூட எனக்கு தெரியலை இனியா.... அவள் முகத்தை கூட நான் சரியா கவனிக்கலை... அப்ப எனக்கு இந்த கேஸ் டென்ஷன் வேற மைண்ட்ல ஓடிட்டே இருந்தது... அந்த ஆம்புலன்ஸ் வெளிச்சத்தில் ஒரு நிமிஷம் அவள் முகத்தை பார்த்து இருப்பேன்..." என்று சொல்லி கொண்டு இருந்தான் எழில்வேந்தன்...

எழில் சொல்வதை கேட்டு இடி விழுந்ததை போல இருந்தது.... அதிர்ச்சியை தாங்க முடியாமல் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டான் இனியவன்....

முன்று மாதங்களுக்கு முன்பு....

சைரந்தரியை ஆம்புலன்ஸில் ஏற்றி விட்ட எழில்வேந்தன்... பவனேஷ் மற்றும் அவன் கும்பல் இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றான்....

அவன் மூளை என்ன தான் இந்த முக்கியமான வேலையில் கவனத்தை செலுத்த முயற்சி செய்தாலும்... மனமோ அதை கேட்காமல்... சைரந்தரி... அதாவது முகம் அறியா அவனுடைய நிலாவின் மேல் மட்டும் தான் எழிலுக்கு மொத்த கவனமும் இருந்தது...

அவளுடைய நினைவில் மனம் இருக்க... இங்கே அந்த பவனேஷின் ஆட்களுடன் சண்டை இட்டுக் கொண்டு இருந்தான் எழில்....

அந்த சமயத்தில் தான் அந்த பவனேஷ் துப்பாக்கியால் இரண்டு சுட்டான்... அதையும் கவனிக்காத எழில் பித்து பிடித்த நிலையில் மற்றவர்களை சுட்டுக் கொண்டு இருந்தான் எழில்வேந்தன்...

ஒரு வழியாக அவனுடைய நிலாவின் நினைவை கொஞ்ச நேரத்துக்கு மறந்த எழில்... அந்த பவனேஷ் உடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு கொண்டு இருந்தான் எழில்...

எழில் வேந்தன் கடைசி வரை விடாமல் போராடி... அந்த பவனேஷை கொன்று விட்டான்... அவன் கொன்று விட்ட எழில் அப்படியே மயக்கத்திற்கு சென்று விட்டான்...

எழில் உயிருக்கு போராடி... மூன்று மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்ததற்கு... அந்த சண்டையில் ஏற்பட்ட ஐந்து குண்டுகள் தான் காரணம்...

எழில் வேந்தனின் ரெண்டு நெஞ்சு பகுதியிலும் துப்பாக்கியின் குண்டுகள் ஆழமாக பதிந்து இருந்தது... மருத்துவர்கள் அவனுடைய உயிரை மீட்டுக் கொடுக்க ஐந்து சதவீதம் தான் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி விட்டனர்...

அவன் உயிர் பிழைத்ததே கடவுள் கொடுத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும்...

மரணத்தின் விளிம்பில் சென்று... மீண்டும் திரும்பி வந்து... உயிர்த்து எழுந்தான் எழில்வேந்தன்...

***********

அங்கு சைரா எந்த ஒரு நினைவும் இல்லாமல் கோமாவில் இருந்த சமயத்தில்... இங்கு எழிலும் உயிருக்கு போராடிக் கொண்டு தான் இருந்தது...

************

இவர்கள் இருவரின் கண்ணாமூச்சி ஆட்டம் என்று தான் முடிவுக்கு வந்து... வெளியே வருமோ ????

************

இந்த கதை எப்படி தான் போய்ட்டு இருக்கு என்று சொல்லி விட்டு போங்க செல்லம்ஸ் 😍😘😘😘😘

கதை நல்லா இருக்கா 🙄🙄 இல்லையா 🙄🙄

எதோ எனக்கு தோணுவதை அப்படியே கிறுக்கிட்டு போகிறேன் 😅😅 உங்களுக்கு பிடிக்கலை ஏதாவது சேன்ஜ் பண்ணனும் என்றால் சொல்லுங்கள் செல்லம்ஸ் நான் முயற்சி பண்றேன் 😊😊😊

உங்க ஒபினியன் மட்டும் சொல்லிட்டு போயிடுங்க செல்லம்ஸ் 😍😍😍

Urs...
Kani 😍🙈
 

Baby

Active member
Member
வித்தியாசமான முயற்சி தான்... தென் அவளுக்கு ட்ரீட்மென்ட் பன்ன டாக்டர் எப்டி வெர்ஜின் இல்லைனு சொன்னாங்க.. இதையெல்லாம் செக் செய்வாங்களோ
 

Latest profile posts

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 🤩
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 7 😎👇

New Episodes Thread

Top Bottom