உயிர் ‌- 6

உனை கொடுத்து.. உயிர் கொடுத்தாய்..

டாக்டரிடம் இருந்து... பேசிவிட்டு வெளியே வந்த விஜய் நாராயணனின் மனம் கனத்து இருந்தது....

"கடவுளே... என் பொண்ணுக்கு ஏன் இந்த நிலைமை... அவள் ஒரு குழந்தை மாதிரி... யாருக்கும் கெட்டது நினைக்க கூட அவளுக்கு தெரியாது... எல்லாரும் நல்லா இருக்கனும் என்று தான் அவள் நினைப்பாள்... ஆனாலும்... ஏன் இப்ப ஒரு நிலைமை என் சைரா குட்டிக்கு... யாரோ ஒருத்தன் என் பொண்ணு உயிரை காப்பாற்ற... அவளுடைய மானத்தையே எடுத்து இருக்கான்... அவன் யாரு என்றும் கூட எனக்கு தெரியலை... இப்ப என் பெண் சுய நினைவில் இல்லாமல் கோமாக்கு போய் விட்டால்.... அவளுடைய இந்த நிலைமைக்கு யார் காரணம்.... நான் இப்ப என்ன தான் பண்றது....." என்று நினைத்து மனமுடைந்து போனார் விஜய்....

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்... தான் பெற்ற குழந்தைக்கு பிரச்சினை என்று வரும் போது.... பெற்றவர்களின் மனம் பாரமாகி... அவர்களின் வாழ்வை நினைத்து கவலையில் முழ்க தான் செய்யும்... இதுவே பெற்றோர்களின் பாசம்...

பிறகு... எதையும் போராடி தான் ஆக வேண்டும் என்று நினைத்து... தன்னையும் தன் மனதையும் ஒருநிலை படுத்தி... உணர்ச்சிகளை துடைத்த முகத்துடன் சென்றார் விஜய் நாராயணன்....

(இதுவரை.... சைரந்தரி முதலில் தண்ணியில் விழுந்து தலையில் அடிப்பட்டது எப்படி.... அதற்கு யார் காரணம் என்று யாரும் நினைக்கவில்லை....)

"ஆராதனா... நவ்யா..."

"அப்பா சை... சைரா எப்படி இருக்கா... நல்லா இருக்கான்னு டாக்டர் சொன்னாங்களா..." என்று ஆரா எதிர் பார்ப்புடன் கேட்க...

"சொல்லுங்க அப்பா..." என்று நவ்யா சொல்ல...

"நம்ம சைரா குட்டி கோமாவுக்கு போயிட்டா‌‌..."

"என்ன ப்பா சொல்றீங்க..." என்றால் நவ்யா...

இதைக் கேட்டு மயக்கம் போட்டே விழுந்து விட்டால் ஆராதனா....

அவளை கொண்டு போய் ட்ரிப்ஸ் ஏற்றப் பட்டது...

விஜய் சைரந்தரி கோமாவிற்கு போனதை மட்டும் தான் சொன்னார்.... மற்ற விஷயத்தை அவர் சொல்லவே இல்லை...

இதுவே அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை எனும் போது அவ்வளவு பெரிய செய்தியை நிச்சயம் தாங்கி கொள்ள முடியாது... என்று நினைத்தவர் அதை யாரிடமும் இதை பற்றி சொல்லவே இல்லை...

பிறகு... ஆரா‌... கண் விழிக்க விஜய் அவளை சமாதானம் படுத்தினார்...

"ஆரா..."

"அப்பா..." என்று அழுதுக் கொண்டே சொன்னாள்...

"அழ கூடாது... சைராக்கு ஒன்னும் இல்ல... அவள் கோமாக்கு மட்டும் தான் போய் இருக்கா... இன்னும் ஒரு வாரத்தில் கண் விழிச்சிடுவா... அதனால் இப்படி இருக்காத... உன் சைராக்கு நீ சிரிச்சிக்கிட்டே இருந்தால் தான பிடிக்கும்..."

"ம்ம் ஆமா..."

"அப்ப சிரிச்சிட்டே இரு..."

"நான் சைரந்தரியை பார்க்கனும்..." என்று நவ்யா சொல்ல...

"நாம சைராவை சென்னைக்கு கூட்டிட்டு போகலாம் டா..." என்று சொன்னார் விஜய்...

பிறகு.....

அவர்கள் சைராவோடு சென்னைக்கு போனார்கள்....

சைராவின் வீட்டிற்கு அப்போது தான் தகவல் சொல்ல பட்டது...

அதை கேட்டு சைரந்தரியின் அம்மா ஶ்ரீஜோதி அழுது கொண்டே இருந்தார்... ராஹித்யா தான் அவரை கொஞ்சம் சமாதானம் செய்து கொண்டு இருந்தான்...

ஆனால்... அவனுக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது...

"ராஹித்யா..."

"அம்மா அழாதே ம்மா ப்ளீஸ்..."

"என் பொண்ணை இப்பவே நான் பார்க்கனும் டா..."

"அக்காக்கு ஒன்னும் இல்ல ம்மா..." என்று அவரை அணைத்துக் கொண்டான்...

அவனுடைய கண்ணில் இருந்தும் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தன...

"அம்மா..."

"சொல்லுடா..."

"வாங்க நாம ஹாஸ்பிடல் போகலாம்..."

"உங்க அக்கா என்ன பார்த்ததும் அம்மா ன்னு என்னை கட்டிப்பாளா..." என்று அழுதபடி கேட்டார் ஜோதி...

அவனும் தான் என்ன பதிலை சொல்லுவான்.... "ம்ம் அக்கா வருவ..." என்று சொல்லி விட்டு அமைதியாக இருந்தான்...

பிறகு... இருவரும் ஹாஸ்பிடலுக்கு சென்றார்கள்...

**********

அங்கு விஜய் நாராயணன் நின்று கொண்டு இருந்தார்....

அவரை பார்த்ததும்... ஜோதி அவரிடம் சென்று....

"என்னங்க... நம்ம சைரா குட்டி கோமாவுக்கு போயிட்டா‌‌ ன்னு சொல்றாங்க... அது உண்மையா... ப்ளீஸ் அது உண்மை இல்லை... அவள் நல்ல இருக்கான்னு சொல்லுங்க..." என்று சொல்லி அழுதார்...

"நீ இதுக்கே இப்படி அழறயே ஶ்ரீ... உனக்கு அந்த விஷயத்தை நான் எப்படி உன் கிட்ட சொல்ல போறேன்... அதை நீ தாங்கிக்குவீயா..." என்று மனதில் நினைத்து வேதனை பட்டார் விஜய்...

"ஶ்ரீ இங்க பாரு... நம்ம சைரா ஒரு வாரம் இல்லாட்டி பத்து நாள் சைலண்டா படுத்து தூங்க போறா... அவ்வளவு தான்... வேற ஒன்னுமே இல்ல... அவள் இப்ப நல்லா தான் இருக்காள்... நீ அழதால் உன் மகள் என் கிட்ட தான் சண்டைக்கு வருவா..." என்று மனைவிக்கு ஆறுதல் சொன்னார் விஜய்...

ராஹித்யாவை பார்த்த விஜய் அவனை தனியே அழைத்துச் சென்றார்....

"உன் அம்மா முன்னாடி மட்டும் அழாதே ராஹித்யா... நான் உன் அப்பா... உன்னுடைய ஃப்ரண்டு... என் கிட்ட உன் கஷ்டத்தை மறைக்கனும் என்று எந்த அவசியமும் இல்லை... வாடா..." என்று கை நீட்டி கூப்பிட்டார்....

"அப்பா..." என்று சொல்லி அவ்வளவு நேரம் அடக்கி வைத்த மொத்த அழுகையையும் அழுது விட்டான் ராஹித்யா...

எல்லாருக்கும் ஆறுதல் சொன்ன விஜய்க்கு... தன் மனதிற்கு ஆறுதல் சொல்லவும் வார்த்தைகள் இல்லை... ஆறுதலை கொள்ள விஷயமும் இது இல்லை...

இரண்டு நாட்கள் சென்றது....

ஶ்ரீஜோதியை தனியாக அழைத்தார் விஜய் நாராயணன்....

"உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் ஶ்ரீ..." என்று சொன்னார் விஜய்....

"சொல்லுங்க..." என்றார் ஶ்ரீஜோதி...

"நம்ம பொண்ணு உயிரை யாரோ ஒருத்தர் காப்பாற்றி இருக்காங்க. ஶ்ரீ..."

"அப்படியாங்க... யாருன்னு சொல்லுங்க... நான் இப்பவே பார்த்து நன்றி சொல்லனும்..." என்று சந்தோஷமாக சொன்னார் ஜோதி....

அதை கண்டு.... "அது யாருன்னு தெரியாது ஶ்ரீ..." என்று எந்த உணர்ச்சியையும் கட்டாமல் சொன்னார்...

"நம்ம பொண்ணு உயிரை காப்பாற்றி இருக்காங்க... யாருன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா..."

"கண்டிப்பா தெரிஞ்சி கிட்டே ஆகனும்... ஏன்னா... அவன் தான் நம்ம பெண்ணோட கணவனாக வரணும்...." என்று சொன்னார் விஜய்....

ஜோதி ஒன்றும் புரியாமல் விழித்தார்....

விஜய் லக்னோவில் டாக்டர் சொன்னதை எல்லாம் பொறுமையாக அவருக்கு விளக்கினார்....

அவருக்கு சைரந்தரியை நினைத்தும்... அவளின் வருங்கால வாழ்கையை நினைத்தும்.... கண்ணீரை வெளி விடுவதை தவிர.... அவரால் வேறொன்றும் செய்ய இயலவில்லை....

இதற்கு விஷயத்திற்கு... தன்னால் முடிந்த வரை என்னென்ன செய்ய முடியுமோ... அதை எல்லாம் அவருக்கு இருக்கும் பதவியை வைத்து... ஒரு பக்கம் செய்து கொண்டு இருந்தார் விஜய் நாராயணன்...

சைரந்தரி இன்னும் கண் முழிக்கவே இல்லை....

விஜய் நாராயணன் டாக்டரிடம் கேட்டு... அவளுக்கு வீட்டிலேயே சிகிச்சை கொடுக்கும் படி செய்து இருந்தார்....

இனி என்ன எல்லாம் இவர்களின் வாழ்க்கையில் நடக்க போகிறது என்று இனி வரும் காலங்களில் பார்ப்போம்....

***********

உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்து விட்டு போங்கள் செல்லம்ஸ் 😍😍😍

Urs...
Kani 😍🙈
 
ஐயோ சஸ்பென்ஸ் தாங்கல சிஸ்.. சீக்கிரமா என்ன நடந்துச்சுனு சொல்லுங்க..
ஹீரோயின கோமால வச்சே இப்படி பண்றீங்களே சிஸ்..
 

Latest profile posts

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 🤩
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 7 😎👇

New Episodes Thread

Top Bottom