உயிர் ‌- 10

உனை கொடுத்து.. உயிர் கொடுத்தாய்..

ஒருவழியாக புது விடியலும் வந்தது... சென்னையும் வந்தது....

எழிலும் இனியனும் சென்னையில் இறங்கி... நல்ல படியாக கால் பதித்து விட்டனர்....

எழில் வேந்தனை காண ஒருவர் இரயில்வே ஸ்டேஷனில் நின்று கொண்டு இருந்தார்...

அவரைக் கண்டு மகிழ்ச்சியுடன்... "அப்பா..." என்று அழைத்தான் எழில்...

"வேந்தா... எப்படி பா இருக்க... இப்ப உன் உடம்பு பரவாயில்லை தான... நல்லா இருக்கியா வேந்தா..." என்று பாசத்துடன் கேட்டார் எழிலின் அப்பா சிலம்பரசன்...

"நான் நல்லா இருக்கேன் அப்பா... நீங்க எப்படி இருக்கீங்க..."

"நான் நல்லா இருக்கேன் ராசா... நீ படுத்த படுக்கையாக இருக்கவும் தான்... எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை... ரொம்ப தவிச்சி போயிட்டேன் ராசா... உன்னை பார்த்த பிறகு தான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது வேந்தா..." என்று அவன் கன்னத்தை தடவி வாஞ்சையுடன் சொன்னார் சிலம்பரசன்...

"அதான் இப்ப ரொம்ப நல்லா இருக்கனே அப்பா.. அப்பறம் என்ன..."

"இருந்தாலும் வேந்தா..."

"அதை எல்லாம் விட்டு தள்ளுங்க அப்பா... மொதல்ல நீங்க சாப்டீங்களா..." என்று கேட்டான் எழில்...

"இல்ல வேந்தா.."

"சரி வாங்க... நாம சாப்பிட போகலாம்..." என்றான் எழில்...

அப்போதா அங்கே வந்தான் இனியவன்... சிலம்பரசனிடம் வம்பு இழுக்க...

"அப்பா.. உங்க மகனை மட்டும் நலம் விசாரித்தீர்களே... உங்க இன்னொரு பையனை என்னன்னு கேட்டீங்களா..." என்று சொல்லி சிலம்பரசனிடம் சண்டைக்குப் போனான் இனியவன்..‌.

"அப்படி எல்லாம் இல்ல இனியா... நீயும் எனக்கு மகன் தானே... எப்படி இருக்க சௌக்கியமா..."

"உங்க செல்ல மகன் கூட இருந்து நான் எப்படி ப்பா சௌக்கியமா இருக்க முடியும்... எப்ப பார்த்தாலும் எதாவது ஒரு பிரச்சினை... கேஸு... இது தான் எங்க பொழப்பு..." என்று சொல்லி சலித்து கொண்டான் இனியன்...

"ஏன் ராசா... வேந்தன் உன்னை என்ன பண்ணான்..."

"என்ன பண்ணலை ன்னு கேளுங்க ப்பா..." என்று பெருமுச்சி விட்டு கொண்டே சொன்னான் இனியன்...

இனியனின் காலை எட்டி மிதித்து... "நாயே ஒழுங்கு மரியாதையா வாய மூடிகிட்டு இரு..." என்று அவருக்குத் தெரியாமல் காதில் கிசு கிசுத்தான் எழில்...

"என்னாச்சு இனியா... சொல்லு..."

"ஹிஹி... ஹான்... அது வந்து அப்பா நம்ம எழிலு... மருந்து சாப்பிடமால்... ஊசி போடாமல்... அடம் பிடித்தான்... அதான் இவனை வைத்து சமாளிக்க முடியலை என்னால..." என்று பொருந்தாமல் பொய் சொன்னான் இனியன்...

எழில் கேவலமாக ஒரு லுக் விட்டான்...

"அட போங்கடா... இன்னும் நீங்க ரெண்டு பேரும்... சின்ன பிள்ளைகளாவே இருக்கீங்க..." என்று சொல்லி சிரித்துக் கொண்டே முன்னாடி போனார் சிலம்பரசன்...

"எரும மாடு உனக்கு சொல்ல வேற பொய்யே கிடைக்கலையா... இரு உன்னை வச்சிகிறேன்..."

"நீ என்னை அப்புறமா பொறுமையா வச்சிக்கோ எழில்... மொதல்ல உன் முகம் தெரியாத நிலாவை தேடுற வழியை பாரு... பாவம் அந்த பொண்ணு என்னவெல்லாம் கஷ்டப்பட்டு கிட்டு இருக்கோ தெரியல எழில்... ஒரு பொண்ணுக்கு உயிரை விட மானம் தான் முக்கியம்.... ஆனால் நீ அந்த பொண்ணோட மானத்தை எடுத்து உயிரை கொடுத்து இருக்க... இப்ப அந்த பொண்ணு யாரு எங்க இருக்கு எதுவுமே உனக்கு தெரியாது... சீக்கிரமா நாம... அந்த பொண்ண கண்டு பிடிக்கணும்...." என்று சொன்னான் இனியன்...

இவ்வளவு நேரம் இயல்பாக இருக்க முயன்று பேசி சிரித்த எழிலுக்கு... இனியன் பேசியதை கேட்டு... மீண்டும் குற்ற உணர்ச்சி அவனை வந்து சூழ்ந்து கொண்டது...

எழில் வேந்தனுக்கும்... இனியவனுக்கும்... அந்த நாள் அவனுடைய தந்தையுடன்... நேரம் செலவு அழிப்பதில் அப்படியே சென்று விட்டது...

*********

சைரந்தரின் உடலில் நல்ல முன்னேற்றம் இருந்தது...

அந்த சோம்பேறி நர்ஸ் வளர்மதியை மாற்றி விட்டு... மித்ரா என்ற புதிய நர்ஸை சைராவை பார்த்து கொள்ள நியமித்து விட்டார் ஜோதி...

மித்ராவும் சைரந்தரியை நன்றாக பார்த்துக் கொண்டாள்...

ஶ்ரீஜோதியும் ஹாலில் உள்ள சோஃபாவில் உட்கார்ந்து இருந்தார்...

காலேஜ் முடித்து வீட்டிற்கு வந்த ராஹித்யா... நேராக சென்று ஜோதியின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்...

"அம்மா..." என்றான் ராஹி...

மகனின் தலையை வருடிக் கொண்டே... " சொல்லு ராஹித்யா..." என்று சுவரை வெறித்து பார்த்து சொன்னார் ஜோதி...

"நம்ம சைரந்தரியை ரொம்ப ரொம்ப மிஸ் பண்றாங்க ம்மா... அவ பேச்சு குரல் வீடு முழுசும் கேட்டு கிட்டே இருக்கு மா... எப்ப நம்ம சைரா வருவாள்..." என்று கவலையுடன் சொன்னான் ராஹி...

"ஒன்னும் இல்ல கண்ணா... நம்ம சைரா குட்டி இன்னும் கொஞ்ச நாள்ல பழைய படி திரும்பி வருவாள்..." என்று துக்கம் தொண்டையை அடைக்க சொன்னார் ஜோதி...

அப்போது டாக்டர் அனிதா.. அவளை செக் பண்ண வீட்டுக்கு வந்தார்...

அவரை கண்ட ஜோதி... அவசரமாக ராஹித்யாவை பார்த்து... "ராஹித்யா இப்ப தான் நம்ம டாக்டரை பார்த்ததும் எனக்கு ஞாபகம் வருது... அக்காக்கு ஒரு சில மருந்து வாங்கனும் ன்னு டாக்டர் சொன்னாங்க... நீ போய் அதை உடனே வாங்கிட்டு வரீயா டா..." என்றார் ஜோதி...

ராஹித்யாவும்... " சரி மா... இப்பவே நான் போய் வாங்கிட்டு வரேன்..." என்று சொல்லி கிளம்பி விட்டான்...

"மேடம் உங்க சன்க்கு சைராவை பற்றி எதுவும் தெரியாதா..." என்று கேட்டார் அனிதா...

"இல்ல அனிதா... அவனுக்கு எதுவும் தெரியாது... நாங்க கஷ்டப் படுவது போதாது ன்னு அவனையும் எதுக்கு கஷ்டப் படுத்தனும்... அதான் ராஹித்யா கிட்ட நாங்க எதுவும் சொல்லலை..." என்று மனதில் வலியுடன் சொன்னார் ஜோதி...

"ஃபீல் பண்ணாதீங்க மேடம்... சீக்கிரமா எல்லாம் சரி ஆகிடும்... வாங்க மேடம்... போய் சைரந்தரியை பார்க்கலாம்..." என்று ஆறுதல் சொன்னார் அனிதா...

பின்னர்... அனிதாவும் ஜோதியும் சைரா அறைக்கு சென்றனர்...

அனிதா சைரா உடல் நிலையை பரிசோதித்து கொண்டு இருந்தார்...

"அனிதா சைரா குட்டி இப்ப எப்படி இருக்கா..." என்று சைராவின் உடல் நிலையை பற்றி விசாரித்தார் ஜோதி

"நல்ல இம்ப்ரூவ்மெண்ட் மேடம்... இப்ப அவங்க கை கால்களை ஒரளவு அசைவுகள் தெரியுது... அப்பறம்... உள்ள இருக்கும் பேபியும் நல்லா ஆரோக்கியமா இருக்கு‌..." என்று சொல்லி விட்டு கிளம்பினார் அனிதா...

*************

இரு நாட்களுக்கு பிறகு...

எழிலும் இனியனும் வேலையில் சேருவதற்காக கமிஷனர் ஆபிஸிற்கு சென்றனர்...

***************

இந்த சைராவுக்கு எப்ப தான் நினைவு திரும்பும் என்று நீங்கள் நினைக்கும் மைண்ட் வாய்ஸ் எனக்கு நல்லாவே கேட்குது 🤧🤧🤧

அது கூடிய விரைவில் நடக்கும் செல்லம்ஸ் 😔😔😔

உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்து விட்டு போங்கள் செல்லம்ஸ் 😍😍😍😍

Urs...
Kani 😍🙈
 
எங்க மைன்ட் வாய்ஸ் கேட்டும் நீங்க அதைப் பண்ணாமல் இருக்கறது ரொம்ப தப்பு மா.. சீக்கிரமா அவளுக்கு நினைவை கொண்டு வாங்க...
 

Baby

Active member
Member
எப்பி இன்னும் கொஞ்சம் பெரிசா போடலாமே...
 

Latest profile posts

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 🤩
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 7 😎👇

New Episodes Thread

Top Bottom