• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உயிர் படைத்தவன் எங்கே

Balaji

✍️
Writer
செய்கையில் இருந்து மொழியாக, ஓவியங்களில் இருந்து எழுத்துக்களாக ,இவ்வையம் இது வரை காணா அடுத்த நிலையை அடைந்த மனித நாகரிகம், தன்னையும் விண்ணையும் முழுவதுமாக அறியும் நோக்கில் , கணக்கில்லா ஆண்டுகள் செல்ல வேண்டிய முடிவில்லா பயணத்தில் தன்னை இன்று அர்ப்பணித்துள்ளது.



இவை யாவையும் கடந்து என்றேனும் ஒரு நாள் அந்த எல்லையை அடைய வேண்டும் என்ற கனவில், மனிதனுக்கு துணையாக செயற்கை அறிவும் அறிவியலும் இருக்க, இதோடு மனிதனை இவ்வண்டத்திலையே ஆற்றல் மிக்க உன்னத உயிராக மாற்றிய அவனது அறிவும் இருக்க அப்பயணத்தை நம்பிக்கையோடு தொடர்கிறது மனித இனம்.


மனித இனத்தை பொறுத்த வரை, பயணத்தில் விவேகத்தோடு வேகமும் தேவை தானே! அந்த விவேகத்தோடு கூடிய அதீத வேகத்தை அவன் பயணத்தில் வழங்கும் பேராற்றலே குவாண்டம் கணினி( குவாண்டம் கணினி- சாதாரண கணினியில் நாம் ஒரு செயலை நிகழ்த்த தரும் உத்தரவை கணினிக்கு புரியும் முறையில் கூறுவதே ட்ரான்ஸிஸ்டரின்(Transistor) பணி.. இது அந்த தகவலை கணினிக்கு புரியும் படி இன்புட்ஸை(inputs) 0 1 ஆகிய இரு இலக்கங்களை கொண்டு கூற அதை புரிந்து கொண்ட கணினி ப்ராசசரின்(Processor) உதவியுடன் மீண்டும் மனிதனுக்கு வேண்டிய வகையில் அந்த தகவலை கொடுக்கும்.. இதில் அந்த ட்ரான்ஸிஸ்டரின் அளவையும்(எவ்வளவு சிறியதோ) எண்ணிக்கையையும் பொறுத்து கணினியின் செயல் திறன் அதிகரிக்கும்.. ஆனால் தற்போது ட்ரான்ஸிஸ்டரின் அளவு மனிதனின் ரத்த செல்களை விட சிறிய அளவை அடைந்துவிட்டது, இதற்கு மேல் அதை சிறிதாக்கினால் அதனால் கணினிக்கு தேவையான உள்ளீட்டை தெளிவாக கொடுக்க முடியாது.. கணினியின் வளர்ச்சியே மனிதனின் வளர்ச்சி அதன் முன்னேற்றம் தடை பட்டால் மனிதனின் முன்னேற்றமும் தடை படும்.. மனிதன் இதை நினைத்து சிந்திக்க இதற்கான தீர்வை தந்தது குவாண்டம் கணினி.. இதில் உள்ளீட்டை எலாக்ட்ரானின் இரு சுழலும் நிலை(மேலிருந்து கீழ் 0 இடமிருந்து வலம் 1) கொண்டு பெற முடிகிறது.. ஒரு வேலையை செய்ய தற்கால கணினி நூறு வருடங்கள் எடுத்துக்கொள்ளும் என்றால் அதனை இந்த குவாண்டம் கணினி சில நொடிகளிலேயே செய்து முடிக்கும்.. இதன் மூலம் மனிதனால் பல நோய்களுக்கான தீர்வை கண்டுபிடித்து அவனின் வாழ்வை பெருக்கி கொள்ள முடியும்..விண்வெளி ஆராய்ச்சி மேலும் வேகம் பெறும்..இயற்கை சமநிலையை மீண்டும் கொண்டு வர முடியும்.. அழிந்து போன உயிர்களை மீண்டும் உருவாக்குவதற்கும் புதிய உயிர்களை கண்டுபிடிப்பதற்கும் தேவையான ஆற்றலை இது வழங்கும்..)




PROJECT : உயிர் படைத்தவன் எங்கே..
டாஸ்க் ப்ரொசிடட்..
பேட்டரி ஸ்டேட்டஸ் : ஃபுல்லி சார்ஜ்ட் ..

வருடம்: 2030..
NCAI(National Council of Artificial Intelligence)..








செயற்கை நுண்ணறிவின் முன்னோடியாக திகழும் இந்தியாவில், அதற்காகவே அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மிக பெரிய கல்லூரி NCAI(National Council of Artificial Intelligence)..

மனிதனின் அடுத்த கட்ட வளர்ச்சியையும் இத்துறையையும் பிரித்து பார்க்க முடியாது என்று சொல்லுமளவு, இந்த துறை வருங்கால நாகரிகத்தின் வளர்ச்சியோடு பிணைந்துள்ளது..

மித்ரன் மற்றும் அவன் நண்பர்கள் கபிலனும் ஆதிரனும் இக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவன்..

மித்ரனை பற்றி கூற வேண்டுமென்றால் எப்போதும் அமைதியாக எதையாவது யோசித்து கொண்டு, எந்நேரமும் கேள்விகளுடனும் கற்பனை சிந்தனைகளுடனும் வாழும் அற்புத பிறவி..இதனாலே அவன் வகுப்பிற்கு வரும் பல பேராசிரியர்களின் நன்மதிப்பையும், சில பேராசிரியர்களின் எரிச்சல் நிறைந்த பார்வை பேச்சுக்களையும் பெற்று ஒரு சிறந்த மாணவனின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறான்.

இவன் நண்பர்களை பற்றி கூறவேண்டுனென்றால், மித்ரன் பேசுவதை கேட்டும் அவன் கேள்விகளை கண்டு வியந்தும் அவன் ஆர்வம் தொற்றிக்கொண்ட இவர்களை அவனின் சுடரொளியால் எரியும் சிறு விளக்குகள் எனலாம்..

வழக்கம் போல் அந்த விடியலும் அழகாய் புலர்ந்து, நாள் அது அருமையாக செல்ல, அன்றைய நாளின் கடைசி வகுப்பான இயற்பியல் வகுப்பு தொடங்கப்பட்டது..

கடைசி வகுப்பு என்பதால், அவர் நடத்துவதை கேட்டு அனைவரது கண்களும் சொக்கி இருக்க, வழக்கம் போல் மித்ரனும் அவன் நண்பர்களும் ப்ரோஃபசர் கேசவன் நடத்துவதை ப்ரொஜெக்டரில் கவனித்தப்படி அவரிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தனர்..

இதில் மித்ரன் கேட்கும் பல கேள்விகள் அவரை வழக்கம் போல எரிச்சலுறவே செய்தது..

அவர் இந்த அண்டம் தோன்றியதை பெரு வெடிப்புக் கோட்பாடு(Big bang theory) கொண்டு விளக்க, அதில் சந்தேகம் இருப்பதாக கூறி கை தூக்கினான் மித்ரன்..

" சார்.. நீங்க பெரு வெடிப்புக் கோட்பாடுல அண்டம் மொத்தமும் சிங்குலாரிட்டின்னு(Singularity) சொல்லுற அந்த சிறு துளி வெடிச்சதால உருவாச்சுன்னு சொல்லுறீங்க ஆனால் இதை சொல்லும் போதே ஒரு கேள்வி எழுதே..என்னென்னா இந்த சிங்குலாரிட்டி சொல்லுறீங்களே அது எங்க இருந்து வந்துச்சு அது ஏன் வெடிச்சு சிதருச்சு அதுல இருந்து நேரம் அணுக்களெல்லாம் எப்படி உருவாச்சு சார்.. இதை தங்களால விளக்க முடியுமா சார்.. "என்று எழுந்து நின்று வினவ அவரோ தன் மூக்கு கண்ணாடியை சரி செய்தவர் அவனை பார்த்து " அதெல்லாம் கடவுள் தான் உருவாக்குனாருப்பா.. மனிதனால அதுக்கு பதில் சொல்ல முடியாது.. ப்ளீஸ் சிட் டவுன்.."என்று அவனை சரிக்கட்ட பார்க்க அவனோ நின்று கொண்டே இருந்தான்..

அவரோ என்ன என்று கண்களாலே அவனை கேட்க அவனோ " சார் இன்னொரு சந்தேகம்.." என கேட்க அவரோ எரிச்சலோடு " என்ன சொல்லு.. " என்றார்..

இதை பார்த்த கபிலன் ஆதிரனை பார்த்து "என்ன டா இவனுக்கு திருப்பி சந்தேகம் வந்திருக்கு.. ஒருவேளை விவேகம் பட அப்டேட் எப்போன்னு கேட்பானோ.. " என்று அவனை பார்த்தவாறு கேட்க ஆதிரன் அதை ஆமோதித்தான்..

மித்ரனோ " சார் .. கென் காட் பி எக்ஸ்ப்ளெயின்ட் வித் சைன்ஸ்?(கடவுளை அறிவியல் கொண்டு விளக்க முடியுமா?).. கடவுளை விளக்கவும் இதை மாதிரி எதாவது ஏத்துக்க கூடிய கோட்பாடு இருக்கா சார்..? "என்று மீண்டும் அவரிடம் கேள்விகளை தொடுத்தான்..

அவரோ உச்சக்கட்ட எரிச்சலில் கண்ணை மூடி மூச்சை இழுத்து விட்டவர் அவனிடம் " டேய் உனக்கு என்ன தான் டா பிராபிளம் உனக்கு ஏதாச்சு மனநல பாதிப்பா.. (அதிகமா கேள்வி கேட்டாலே இந்த நாட்டுல அப்படி தானே கேட்பாங்க.. பத்து வருடம் போனாலும் நம்ம குணம் மாறுமா என்ன) அறிவியல்-ல போய் ஆன்மீக கேள்வியை கேட்டா எப்படி டா பதில் கிடைக்கும் லூசா நீ .. உன்னை பார்க்கவே எரிச்சலா இருக்கு டா.. க்ளாஸோட நல்ல அட்மாஸ்பியரையே கெடுக்கிற டா நீ.. கெட் அவுட் ஆஃப் மை க்ளாஸ் இடியட்.. "என்று கோபத்தில் வார்த்தைகளை கொண்டு தேனீயாக கொட்டினார்..

அவனோ எதுவும் சொல்லாமல் வெளியே செல்ல எத்தனித்தவன் ஒரு நொடி யோசித்து விட்டு அவரை நோக்கி திரும்பினான்.

அவர் இன்னும் நீ போகவில்லையா என்பது போல் அவனை பார்க்க அவனோ " சார்.. அறிவியல்ல எல்லாத்துக்கும் ஒரு விளக்கமோ.. அப்படி இல்லன்னா அட்லீஸ்ட் ஒரு அசம்ப்ஷனாவது கண்டிப்பா இருக்கணும் தானே சார்.. கடவுளுக்கு மட்டும் அது விதிவிலக்கா.. நாம உணர தான் முடியும்.. இல்ல அப்படி யாருமே கிடையாது சொல்லியே அந்த கேள்வியை ஓரம் கட்டிட முடியுமா.. நான் உங்க கிட்ட உறுதியா கேட்கல ஆனா இதுக்கு ஒரு விளக்கமாச்சு இருக்கணும் தானே.. அதை தானே நான் கேட்டேன்.. இதுல எனக்கு எந்த தப்பும் தெரியலையே சார்.. "என்று அவரிடம் கூறிவிட்டு அறையை விட்டு வெளியே நடக்கலானான்..

அவனை அவர் ஒரு நிமிடம் நிற்க சொல்ல அவனோ அவரை பார்த்து சிறு புன்னகையோடு நின்றான்..

அவரோ " இவ்வளவு பேசுறியே உன்னால கடவுள் னா யாருங்கிற கேள்விக்கு விளக்கம் கொடுக்க முடியுமா.. சரி டா நீ இதுக்கு உடனே இப்போ கூட விளக்கம் கொடுக்க வேணாம்.. இன்னும் ஒரு மாதம் கழிச்சு உங்க பிராஜக்ட் சப்மிட் பண்ண சொன்னேன் ல.. அந்த பிராஜாக்ட்க்கு கடவுள் னா யாருங்கிறதுக்கான ஒரு அறிவியல் பூர்வமான விளக்கத்தையோ இல்ல கோட்பாடையோ நீ எனக்கு திருப்தி தர மாதிரி விளக்கணும் உனக்கு மட்டும் இதான் பிராஜக்ட்க்கான டாப்பிக் .. அப்படி செய்யலன்னா உனக்கு இன்டர்னல் மார்க்கே கிடையாது .."என்று அவன் தன்னை எல்லார் முன்னிலையிலும் கேள்வியால் தடுமாற வைத்ததற்கு பழிவாங்கி விட்டதாக நினைத்து கூறியவர் ஓர் ஏளன புன்னகையுடன் " நீ வெளிய போ வேணாம்.. கோ பேக் டூ யுவர் பிளேஸ்.."என்று கூறிட அவனும் சென்று அமர்ந்தான்..

வகுப்பு முடிந்ததை அறிவிக்கும் வகையில் மணி ஒலித்திட அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர்..

கபிலனும் ஆதிரனும் அவனை ஏன் இப்படி தேவையில்லாமல் கேள்வி கேட்டு மாட்டிக்கொண்டாய் என கேட்டு கொண்டே வந்திட இவன் அமைதியாக யோசித்து கொண்டே வந்தான்..

அவர்களும் இவனும் வீட்டிற்கு செல்லும் பாதைகள் பிரிய அவனிடம் அவர்கள் இருவரும் சென்று வருவதாக கூறினர்.. அவனும் அதற்கு உணர்ச்சியற்ற ஒரு தலையசைப்பையும் கையசைப்பையும் கொடுத்துவிட்டு கிளம்பினான்..

அவன் அங்கு யார் முன்னும் காட்டி கொள்ளவில்லை என்றாலும் இதற்கு எப்படி பதில் தருவது என்ற குழப்பம் அவனுக்கும் இருந்தது ..

இருள் சூழ ஆரம்பித்த நேரத்தில் அப்படி யோசித்துக்கொண்டே அந்த ஆள் நடமாட்டமில்லாத மரங்களால் சூழ்ந்த சாலையில் இதை யோசித்துக்கொண்டே நடந்து போக, அவனுக்கு சிறிது தூரத்தில் ஒரு ஒளி தெரிந்தது..

அவனும் சற்று இந்த சிந்தனையை புறம் தள்ளி விட்டு அதை என்ன என்று பார்க்க சென்றான்..

அதை பார்த்ததும் அவன் கண்கள் ஆச்சரியத்தில் விரிய, அது ஒரு வார்ம் ஹோல் (worm hole) என்பதையும் யூகித்தான் அவன்.

(வார்ம் ஹோல் - இந்த அண்டத்தை கொண்ட வெளியில் பல லட்சம் ஒளி ஆண்டுகள் தூரம் உள்ள இரண்டு இடங்களுக்கு ஒளியை விட வேகமாக காலம் கடந்து செல்வதற்கான சுருக்க வழியே வார்ம் ஹோல்)

அதை அருகில் சென்று மித்ரன் உற்றுப் பார்க்க நான்கு வகை விசைகளில் ஒன்றான ஈர்ப்பு விசை அவனை அதனுள் இழுத்தது..

அவனும் அதன் வலிமையை எதிர்த்து போராடும் வலிமையற்றவனாக அதனுள் சென்றான்..

அண்டம் எண் 15ன் கட்டுப்பாட்டு அறை,
சூரிய குடும்ப பிரிவு..


மித்ரன் அந்த வார்ம் ஹோல் வழியே வேறொரு அண்டத்தை அடைந்திருந்தான்..

எழுந்து அவன் சுற்றிலும் அந்த இடத்தை பார்க்க எங்கும் சொல்ல முடியா வேகத்தில் பறக்கும் வானூர்திகளும் வானத்தில் வித்தியாசமான அமைப்பை கொண்ட மிதக்கும் வீடுகளும் தெரிந்தது.. இதமான வானிலை.. வீடுகள் எல்லாம் வானில் இருப்பதால் எங்கும் மரங்கள் சூழுந்திருந்தது அந்த கிரகத்தில்.. அங்கிருக்கும் மனிதர்கள் இல்லை இல்லை மனிதர்கள் என்று கூற முடியாது மனிதனை போல் இரண்டு கால்கள் தான் உள்ளது ஆனால் ஆறு கைகள் இருக்கிறதே வேணுமென்றால் மனிதனை போல் உள்ள ஆறு கை உயிரினம் என்று வைத்து கொள்ளலாம்..அவன் பயத்தில் தலையில் கைவைத்து அப்படியே அமர்ந்து விட அவனை பின்னிருந்து தொட்டு அழைத்தது ஒரு உருவம்..

அவன் பயந்துக்கொண்டே பொறுமையாக திரும்ப அங்கே இவன் கண்ட ஆறு கை உயிரினங்களிலே மிக பெரிய ஒன்று அவன் முன் நின்றது..

அதை பார்த்ததும் அவன் ஆஆஆஆஆஆ என்று சத்தமாக அலற அந்த உருவமோ சாந்தமாக " பொறுமை மித்ரா.. " என்றது..

அவனும் சற்று தெளிவடைந்து "அது சரி நீங்க யாரு.." என்று வினவினான்..

அவரோ "நான் கடவுள்..மித்ரா.. " என்று பதிலுரைக்க இவனோ ' அது பாலா படம் தானே.. ' என்று மனதினுள் நினைத்துக்கொண்டு அவனுக்கே அவன் ஆம் என்று சொல்லிக்கொண்டு தலையாட்டினான்..

அவரோ " என் பெயர் ஆண்டவன் மித்ரா.. நீ வாழும் அண்டத்தை படைத்தது நானே அந்த அண்டத்தை ஆண்டவன் ஆள்கிறவன் ஆளபோகிறவனும் நானே.. "என்று கூற அவனோ சிரித்து கொண்டே " நீங்க வார்ம் ஹோல்லாம் உருவாக்குற அளவுக்கு டெக்னாலஜிக்கலி அட்வான்ஸ்ட் ஸ்பீசிஸ் வேணும் னா சொல்லுங்க ஆனா உயிரை படைத்த கடவுள் மாதிரி பேசாதீங்க.. "என்று அவர் கூறியதை மறுத்தான்..

ஆண்டவனோ அவனை பார்த்து " மித்ரா.. நான் கூறுவது தான் உண்மை.. அங்கே தெரிகிறதே கணினிகள் அதை கொண்டே இந்த அண்டத்தை படைத்தோம் இயக்குகிறோம்.. அங்கே முதலில் இருக்கும் கணினியே நீ வாழும் சூரிய குடும்பத்தை இயக்குகிறது.. "என்று அவனுக்கு விளக்க வியப்பில் ஆழ்ந்தவன் "ஆண்டவா ஆஆஆஆஆஆஆஆ என்னை காப்பாத்து.. நான் ஏதாச்சு தப்பா சொல்லியிருந்தா பெரிய மனசு பண்ணி மன்னிச்சுடுங்க ஆண்டவா "என்று காலில் விழுந்து மன்றாடினான்..

ஆண்டவன் " எழுந்திரு மித்ரா.. "என்று கூற எழுந்தவன் "அப்போ அப்போ.. மனிதனால் கூறப்பட்ட ஒப்புருவாக்க கோட்பாடு உண்மையா.. நாங்களாம் அப்போ கணினியில் உருவான ப்ரோக்ராம்ஸா ! நாங்க வாழுற யூனிவேர்சே நீங்க கண்டுபிடிச்ச வீடியோ கேம்மா ! "என்று அதிர்ச்சியோடு கேட்டான்..

(Simulation theory(ஒப்புருவாக்க கோட்பாடு) - நாம் வாழும் உலகம் ஏன் இந்த அண்டமே கூட வேறொரு அண்டத்தில் வாழும் மிக அதீத அறிவியல் வளர்ச்சி அடைந்த உயிரினம் குவாண்டம் கணினியில் உருவாக்கிய மெய்நிகராக இருக்கலாம்.. அவர்கள் வளர்ச்சியானது இந்த ஒப்புருவாக்கத்தை மெய் என்று உணர வைக்கும் அளவு குவாண்டம் கணினியின் ஆற்றல் கொண்டு நிறுவப்பட்டிருக்கலாம்.. அப்படி ஒரு உயிரினம் நம்மை படைத்து இயக்குமானால் இந்த உயிர்கள் இயற்கை உலகம் சூரிய குடும்பம் ஏன் இந்த அண்டத்தையே ஆளும் ஆண்டவன் அதாவது நாம் கூறும் கடவுள் அந்த உயிரினம் தானே.. இதையே இந்த அறிவியல் கோட்பாடு விளக்குகிறது.. இது உண்மை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும் 50-50 இப்படி இருக்கவும் வாய்ப்புள்ளது என்பதே இக்கோட்பாட்டின் முடிவாகும்..)

ஆண்டவனோ " ஆம் மித்ரா.. நீ வாழும் அண்டமும் அதில் இருக்கும் உயிர்களும் ஒப்புருவாக்கமே.. மெய்நிகர் அண்டத்தில் வாழும் மெய்நிகர் உயிர்களே நீங்கள் "என்று அவன் கூறியதை உறுதிப்படுத்தினார்..

மித்ரன் " இது இது தான் என்னோட கேள்விக்கான விடையா அப்போ .. நான் நான் என்னோட பிராஜக்ட்டை செய்திடலாம் ல.. ஆனா நீங்க ஏன் என்னை இங்க வர வைச்சிங்க.. ஒரு வேளை படத்துல வர மாதிரி இங்க வர மட்டும் தான் முடியும் போக முடியாது சொல்லிடுவீங்களோ அப்படி லாம் சொல்லாதீங்க நான் பாவம் என் அப்பா அம்மா என்னை தேடுவாங்க.. "என்று பாவமாக கூறினான்..

இதை கேட்டு சிரித்த ஆண்டவனோ " பயப்படாதே மித்ரா! கண்டிப்பா திருப்பி உன்னோட பூமிக்கு உன்னை திருப்பி அனுப்பிடுவேன்.. உன்னை இங்க வரவழைக்க காரணம் கடவுள் யாரா இருப்பாருன்னு அறிவியல் பூர்வமா நீ விளக்க எடுத்த முயற்சி தான்.. உனக்கு ஒரு உண்மை சொல்லட்டுமா ஆரம்பத்துல நாங்களும் உங்க மனிதர்கள் மாதிரி சாதாரண உயிரா தோன்றி வளர்ச்சி அடைந்து தான் இந்த நிலையை எட்டிருக்கோம் இந்த குவாண்டம் கணினியின் வளர்ச்சியால நாங்க எங்களோட மரபணுவில் பல மாற்றங்கள் செய்து எங்க வாழ்க்கையை அதிகரிச்சதோட எங்க உடலமைப்பையும் மாத்திக்கிட்டோம்.. அழிவை நோக்கி போன எங்க கிரகத்தை திருப்பி சீரமைச்சு எங்களுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிட்டு இப்போ எங்க அண்டத்தில் பல கிரகங்களில் எங்க நாகரிகத்தை தோற்றுவிச்சிட்டோம்.. அதுக்கு அப்புறம் தான் உங்க அண்டத்தை இந்த கணினி கொண்டு உருவாக்கினோம்.. "என்று விளக்கம் தந்தார்..

இதை கேட்டு தலையாட்டியவன் " நினைச்சு பார்க்கவே வியப்பா இருக்கு.. நான் கடவுளால் தேர்ந்தெடுக்க பட்டவனா.. ரொம்ப சந்தோஷம் ஆண்டவா.. நான் இதையெல்லாம் பார்த்தது உங்க அருளால தான்.. அப்போ நான் கிளம்பலாமா.. " என்று கிளம்ப எத்தனிக்க அவரோ " பொறு மித்ரா.. எங்கள் கிரகத்திற்கு வந்தவர்களை பரிசு கொடுக்காமல் அனுப்புவது எங்கள் மரபு இல்லை..அதனால் நீ என்னிடம் கேட்கும் இரண்டு வரங்களை நான் உன் சூரிய குடும்ப கணினியில் நிறைவேற்றுவேன்.. "என்று கூறினார்..

இதை கேட்ட மித்ரனோ " முதல் வரம் எங்க பூமியில் குலைந்து போன இயற்கை சமநிலையை மீட்டு எடுத்து புவி வெப்பமயமாதலையும் பனிப்பாறைகள் உருகுவதையும் தடுக்கணும்.. "என்று கூற அவரும் அவ்வாறே ஆகட்டும் என்று அந்த கணினியின் ப்ரோக்ராமில் சில மாற்றங்களை செய்தார்..

அதை செய்து முடித்த பின் அவனை பார்த்து அடுத்து என்ன என்று கேட்க " இந்த இயற்கை வளமிக்க உலகுக்கு ஆபத்தா இருக்கிற ஒரு க்ரியெச்சரை அழிக்கணும் அப்போ இந்த பூமி நல்லா இருக்கும்.. " என்று கூற அவர் யார் என்று கேட்டார்..

அவனோ கூறுகிறேன் என்று தலையசைத்தவன் " அது எங்க ப்ரோஃபசர் கேசவன் தான்.. அவர் இருந்தா இந்த உலகத்துக்கு பெரிய ஆபத்து அதோட எனக்கு பெரிய ஆபத்து.. ஆனா அவரை டெலிட் லாம் பண்ணிடாதீங்க நான் அவ்வளவு இரக்கமற்றவன் இல்ல.. அவரை பேசாம மனிதனை போலவே ஓர் உயிரினம் ஆதிவாசியா இருக்கிற பூமி போலவே இருக்கிற இடத்துக்கு ஷிஃப்ட் பண்ணிடுங்க.. " அவரும் அந்த ப்ரோக்ராமை கணினியில் செய்துவிட்டு ஷிஃப்ட் என்ற கட்டளையை அந்த கணினிக்கு இட தயாரானார்..

அந்த பட்டனுக்கு பக்கத்தில் தன் கையை அவர் மெதுவாக எடுத்து போக இவன் அதை பார்த்து ஆனந்தத்தில் சிரிக்க "ஆஆஆஆஆஆஆஆ.. " என்று அலறிய சத்தத்தோடு தன் கண்களில் போட்டிருந்த VR-ஐ கழட்டினார் மித்ரனின் ப்ரோஃபசர் கேசவன்..
மித்ரன் இயக்கிய கணினியோ தன் செயல் பாட்டை வெற்றிகரமாக முடித்ததாக தெரிவிக்கும் வகையில்,

PROJECT : உயிர் படைத்தவன் எங்கே
டாஸ்க் கம்ப்ளீடட் ..
பேட்டரி ஸ்டேட்டஸ்: லோ சார்ஜ் ..
என்று ஒலிபெருக்கி துணை கொண்டு ஒலித்தது..

"சார்.. பதறாதீங்க சார் அது ஜஸ்ட் விர்ச்சுவல் ரியாலிட்டி விஷுவல்ஸ் தான்.. இந்தாங்க தண்ணி குடிங்க.. " என்று தண்ணீரை எடுத்து கொடுக்க அவரோ அதை அவன் கையிலிருந்து வாங்கியவர் பயத்தில் வேக வேகமாக அருந்தினார்.. இருந்தாலும் அவருக்கு பயத்தில் வந்த வியர்வை இன்னும் நின்றபாடில்லை..

" சார்.. ஓகே சார் கூல் கூல்.. இப்போ ஓகே வா சார்.."என்று அந்த தண்ணீர் பாட்டிலை வாங்கியவன் கேட்க அவரும் ஆம் என்று தலையசைத்தார்..பின் பேச்சை தொடர்ந்த அவனோ "சார்.. என் பிராஜக்ட் உங்களுக்கு திருப்தியா இருக்கா சார்.. "என்று புன்னகையோடு கேட்டான்..

" டேய் என்னை நீ எல்லார் முன்னாடியும் தடுமாற வைச்சதுக்காக உன்னை அலைய விட தான் அப்படி சொன்னேன் ஆனா நீ.. வெல் டன் நீ சொன்ன இந்த கோட்பாடோட விளக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு டா..ஆனா.. ஆனா என்னை ஷிஃப்ட் பண்ண பார்த்தது தான் டா ஏத்துக்க முடியல.. நல்ல வேளை டெலிட் பண்ணாம விட்டியே.. நீ சொல்லுறது உண்மையா இருந்தா கடவுள் சொல்லப்படுறவர் ஒரு ஹைலி அட்வான்ஸ்ட் டெக் Guyஆ இருப்பாரோ.. "என்று அவனை பார்த்து சந்தேகமாக கேட்க அவனோ அவர் கேட்ட விதத்தில் சிரித்தவனாக " இருக்கலாம்.. இல்லாம கூட இருக்கலாம்.. ஆனா நாமலும் அந்த அளவுக்கு வளர்ச்சியை என்னைக்காவது அடைஞ்சா இதுக்கான விடை கண்டிப்பா கிடைக்கும் எனக்கு நம்பிக்கை இருக்கு சார்... மனிதனால கண்டிப்பா ஒரு நாள் குவாண்டம் கம்ப்யூட்டர் அண்ட் ஏஐயோட முழு பொட்டென்ஷியலை எக்ஸ்பிளாயிட் பண்ண முடியும்.. அந்த நாள்.. கடவுளுன்னு ஒருத்தரை சொல்லுறோமே அந்த கடவுளோட படைத்தல் காத்தல் அழித்தலுக்கான ஆற்றல் மனிதனுக்கு இருக்கும் சார்..கடவுள் னா யாருங்கிற கேள்விக்கும் அப்போ விடை கிடைக்கலாம் சார்.. "என்று அவரிடம் பதிலளித்தான்..

அவரோ ஒரு நிமிடம் மனிதனின் அளப்பரிய ஆற்றலை எண்ணி வியந்தவர் " இவ்வளவு பெரிய ஆற்றல் ஒன்னு இந்த உலகத்துல உருவான அது இந்த உலகத்துக்கே முடிவா கூட முடியலாம்-ல.. ஒரு காலத்துல கடவுளை தேடிய மனித நாகரிகம் இன்னைக்கு கடவுளாவே மாறுற அளவுக்கு வந்திருக்கிறதை நினைச்சா பயமா இருக்கு.. "என்று தொழில்நுட்ப வளர்ச்சிக் குறித்து தன் பயத்தை கூறினார்..

" அழிவு உண்டாகுமோ தீமை நடக்குமோன்னு என்ன பயம் இருந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும் மனிதனோட வளர்ச்சியை தடுக்க முடியாது சார்.. அதை இன்னொரு சக மனிதன் பயந்து எதிர்த்தா கூட முடியாது.. ஒன்னு இந்த அறிவியல் வளர்ச்சியின் பயணத்துல மனித இனமே அழியனும் இல்ல இன்னும் ஒரு இருநூறு வருடத்திலோ நூறு வருடத்திலோ அந்த கடவுளோட நிலையை அடைவோம் சார்.. நம்ம கவலைப்பட வேண்டியது அது இந்த உலகத்தை உன்னதமாக்குற சரியான கையில் போய் சேருதா இல்ல அழிக்கிற தப்பான கையில் போய் சேருதா தான்.. "என்று கூற அவரும் அதை ஆமோதிக்கும் விதத்தில் தலையாட்டியவர் அவன் தோளில் தட்டிக்கொடுத்து விட்டு அங்கிருந்து விடைபெற்றார்..

உண்மை தானே..எத்தனை தடைகள் எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் மனிதன் வளர்ச்சி பாதையில் இருந்து என்றும் விலகினது இல்லை.. அன்று கலீலியோ முதல் இன்று எலான் மஸ்க் வரை எதிர்காலத்தை நோக்கி செல்லும் எந்த அறிவியல் பயணத்து மேல அவர்கள் இருவர் காலத்தில் வாழ்ந்த, வாழும் பாமர மனிதர்களுக்கு ஏதோ ஒரு வகையில பயம் இருக்க தான் செய்யுது.. ஆனா சில மனிதர்களின் அறிவியல் வளர்ச்சி சார்ந்த வேட்கை என்றைக்குமே என்ன நடந்தாலும் குறையறது இல்ல அதுவே மனிதர்கள் வாழ்வில் இன்று வரை வளர்ச்சி நோக்கி பயணப்பட வைக்குது.. இது வரைக்கும் இதனால பல நன்மைகள் தீமைகள் இரண்டுமே கிடைத்திருக்கு.. ஆனா இந்த பூமியும் அதை ஆட்டி படைக்கும் மனிதர்களும் இன்னமும் அழியல அது இருக்கிற வரைக்கும் மனிதனின் சிந்தனை என்றுமே அடங்காது..

ஆனால் உயிரை படைத்தவன் எங்கே(கடவுள் எங்கே) என்ற கேள்விக்கான விடையை மனிதன் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க உள்ளது..
முற்றும்..
-----------------------------------------------------------------
 

Rajam

Well-known member
Member
இரண்டு தடவை படிச்சு தான் ஒரளவு புரிந்து
கொண்டேன்.
பிரமிப்பா இருக்கு.
வாழ்த்துக்கள் பாலாஜி.
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom