• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உன்னில் சங்கமித்தேன் - 🌷குறிஞ்சி மலர்🌷

Nithya Mariappan

✍️
Writer
விமர்சனம்


கதை : உன்னில் சங்கமித்தேன்


எழுதியவர் : குறிஞ்சி மலர்

நதிவதனா : தந்தையை இழந்த குடும்பத்தை தனது உழைப்பால் உயர்த்த நினைப்பவள். நன்றிக்கடனுக்காக தனது குறிக்கோளை மாற்றிக்கொள்ள விரும்பாதவள்.

இன்பசாகரன் : நதிவதனாவின் மீது அளவற்ற நேசம் கொண்டவன். அவளின் குடும்பத்தினருக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி உதவுபவன்.

தந்தையை இழந்து தனது குடும்பத்தின் உதவியில் வாழும் நதிவதனாவுக்கும் தனக்கும் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்துகிறான் இன்பசாகரன். அந்நிகழ்வால் இரு குடும்பங்களும் பிரிந்துவிட அவர்கள் பிரிய காரணம் என்ன? மீண்டும் இணைவார்களா? பிரிந்த குடும்பங்கள் ஒன்றிணையுமா? என்பதே கதை.

நதிவதனாவை சுயமரியாதை கொண்ட பெண்ணாக சித்தரித்த விதம் இயல்பாக இருந்தது. தனது நேசத்தைக் காரணம் காட்டி அவளைக் கட்டாயப்படுத்தாமல் அருமை.

அன்பான தங்கையாக கண்மணி, வீட்டின் நிலையைப் புரிந்துகொண்டு நடக்கும் சுதர்மன், சுயமரியாதை கொண்ட அலமேலு, பேத்தி மீது கோபம் இருந்தாலும் அவளுக்கு ஆதரவாக நிற்கும் சிந்தாமணி, மகன் மீதிருக்கும் பாசத்தால் நதிவதனா மீது கோபம் கொண்டிருக்கும் சரஸ்வதி என அனைத்து கதை மாந்தர்களும் நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் நபர்களை நினைவூட்டினார்கள்.

எவ்வித குழப்பமுமின்றி தெளிவான ஃபீல் குட் கதையை கொடுத்தமைக்கு நன்றி ரைட்டர்ஜி. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் @குறிஞ்சி மலர் 💐💐💐

கதைக்கான லிங்

 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

ezhil mam yennachu ud kanom r u ok?
தீம்பாவையில் தீவிரமானேன் இன்னும் யாராவது படிக்காம இருக்கீங்களா? ஏப்ரல் 14 வரை தான் லிங்க் இருக்கும்,

New Episodes Thread

Top Bottom