ஈடில்லா எனதுயிரே! - அறிமுகம்

Admin

Administrator
Staff member
Writer
ஈடில்லா எனதுயிரே
"சட்... என்னா வாத்தியாரே இது? வாத்தியார்னா எப்பவும் விறைப்பா இருக்கணும்னு அர்த்தமில்லை. கொஞ்சம் கலகலன்னு சிரிக்கவும் செய்யலாம்..." என்றவளை பார்த்து அவனின் கடுமை மட்டும் குறையவே இல்லை.

அத்தான் என்னத்தான்
அவர் என்னைத்தான்
எப்படிச் சொல்வேனடி...

என்று ராகம் போட்டுக் கேலியாகப் பாடிக் கொண்டே, அவனின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினாள்.

"ஹோய் ராக்கம்மா, என்ன கொழுப்பு கூடி போயிருச்சா?" என்று கேட்டவன் கன்னத்தில் இருந்த அவளின் கையைத் தட்டிவிட்டான்.

"கொழுப்பு இல்லை அத்தான் மப்பு கூடிப் போச்சு..." என்று சொல்லிக் கண் சிமிட்டினாள்.

அவளை வினோதமாகப் பார்த்தவன், "காலையிலேயே டாஸ்மாக் போய்ட்டு வந்துட்டியா என்ன?” என்று நக்கலாகக் கேட்டான்.

“நோ வாத்தி... வீட்டிலேயே புல் மப்பு அடிச்சுட்டு வந்துட்டேன்...” என்றாள்.

“அடிப்பாவி! என் மாமா தங்கம், அவருக்கு அந்தப் பழக்கம் எல்லாம் இல்லையே... அப்புறம் எப்படி வீட்டில்?” லேசாக வாயைப் பிளந்து கேட்டான்.

“அதான் உங்க மாமா கட்டிட்டு வந்த தகரடப்பா வீட்டிலேயே காய்ச்சுதே... அப்புறம் ஏன் நான் வெளியே போகணும்?” என்று கேட்டாள்.

“அடியே! தூக்கத்தில் கட்டிலில் இருந்து கீழே விழுந்து தலையில் எதுவும் அடிப்பட்டுருச்சா என்ன? காலையிலேயே இந்த உளறு உளறுர?” என்றான்.

“அட! என் மக்கு அத்தான்! காலையிலயே உங்க அத்தை போட்டுக் கொடுத்த காபி குடிச்சேன். அதைக் குடிச்சுட்டு மப்பு ஏறிப் போனது போல இருக்கு...”
***
ஒரு தலை காதலாக இருந்தாலும் என் காதல் உண்மையானது. நீங்க வேண்டாம்னு சொன்னாலும் என் மனசு மாறாதுன்னு சொல்லி என் ஹார்ட்டை டச் பண்ணிட்டான்…” என்றவள் தன் நெஞ்சத்தைச் சுட்டிக் காட்டி முகத்தைக் கொஞ்சலாக வைத்துக் கொண்டு சொன்னாள்.

“அதுக்கு இப்ப நீ என்ன பண்ணலாம்னு இருக்க?” கைகளைக் கட்டிக் கொண்டு அழுத்தமாகக் கேட்டான் பிரபஞ்சன்.

“பையன் ரொம்ப நல்லவனா இருக்கான். எனக்குத் தெரிந்த வரை அவனுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. அவன் கண்கள் தேவையில்லாம அலைபாயலை. லவ் பண்ண சொல்லி என்னை டார்ச்சர் பண்ணலை. இவ்வளவு நல்ல பையனை ஏன் விடணும்னு யோசிக்கிறேன். அதனால்…”

“அதனால்?”

“என் காலேஜ் படிப்பை முடிக்க இன்னும் ஆறு மாசம் தான் இருக்கு. அதுவரை அவனை நான் கண்டுகிறதாக இல்லை. ஆனால் படிப்பை முடிக்கிற அன்னைக்கு அவன் லவ்வை ஏத்துக்கலாம்ன்னு இருக்கேன்…” என்றாள்.

பேசி முடித்தவளையே பிரபஞ்சன் கூர்மையாகப் பார்த்தான்.
***
“இப்படிச் சொன்னால் எப்படி அத்தான்? என் வாழ்க்கை என் கையில் என்று நான் நினைச்சுருந்தால் உங்ககிட்ட பேச வந்துருக்கவே மாட்டேன். எனக்கு ஒரு அட்வைசர் வேண்டும். அது நீங்க தான். உங்க எண்ணம் எப்பவும் சரியா இருக்கும். மழுப்பாமல் என்ன செய்வதுன்னு சொல்லுங்க அத்தான்…” என்றாள்.

“அட்வைசரா? என் பேச்சு உனக்கு அறுவையா இல்ல இருக்கும்?” என்று கிண்டலாகக் கேட்டான்.

“என்ன செய்வது? அந்த அறுவை நல்ல அறுவையா இருக்கும் போது கேட்டு தானே ஆகவேண்டியதா இருக்கு?” என்று சலித்துக் கொண்டவளை முறைத்துப் பார்த்தான்.

“உங்க கண்ணு நல்ல ஷார்ப் அத்தான். நல்லாவே முறைக்குது…” என்று நக்கல் அடித்தான்.

“உன்னை…” என்று அடிப்பது போல் கை ஓங்க,

வேகமாகப் பின்னால் நகர்ந்தாள் ராகவர்தினி.

“அந்தப் பயம் இருக்கட்டும்!” என்று மிரட்டியவன் கையைக் கீழே இறக்கினான்.

“அப்படியே பயந்துட்டேன் போங்க. நீங்க அடிக்கக் கூட என்னைத் தொட மாட்டீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். சரி, அதை விடுங்க அத்தான். நான் இப்ப என்ன செய்யட்டும்?” என்று தீவிரமாகக் கேட்டாள்.

eiYYQ8597854.jpg
 
Last edited:

Admin

Administrator
Staff member
Writer
கலக்கல் ஆரம்பம்.
நன்றி மா
வாவ், ஜாலியான கதையா
நன்றிமா
Super, waiting for the story
நன்றி சிஸ்
Super mam...teaser semaiya jolly ah irukku
நன்றி சிஸ்
Arumaiyana teaser.
நன்றி சிஸ்
பதிவுகளுக்கு. வெய்டிங்
நன்றி சிஸ்
 

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

அன்பு நெஞ்சங்களே,

எல்லாரும் எப்பிடி இருகீங்க. மனதோடு வீசும் தென்றல் பகுதி 5 இதோ உங்களுக்காக. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்.


அன்புடன்
உமா நாதன்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
வெய்யோனின் தண்மதி அவள் அத்தியாயம் 7😎👇
ஓம் சாயிராம்.
திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.

எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

New Episodes Thread

Top Bottom