இன்னுயிராய் ஜனித்தாய் - 30(Final)

Admin

Administrator
Staff member
Writer
Excellent..கதைக்கரு அற்புதம்.நித்திலனின் உண்மையான அன்புக்கு கிடைத்த பரிசு வருணாவும் துர்க்காவும்.கதையை முடித்தவிதம் அழகானது.வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி சிஸ்
மிக்க நன்றிகள் ❤️❤️
 

Dharani

Active member
Member
அருமை.... ரொம்ப மெல்லிய நுண்ணுணர்வுகளை அழகாக சொல்லி இருந்தீங்க.....

வாழ்க்கையை மிகை படுத்தாமல் நிஜம் மனிதர்களாக கட்டியது ரொம்ப அருமை....

கடத்தி மேல மனதாக விஷயம் தான் ஆனா அதை ரொம்ப அழகாக கொடுத்துடீங்க....

ஒரு ஒரு கதாபாத்திரமும் செம....

வாழ்த்துக்கள் சிஸ்
 

Sridevi@vicappugivi

Member
Member
அழகான குடும்பம் ❤❤❤❤அழகான முடிவு 💞💞💞எழில் மா நிதிலன் துர்கா இடையே நடக்கும் ரொமான்ஸ் அழகான கவிதை மாதிரி இருக்கு செம 😍😍😍😍
 
பதினைந்தாவது நாவலை இனிமையா முடிச்சிருக்காங்க. ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமா மனச வருடுராங்க.


மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது னு ஒரு பாடல் வரி வரும் ஆனால் இங்கு கதை புல்லாவே ஒரு மெல்லிய ஆண்மகனின் அன்பான அத்தியாயங்களை பாக்கலாம். ஆனாலும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பொறுமையா அன்பா நடக்கிறான்.


மனைவி இழந்த ஆண் மட்டும் தான் திருமணம் ஆகாத பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பதில்லை கணவனை இழந்த பெண்ணும் திருமணம் ஆகாத ஆணை திருமணம் செய்யலாம் அது தவறொன்றும் இல்லை. இங்கு மனம் தான் ஒன்று சேர்கிறது.


ஆண்மை என்பது பெண்ணை மதிப்பது அவளுக்கான உரிமையை தடுக்காமல் கொடுப்பது, அவளை அவளாகவே ஏற்பது, புரிந்து நடப்பது, அன்பு காட்டுவதுனு சொல்லிருப்பாங்க வெரி நைஸ் லைன்ஸ்.😘😘😘😘😘


சொந்த அத்தை பையனை திருமணம் செய்து இரண்டே மாதத்தில் வாழ்க்கை இழந்து சொந்த அத்தையால் தன் அப்பா வீட்டுக்கு அனுப்பப்பட்டு குழந்தையோடு வாழ்கிறாள் நாயகி. தன் அப்பாவின் தங்கை மகன் தான். இருந்தும் அந்த அம்மா பேச்சு கேக்க கஷ்டமா இருந்தது. எல்லா பக்கமும் இடி. பக்கத்து வீட்டில் இருந்தவளே தன்னை தவறாக தூற்றி திரிந்தாள் அவன் கணவனோ அதற்கு மேல் , வேலை செய்யும் இடத்தின் அருகில் ஒருவன் தொந்தரவு செய்தான். இதை எல்லாம் கடந்து வர பெண் அவள் எவ்வளவு தைரியம் கொண்டிருக்க வேண்டும்.


நாயகன் தன் குறையை தன் அண்ணியே குத்தி காட்டுவதால் தாழ்வு மனப்பான்மையுடன் ஒரு விரக்தியுடன் நாயகி வீட்டு பக்கத்தில் குடியிருக்கான். அவனோட ஒவ்வொரு உணர்வு குவியல்களுக்கும் என் கண்ணில் நீர். ப்பா ன்ற வார்த்தை கேட்டு அவன் பரவசம் அடைந்து ஓடி வந்து நின்னது எல்லாம் 😘😘


அண்ணிக்கு எந்த தண்டனையும் குடுக்காமல் விட்டுடீங்களே அக்கா எவ்வளவு பேச்சு படிக்க படிக்க ரொம்ப கஷ்டமா இருந்தது. குழந்தை பிறக்காத பெண்ணை பார்த்தும் இப்படி தான் பேசுவாங்க நான் பாத்திருக்கேன் அதோட வலியை ஒரு ஆண் சுமக்கும் போது என்ன விதமான மனநிலைக்கு ஆளாகுறாங்கனு அழகா சொல்லியிருக்காங்க. அதோடு நித்யாக்கும் ஒரு ஆப்பு வைக்காமல் விட்டுடீங்களே .


ஷாலினி முரளி நல்ல நண்பர்கள். அவர்கள் இல்லைனா எந்த முன்னேற்றமும் ஏற்பட்ருக்காது உறுதுணையாக இருந்தார்கள். குழந்தை வருணா அப்பாவோட செல்ல பிள்ளை. அவன்கிட்ட மட்டும் சாப்பிடுவது சமத்தா இருப்பது எல்லாம் ரொம்ப பிடிச்சிருந்தது. ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க அக்கா.
 

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

அன்பு நெஞ்சங்களே,

எல்லாரும் எப்பிடி இருகீங்க. மனதோடு வீசும் தென்றல் பகுதி 5 இதோ உங்களுக்காக. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்.


அன்புடன்
உமா நாதன்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
வெய்யோனின் தண்மதி அவள் அத்தியாயம் 7😎👇
ஓம் சாயிராம்.
திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.

எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

New Episodes Thread

Top Bottom