இன்னுயிராய் ஜனித்தாய் - 30(Final)

Admin

Administrator
Staff member
Writer
இன்னுயிராய் ஜனித்தாய்​
எனது பதினைந்தாவது கதையை வெற்றிகரமாக முடித்து விட்டேன் நண்பர்களே!

இந்தக் கதையின் ஆரம்பத்திலிருந்து இப்போது வரை உடன் பயணித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

சிலர் நித்திலனுக்கும், துர்காவுக்கும் குழந்தை பிறக்கும்னு நினைச்சீங்க.

ஆனால் வாழ்க்கையில் நிறைகள் மட்டுமே இருக்காதே?

குறைகள் இருந்தாலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி எடுத்துச் செல்கிறார்கள் என்று சொல்வது தான் இந்தக் கதை.

அதனால் மருத்துவரீதியாக அதிகம் எதுவும் நான் கதையில் சொல்லவில்லை.

வித்யா, ஹேமாவுக்கு எல்லாம் தண்டனை இல்லையா? என்று கேட்டிருந்தீர்கள். சிலர் குணம் அவ்வளவு சுலபமாக மாறாது. காலம் அவர்களுக்குப் பதில் சொல்லலாம்.

இங்கே குறையுள்ள ஆண்மகனான நித்திலனின் உணர்வுகளை மட்டுமே பதிவு செய்ய நினைத்தேன். அதைச் சரியாக செய்திருக்கிறேனா இல்லையா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

படித்து விட்டு மௌனமாக செல்லாமல் கருத்துக்களைச் சொல்லி சென்றால் மகிழ்ச்சியாக இருக்கும்.

 

Baby

Active member
Member
சூப்பர்கா.. அழகா எங்கையும் தொய்வு இல்லாம நித்திலனுக்காக மட்டுமே இந்த கதையை நீங்க எழுதுன ஃபீல்....

நீங்க சொன்ன மாதிரி வித்யா ஹோமாவை நல்லவங்களா காட்டிட்டா டிராமாட்டிக்கலா தெரியும்.

இது அவங்களோட குணம் மாறுறது காலத்தின் கையில..

இடைல கமென்ட்ஸ் பன்ன முடில... சாரிகா...

உங்களோடபதினைந்தாவது கதையை அழகா முடிச்சதுக்கு வாழ்த்துகள்
 

Apsareezbeena loganathan

Active member
Member
இது தான் நிஜம்!!!!! இது தான் எதார்த்தமான வாழ்க்கை சிலரை எப்பொழுதும் திருத்த முடியாது இந்த கதையின் சிறப்பு அம்சமே!!!!!!!அவர் அவர்களை அவர்களின் குணநலன்களை அப்படியே ஏற்றுக்கொள்வது என்பதுதான் வாழ்க்கை என்பது தெள்ளத் தெளிவாக உணர்த்திய கதை இது!!!!
ஆண் என்பவன் ஆண்மையானவன் அவன் ஆட்டி படைப்பவன்
ஆளுமை திறன் கொண்டவன் என்றெல்லாம் நினைத்த கோட்பாட்டினை உடைத்தெரிந்து ஆணின் ஆண்மை பெண்மையை காப்பதில் உள்ளது பெண்ணின் மென்மையிலும் மென்மையானவன் ஆண் என்பதை உணர்த்திய கதை இது உணர்வுகளின் குவியல்!!உணர்ச்சிகளின் வெளிப்பாடு!!!!
என்னுயிராய் ஜனித்தாய்!!!!! ❤❤💓💓💞💕💖🥰🥰🥳❣️❣️❣️❣️❣️💐💐💐💐💐💐
 

Babu Krishnaswami

New member
Member
மனிதர்களின் நுண்ணிய உணர்வுகளை மிக அழகாக எல்லார மனமும் உருகும் எழுத உங்களால் மட்டுமே முடியும் சகோதரி. எளிதில் மறக்கமுடியாது.உங்கள் படைப்புகள் தொடர வாழ்த்துக்கள்.அடுத்த கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்
 

kothaisuresh

Well-known member
Member
அழகான நிறைவான கதைக்கு வாழ்த்துகள். இதுதான் நிதர்சனம்
நித்திலனை அவனுக்காகவே ஏற்று அவன் வாழ்வை உயிர்பித்து விட்டாள் துர்கா.அவனுடைய இன்னுயிராய் ஜனித்திருப்பவள் வருணா.அவங்களை அவங்களாகவே ஏற்றுக்கொள்ள வைத்திருப்பது தான் கதையின் சிறப்பே.வாழ்த்துகள் எழில்💐💐💐💐💐👌👌👌👌👌
 

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

அன்பு நெஞ்சங்களே,

எல்லாரும் எப்பிடி இருகீங்க. மனதோடு வீசும் தென்றல் பகுதி 5 இதோ உங்களுக்காக. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்.


அன்புடன்
உமா நாதன்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
வெய்யோனின் தண்மதி அவள் அத்தியாயம் 7😎👇
ஓம் சாயிராம்.
திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.

எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

New Episodes Thread

Top Bottom