இதயமே உயிரே நீதானடி- அத்தியாயம் -1௦

பகுதி - 10

“டேய்! நான் சொல்றத கவனமா கேளுங்க. நாம ஏற்கனவே திட்டம் போட்ட மாதிரியே கயல்விழிய தூக்கிட்டு காட்டு கோவில் பக்கமா வந்துடுங்க டா."

“அங்க மலையும், புதருமா இருக்கறதாலயாருக்கும் தெரியாது."

“சரிங்க முதலாளி. மீனுக்கு நீந்த கற்றுக் கொடுக்கனுமா. அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம் என்றனர். "

“அதுக்கு மேல நான் சொன்னபடி எல்லாம் கச்சிதமாக முடிச்சிடணும்டா”,என்றார் சண்முகம்.

ரவுடிகளில் ஒருவன், போங்க முதலாளி கரும்பு தின்ன கூலியா என தலையை சொறிந்து கொண்டு விகாரமாக சிரித்தான்.

“எனக்கும் அதான்டா வேணும். அந்த பசுபதி பொண்ணு மானபங்கப்படனும். குடும்ப கௌவுரவம் போகணும். அவன் பெண்ணை எவனும் சீண்ட கூடாது. ஊரே காரித் துப்பனும். அவமானம் தாங்காமல் அவன் நாண்டுகிட்டு சாகணும் டா”, என சண்முகம் ஆவேசமாக கூற.

நீங்க கவலையே விடுங்க. அப்படியே நடத்துவோம்.

டேய்! நேரம் போய்கிட்டே இருக்கு. அந்த கயல்விழி கோவிலில் இருந்து வர வழியிலேயே வேலையை கச்சிதமாக முடிச்சிடுங்க.

“என் பேரு வெளியே வராமல் பார்த்துக்கோங்க டா.. அதை மீறி வந்தது எவனும் உசுரோட இருக்க மாட்டீங்க. தொலைச்சிப்புடுவேன்”என கூறிவிட்டு சண்முகம் அந்த இடத்தைவிட்டு நகர.

“கதிர் அடுத்து நடக்க போகும் விபரீதத்தை தடுக்க ஏதாவது செய்ய வேண்டுமென அவசரமாக சிந்தித்தான். அவர்கள் எப்படியும் கயல்விழியை காட்டுக்கோவில் பக்கமாக தானே தூக்கிட்டு வரணும். அவர்களுக்கு முன்பாகவே நாம் அங்கு போய்விடலாம்”, என அவர்களுக்கு தெரியாமல் அந்த இடத்தை விட்டு மெதுவாக நகர்ந்தான்.

கதிர்! கிழக்கு காட்டு வழியாக காட்டுக்கோவிலை நோக்கி நடந்தான். "இந்த கயல்விழிய எப்படியாவது காப்பாத்தியே ஆகணும். இல்லனா ஏற்கனவே பகையாய் இருக்க இரண்டு குடும்பத்திற்கும் அப்புறம் ஜென்ம பகையாக மாறிவிடும்” என பலவாறு யோசித்து கொண்டே நடந்தான்.

அப்போது குமாரும் அங்கு வர.

டேய்! டேய்! டேய்! கதிரு. இவன் என்ன செவுடா. அவன் பக்கத்தில் சென்று கதிரை உலுக்கினான்.

வாடா குமாரு. சரியான நேரத்தில தான் வந்து இருக்க. என கதிர் கூற.

அட போடா. நான் கூப்பிட கூப்பிட காதுல வாங்காம போற. இப்ப மட்டும் இப்படி சொல்ற என குமார் சலித்து கொண்டான்.

ஏதோ சிந்தனையில் போனேன்டா. கவனிக்கல.

சரிடா! என்ன விஷயம் சொல்லு என குமார் கேட்க.

கதிர் தன் தந்தை சண்முகத்தின் திட்டத்தை கூறினான்.

இதை கேட்ட குமார் ஆடிப்போனான். அதுக்கு இப்போ என்னை என்னடா பண்ண சொல்ற.

உதவிக்கு நீயும் வாடா என்று கதிர் கூப்பிட.

“நா. நான். நானாஆஆ. இல்லடா. அது வந்து. ஆத்தா சந்தைக்கு காய்கறி எல்லாம் கொண்டு போக சொன்னுச்சு. காய் எல்லாம் கூடைல எடுத்து அடுக்கி வைக்கணும். நிறைய வேலை இருக்குடா. நீயே போயிட்டு வந்துடு” என குமார் மென்று முழுங்க.

இவ்வளவுதான் உன் நட்பா? ச்சி என கதிர் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள.

நீ ஏன்டா சொல்ல மாட்டே. நான் எங்க ஆத்தாவுக்கு ஓத்த புள்ள டா. அவனுங்க எல்லாம் ரவுடி பயலுங்க. ஏடாகூடமா ஏதாவது ஆச்சுன்னா என்னடா பண்றது.

ஒன்னும் ஆகாதுடா நான்தான் கூட இருக்கேன்ல என கதிர் கூற.

நீ இருப்படா. நான் இருக்கணும்ல.

அதெல்லாம் பார்த்துக்கலாம் வாடா என குமாரின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான்.

கதிர். டேய்! எப்படிடா தடுக்கப் போற. அவனுங்க நாலு பேருடா.

“யோசிச்சா பயமாதான் இருக்கும். பாத்துக்கலாம் வாடா”, என இருவருமாக சேர்ந்து காட்டு கோவிலுக்கு போய் காத்திருந்தனர்.

பிள்ளையார் கோவில்

கயல்விழி பிள்ளையாரை வணங்கிவிட்டு சுற்றி இருந்த ரம்மியமான சூழ்நிலை ரசித்துக்கொண்டு சற்று நேரம் அங்கேயே அமர்ந்தாள். பிறகு வீட்டிற்கு போகலாம் எனக் கிளம்பினாள்.

வயல்வெளியில் நடந்து போய் கொண்டிருக்க. திடீரென அவள் பின்னால் ஏதோ சத்தம் கேட்க, சடாரென திரும்பி பார்த்தாள் கயல்விழி.

அங்கு எதுவுமே இல்லை. மீண்டும் சோளக்காட்டின் வழியாக நடந்தாள். மீண்டும் சலசலவென சத்தம் கேட்க. முதல்முறையாக சற்று பயம் எட்டிப் பார்த்தது கயல்விழிக்கு.

மெல்லமாக திரும்பிப் பார்க்க, அப்போதும் ஒன்றும் தென்படவில்லை. கடவுளை வேண்டிக்கொண்டு மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மீண்டும் நடந்தாள்.

மீண்டும் கயலின் பின்னால் காலடி ஓசை கேட்க. சட்டென திரும்பிப் பார்த்தாள்.

அங்கு கம்பீரமான உடல்வாகுடன், பெரிய முறுக்கு மீசையோடு பார்க்கவே பயப்படும்படியான தோற்றத்தோடு நான்கு தடியர்கள் நின்று கொண்டிருக்க.

கயல்விழிக்கு நெஞ்சம் பதறியது.ஏதோ விபரீதம் நடக்க போகிறது என இதயம் வேகமாக துடிக்க தொடங்கியது. சற்றும் தாமதிக்காமல் வேகமாக ஓடத் தொடங்கினாள்.

“இவ கத்தினா நமக்கு தான் ஆபத்து. சுத்தி வளச்சு புடிங்கடா”, என ஒருவன் கட்டளையிட. அவர்கள் வேகமாக கயலைத் துரத்த.

காப்பாத்துங்க! காப்பாத்துங்க! என கத்திக்கொண்டே தன்னால் இயன்றவரை வேகமாக ஓடத் தொடங்கினாள். ஆனால் அவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தோற்றுத்தான் போனாள்.

அவர்கள் நான்கு பேரும் கயலைச் சுற்றி வளைத்து கைகளை கட்டி வாயில் துணியை வைத்து கட்டி வந்தவனில் ஒருவன் அவளை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு காட்டு கோவிலை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தனர்.

யாரும் சுற்றிலும் பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டுக் கொண்டே நடந்தனர்.


“கயலுக்கு மரண பயத்தை விட மானம் போய் விடுமோ என்ற பயமே அதிகமாக இருந்தது.” அப்படி ஒன்று நடந்து விட்டால் இனி உயிரோடு இருக்கவே கூடாது என பலவாறான சிந்தனைகளோடு நெருப்பில் இட்ட புழுவாய் துடித்துக் கொண்டிருந்தாள். கத்தவும் முடியாமல், துள்ளவும் முடியாமல் இதயம் படபடக்க, உடல் நடுங்க வெயிலில் பட்ட கொடி என துவண்டு போனாள்.

ஒரு வழியாக காட்டு கோவில் பக்கமாக புதர் மண்டிக் கிடந்த இடத்திற்கு கயலைத் தூக்கி வந்தனர். சுற்றிலும் புதரும், மலையுமாக இருந்தது. இவர்களுக்கு வசதியாகப்போனது. கயல்விழியை கீழே இறக்கி விட்டான் அந்த தடியன்.

கயல்விழி ஓட முயற்சி செய்ய. கோபம் வந்து பளார் என்று அறைந்தான் ஒருவன். என்னடி துள்ற. எங்களுக்கு அமைதியா ஒத்துழைப்பு கொடுத்தா இப்படியே இன்னைக்கு பூத்த புது ரோசா வாட்டம் வீட்டுக்கு போயிடுவ. அப்படி இல்லன்னா உரிச்ச தேங்கா நார் மாதிரி உரிச்சி போட்ருவோம் என கயலை மிரட்டினான்.

சத்தம் போட்டு அழ கூட தெம்பில்லாமல் துடிக்க. ஒருவன் அவளை நெருங்கி அவளது தோளில் கை வைத்தான். எங்கிருந்தோ வந்த உருட்டு கட்டை ஒன்று அவன் தலையைப் பதம் பார்த்தது.

மற்ற மூவரும் திரும்பிப்பார்க்க கதிரும், குமாரும் அங்கே நின்றார்கள்.

சின்னவரே! இதுல நீங்க தலையிட வேண்டாம். இது பெரிய சொல்லித்தான் நாங்க பண்றோம். நீங்க கிளம்புங்க என்றான்.

எல்லாம் தெரிஞ்சு தான்டா நான் இங்கே வந்திருக்கேன். மரியாதையா அந்த பொண்ணு விட்ருங்கடா.

சின்னவரே! நீங்களா விலகிக்கிட்டா நல்லது.

இல்லைன்னா. என்னடா பண்ணுவ.

உங்க மேலயும் கை வைக்க வேண்டியிருக்கும்.

“கைய வச்சி பாருடா தெரியும்”,என கதிர் சீற.

அவர்கள் கதிரை நோக்கி வர. குமார் அதற்குள் மண்ணை வாரி அவர்கள் மேல் கண்ணில் தூவ.

அவர்கள் கண்களை கசக்கிக் கொண்டு நிற்கும் அந்த வேலையில் கதிர் கயல்விழியை வேறு வழியின்றி தூக்கிக் கொண்டு காட்டு கோவிலுக்குள் நுழைந்து, கோவிலின் நுழைவாயிலைத் தாளிட்டான்.

“டேய்! என்னடா இப்படி பண்ணிட்ட” என குமாரை கேட்டான் கதிர்.

அவனுங்க நாலு பேருடா. எப்படிடா சண்டை போடுவ. அதான் மூளைக்கு வேலை கொடுத்து மண்ண வாரி விட்டேன் என்றான் குமார்.

கயல்விழியின் கைகளில் கட்டியிருந்த கட்டை அவிழ்த்து விட்டான் கதிர்.

அதற்க்குள் ரவுடி கும்பல் கோவிலின் கதவை உடைக்க முயற்சி செய்தனர்.

குமாருக்கு பயத்தில் அழுகையே வந்தது.

கதிரு! ”அவங்க உள்ளே வந்தா நிச்சயம் கொன்னுடுவாங்க. சிவனேனு வயக்காட்டுக்கு போன என்ன கூட்டிட்டு வந்து இப்படி காவு கொடுக்கிறியேடா” என புலம்பினான்.

“அவங்க உள்ள வந்தா கயல்விழிக்கு ஆபத்து நிச்சயம். அவங்க நினைச்சத நடக்க விடக்கூடாது. இப்போ என்ன பண்றது”,என மனதுக்குள் யோசித்தான் கதிர்.

உடனே சுவாமி பாதத்தில் இருந்த மஞ்சள் கயிறை எடுத்து கயல்விழியின் கழுத்தில் கட்ட போனான்.

“கயல்விழிக்கு வந்ததே கோபம். என்னடா நாடகம் நடத்துறீங்களா. அவனுங்களை விட்டு துரத்த சொல்லிட்டு. என்ன காப்பாத்தற மாதிரி வந்து என் கழுத்துல தாலி கட்ட பாக்குறியா?” என வாய்க்கு வந்தபடி கதிரை திட்டினாள்.

“சத்தியமா இல்லைங்க. இது எங்க அப்பாவோட சதி. உங்க குடும்ப கௌரவத்தைக் கெடுக்கணும்னு இப்படி எல்லாம் பண்றாங்க. உங்களை காப்பாத்தணும்னு தான் நான் வந்தேன்”, என எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கயல்விழி கேட்கத் தயாராக இல்லை.

கதிர் பொறுமை இழந்து, கோபம் வந்து. டேய் குமாரு இவ சொன்னா கேட்க மாட்டா. அவ கையைப் பிடி எனக் கூற.

குமாரும் அவளது கைகளை பிடிக்க.

“மன்னிச்சிடுங்க!. எங்க அப்பாவோட இந்த பாவத்தில் இருந்து உங்களை காப்பாற்ற எனக்கு வேற வழி தெரியல”, என கயல்விழியின் கழுத்தில் தாலி கட்டினான் கதிர்.

பிறகு கயலின் கைகளை விடுவித்தான் குமார்.

கயல்விழிக்கு கோபமும், அழுகையும் பீறிட்டு கொண்டு வர.

“இப்படி எல்லாம் நடிச்சா நல்லவன்னு நான் நம்பிடுவேனா. எங்க அப்பா பெயரை கெடுக்க தானே இப்படி செஞ்சிங்க. நான் செத்தாலும் சாவேனே தவிர உங்க குடும்பத்தில வந்து வாக்க பட மாட்டேன்டா”, என கூறிய கயல்விழி ஆவேசமாக கதிர் கட்டிய புது தாலியை அறுத்து அவன் முகத்தில் வீசினாள்.

தொடரும்..........
 

Rajam

Well-known member
Member
நல்லதுககு காலமில்லை.
தவறான முடிவெடுத்து தவறை செய்து விட்டாள்.
 

Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom