இதயமே உயிரே நீதானடி அத்தியாயம் - 02 | Ezhilanbu Novels/Nandhavanam

இதயமே உயிரே நீதானடி அத்தியாயம் - 02

பகுதி - 02

ஏன் மாமா நிறுத்திட்டீங்க..... அவ்வளவுதானா ? அப்படியாவது உங்கள் விரல் என் கன்னத்திலபட்டதே. சந்தோஷம் தான் மாமா என கண்களில் நீர்வழிய வார்த்தைகளை நெருப்பாய் அள்ளி வீசினாள் கண்மணி.

உள்ளுக்குள்ளே ஏற்கனவே வேதனை திகுதிகுனு தீயா இருந்துகிட்டுதான் இருக்கு கண்மணி." நீ வேற எரியற நெருப்பில எண்ணையை ஊத்தி மேலும் எரிய விட்டு அழகு பாக்காதே" , என கதிர் கண்கலங்க..

"நினைவுகளின் பழைய தருணங்கள் மனக்கண் முன் ஒரு நொடி வந்து போனது.. மனம் ரணமாய் வலிக்கத்தான் செய்தது"

காதலா? எனக்கா? என ஒரு கணம் கண்களை இருக மூடினான்..

"மாமா ! எனக்கு ஒரு பதில் சொல்லுங்க" என கதிரை உலுக்க..

கண்மணிக்கு மௌனத்தையே பதிலாக்கி விட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்தான்.

போ மாமா போ " இந்த இடத்தைவிட்டு வேணா நீ நகரலாம்.. ஆனால் என் இதயத்தை விட்டு நீ ஒரு அடி கூட நகர முடியாது" என ஆவேசமாக கத்தினாள்..

அவள் கூறும் எதையும் கேளாதவனாய் இதயம் கனக்க , கண்கள் கலங்க , உள்ள குமுறலோடு அவன் உடல் மட்டும் அவனோடு நடைபோட்டது... பாராமுகமாய் கடந்து சென்றான்.

"ஏன் கண்மணி. அவருதான் இவ்வளவு கேவலமாக பேசறாரே. வெட்கமில்லாமல் எதுக்கு அவர் பின்னாடி சுத்துற.. ச்சீசீ.. நானா இருந்தால் எப்பவோ தூக்கி போட்டுட்டு போய் இருப்பேன்டி" என புவனா கூற..

"வேண்டாம்னு சொல்லிட்டா விட்டுட்டு போறது உண்மையான காதல் இல்லடி.. கூடிய சீக்கிரம் என் காதலை புரியவைக்கிறேன். இன்னைக்கு நான் அவர் பின்னாடி சுத்தறேன்.. உண்மைதான்....... கொஞ்ச நாள்ல அவர் என் பின்னாடி சுத்துவாரு.. பாத்துட்டே இருடீ... வா போகலாம்" என இருவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள்...

கதிரேசன் வீடு:

வீட்டை பார்க்கும் போதே அவர்களின் பணத்திமிரை காட்டியது.. அலங்காரமான அரண்மனை போன்ற பெரிய வீடு.. வாசலில் கருகருவென பெரிய நாய்கள் இரண்டு..

கூப்பிட்ட குரலுக்கு வேலையாட்கள்.. வீட்டை சுற்றி தோட்டம் என அழகாக இருந்தது.

கதிர் அதிவேகமாக வீட்டிற்குள் நுழைய.. ஏன்டி .. துரை எங்க போயிட்டு வராரு என சண்முகம் கேட்க...

"ஏன் அத நீங்க கேக்க மாட்டீங்களா?" என லட்சுமி கூற...

டேய் நில்லுடா.... எங்கடா போயிட்டு வர ....

அம்மா மலை கோவிலுக்கு விளக்கு போட்டு வர சொன்னாங்க.... பாவம் தொலையட்டும்னு தான் நானும் போறேன் .....

ஓஹோ ! ஆத்தா கிழிச்ச கோட்டைத் தாண்டத புள்ள தான... ஆத்தாளும் மகனுமா சேர்ந்து நல்லா நடிக்கிறீங்க... அடுத்த செவாலியர் விருத உங்களுக்கு தர சொல்றேன்..

ம்க்கும்.. இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. இங்கே பேசிய வீர வசனத்தை ஊருக்குள்ள பேசி இருந்தா உங்களையும் நாலு சனம் மதிச்சு இருக்கும்.. பெருசா பேச வந்துட்டாங்க....

நான் என்ன பேச மாட்டேனாடீ சொன்னேன்.. எவன்டீ என் பேச்ச கேக்குறான்... எல்லாம் அந்த நார பைய மவன் பசுபதி பேச்சுதான் கேக்குறானுங்க.....

தேனொழுக நாலு வார்த்தை பேசினா அவன் பின்னாடியே நாக்கு தள்ள சுத்துறானுங்க.... ஊருக்கு நாட்டாமை வேஷம் போட்டுகிட்டு சுத்திகிட்டு இருக்கான்....

ஒரு நாளைக்கு அவன் வேஷம் கலையும். அப்போ பாருடீ.... ஊரு பயலுக என் பின்னாடி வருவானுங்க...

போதும்.. போதும்... பகல் கனவு காணாதீங்க... பலிக்காது..

ஏய் ! அத விடுடி.. உன் மவன் கோவில்ல என்ன பண்ணிட்டு வந்தானு நீ கேளு ...

"என்ன கருமண்டா பண்ணி தொலைச்சே" என லட்சுமி கேட்க......


நான் ஒன்னும் பண்ணலம்மா என கதிர் நகர...

ஆத்தா நடிப்பு அப்படியே பிள்ளை கிட்ட இருக்கு... சும்மாவா சொன்னாங்க.. தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்னு..

இந்த சுத்தி வளச்சு பேசுற வேலையெல்லாம் வேண்டாம்ப்பா.. இப்ப உங்களுக்கு என்ன தெரியனும்.. நானே சொல்றேன்...

கோவில்ல கண்மணி என்னை பார்த்து பேசினா... அவளை நான் அடிச்சிட்டேன்.. அவ்வளவுதான்..

அவ்வளவுதானாடா மகனே..

ஆமா அவ்வளவுதான்..

பட்சி தானா வந்த மாட்டுது .. ஏன்டா ஒதுங்கி போகணும்.. நான் சொல்றதை கேளுடா..... ஒழுங்கா அவ கழுத்துல தாலி கட்டி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடு... மத்தத நான் பாத்துக்கறேன்..

அவங்க அப்பன் மூஞ்சில கரிய பூசனும்... ஊருக்குள்ள அவன் தலைகுனிஞ்சி நிக்கனும்டா..

போதும் நிறுத்துங்கப்பா.. உங்க பேச்சை கேட்டு வாழ்க்கையில நான் பண்ண ஒரு
தப்பே போதும்..

இன்னைக்கு வரைக்கும் அந்த பாவம் என்ன தூங்க விடாமல் துரத்திட்டே இருக்கு..

டேய் சும்மா நிறுத்துடா..... தப்பு நாம பண்ணல.... நம்ம பக்கம் தப்பே இல்லாதபோது நாம ஏன்டா வருத்தப்படனும்.. பழைய குப்பையை தூக்கிப்போட்டுட்டு ஆகவேண்டியதை பாரு... இப்பவும் ஒண்ணும் கெட்டு போகல.. அவ கழுத்துல தாலியை கட்டி கூட்டிட்டு வர வழியை பாருடா. அவ்வளவு தான் சொல்லுவேன்..

நீ எல்லாம் ஒரு அப்பனா.. என்ன மனுஷன்யா நீ ..

டேய்.. அப்பாவையா எதுத்து பேசற.... அப்பா நல்லதுக்குதான் சொல்லுவாரு ..

நீ வாயை மூடும்மா... எனக்கு புத்தி சொல்ற தகுதி உனக்கு இல்லை... பெத்த கடனுக்கு அம்மானு மரியாதை கொடுக்கறேன்.... அந்த மரியாதைய காப்பாத்திக்கோ...

"சும்மா நிறுத்துடா.... ஊரு உலகத்துல நடக்காத அதிசயம் நடந்த மாதிரி பில்டப் பண்ணிக்கற.. வாயை மூடிட்டு போ.... களத்துமேட்டில் தலைக்கு மேல வேலை கிடக்குது... போய் சாப்பிட்டு ஆக வேண்டிய வேலையை பாருடா" என லட்சுமி கூறினாள்.

வேண்டாவெறுப்பாக கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு களத்து மேட்டுக்கு கிளம்பி சென்றான் கதிர்..

கண்மணி அவன் வரவிற்காகவே தன் இரு விழிகளை வழிமீது வைத்து இதய வாசலை திறந்து இயற்கை அன்னையின் கொடையான மரத்தினடியில் காத்திருந்தாள்..

கண்மணியை கண்டதும் கதிர் நெருப்பிலிட்டு புழுவைப்போல துடித்தான்... கண்கள் சிவக்க.. அவளைப் பார்த்தும் பாராமுகமாக நகர..

மாமா ஒரு நிமிஷம் நில்லுங்க..

உன் பேச்சை கேட்க நான் தயாராக இல்லை .. நீ கிளம்பு கண்மணி...

"நான் சொல்றத நீங்க கேக்க மாட்டீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் மாமா.. நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.. என்னோட மனசுல என்ன இருக்குன்னு என்னோட முடிவு இந்த கடிதத்தில் தெளிவா எழுதி இருக்கேன்.. இத படிச்சு பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வாங்க " என கடிதத்தை கதிரின் முன் நீட்டினாள்..

கதிர் அந்த கடிதத்தை வாங்கி ஒரு கணம் கூட தாமதிக்காமல் சுக்குநூறாக கிழித்து போட்டான்..

அதுவரை தனக்குள் இருந்த கண்மூடித்தனமான காதல் அழுகையாய் வெடித்து சிதறியது கண்மணிக்கு..

இந்தக் கடிதத்தை படித்து பார்த்து விட்டு கிழிச்சு இருக்கலாமே மாமா.. என் மனசுல இருக்க காதலை எப்போதான் புரிஞ்சிக்க போறீங்க..

நான் புரிஞ்சிக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஏன் இப்படி என்னைச் சித்திரவதை பண்ணுற கண்மணி. இதுக்கு நீ என்னை கொன்னு இருக்கலாம்..

கரெக்டுதான் மாமா... கொல்லனும்.. உன்னை இல்லை.. என்னை நானே கொன்னுக்கனும்.. அப்படியாவது என் காதலை புரிஞ்சுக்கவே இல்ல மாமா.

பைத்தியக்காரத்தனமா பேசாத கண்மணி.. நீ முதல்ல வீட்டுக்கு கிளம்பு என்றான் கதிர்..

போகத்தான் போறேன் மாமா.. வீட்டுக்கு இல்லை , என அருகில் இருந்த கிணற்றை வெறிக்க வெறிக்க பார்த்தாள்..

"என்னோட காதலை புரிய வைக்க எனக்கு வேற வழி தெரியல மாமா.... நான் செத்தா தான் நீ புரிஞ்சுக்குவேணா அதுக்கும் நான் தயாராகத்தான் வந்திருக்கேன் மாமா " என கிணற்றை நோக்கி ஓடினாள் கண்மணி...

"ஏய் ! நில்லு.... நில்லுடீ.... நில்லு அவசரப்படாத கண்மணி" என கதிர் கத்த கத்த , கதிரின் குரலை சிறிதும் பொருட்படுத்தாமல் ஓடிய வேகத்தில் கண்மணி கிணற்றில் குதித்தாள்...

தொடரும்..........
 

Rajam

Well-known member
Member
காதலை விட உயிர் பெரிதல்ல னு நிருபிச்சுட்டா.
 
கண்மணி காதலை நிரூபிக்க கிணற்றில் குதித்து விட்டாள்..
கதிர் மனம் மாறுவானா..
 

Nithya Mariappan

✍️
Writer
கதிரோட அப்பா என்ன இப்பிடி பேசுறாரு😏😏 இப்போ கண்மணி வேற கிணத்துல குதிச்சிட்டா... என்ன ஆகப்போகுதோ😒
 

Latest profile posts

Good morning Friends 😃😃😃
காதல் சிறகைத் தாராயோ -1 பதிவிடப்பட்டது. எனக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் கமென்ட் செய்யுங்க.
Thread 'காதல் சிறகைத் தாராயோ -1' https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-சிறகைத்-தாராயோ-1.812/
இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊

New Episodes Thread

Top Bottom