• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பு வாழும் கூடு

Balaji

✍️
Writer
அந்த தென்னந்தோப்புகளும் செழித்திருந்த பச்சை வயல்களும் அந்த ஊரின் அழகுக்கு அழகு கூட்ட அதை ரசித்தப்படியே இரு வருடங்களுக்கு பின் ராமும் சிவாவும் தங்கள் வீட்டிற்கு செல்ல போகும் மகிழ்ச்சியில் மகிழுந்தில் பயணித்தார்கள்.

ராம்" இங்க வந்து கிட்ட தட்ட ரெண்டு வருஷம் ஆகிடுச்சு எவ்ளோ அழகை மிஸ் பண்ணிட்டு அங்க ரேட் ரெஸ்-ல வாழ்ந்திருக்கோம்.. நல்ல வேலை இந்த வாட்டி பாட்டியும் தாத்தாவும் திருவிழாவுக்கு வந்தே ஆகணும்னு மிரட்டி கூப்பிடவே நாம வந்துட்டோம் இல்லன்னா இந்த வருஷமும் ஏதாவது காரணம் சொல்லி இதை மிஸ் பண்ணிருப்போம் டா சிவா.. "

சிவா" அதுவும் சரி தான் இந்த திருவிழாவும் நம்ம ஊரும் எவ்ளோ அழகு டா ராம்.. சின்ன வயசுல இருந்து வருஷம் வருஷம் கண்டிப்பா செய்யலாம் செய்யலாம் சொல்லி சொல்லியே ஏமாத்துற, இந்த வாட்டியாவது அந்த ராட்டினத்துல என்னை கூட்டிட்டு போடா.. "என்று சொந்த ஊரின் மனம் அவன் மனதை நிறைத்ததும் குழந்தையாகவே மாறிபோய் பேசினான் சிவா.
ராமோ " நீ மட்டும் தனியா போக வேண்டியது தானே டா.எதுக்கு என்னை எப்போதும் கூப்பிடுற? "என்று கேற்க சிவாவோ" தனியா போனா போர் அடிக்கும் buddy எனக்கு கம்பெனி வேணும் அப்போ தான் ஜாலியா இருக்கும்.. "என்று கூறினான்.

இதை கேட்ட ராமோ அவனை பார்த்து புன்னகைத்தவன் " கண்டிப்பா டா சிவா.. இந்த வருஷம் உன்னை ராட்டினத்தில உட்கார வைச்சு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி தரேன் சரியா.. "என்று கிண்டல் செய்திட அவனோ " ஹ்ம்ம்.. சூப்பர் சூப்பர் ஆனா பலூனை மறந்துட்டியே Buddy.. "என்று அவனை வெறுப்பேற்ற ராமோ அவனை செல்லமாக அடித்தான்.

ராம்"இந்த மாதிரி உன்கூட சேர்ந்து விளையாட்டு தனமா இருந்துகிட்டு நான் என்னோட தலையாய கடமையயே மறந்திடுவேன் போல.. இந்த வாட்டி எப்படியாவது என்னோட ரோஸ் கிட்ட நான் ப்ரபோஸ் பண்ணியே ஆகணும் டா இதுல மாற்றமே இல்ல.. "என்று கூற சிவாவோ " நீயும் ரோஸ் ரோஸ்ன்னு இந்த பெயரை சின்ன வயசுல இருந்து சிரிச்சிக்கிட்டே கோபமா சோகமா சந்தோசமான்னு எல்லா உணர்ச்சியிலையும் என்கிட்ட சொல்லிட்ட.. ஆனா அவங்க இந்த ஊருக்கே நான் இருக்கும் போது வந்ததில்ல.. அதனால நானும் பார்த்ததில்லை.. இந்த திருவிழாவுக்கு நீ ப்ரபோஸ் பண்ணுறியோ இல்லையோ நான் கண்டிப்பா அவங்கள பார்த்தே ஆகணும்.. "என்று சிறுவயதில் இருந்தே நண்பன் கூறிய பெயருக்கு உரியவரை பார்த்தே ஆக வேண்டும் என்னும் ஆர்வம் மின்ன கூறினான்.

ராம்" கண்டிப்பா டா.. "என்று கூறியவன் மகிழுந்து தனது ஊருக்குள் வந்துவிட்டதை உணர்ந்தான்.வெகு நாட்கள் கழித்து தன் சொந்தங்களை பார்க்க போகும் சந்தோஷம் முகத்தில் புன்னகையாய் அரும்ப வண்டியை தன் வீட்டை நோக்கி செலுத்தினான் ராம்.

ராம் தன் வீடே விழாக்கோலம் பூண்டிருப்பதை வெளியில் இருந்தே உணர்ந்தான்.தன் தாய் தந்தை தாத்தாஸ் பாட்டிஸ் மாமா அத்தை மாமாவின் மக்கள் என அனைவரையும் காணும் சந்தோஷத்தில் வீட்டினுள் நுழைந்தான்.

ராமின் மாமா அவன் பிறக்கும் முன்னமே தன் மனையாளுடன் வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்தார்.இரண்டு வருடத்திற்கு ஒருமுறையே இந்தியாவிற்கு வருபவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக விடுமுறை கிடைக்காததால் ஊருக்கே வரவில்லை.தற்போது தான் அதுக்கான நேரம் மீண்டும் அவருக்கு கிடைத்திருக்கிறது.சிவா எப்போதும் விடுமுறை நாட்களில் தன் தாத்தா பாட்டி ஊருக்கு சென்று விடுவதால் அவன் இதுவரை ராமின் மாமா குடும்பத்தில் யாரையும் பார்த்ததில்லை.

தன் வீடு வந்ததும் மகிழுந்தை நிறுத்திவிட்டு இருவரும் தங்கள் உடைமைகளுடன் இறங்க,அதற்குள் வண்டி வரும் சத்தம் கேட்டதுமே உள்ளே இருந்து ராமின் தாய் தந்தை தங்கை என மூவரும் வெளியே வந்தனர்.

அவர்களை கண்ட ராமோ புன்னகைக்க சிவாவோ அவர்கள் கையில் ஆலம் கரைத்து வருவதை பார்த்தவன் ராமிடம் " சரி ராம் நான் போய் அப்பா அம்மாவை பார்த்துட்டு வந்துடுறேன்.. நாம ஒரு ஒன் ஹவர் கழிச்சு மீட் பண்ணுவோம்.. பாய் டா.. "என்றுவிட்டு நழுவ அவனை ராம் முறைத்துவிட்டு தன் அருகில் கூப்பிட்டு நிற்க வைத்து கொண்டான்.

ராமின் தாயோ இருவருக்கும் திருஷ்டி கழித்தவர் " நீங்க ரெண்டு பேரும் என் பிள்ளைங்க தான் பா ரெண்டு பேரும் எனக்கு ஒன்னு தான்.. "என்று சிவாவிடம் அவன் கூறியதை காதில் வாங்கியவராக பதில் கூற அவனோ கண்ணில் எட்டிப்பார்த்த அந்த சிறுத்துளியை மறைத்து விட்டு புன்னகைத்தான்.

ராமின் தங்கை மைதிலியோ இருவரையும் பார்த்து " என் அழகு அண்ணாஸ் ரெண்டு வருஷமா என்னை பத்திலாம் நினைச்சு கூட பார்க்கல ல.. நமக்கு ஒரு தங்கச்சி இருக்கே அது எப்படி இருக்கோ என்ன அச்சோ ஹ்ம்ம் ஹ்ம்ம் ரெண்டு பேருக்கும் கொஞ்சம் கூட ரெஸ்பான்சிபிலிட்டி சின்சியாரிட்டி டெடிகேஷன் எதுவுமே இல்ல சுத்த வேஸ்ட் பிலோஸ்.. ஹ்ம்ம்.. "என்று இருவரையும் முறைக்க இருவரும் தங்கள் தங்கையிடம் சரண்டர் ஆகினர்.

இருவருமே அவள் அருகில் சென்று போட்டி போட்டுக்கொண்டு தங்கள் தங்கையை கொஞ்ச அவளோ அண்ணங்களின் பாசத்தில் நெகிழ்ந்தவளாய் அனைத்தையும் மறந்து அவர்கள் இருவரையும் கண்ணீரோடு அணைத்துக்கொண்டு பின் இருவரையும் நலம் விசாரித்தாள்.அவளிடம் பேசும் போதே ராமின் மனதிலும் சிவாவின் மனதிலும் இவ்வளவு அன்பை நாம் இழந்து இரண்டு வருடமாக இருக்கிறோம் என்று புரியும் போது மனசுக்குள் ரணமாய் வலித்தது.

அவளிடம் பேசிக்கொண்டிருக்க அவளோ தன் நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக கூறி செல்ல இருவரும் பாட்டிஸ் தாத்தாஸை தேடி வீட்டிற்குள் நுழைந்தனர்.

தாத்தா இருவரும் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கதை பேசிக்கொண்டே தொலைக்காட்சி பார்த்து கொண்டிருக்க அவர்களிடம் சென்று ஆசி பெற்று சிறிது நேரம் பேசியவர்கள்.தங்களுக்கு குடிக்க பழச்சாறு கொண்டு வந்த அப்பத்தா விடமும் ஆசி பெற்று சிறிது நேரம் உரையாடினர்.பின்னர் தங்கள் செல்ல பாட்டியை தேடி மாடியில் உள்ள அறைக்கு சென்றனர்.

மாடியில் உள்ள தனது பாட்டியின் அறைக்கு சென்றவனர்கள் அறையின் உள் இருந்து அரவம் கேற்க அது யார் என்று எண்ணியப்படியே உள்ளே சென்றனர்.
அங்கே ராமின் பாட்டி அவரின் மகனோடும் மருமாகளோடும் பேசிக்கொண்டிருக்க,ராம் உள்ளே நுழைந்தான், அனைவரின் பார்வையும் அவனை புன்னகையோடு நோக்கியது.

முதலில் சென்று பாட்டியிடம் இருவரும் ஆசிப்பெற்றார்கள்.பின் ராம்,பாட்டியை பார்த்து " யோவ் பாட்டி.. நான் இந்த ரெண்டு வருஷமும் ரொம்ப மிஸ் பண்ணது உன்னை தான் யா.. எதுக்கு மா இப்படி இலைச்சு போயிட்ட பேரன் இல்லன்னு சரியா சாப்பிடலையா.. "என்று கிண்டலாக கேற்க அவரோ அவன் காதை செல்லமாக பிடித்து திருகியவர்" ஏன் கண்ணு.. உனக்கு இந்த பாட்டியை ரெண்டு வருஷமா பார்க்கணும் தோணுலையா.நாங்க கடிஞ்சு கூப்பிட்டதுக்கு அப்ரோம் தான் எங்களை பார்க்க வரணும் னே உனக்கு தோணுதா எங்களை எல்லாம் மறந்துட்டியா யா.. "என்று கூறியவரை அணைத்தவன்" அட பாட்டி நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் பாட்டி.. வேலைக்கு சேர்ந்த உடனே லாங் லீவ் தர மாட்டாங்க பாட்டி.. அதனால தான் என்னால வர முடியல இப்போ நான் கொஞ்சம் அங்க கம்போர்ட் ஆகிட்டேன் இனிமே உங்களை அடிக்கடி பார்க்க வரேன்.. சரியா.. "என்று கேற்க அவரும் ஆசையாக தலையை ஆட்டினார்.பின் சிவாவும் அவரிடம் சிறிது நேரம் பேச ராம் தன் பல ஆண்டுகள் கழித்து சந்தித்த தன் மாமாவை ஆற தழுவினான்.

அவரோ" ஏன்டா மருமகனே உன்னை பார்த்து எத்தனை வருஷம் ஆகிடுச்சு.. கடைசியா நீ காலேஜ் படிக்கிறப்ப பார்த்தது.. நல்லா இருக்கியா டா.. நானும் இப்போ தான் ஐந்து வருஷம் அப்ரோம் ஊருக்கு வந்திருக்கேன்.. இந்த திருவிழாவை நாம குடும்பத்தோட சிறப்பா கொண்டாடனும் டா இந்த வாட்டி.. ஹ்ம்ம் இது உன் பிரென்ட் சிவா தானே"என்று கேற்க அவனும் "ஆமாம் மாமா.. "என்க சிவாவிடம் கை குலுக்கியவர் " உன்னை பற்றி மட்டும் இவன் நிறைய பேசுவான் பா.. ராம் ஒருத்தவன் மேல இவ்வளவு அன்பு வைத்ததுலையே தெரியுது நீ எவ்ளோ பொருப்பான அன்பான பையன்னு.. நல்லா இருப்பா.. "என்று அவனை வாழ்த்த அவனும் அவரிடம் ஆசிப்பெற்று சிநேகமாக புன்னகைத்தான்.பின் அத்தையிடம் பேசிய ராம் மாமாவை பார்த்து" எங்க மாமு உன்னோட பசங்க யாரையும் காணோம்.. "என்று கேற்க அவரோ அனைவரும் திருவிழாவிற்காக போட்ட கடைகளை சுற்றி பார்க்க சென்றுள்ளதாக கூறினார்.

அவனும் சரி தாங்கள் சென்று அவர்களை பார்த்து அழைத்து வருவதாக கூறி சிவாவை அழைத்து கொண்டு திருவிழா நடக்கும் இடத்திற்கு சென்றான்.

அங்கே சென்றவர்கள் ஊரே விழாக்கோலம் பூண்டிருப்பதையும் பலூன்கள் ஆங்காங்கே தென்படுவதையும் மைக் செட் போட்டு பாட்டு பாடுவதையும் இரவில் அழகு கூட்ட வண்ண விளக்குகள் அமைக்க பட்டிருப்பதையும் குழந்தைகள் தங்கள் பெற்றோரோடு பொம்மை கடைகளில் நிற்பதையும் ரசித்துக்கொண்டே இவர்களை தேடியவாறு சென்றார்கள்.

எங்கு தேடியும் அவர்களை காணவில்லை என்பதால் ஒருவேளை கோயிலினுள் இருக்கலாம் என்றெண்ணி கோயிலுக்கு சென்றனர்.

அங்கே சென்று தங்கள் ஊர் மும்மாரி பொழிந்து வளமோடு இருப்பதற்கு காரணமான அந்த அம்மனை வழிபட்டு விட்டு அவர்களை அங்கும் தேடி பார்த்தனர்.

அப்போது அங்கே இருந்த ஒலிபெருக்கியில் மஞ்சள் நீர் விளையாட்டு நடக்க போவதாக அறிவிக்க என்ன நடக்க போகிறது என்பதை ஓரளவு யூகித்து கொண்டான் ராம்.

ராம்"ஆஹா என்னமோ பிளான் பண்ணி தான் எதுவும் வெளியில தலைய காட்டாம மறைஞ்சு இருக்குங்க.. அடேய் சிவா நாம இங்க இருந்து இப்போ வீட்டுக்கு போறது தான் டா நல்லது.. என்னால நமக்கு ச்ச ச்ச எனக்கு வர போற ஆபத்தை இப்போவே உணர முடியுது டா.. அபாய சங்கு இப்போவே காத தாண்டி ஒலிக்குது வாடா கிளம்பலாம்.. "என்று தன் நண்பனின் கையை பற்றி அழைக்க சிவாவோ" அப்போ.. அப்போ.. நீ.. நீ.. இந்த வாட்டியும் ராட்டினத்துல கூட்டிட்டு போக மாட்ட-ல போடா நான் வர மாட்டேன்.. "என்று முரண்டு பிடிக்க ராமோ தலையில் அடித்துக்கொண்டவன் " இப்போ நீ வந்தா கண்டிப்பா உன்னை நாளைக்கு கூட்டிட்டு வரேன் டா.. வாடா அடேய் வாடா ராசா.. "என்று கொஞ்ச அவனும் இவனோடு ஒப்புக்கொண்டு நடக்க தொடங்கினான்.

ராமோ மனதிற்குள் 'அட கடவுளே இவன் இவனுக்கு 23 வயசு ஆகுறதையே மறந்துட்டானா குழந்தையே இவன்கிட்ட தோத்துரும் போல.. இவனை மாதிரி ஆளையெல்லாம் எதுக்கு என் தலையில கட்டுற நீ.. காலக்கொடுமை கதிரவா'என்று வானை பார்த்து அந்த கடவுளிடமே முறையிட்டான்.

இவன் சொல்லி அங்கிருந்து செல்ல ஆரம்பித்த சிவாவோ சிறிது தூரம் சென்று இவனை திரும்பி பார்க்க இவனோ தனியாக வானை பார்த்து புலம்பி கொண்டிருந்தான்.
சிவாவோ" ஐயோ இவன் என்ன பிதாமகன் விக்ரம் மாதிரி ஆகிட்டான்.. இவனை சீக்கிரம் இங்கே இருந்து கூட்டிட்டு போறது தான் நல்லது.. இல்ல சேது பட விக்ரம் மாதிரி கூட ஆயிடுவான்.. "இவன் இவ்வாறு நினைத்துக்கொண்டு அவன் அருகில் சென்று ராமை சுயநினைவுக்கு கொண்டு வர அவனும் சூழ்நிலையை புரிந்து கொண்டு சிவாவுடன் வீட்டிற்கு புறப்பட்டான்.

வெளியே சென்றவன் சுற்றும் முற்றும் பார்க்க அனைத்து பெண்களும் தங்கள் முறை மாமன் மீது மஞ்சள் நீரை ஊற்றி அங்கும் இங்கும் ஓடி விளையாடி கொண்டிருந்தனர்.
அனைவரிடமும் விலகி விலகி வந்தவன் ஒருவாறாக அந்த கூட்டத்தை விட்டு தன்மேலும் தன் நண்பன் மீதும் தண்ணீர் படாமல் வெளியே வர பெருமூச்சை விட்டான் ராம்.

ராம்" எப்படியோ ஒருவழியா தப்பிச்சிட்டோம் buddy அங்க மட்டும் இன்னும் கொஞ்ச நேரம் நின்னுருந்தோம்,மை கதை இன்னைக்கு தி எண்ட் ஆகியிருக்கும்.. "என்று சிவாவிடம் கூற அவனும் அதை கதை கேற்பது போல கேட்டு கொண்டே நடந்தான்.

சிறிது தூரத்தில் இவர்கள் பின்னிருந்து " எக்ஸ்யூஸ்மீ!கேன் யூ ஹெல்ப் மீ? "என்ற பெண்ணின் குரல் கேற்க ராமோ " ஹான் அப் கோர்ஸ் ஹவ் கான் ஐ.. "என்று முடிப்பதற்குள் அவன் மேல் மஞ்சள் தண்ணீரை ஊற்றினாள் அவனின் மாமன் மகள் சந்தியா.

அழகு பதுமையாய் பிங்க் நிற பாவாடை தாவணியில் அவள் நிற்க அவளை பார்த்த சிவாவோ வாயடைத்து நின்றான்.இங்கு ராமோ பாதி நனைந்த ஆடையோடு அவளை பார்த்து முறைத்தவன் "அடியே சந்தியா என்னடி இப்படி பண்ணிட்ட.. உன்னை.. இப்போ நான் இப்படியேவா வீட்டுக்கு போறது.. "என்று சிணுங்கிய படியே கூறினான்.

சந்தியாவோ"மாம்ஸ் வெல்கம் பேக் அமெரிக்கா லாம் எப்படி இருக்கு?நீ ஊருக்கு போனா ஜோ பைடனை நான் விசாரிச்சேன் சொல்லு.. ஆன்.. அண்ட் ஒன் மோர் திங்.. உனக்கே தெரிஞ்சிருக்கும் நான் மட்டும் இப்படி உன்னை செய்தா அது முற்று பெறாதுன்னு.. "என்று பேசிக்கொண்டே விலக அவள் பின்னிருந்து வந்தவள் மீண்டும் ராமின் மீது மீண்டும் மஞ்சள் தண்ணீரை ஊற்றினாள்.

சிவாவோ ஆச்சரியத்தில் கண்ணை துடைத்து துடைத்து பார்க்க மீண்டும் அவன் சந்தியாவை போலவே தோற்றம் கொண்ட அதே பிங்க் நிற உடை அணிந்த ஒரு பெண்ணையே அங்கு பார்த்தான்.

ராமோ பல்லை கடித்து கொண்டே"ஏன்.. ஏன்.. ஏன்.. வித்யா இப்படி.. என்னை பார்த்தா உங்க ரெண்டு பேருக்கும் பாவமாவே இல்லையா.. அவ பாதி நினைச்சுட்டா நீ வந்து அதை முழுமை படுத்திட்டியா.. இப்போ ஹாப்பியா.."என்று கடுப்பில் கேற்க வித்யாவோ"ஓஓ வெரி ஹாப்பி.. இப்போ தான் மாமா பார்க்கிறதுக்கு நீ அம்சமா இருக்க..பேஷ் பேஷ்.. "என்று கையால் செய்கை காண்பிக்க அவனுக்கு மேலும் கோபம் வந்தது.

அவள் அவ்வாறு கூறவும் கோபம் வந்தவன் " அடிங்கு நில்லுங்க டி ரெண்டு பேரும்.. "என்று துரத்த அவர்களும் ஓட ஆரம்பித்தனர்.

இவனோ"கையுல மாட்டுனீங்கனா கைமா தான் டி ரெண்டு பேரும்.. "என்று சொல்லிக்கொண்டே துரத்த, அவன் ஓடி அந்த இடத்தை அடையும் வரை அவனுக்கு விளங்கவில்லை ,தான் துரத்தி கொண்டு வந்தது மேலும் ஆபத்தை விலைக்கு வாங்க என்று அவன் மீண்டும் சென்று நின்றது மஞ்சள் நீர் விளையாட்டு நடக்கும் அந்த இடத்திற்கே தான்.

சிவாவோ அங்கேயே " நீங்க உங்க விளையாட்ட முடிச்சிட்டு வாங்கப்பா. நான் இங்கேயே வெயிட் பண்ணுறேன்.. "என்று கூறிக்கொண்டே அங்கு இருக்கும் ஒரு மேடையில் அமர்ந்தான்.

அங்கு சென்றதும் இருவரும் இவன் மீது மீண்டும் மாறி மாறி மஞ்சள் தண்ணீரை கொண்டு தாக்குதல் நடத்த அதை தாங்க முடியாமல் மீண்டும் நண்பன் இருக்கும் திசையை நோக்கி ஓட ஆரம்பித்தான் ராம்.

சந்தியாவும் வித்யாவும் ஹைப்பை போட்டுகொண்டு சிரித்தவர்கள் அந்த இடத்தை விட்டு நடையை கட்டினர்.
ராமோ வேகமாக ஓடி தன் நண்பன் இருக்கும் இடத்திற்கு வந்தவன் சுற்றி முற்றி அவர்கள் வருகிறார்களா என்று பார்த்தான்.

சிவாவை பார்த்தவன் " என் அத்த புள்ளைங்க ரெண்டும் அராத்துங்க டா.. என்னை என்ன நிலைமைக்கு ஆள் ஆக்கிடுச்சு பாரேன்.. "என்று ராம் தன் நொந்த நிலையை நண்பனுக்கு விவரிக்க சிவாவோ அதை விடுத்து" அது இருக்கட்டும் buddy.. நீ சொன்னியே அந்த ரோஸ்,அதான் அந்த ரோஜா கலர் ட்ரெஸ் போட்ட தேவதைகள் அது இவங்க தானா.. நீ வெறும் ஒரு ரோஸ் தானே சொன்னே ஆனா இங்க ரெண்டு ரோஸ் இருக்குதே மேன்.. நீ எந்த ரோஸ் ச்சூஸ் பண்ணிருக்க சொன்னா நான் அடுத்த ஸ்டெப் போவேன் மேன்.. கம் ஆன்! "என்று கூற ராமோ வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தான்.

அவனை வினோதமாக சிவா பார்க்க ராமோ" டேய் buddy.. இதுங்கள நான் ரோஸுன்னு சொன்னேன் பார்த்தியா.. இதுங்க ரோஸ் இல்லடா லூசு.. மை ரோஸ் என்கிற ரோஷன் மை மாமா பையன் டா.. எனக்கு ரொம்ப க்ளோஸ்.. அவனை லாஸ்ட் டைம் மீட் பண்ணும் போது சின்ன சண்டை.. அதுக்கு அப்ரோம் பேசிக்கவே இல்லை.. அதான் அவனை சமாதானம் படுத்த ப்ரபோஸ் பண்ணனும் சொன்னேன் டா.. ட்ரூ லவ் டா.. "என்று கூற சிவா கண்கள் விரிய தன் நண்பனை பார்த்தவன் ' ச்சீ.. என்னய்யா இவன்.. 'என்று நினைத்துக்கொண்டான்.

மேலும் யோசனையோடு தொடர்ந்த ராமே" அது சரி.. நீ ஏதோ ரெண்டு-ல ஒன்ன நான் செலக்ட் பண்ணா,நீ ஏதோ ஸ்டெப் போவேன் சொன்னியே.. என்னடா அது.. "என்று கேற்க சிவாவோ இளித்து வைத்தான்.

ராம்" சரி இல்லடா.. என் மாமா பொண்ணுங்கள என் முன்னாடியே.. ஹ்ம்ம்.. ரொம்ப தப்பு டா.. பார்த்துக்கோ.. "என்று டெரராக பேச ட்ரை பண்ண "மாம்ஸ்.. மாம்ஸ்.. "என்று சந்தியா வந்து நின்றாள்.

ராமோ தலையில் அடித்துகொண்டவன் ' பெர்பார்மென்ஸ் கூட பண்ண விட மாட்டுதுங்க ' என்று நினைத்து கொண்டவன் " என்ன வேணும்.. அதான் செய்ய வேண்டியது லாம் சிறப்பா செய்தாச்சே.. இன்னும் என்ன பாக்கி.. "என்று கேற்க சந்தியாவோ," என்ன மாமா இப்படி திட்டுற.. நீ ஈரமா இருக்கியே.. பாவம் மாமாக்கு உடம்புக்கு ஒத்துக்காதேன்னு.. தேடி பிடிச்சு ஒரு கடையில இருந்து டவல் வாங்கிட்டு வந்தா நீ ரொம்ப தான் பண்ணுற போ.. "என்று முகத்தை தொங்கபோட்டுக்கொண்டு சோகமாக கூறினாள்.

ராமோ "அச்சோ.. சாரி டா சந்தியாமா.. எனக்காக டவல்லாம் வாங்கிட்டு வந்திருக்க.. உன்னை போய்.. ப்ச்.. சாரி மா.. "என்று கூற அவளோ "பரவால.. பரவால.. "என்று கூறியவள் அவளே அவனுக்கு துடைத்து விட்டாள்.

சிவாவோ ' ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்க 'என்று யோசிக்க அவன் ஆசையை பொய் ஆக்காமல் கையில் மூன்று ஐஸ்க்ரீமோடு வந்து சேர்ந்தாள் வித்யா.

அவள் வாங்கி வந்த ஐஸ்க்ரீமில் ஒன்றை சந்தியாவிடம் கொடுக்க அதை அவள் வாங்கிக்கொண்டாள் .அடுத்து இருப்பது தனக்கு தான் என்று நினைத்து ராம் கைநீட்ட வித்யாவோ " ஹான் வாயேன்.. நீ ஈரமா இருக்க மாம்ஸ்.. உன்னை காய போடுற வரைக்கும் இதுலாம் நோ.. நோ.. "என்று கூற அவனோ " அப்போ இது யாருக்கு வித்யாமா.. "என்று கேட்டான்.

அவளோ " இது உங்க பிரென்ட் சிவாவுக்கு மாமா.. " என்று அதை கொண்டு போய் அவனிடம் கொடுக்க அதை வாங்கிக்கொண்ட அவன் முகத்திலோ ஆயிரம் வாட்ஸ் பல்ப் எறிந்தது.

இதை கவனித்த ராமோ தலையில் அடித்துக்கொள்ள அங்கே வந்து சேர்ந்தான் ராமின் ரோஸ்.

ரோஷன்" மாமு எப்படி இருக்க டா? "என்று கேற்க சந்தியாவை விட்டு விலகி வந்த ராமோ அவனை ஆற தழுவிக்கொண்டு " நல்லா இருக்கேன் ரோஸ்.. எங்க நீ என்கூட அன்னைக்கு போட்ட சண்டையில இருக்கிற கோபத்துல பேசாம போயிடுவீயோன்னு பயந்துட்டேன் ரோஸ்.. "என்று சந்தோஷத்தோடு கூறினான்.

ரோஷனோ" அதெல்லாம் நான் எப்பயோ மறந்துட்டேன் மாம்ஸ்.. நீ என்ன எவ்ளோ லவ் பண்ணுறேன்னு எனக்கு தெரியும் டா.. உன்மேல அன்னைக்கு வந்த கோபம் கூட அந்த சமயத்துக்கு வந்தது மத்த படி ஐ லவ் யூ மாம்ஸ்.. "என்று அவனிடம் கூற ராமோ மண்டியிட்டு " லவ் யூ டூ ரோஸ்.. நீ என்னோட ப்ரொபோசலை ஏத்துப்பியா ரோஸ்.. "என்று கேட்ட ராமை " இதெல்லாம் கேற்கணுமா வா டா.. வா டா.. "என்று மீண்டும் அணைத்துக்கொண்டான்.

இதை பார்த்த சிவா சந்தியா வித்யா மூவரும் தலையில் அடித்துக்கொள்ள ராமோ " கருமம் கருமம்.இதை பார்க்கவா நான் என் சின்ன வயசுல இருந்து தவம் கிடந்தேன்.. உன்னை நினைச்சா வெட்கமா இருக்கு டா சிவா.. "என்று சத்தமாகவே தன்னை தானே திட்டிக்கொள்ள, ராமோ " Buddy உனக்கு இதெல்லாம் சொன்னா புரியாது buddy.. "என்று கூற மீண்டும் தலையில் அடித்துக்கொண்டான் சிவா.

இதை பார்த்த ராமோ" சிவா நீ ஏதோ ராட்டினத்துல போக கூட கம்பெனி வேணும் சொன்னியே.. வேணும் னா வித்யாவை கூட்டிட்டு போயேன்.. அவளுக்கும் அதை மாதிரி ரைட் லாம் பிடிக்கும்.. "என்று கூற சிவாவோ வேகமாக சிரித்து கொண்டே " ஓகே டா நண்பா.. எனக்கு நோ பிராபிளம்(மனதிற்குள் 'நண்பேன்டா') "என்று கூற வித்யாவும் " சரி வாங்க சிவா அப்போ போவோம்.. எனக்கும் இந்த கொடுமையை பார்க்க அதுவே தேவலாம் தோணுது.. கொஞ்ச நேரம் இந்த மாதிரி ரைடாவது போலாம் வாங்க அப்படியே நீங்க சின்ன வயசுல இருந்து ரோசுக்காக நீங்க காத்துகிடந்த தவத்தை பற்றி கொஞ்ச சொல்லுங்களேன்.. ரொம்ப க்யூரியாசிட்டியா இருக்கு.. "என்று அவனோடு திருவிழா நடக்கும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

ரோஷனோ " நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கே மாம்ஸ்.. "என்று அவன் மாம்ஸ் என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து கேற்க, ராமோ அவன் வயிற்றில் குத்தியவன் " திமிருடா உனக்கு.. ரொம்ப அதிகமா பேசாத டா.. "என்று சந்தியாவிற்கு தெரியாதவாறு சிரித்துகொண்டே கூறினான்.

ரோஷனும் " சரி மாம்ஸ்.. நீ செய்தா சரியா தான் இருக்கும்.. "என்று அவன் குத்திய இடத்தை தேய்த்துகொண்டே சிரித்தவாறு கூறினான்.

இங்கு சிவாவோ வித்யாவிடம் " ஆப்கோர்ஸ் சொல்லிட்டா போச்சு.. "என்று பிளாஷ் பேக்கை ஓபன் செய்ய அவர்கள் பயணம் இனிதே தொடங்கியது.

இங்கோ சந்தியா, ராம் ரோஷன் இருவரையும் வெறிக்க பார்த்து நிற்க ராம் " சந்துமா.. சரி வீட்டுக்கு போலாமா.. அவங்க ரெண்டு பேரும் வரட்டும்.. "என்று அவளை அழைக்க அவளும் சிரித்துக்கொண்டே தலை ஆட்டினாள்.

இவர்கள் மூவரும் வீடு வந்து சேர ராமின் அம்மா அப்பா தாத்தா அத்தை என்று அனைவரும் வித்யாவையும் சிவாவையும் பற்றி கேற்க ராமோ" அவங்க ரைடுக்கு போயிருக்காங்க.. "என்று கூற அத்தையோ வாயில் கைவைத்தவர்" ஐயோ பைக் ரைடா.. "என்று கேற்க ராமோ " இல்ல அத்து.. ராட்டினம் ரைட்.. "என்று கூற அனைவரும் தலையில் அடித்து கொண்டு அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.

மூவரும் அவரவர் அறைக்கு ப்ரெஷ் அப் ஆக செல்ல ராமோ குளித்து விட்டு உடை மாற்றி வந்தவன் பாட்டியின் அறைக்கு சென்றான்.

அங்கு அறையின் கதவு மெல்லியதாக திறந்திருக்க அது வழியே தனது மாமா பாட்டியின் மடியில் படுத்து அழுவதை கண்டவன் அதிர்ச்சியோடு அங்கேயே நின்றான்.

அங்கு அவன் மாமாவோ" இந்த ஊருக்கு நான் வந்து ஐந்து வருஷம் ஆகுது மா.. உன்னை கூட என்னால ஐந்து வருஷமா பார்க்க முடியல ல.. இங்க வந்து இருந்த இந்த ரெண்டு நாளே எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துது அம்மா.. எனக்கு இங்க இருந்து எது திருப்பி போனும் தோணுது.. பேசாம பசங்களோட படிப்பு முடிஞ்சதும் நானும் நம்ம வீட்டுக்கு வந்துடுறேன் மா.. நீயும் அப்பாவும் இன்னும் எத்தனை காலம் தனியா இருப்பீங்க.. மாப்பிள்ளை உங்களை நல்லா தான் பார்த்துகிறாரு இருந்தாலும் உங்களை நான் பார்த்துக்கணும் ஆசையா இருக்குமா.. இன்னும் ரெண்டே வருஷம் தான் நான் இங்கேயே வந்திரவா மா.. "என்று கேற்க அவர் தலையை வருடிய ராமின் பாட்டியோ " இதெல்லாம் கேற்கணுமா கண்ணு.. நீ என்னைக்கு எங்களை விட்டு போனியோ அன்னையிலிருந்தே எங்க சந்தோசம் தூரம் போன மாதிரி இருக்குப்பா.. இன்னும் ரெண்டு வருஷம் தானே.. இப்படிங்கிறதுக்குள்ள ஓடிடும்.. அதுக்கு அப்ரோம் நம்ம ஊருக்கே வந்திரு ராசா.. "என்று அவரும் கண்ணீரோடு கூறினார்.

" சரி மா.. "என்று கூறிய ராமின் மாமாவோ தன் அன்னை மடியிலே படுத்து பிற கதைகள் பேச தொடங்கினார்.

அவர்களுக்குள் இருக்கும் அந்த மகிழ்ச்சியான தருணத்தை கெடுக்க வேணாம் என்று நினைத்த ராமோ கீழே நிற்கும் தன் தாய் தந்தையை பார்க்க இவர்களுக்கும் இந்த இரண்டு வருடம் இப்படி தானே இருந்திருக்கும் என்று எண்ணியவன், தான் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்வது சரியா இல்லை,குடும்பத்தோடு ஒன்றாக சந்தோஷமாக இருப்பது சரியா,என்று யோசிக்கலானான்.

தன் வாழ்வில் உண்மை இன்பம் எதுவோ அதை அறிந்து ராம் சரியான முடிவை தேர்தெடுப்பானா?
-------------------------------------------------------------
 

Rajam

Well-known member
Member
மிக அழகான கருத்துள்ள சிறுகதை.
சூப்பர்.
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom