• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? Final

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 37


'இது அப்படி போனும்... அது இப்படி வரணும்... இப்போ டைட் பண்ணனும்... ஓக்கே முடிஞ்சது... ஓஹ் ஷிட்.. அட என்னடா இது? கல்யாணம் முடியட்டும் அப்பறம் இருக்கு உனக்கு!' என அந்த மனமகன் அறையில் வேஷ்டியுடன் தனியாக சண்டை நடத்திக் கொண்டிருந்தான் சுரேஷ்.


"இந்த ஆனந்த் எங்கே போனான் என்னை தனியாக போராட விட்டுட்டு. ரிது பின்னாடி தான் சுத்திட்டு இருப்பான். ரெண்டு பேரும் சேர்ந்து கல்யாணத்தை நடத்துங்கனு சொன்னா இதுங்க என்னவோ புதுசா கல்யாணம் ஆன ஜோடி மாதிரி சுத்திட்டு இருக்குங்க. விக்ரம் என் பிரண்ட் இல்லையாம்! இன்னைக்கு மட்டும் அவளோட அண்ணாவா வேலையை தான் பார்ப்பானாம். உங்களுக்கும் இருக்கு டா. கல்யாணம் மட்டும் முடியட்டும்" என அவன் போக்கில் பேசிக் கொண்டே கோபத்தை வேஷ்டியில் காட்டிக் கொண்டு இருந்தான்.


அவனுக்கு மட்டும் ஸ்டிஃப்பா நிக்குது எனக்கு ஏன் நிக்க மாட்டுது? என யூட்யூபில் வேஷ்டி கட்டுபவனை சபித்தான்.


"ச்ச! இதுக்கு தான் சொன்னேன் வேஷ்டி வேணாம்னு. பாரம்பரியத்தை காக்கணும்னு சொன்னாங்க. இப்ப என் மானத்தை காக்கணுமே கடவுளே!"


எவ்வளவு முயன்றும் உன்னிடம் நான் மாட்டுவேன்னா என போக்கு காட்டிக் கொண்டிருந்தது அந்த வேஷ்டி.


'கல்யாணம்ன்னா வேஷ்டி தான் கட்டணுமா? ஹயோ! ஒருவேளை மேடைல போய் நான் அது மேல காட்டின கோபத்தை அது என் மேல காட்டிட்டா? கடவுளே இப்படி என்னை தனியா புலம்ப விட்டுட்டியே'.


சுரேஷ் புலம்பல் தொடர்ந்து கொண்டிருக்க,


மாப்பிளைக்கு நிச்சயதார்த்தம்!
மாப்பிள்ளை தோழர்கள் நாம்தான்டா..
மாத்தியாச்சு வெத்தலபாக்கு
மனம்போல் தானே!
பயலுக்குதான் அடிச்சது யோகம்
புடிச்சான் புளியங்கொம்பத்தான்..
வலயப்பட்டி தவிலுக்கு ஏத்த
வாத்தியம்தானே!
ஆஜா மேரே சோனியே
ஆஜா மேரே சோனியே
ஆஜா மேரே சோனியே
தூகி மேரே மித்வா!



என பாடியபடி என்ட்ரி கொடுத்தான் பிரதாப்.


"எருமமாடே கல்யாணத்துக்கு வந்திட்டு நிச்சயதார்த்தம்னு உளறிகிட்டு இருக்க?" என சுரேஷ் வார,


"ஆமால்ல அப்போ என்ன பாட்டு பாடலாம்? " என யோசிக்க ஆரம்பித்தான் பிரதாப்.


"நீ ஒரு ஆணியும் கழட்ட வேணாம். இந்த வேஷ்டியை எப்படி கட்டுறதுனு சொல்லு. நான் சொல்றதை இது கேட்கவே மாட்டுது" .


"என் பாட்டு திறமையை காட்டலாம்னு நினச்சேன். சரி விடு" என்றவாறு அவனுக்கு உதவி செய்தவன் லாவண்யாவை விசாரித்தான்.


"ம்ம் அவங்க பொண்ணுக்கு அண்ணியாம்! வேலையா இருக்காங்க" என்றான் கோபமா போல.


அங்கே ஜோதி அறையில் லாவண்யா ரிதுவிடம் சுரேஷ் ஜோவின் காதல் கதையை கூறிக் கொண்டிருந்தாள்.


"ஏண்டீ இவ்வளவு நாளா ஒண்ணா தானே இருந்தோம் ஒரு நாளாச்சும் என்கிட்ட சொன்னியா?" என ரிது நூறாவது முறையாக ஜோவிடம் கேட்க,


"அடியேய் இவ்வளவு நேரம் இதுக்கு தானே விளக்கம் குடுத்தேன்? முதல்ல ரெண்டு பேரும் வெளியே போய் வேற வேலையை பாருங்க" என துரத்திக் கொண்டிருந்தாள்.


"சுரேஷ்.. ரெடியா?" என்றவாரே வந்த சுகன்யா அவனை பட்டு வேஷ்டி சட்டையில் பார்த்து,


"ரொம்ப அழகா இருக்க டா கண்ணா" என்றவர் இரு கைகளையும் அவன் முகத்தில் வைத்து பின் நெற்றியில் நெட்டி முறித்து திருஷ்டி கழித்தார்.


"தேங்க்ஸ்ம்மா. இது பிரதாப் என்னோட பிரண்ட். யூஎஸ்ல கூட இருந்தான்னு சொன்னேன்ல" என்று கூற,


"வாங்க தம்பி. அம்மா அப்பா வரலையா?" என்றார்.


"இல்லம்மா! கொஞ்சம் நேரத்தில் வந்திடுவாங்க" என்று கூறினான்.


பின் அவர் சென்றுவிட ஆனந்த்துடன் ரிதுவும் வந்தனர்.


"என்னடா புது மாப்பிள்ளை கிளம்பியச்சா?" ஆனந்த்.


“டேய் அப்பப்போ ஞாபகப்படுத்து டா. யார் புது மாப்பிள்ளைனு எனக்கே டவுட் வருது” என்று சுரேஷ் சொல்ல அனைவரும் சிரித்தனர்.


அவர்கள் பின்னாலே விக்ரமும் லாவண்யாவும் வர, “ஏன்டா ஒரு உதவிக்கு தேடும் போது ஒருத்தனும் இல்லை. இப்ப ஏன்டா ஒன்னு கூடுறிங்க?” என்றான் சுரேஷ்.


“டேய் மரியாதை.. மரியாதை. நான் பொண்ணுக்கு அண்ணன். அத்தான்னு சொல்லு” என விக்ரம் சொல்ல,


"வேணாம் டா அசிங்கமா ஏதாச்சும் சொல்லிட போறேன்” என சுரேஷ் சொன்னதும் அனைவரும் சிரிக்க,


“உங்களுக்கு இது தேவையா? ” என்றாள் லாவண்யா.


“ஹலோ மேடம் எப்படி இருக்கீங்க? என்னை ஞாபகம் இருக்கா?" என பிரதாப் லாவண்யாவிடம் கேட்க,


"டேய்! இந்த அர லூசை இங்கயும் கூட்டிட்டு வந்துட்டியா?” என அவள் சுரேஷிடம் கேட்டதும் பிரதாப் பொங்க ஆரம்பிக்க,


“எவன் டா அவன்” என விக்ரம் வர அவர்களிடம் இருந்து தப்பி ரிதுவுடன் வெளியேறினாள் லாவண்யா.


சுரேஷ், ஆனந்த், விக்ரம், பிரதாப் நால்வரும் இன்றைய நினைவுகளை சேகரிக்கும் வண்ணம் அந்த இடத்தையே கலக்கிக் கொண்டிருந்தனர்.


பின் ஐயர் மேடைக்கு மாப்பிள்ளையை அழைக்க மூவரும் சுரேஷுடன் வந்தனர்.


எப்போது ஜோவை கண்ணில் காட்டுவார்கள் என அவன் விழிகள் அங்கும் இங்கும் ஓட அவன் தலையில் விக்ரம் தட்டி,


"ஓடிட மாட்டா டா. இங்கே தான் கூட்டிட்டு வருவாங்க. பறக்காதே!” என்றதும் அனைவரும் சிரித்தனர்.


பொண்ணை கூப்பிடுங்க என ஐயர் சொல்ல யார் என்ன சொன்னால் எனக்கென்ன என்று சுரேஷ் அவள் வரும் வழியையே பார்க்க,


"என்ன டா இப்படி பிளாட் ஆயிட்டான்” என்ற ஆனந்திடம்,


“கொஞ்ச நாள் அப்படி தான் டா இருப்பான் புதுசுல்ல” என விக்ரம் கிண்டல் செய்ய அவர்கள் பேசுவது சுரேஷ் காதில் விழுமா என்ன!.


சரியான முகூர்த்த நேரத்தில் ஜோதி கழுத்தில் தாலியை கட்டி தன்னில் பாதியாக ஏற்று கொண்டான் சுரேஷ்.


இருவரும் பார்வையால் அவ்வப்போது பேசிக் கொண்டனர். பின்னே தனியாக பேச இயலாதபடி போட்டோ எடுக்கவும் வாழ்த்து சொல்ல வருபவர்களையும் கவனிக்கவே நேரம் சரியானது.


கேமராமேன் அவர்களை படம் பிடித்து கொண்டிருக்க சலிப்பே இல்லாமல் போட்டோ எடுப்பவரே போதும் எனும் அளவுக்கு போஸ் மேல் போஸ் கொடுத்தனர்.


எனக்கு பிடித்த பாடல்
அது
உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும்
வழியை
எந்தன் மனது அறியுமே..



அப்போது கேட்ட பாடல்.. அந்த பாடலை பாட சொன்னது கண்டிப்பா இந்த நல்லவனுங்களாதான் இருக்கும் என நினைத்து சுரேஷ் சிரிக்க அதே நினைப்பில் ஜோதியும் சிரித்தாள்.


பின் அனைத்து சடங்குகளும் முடிந்து அனைவரும் வீட்டிற்கு கிளம்ப எல்லாருமே அன்று சுரேஷ் வீட்டில் தங்குவது என்றானது.


“ஏன்டா நானே இருனு சொன்னாலும் ஒருத்தனும் இங்க தங்க மாட்டிங்க. இன்னைக்கு தான் உங்களுக்கு குடும்பத்தோட இங்கே தங்கணும்னு தோணிச்சா டா? நீங்கள் எல்லாம் நல்லா வருவீங்க” என தனக்கு தயார் செய்திருந்த முதலிரவு அறையில் விக்ரம் ஆனந்த் மற்றும் பிரதாப் உடன் மறைமுகமாக சண்டை இட்டு கொண்டிருந்தான் சுரேஷ்.


“ஏன்டா இதுக்கு நீ எங்களை டைரக்டா வெளிய போங்கடானு சொல்லிருக்கலாம்" என விக்ரம் கேட்க,


“ஓஹ் டைரக்டா சொன்னால் தான் போவீங்களா?” என அவனும் பேச,


“அய்ய! டேய் இவன் என்ன டா இப்படி ஆயிட்டான். டேய் நீ கழுத்தை புடிச்சு தள்ளினாலும் நாங்க இன்ணைக்கு இங்கே தான் தூங்குவோம்” என பிரதாப் கூற,


"இங்கேயா” என அதிர்ந்தான் சுரேஷ்.


“அடச்சீ! இங்கேன்னா இங்கே இல்லை டா. இந்த வீட்ல” என ஆனந்த் கூற,


"போங்க டா நீங்களும் உங்கள் பாட்ஷையும்” என்று விட்டு அமர்ந்து கொண்டான் சுரேஷ்.


மேலும் விடாமல் அவனை கலாய்த்துக் கொண்டிருந்தனர் மூவரும்.


அங்கே வந்த ரிது அவர்களை பார்த்துவிட்டு போய் சுகன்யாவை அழைத்து வர அவர் கைகளை இடுப்பில் வைத்து மூவரையும் முறைத்து பார்க்க மூவரும் அமைதியாக அறையை விட்டு வெளியே வந்தனர்.


பின் ஜோதியை சுரேஷ் ரூமில் விட்டுவிட்டு ரிது ஆனந்த்துடன் மாடி அறைக்கு செல்ல லாவண்யாவை கூட்டிகொண்டு மொட்டைமாடிக்கு சென்றான் விக்ரம்.


பிரதாப் மட்டும் சிங்கிள்ஸ் சாபத்தை அவர்களுக்கு வழங்கிவிட்டு ஹாலில் சென்று படுத்து கொண்டான்.


“இங்கே எதுக்கு விக்ரம் வந்திங்க. எனக்கு தூக்கம் வருது. இன்னைக்கு செம்ம ஒர்க் தெரியும்ல?” என லாவண்யா கேட்க,


"தூக்கம் வருதா? ஐயோ இவளை வச்சுட்டு! ஆண்டவா?”.


“ஹலோ பையா என்ன ரொமான்ஸ்சா? இன்னைக்கு எதுவும் இல்லை. பேசாமல் போய் படுங்க“


“அடியேய் இருடி! அதெல்லாம் ஒன்னும் வேணாம். கொஞ்சம் நேரம் இப்படியே இரு போதும்” என அவன்மேல் அவளை பின்னால் சாய்த்து கொண்டு அனைத்தவாறு நிற்க, அவளும் விரும்பியே நின்று கொண்டாள்.


வேறதுவும் தேவை இல்லை
நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்து காத்திருப்பேன்
என்னவானாலும்..


உன் எதிரில் நான் இருக்கும்
ஒவ்வொரு நாளும்
உச்சி முதல் பாதம் வரை
வீசுது வாசம்…


தினமும் ஆயிரம் முறை
பார்த்து முடித்தாலும்!
இன்னும் பார்த்திட சொல்லி
பாழும் மனம் ஏங்கும்…


தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே
நீ தானே!
தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா…



லாவண்யா அன்பை விக்ரம் புரிந்து விரும்பி ஏற்று கொண்டான். லாவண்யா விக்ரம்பால் கொண்ட எல்லையற்ற அன்பே அவர்களை ஈடில்லா வாழ்விற்கு வித்திட்டுள்ளது.


****************


அறைக்குள் சென்ற ஜோதி சுரேஷிடம் பாலை கொடுத்து விட்டு கட்டிலில் அமர,


"ஹேய் என்ன நீ இப்படி வர்ற?” என்று கேட்டான் சுரேஷ்.


“ஏன் வேற எப்படி வரணும்?“


“இந்த வெட்கம், காலுல விழுறது? இதெல்லாம் யாரும் சொல்லலையா?“


“ஹ்ம்ம் சினிமா பார்த்து கேட்டு போயிட்டீங்க விக்ரம்! உங்களுக்காக வேணும்னா காலில் விழுறேன் பட் வெட்கம் வரலையே?”


“சுத்தம்.. டேய் விக்ரம் உன்னை மாதிரியே உன் தங்கையையும் வளர்த்து வச்சிருக்கியே டா” என மனதோடு நொந்து கொண்டவன்,


“ச்ச! ச்ச! அதெல்லாம் வேணாம் பேபி சும்மா கேட்டேன்”.


“ஹ்ம்.. தேங்க்ஸ் சுரேஷ்” என்றவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவனை பார்க்க,


“பார்ரா என்ன மேடம் தைரியமா குடுக்கிறிங்க?“


“ஐ பீல் சோ ஹாப்பி சுரேஷ். அதை எப்படி சொல்றதுனு தெரில. அதான் இப்படி” என்றதும்,


“பேபி உனக்கு இன்னும் நான் எடுத்த லெசன் சரியா புரியலை. லைசென்ஸ் வர்றதுக்கு முன்னாடி தான் கண்ணம். இப்போ தான் கிடைச்சுடுச்சே! சோ” என்று சொல்லி அவளை நெருங்க,


"அய்! சீ! போடா” என்று தள்ளி விடவும்,


"இதுக்கு மேலயும் நீ தள்ளினா நான் போய்டுவேன்னு நல்லவனா நினைக்காதே டி. அஞ்சு வருஷமா சேர்த்து வச்சிருக்கேன்!” என்று கூறி அவளை நெருங்கியவன் இதழ்களை சிறை செய்தான்.


“பேட் பாய் சுரேஷ் நீங்க” என்றவள் கட்டிலில் படுக்க போக,


“ஹேய் என்ன நீ விட்டால் தூங்கிடுவ போல “.


“ஆமா வேறென்ன பண்ணனும்?” என அவள் கேட்க, இதற்கு மேல் இவளிடம் பேசி பயனில்லை என புரிந்து கொண்டவன்,


"நீ ஒன்னும் பண்ண வேண்டாம் பேபி. தூங்காம பேசிட்டே இரு போதும்” என கூறி முன்னேற அவளும் அவனிற்கு துணை போனாள்.


காதலின் திருவிழா கண்களில் நடக்குதே!
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே!
வானத்தில் பறக்கிறேன்.. மோகத்தில் மிதக்கிறேன்..
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்.


நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்..
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்..
ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்!
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்!


எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே..



இருவரின் மனமும் எந்த விகல்பமும் இல்லாத கண்ணாடி போல பிரதிபலிப்பதால் சுரேஷ் ஜோதியின் அன்பு தெளிந்த நீரோடையாக செழிக்கும்.


***************


ரிதுவை அறைக்குள் அழைத்து வந்தவன், “கால் வலிக்குதா? ரொம்ப நேரம் நின்னுட்டே இருந்தியே?”


“ம்ம் லைட்டா அத்து. ஆனா நான் அதை விட ஹாப்பியா இருக்கேன்”.


“சரி ஏன் மதியம் அதை சாப்பிட்ட?"


“எதை?" என அவள் மறந்து கேட்க,


“அதான் அம்மு பிசிபெளாபாத்”


“அத்து.. அதுவா முக்கியம்? அத்தை எனக்கு பாசமா ஊட்டி விட்டாங்க அதை பார்த்திங்களா? எனக்கு இன்னும் இன்னும் சாப்டுட்டே இருக்கணும் போல இருந்திச்சு. அம்மா ஊட்டி விட்ட மாதிரி. அதனால் அது என்னனு கூட எனக்கு தெரியல!”.


“ம்ம்! இனி அப்போ உனக்கு ஊட்டியே விடலாம் எப்பவும்” என கொஞ்சலாக கேட்க,


"ம்ம்! அத்தை ஊட்டி விட்டால் தான் எனக்கு பிடிக்கும்” என்றாள்.


“என் லைஃப்ல நீ வரலைனா நான் என்ன ஆகிருப்பேன்னு தெரியல அம்மு. நீ என் பொக்கிஷம்” என்று அவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்து கொண்டவன் அவள் அவனையே பார்ப்பதை கண்டு,


“இன்னைக்கு நானும் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன் அம்மு. விக்ரம், சுரேஷ் எவ்வளவு ஹாப்பியா இருக்காங்க பார்த்தியா. எல்லாத்துக்குமே ரீசன் இருக்கலாம் பட் இது எல்லாமே நீ வந்த அப்புறம் தான் எனக்கு கிடைச்சுருக்கு. ஐம் சோ ஹாப்பி” என அவளை அணைத்து அவன் சந்தோசத்தை வெளிப்படுத்த,


“நானும் ரொம்ப ஹாப்பி அத்து. இவ்வளவு சொந்தங்கள் எனக்கிருக்கும் போது எனக்கு அப்படியே வானத்தில் பறக்கிற மாதிரி இருக்கு. அதுக்கும் மேல என் அத்து என்கூட இருக்கும் போது இந்த உலகமே என் கைக்குள்ள இருக்கிற மாதிரி இருக்கு” என்று சொல்ல மேலும் அவளை இறுக்கி அணைத்தான் அவளவன்.


அடம் பிடித்தேன் நீ எந்தன்
நெஞ்சில்
இடம் பிடித்தாய்
ஐ லவ் யூ டா..
காதலுக்காக உந்தன்
நெஞ்சை
கடன் கொடுத்தாய்
ஐ லவ் யூ டா..
தீராத உன் அன்பினால் போராடி
எனை வென்றதால்
என் அழகெல்லாம் உனக்காக
சமர்ப்பிக்கிறேன்..



அவரவர் அன்பின் அளவினை யார் மீது வைத்தாலும் உண்மையான அன்பு கண்டிப்பாக கை சேரும் எந்த எல்லையையும் தாண்டி. ஆனந்த் ரிதுவை புரிந்து கொண்டதால் மட்டும் அவர்கள் வாழ்வு வளம் பெறவில்லை உண்மையான அன்பை ரிது புரிந்து கொண்டதாலும் தான் அவர்கள் அன்பு பெருகியது . இனி இவர்களின் வாழ்வில் எல்லாம் நலமே..


*********


அன்பு, காதல், பாசம் எல்லாம் எப்போ யார் மீது வரும்னு யாராலயும் சொல்ல முடியாது. முடிந்தவரை அன்பு செய்யுங்கள், முடிந்தவரை காதலியுங்கள், முடிந்தவரை நேசியுங்கள்.


ஒருவர் அன்பு பொய் என்று உணரும் பட்சத்தில் அவரை மட்டுமே நாம் நினைக்கிறோம்.


ஏன் நாம் அன்பு செலுத்த வேறு யாருமே இல்லையா இந்த உலகில்????


இதனால நான் என்ன சொல்ல வர்றேன்னா மக்களே…


சிலரோட அன்பு பொய்யாகும் போது ஏமாந்துட்டோமேன்னு முந்திரிகொட்டை விக்ரம் மாதிரி தப்பான சூசைட் முடிவோ, இல்லை அவசரகுடுக்கை ஆனந்த் மாதிரி நம்பிக்கையையோ இழக்காமல், நம்ம வீட்டு பிள்ள சுரேஷ் மாதிரி நடுநிலையா யோசிச்சி உங்களை மட்டுமே நம்பி வாழும் ஒரு அன்பிற்கு முகவரியா இருந்திடுங்க.. வாழ்க்கை ஜாலிதான்…


சுபம்
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
அன்புக்கு புரிதல் தான் முதல் படி!!!
பின் அசைக்க முடியாத நம்பிக்கை அதன் மூலம் வரும் நேசம்!!!!அருமையான கதை
அன்புக்கு புரிதலுக்கு நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாய் மூன்று பெயர்களில் வாழும் வாழ்க்கை,
ஆனந்த்- ரிது,
விக்ரம்- லாவன்யா,
சுரேஷ்_ஜோதி,
அருமையான கதை களம்!
சொல்லிய விதம் அருமை!!!
சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎊வாழ்த்துக்கள்!!!!
 

ரித்தி

Active member
Member
அன்புக்கு புரிதல் தான் முதல் படி!!!
பின் அசைக்க முடியாத நம்பிக்கை அதன் மூலம் வரும் நேசம்!!!!அருமையான கதை
அன்புக்கு புரிதலுக்கு நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாய் மூன்று பெயர்களில் வாழும் வாழ்க்கை,
ஆனந்த்- ரிது,
விக்ரம்- லாவன்யா,
சுரேஷ்_ஜோதி,
அருமையான கதை களம்!
சொல்லிய விதம் அருமை!!!
சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎊வாழ்த்துக்கள்!!!!
Thank u so much sis
 

Rajam

Well-known member
Member
அன்புக்கு நல்ல விளக்கம்
கொடுத்து,
கதையை அருமையா முடித்து விட்டீர்கள்.
எல்லா ஜோடியும் அருமையா இணைத்தது
சூப்பரா இருந்தது.
 

ரித்தி

Active member
Member
Thank u sis
அன்புக்கு நல்ல விளக்கம்
கொடுத்து,
கதையை அருமையா முடித்து விட்டீர்கள்.
எல்லா ஜோடியும் அருமையா இணைத்தது
சூப்பரா இருந்தது.
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom