• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 5

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 5

ரிது வீட்டிற்கு வந்ததில் இருந்து அமைதியாக இருந்தது ராஜ்குமாரை யோசிக்க வைத்தது.

சில நிமிடம் பொறுத்து பார்த்தவர் அவளிடம் நேரடியாகவே கேட்டார்.

"என்னம்மா ஆபீஸ்ஸில் நிறைய வேலையா?"

அவருக்கு தெரியுமே அவள் வேலை எப்படிப்பட்டது என்று. மகள் அதற்கெல்லாம் கலங்குபவள் இல்லையே!

"அதெல்லாம் இல்லை அப்பா. இன்னைக்கு ஆனந்த் சார் வைஃப் ஆபீஸ்க்கு வந்தாங்க. அதை தான் நினைச்சுட்டு இருந்தேன்" என்று உள்ளதை மறைக்காமல் கூறினாள்.

"ஹாஹாஹா! என்னம்மா சொல்ற? சிரிப்பை நிறுத்த முடியாமல் பாதியில் கேட்டார்.

"ப்ச்! ஏன் சிரிக்குறிங்க? ஆமாஆனந்த் சார்க்கு கல்யாணம் ஆனதா ஏன் நீங்க என்கிட்ட சொல்லவே இல்லையே? " என்றாள்.

முதலில் ஏதோ விளையாடுகிறாள் என்று நினைத்தவர் அவள் முகத்தில் இருந்த தீவிரத்தில் அவள் நிஜமாக தான் கூறுகிறாள் என புரிந்து கொண்டார்.

"ரிது என்னம்மா சொல்ற? ஆனந்த்க்கு கல்யாணம் எல்லாம் ஆகலை மா"

"என்னப்பா சொல்றிங்க? இன்னைக்கு வந்தாங்க பா. பேரு கூட ப்ரியானு சொன்னாங்களே. ஆனந்த் சார் சீட்ல தான் இவங்க வந்து இருந்தாங்க. அவங்க வாயால சொன்னாங்க பா" என்றவள் பேச்சை முதலில் அவர் புரிந்து கொள்ளவே இல்லை.

அவளிடம் முழு விபரமும் கேட்டவருக்கு இத்தனை வருட அனுபவத்தில் ஏதோ புரிய உடனே ரகுவை தொடர்பு கொண்டார்.

ராஜ் குமார் ரகுவிடம் பேசுவதை கேட்ட ரிதுவிற்கு 'தான் எத்தனை பெரிய தவறு செய்திருக்கிறோம்' என்று புரிந்து விக்கித்து நின்றாள்.

PSS கம்ப்யூட்டர் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் முதல்வர் பாண்டியன். தனக்கு இருக்கும் ஒரே ஒரு எதிரி என்றால் அது ARS நிறுவனம் தான் என்று அதை தகர்க்க முயற்சி செய்து வருபவர்.

தன் கம்பெனி நல்ல நிலையில் இருந்தாலும் தன்னுடைய முதல் இடத்தை பிடித்த அந்த ஆனந்தை பழி வாங்கியே தீருவேன் என்று வன்மம் கொண்ட மனிதன்.

அவனுடைய மகன் விஜயன் அமெரிக்காவில் படித்து முடித்து அவன் கம்பெனி பொறுப்பை ஏற்க அவனிடமே பழி உணர்வையும் கொடுத்தவர்.

அடிப்படையில் இருவரும் நல்லவர்கள் தான்! ஆனால் எல்லாராலும் எல்லா இடத்திலும் நல்லவர்களாக இருக்க முடியாதே.

விஜயன் வன்மம் ஒவ்வொரு முறையும் அதிகமாகும் போதெல்லாம் ஆனந்தின் கம்பெனி மேல் போலீஸ் புகார் செய்வது, ஆள் வைத்து அடிப்பது என எதாவது கோளாறு கொடுப்பான்.

ஆனால் ஆனந்த் சாமர்த்தியமாக அதை எல்லாம் கையாள்வான். விஜயன் தான் இதற்கெல்லாம் காரணம் என தெரிந்தாலும் ஒரு நாள் அவன் திருந்தி விடுவான் என்று விட்டு விட்டான்.

அதன் விளைவு தான் இந்த பிரியா இப்போது ஆனந்த் ஆபீஸ் நுழைந்து அவன் வசம் இருந்த ப்ராஜெக்ட் பற்றிய தகவல்களை திருடி விஜயனிடம் கொடுத்தது.

விஜயன் கையாள் ஒருவன் ஆனந்த் ஆபீஸ் உள்ளே இருப்பதால் அவன் மூலம் ரிது புது செகிரேட்டரி என்று தெரிந்து ஆனந்த் இல்லாத நேரம் வந்து கைவரிசை காட்டி உள்ளனர்.

ஒரு மணி நேரத்தில் ராஜ் குமாரும் ரகுவும் சேர்ந்து வந்தது யார் என்பது முதல் என்னென்ன திருடப்பட்டு இருக்கிறது என்பது வரை அனைத்தையும் கண்டுபிடித்து விட்டனர்.

அனைத்தையும் கேட்ட ரிதுவிற்கு அப்போது தான் ஞாபகம் வந்தது.

அவள் ஏன் வந்தாள் என்று கூறவில்லை. மனைவி என்று கூறியதும் தான் மெய் மறந்து நின்று இருக்க கூடாது என்று.

தவறு இப்போது தன்மேல் மட்டுமே இருப்பது போல் தோன்றியது.

"ரிதுவா? என் ரிதுவா?" என்று அனத்தி கொண்டிருந்தான் ஆனந்த்.

எவ்வளவு யோசித்தாலும் விக்ரமை ஏமாற்றிய அந்த பெண் இடத்தில் ரிது என்று துளி கூட நம்ப முடியவில்லை. அவளா பணத்திற்காக விக்ரமை ஏமாற்றியது?

விக்ரம் வீட்டில் இருந்து ஆனந்த் எப்போது கிளம்பினான்? எப்படி கிளம்பினான்? என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால் தன் வீட்டிற்கு வந்து தன் அறையில் இருந்தான்.

அவளை பார்த்தவுடன் காதலித்தது உண்மை தான். அவன் தன் மனதை நம்பினான். அது பொய் சொல்லாது என்று நம்பினான். அவள் தான் உன் வாழ்க்கை என்றதை நம்பினான்.

ஆனந்த் ஒரு முடிவெடுத்தால் தவறாகாது என்பார்களே? ஆகிவிட்டது! தவறாக ஆகிவிட்டது.

அவன் கண்களில் கண்ணீர். அதை உணர்ந்தாலும் துடைக்க மனம் இல்லை.

ரிது என்ற பெண்ணை தாண்டி இந்த நாள் வரை ஒரு பெண்ணை கூட நிமிர்ந்து பார்க்காதவன்.

எத்தனையோ பேர் கல்லூரியில் அவனை ப்ரொபோஸ் செய்த போதும், எனக்கென பிறந்தவளை நான் இன்னும் பார்க்கவில்லை என்று கூறி அழகாக மறுத்திடுவான்.

ஆபீஸ், மீட்டிங்க், என்று வெளிநாடு வரை சென்று அங்கும் பல பெண்களை பார்த்தவன் தான்.

எந்த பெண்ணும் அவனை கவரவில்லை. ஆனால் முதல் பார்வையில் மனதை மொத்தமாக கொய்தவள் அவள்.

அவள் தவறானவளா? மனம் நம்ப மறுத்தாலும் விக்ரம் உருவம் கண்முன் தோன்றி அதுதான் உண்மை என்று உணர சொல்லியது.

மனம் ஏதாவது செய்யேன் என்று கூற, ஒருமுறை முயன்று பார்க்க தோன்றியதோ!

ஜோதிக்கு கால் செய்தான்.

"சொல்லுங்க அண்ணா! ரகுப்பா இப்ப தான் கிளம்பினாங்க. அண்ணா இப்ப பெட்டரா இருக்குனு சொன்னாங்க. பேசுறீங்களா?"

எடுத்ததும் ஜோதியின் படபட பேச்சில் கொஞ்சம் தயங்கியவன் உண்மையை அறிந்து கொள்ளவே பேசினான்.

"கொடு மா"

"ஆனந்த் சாரி டா. நான் உன்கிட்ட சொல்லாம இருந்திருக்க கூடாது தான். ஆனாலும் என்னை புரிஞ்சிக்கோ டா" விக்ரம் பேசிக் கொண்டிருக்க

ஆனந்த், "விக்ரம்! ரிது பர்ணா உனக்கு..." ஆரம்பித்தவன் முடிக்க முடியாமல் தடுமாற,

"ரிது! ரிது உனக்கு தெரியுமா? உனக்கு எப்படி டா தெரியும்?" விக்ரம் குழப்பத்தில் கேட்க,

"ரிதுவா?" என்று ஜோதியும் கேட்பதும் ஆனந்த் காதில் விழுந்தது.

மனம் அதன் போக்கில் போய்க் கொண்டிருக்க ஆனந்த் கண்களில் கண்ணீர் பெருகிக் கொண்டே போனது.

அறிமுகமான இந்த 5 நாட்களிலே மனதை பரிகொடுக்க வைத்த கடவுள் ஏன் முதலிலே அவளின் குணத்தை காட்டவில்லை?

காட்டினாரோ? நான் தான் காதல் மன்னாங்கட்டி என்று கருமமே கண்ணாக இருந்து விட்டேனோ? அவன் மேலே அவனுக்கு கோபமாக வந்தது.

'எத்தனை நாள் என்றால் என்ன? என் காதல் உண்மை தானே!' என்று நினைத்தவனல் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஏமாற்றம் என்ற ஒன்றை இதுவரை பழகியிறாதவனுக்கு இதை சாதாரணமாக கடக்க முடியவில்லை.

"நோஓஓஓ... " என்று அறையில் இருந்த கண்ணாடியில் முகத்தை பார்த்தவன் கைகளால் கண்ணாடியை குத்தினான்.

கைகளில் ரத்தம் வந்த போதும் மனதின் வலியை விட அது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.

ஆனந்த் வீட்டிற்குக்கு வந்ததும் ஹாலில் இருந்த தன்னிடம் எதுவும் பேசாமல் படிகளில் ஏறியதை பார்த்து கொண்டு தான் இருந்தார் சுகன்யா.

வழக்கமான அவன் புன்னகை இல்லை. தன்னை தேடி வந்து பேசுபவன் கண்டு கொள்ளாமல் செல்கிறான்!

மேலும் அவன் முகத்தில் இருந்த ஏதோ ஒரு கவலை அவருக்கு பயத்தை கொடுத்தது.

விக்ரமிற்காக கவலைப்படுவதாக இருந்தாலும், இத்தனை வருடத்தில் ஒரு நாள் கூட அவன் இப்படி இருந்ததில்லை.

சரி ஆபீஸ் போக கீழே வரும் போது பேசிக்கொள்ளலாம் என இருந்தார்.

1, 2, என 3 மணி நேரம் ஆகியும் கீழே வராமல் அவன் சத்தம் மட்டும் கேட்க வேகமாக சென்று அறை கதவை தட்டினார்.

வெகு நேரத்திற்கு பிறகே ஆனந்த் காதுகளில் அம்மாவின் குரல் கேட்டது. ஆனால் அம்மாவிடம் மறைக்க தோன்றவில்லை.

அப்படியே சென்று கதவை திறந்தான். அவன் நின்ற கோலத்தை பார்த்து கதறிவிட்டார் சுகன்யா.

"கையில என்ன டா? ஏன் ஆனந்த்? ஏன் இப்படி பண்ணின" என்று அழுதேவிட்டார்.

அவன் கை மற்றும் கண்ணாடி பார்க்கும் போதே இது தெரியாமல் நடந்தது அல்ல என்று புரிந்தது.

ஆனால் எப்போதும் கலகலப்பாக சுற்றுபவன் திடீரென இப்படி நடந்து கொண்டதால் அதனை நம்ப முடியாமல் அவனை அந்த கோலத்தில் பார்த்த அதிர்ச்சியில் மயங்கிவிட்டார்.

"அம்மா...." என்று தாங்கி அமர வைத்தவன், கன்னத்தை தட்ட அவர் எழுந்து கொள்ளவில்லை.

தண்ணீர் கொடுத்து பார்த்ததும் கொஞ்சம் தெளிந்தது போல எழுந்தார்.

"என்ன மன்னிச்சிடுங்க அம்மா. உங்களையும் கஷ்டப்படுத்திட்டேன்" என்று அவர் மடியிலே விழுந்து அழுதான்.

ரிது தான் அந்த பெண் என்பதை தவிர்த்து மற்ற அனைத்தையும் கூறி தாங்க முடியாமல் அழுதான்.

எவ்வளவு விரும்பி இருந்தால் இப்படி கஷ்டப்படுவான் என்று தாய் உள்ளம் அவனுக்காக வருந்தியது.

ஓரளவு மனபாரம் குறைந்தது போல தேம்பிக் கொண்டிருந்தவனை பார்த்து சிறிது தைரியம் அடைந்தவர் அவனையும் தேற்ற ஆரம்பித்தார்.

அம்மாவிடம் கூறியதில் ஓரளவு தெளிந்திருந்தான் ஆனந்த்.

அப்பாவை கேட்டவனிடம் ஆபீஸ்ஸில் நடந்ததாக ரகு கூறி விட்டு சென்றதை மகனிடம் கூறினார்.

"நீ கொண்டுவந்த ப்ராஜெக்ட்டை திருடிட்டாங்களாம் ஆனந்த். நம்ம குடும்பத்துக்கு நேரம் சரியில்லையோனு தோணுது. கடவுளே!" என்று அவர் புலம்ப தொடங்கினார்.

அவனுக்கு இப்போது இருக்கும் நிலையில் பிரியா என்ற அந்த பெண் மேல் சந்தேகமே இல்லை!

எல்லாம் இவள் வேலையாக தான் இருக்கும் என்று ரிதுவை நினைத்து கொண்டு ஆபீஸ் செல்ல தயாராகினான்.

அவனுக்கும் வருத்தம் இருக்கிறது தான்!. ஏமாந்த வலி இருக்கிறது தான்! எப்போதும் மடி தாங்கும் அன்னை தந்த தைரியம் எந்த மனிதனையும் தேற்றும் தானே?.

அதே பலம் தான் அவனிடமும் வந்திருந்தது. சில நிமிடம் கண்மூடி யோசித்தவன் கிளம்பிவிட்டான்.

என்ன தைரியத்தில் நண்பனை ஏமாற்றி தன்னிடம் வந்தவளை என்ன செய்வதென்று முடிவெடுத்து காண கிளம்பிவிட்டான்.

காதல் தொடரும்..
 
Rajam

Well-known member
Member
தவறாக புரிந்து கொண்டு
கோபத்தில் ரிதுவை வேலைய
விட்டு விலக்குவானா.
ரிதுவ எப்போ புரிஞ்சுப்பான்.
 
ரித்தி

Active member
Member
காலம் கடந்திடுமோ?
தவறாக புரிந்து கொண்டு
கோபத்தில் ரிதுவை வேலைய
விட்டு விலக்குவானா.
ரிதுவ எப்போ புரிஞ்சுப்பான்.
 
Baby

அடேய் லூசுப்பயலே கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு நீயா ஒரு முடிவு எடுக்கிற... எதையும் தீர விசாரிக்கனும்ன்ற மொது அறிவு கூடவா இல்ல கூமுட்டை பயலே... அவங்க அப்பாக்கிட்டயாது தெறிவா கேக்கலாம்ல
 
ரித்தி

Active member
Member
அய்யயோ கொலவெறி ஆயிட்டாங்க போலயே... இப்பவே இப்படின்னா இன்னும்....... அவ்வ்வ்வ்வ்
அடேய் லூசுப்பயலே கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு நீயா ஒரு முடிவு எடுக்கிற... எதையும் தீர விசாரிக்கனும்ன்ற மொது அறிவு கூடவா இல்ல கூமுட்டை பயலே... அவங்க அப்பாக்கிட்டயாது தெறிவா கேக்கலாம்ல
 
Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom