• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 36

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 36

"ஏன் வந்ததுல இருந்து ஒரு மாதிரியாவே இருக்கீங்க?" என ரிதுவே பேச்சை துவங்க,

"தெரியல அம்மு! ஏதோ மனசு சமாதானமே ஆக மாட்டுது".

அவன் பதிலில் அவள் எழுந்து அமர்ந்து அவன் முகத்தை பார்க்க,

"நிஜமா என் மேல உனக்கு கோபமே இல்லையா அம்மு" என்றான் அவள் கன்னங்களை கைகளில் தாங்கி.

"இதுக்கு நான் எப்படி பதில் சொல்ல?" என அவள் கேட்க,

"உண்மையை சொல்லு. உன் மனசுல என்ன தோணுதோ அதை சொல்லு" என்றான்.

"ஏன் இவ்வளவு சீரியஸ்ஸா பேசுறீங்க? ஆபிஸ்ல ஃபர்ஸ்ட் எல்லாம் உங்களை பார்க்கும் போது சைட் அடிக்கனும்னு தோணும். அவ்வளவு மேன்லியா இருந்திங்க. இப்ப பார்த்தா ஏதோ லவ் பெய்லியர் மாதிரி எப்பவும் கண்ணுல ஏதோ சோகத்தோட இருக்கீங்க!" என்றாள்.

"சைட்டா அடிப்பாவி?" என அவன் வாயை பிளக்க,

"ஹெலோ! ஹெலோ! ஓவரா கற்பனை பண்ணாதீங்க. அதெல்லாம் கொஞ்ச நாள் தான். அப்புறம் தான் நீங்க என்னை பார்த்தாலே டென்ஷன் ஆகிட்டீங்களே? அப்புறம் உங்களை பார்க்குறதயே விட்டுட்டேன். ஆனாலும் மனசுல ஏதோ ஒரு ஓரத்துல உங்க நினைப்பு இருக்கும். நான் தான் புரியாமலே இருந்துட்டேன்".

"ப்ச்! சாரி அம்மு! எவ்வளவு முட்டாள்தனம் பண்ணிருக்கேன். காதலிக்குற பொண்ணை நம்பாம இருந்தது எவ்வளவு பெரிய தப்பு. காதலுக்கு அடிப்படையே நம்பிக்கை தானே? அதிலேயே நான் தோத்துட்டேன்னே டி! உன்னால் எப்படி என்னை மன்னிக்க முடிஞ்சது? எனக்கு உன் முகத்தை பார்த்தாலே நீ என்னை மன்னிச்சது தான் ஞாபகம் வருது. எனக்கு இன்னும் எந்த தண்டனையும் கிடைக்கலையேனு குற்றஉணர்ச்சியா இருக்கு. எனக்கு ஏதவது தண்டனை குடு டி ப்ளீஸ். என்னால இதனால் தான் உன்கிட்ட நெருங்கி கூட வர முடியலை" என அவன் மனதில் இருந்ததை கொட்டினான்.

"அய்யோ அத்து.." என்று அவன் சிகையை கலைத்தவள்,

"ஹ்ம்ம் நீங்கள் செஞ்சது தப்பு தான் ஆனால் என்ன நம்பிக்கையில் என்னை கல்யாணம் செய்திங்க?" என அவள் கேட்க,

"அது தான் உனக்கே தெரியுமே! மாமா ஹெல்த் கண்டிஷன் அப்புறம் ஹாஸ்பிடல்ல நீ அழுதுட்டே யார்கிட்டயும் பேசாமல் எப்பவும் சோகமாவே இருந்தியா அதான் அப்பா கேட்கவும் சரினு சொல்லிட்டேன்" என அவன் சொல்ல,

"என் மேல நம்பிக்கை இல்ல ஆனாலும் என்னை விட்டு பிரியனும்னு தோணல? சரியா! சந்தேகம் பெரிய வியாதி அத்து. அது எப்போ வரும்னு தெரியாது. ஆனாலும் நானும் பல தடவை நினைச்சிருக்கேன். சந்தேகப்படுற உங்களோட எப்படி சேர முடியும்னு. இப்ப அப்படி தோணல. உலகத்துல எல்லாருமே எதாவது ஒரு இடத்துல சறுக்குவாங்க. என் புருஷன் ஏதோ ஒரு இடத்தில் சின்னதா சறுக்கிட்டீங்க. ஆனால் இனிமே அப்படி நடக்க நான் அனுமதிக்க மாட்டேன்" என்றாள்.

"இது எல்லாரோட வாழ்க்கைலையும் நடக்குறது தான் அத்து. என்ன.. ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதம். அப்போ நீங்க பேசினீங்கனு இப்போ நான் பதிலுக்கு பேசினால் எல்லாம் சரி ஆகிடுமா? ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுகொடுத்து வாழுறது தானே அத்து வாழ்க்கை. எனக்கு பிடிச்ச உங்களை நான் இழக்க விரும்பல. அன்னைக்கு என்கிட்டே சொன்னிங்களே இனி குடிக்கவே மாட்டேன்னு. இப்போ மட்டும் இல்லை என்னைக்கும் அதை ஃபால்லொவ் பண்ணுவீங்க எனக்காக. இதை தான் நம்பிக்கைனு சொல்றது. நீங்கள் எனக்கு கொடுத்த நம்பிக்கை. இதை நமக்கு இன்னொரு சான்ஸ்னு கூட சொல்லலாம். கடவுள் குடுத்தது. அதை சந்தோசமா மாத்த வேண்டியது நம்ம ரெண்டு பேர்கிட்ட தான் இருக்கு. எனக்கு கோபம் இருந்தது உண்மை தான் பட் அதைவிட காதல் அதிகமா இருக்கு. அத்து கூட எப்படி வாழணும்னு கனவு இருக்கு" என அவள் புன்னகை முகத்துடன் கூற அவளை அணைத்துக் கொண்டான்.

"இன்னும் ஒன்னே ஒன்னும் சொல்லவா?" என்றவளை அவன் கையணைப்பில் வைத்தே என்ன என கேட்க,

"உங்களுக்கு தண்டனை கடவுள் கொடுத்துட்டாரு. எப்படினு கேட்குறீங்களா? எனக்கு அச்சிடேன்ட் ஆனதுல இருந்து நான் எங்க வீட்ல இருந்த வரைக்கும் நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டிங்க? அது தான்.. அது தான் அத்து உண்மையான ஆனந்த். இனி ஒரு தடவை என்ன பிரிய உங்களுக்கு தோணுமா? இது தான் உங்களுக்கு கடவுள் கொடுத்த பெரிய தண்டனை. இனி ரிது என்ன சொன்னாலும் இந்த ஆனந்த் கேட்டுக்கனும்" எனும் போது அவன் உடல் நிஜமாகவே குலுங்கியது.

இதை இன்னொரு பிறவியாகவே எண்ணிக் கொண்டவன் எப்படி வாழ வேண்டும் என்ற கனவையும் தெரிந்து கொண்டான்.

அடுத்த இரண்டு நாட்களில் ஆனந்த் அவன் வேலைகளை எல்லாம் சரிபடுத்தி ஒரு வாரத்தில் முடிக்கவேண்டிய வேலைகளை இரண்டு நாட்களில் முடித்து ஹனிமூன் டிக்கெட்டுடன் வந்தான் ரிதுவிடம்.

அதிகம் விடுப்பு எடுக்க இயலாது போனாலும் 5 நாட்கள் மட்டும் எடுத்து மூணார் செல்வதாக திட்டமிட்டு அதை சர்ப்ரைஸ் என்று கூறி ரிதுவிடம் சொல்ல,

"நீங்க தூங்க கூட நேரம் இல்லாம ரெண்டு நாளா ஓடும் போதே தெரியும் இப்படி வந்து நிப்பீங்கனு" என்று அவள் சொன்னதும் அசடு வழிய சிரித்தான் ஆனந்த்.

அன்றே இருவரும் கிளம்பினர் மூணார். விண்டி ஹில்ஸ் ஹோட்டலில் இறங்கி அங்கே தங்கி விட்டு காலை பொத்தன்மேடு கிராமத்தில் இருக்கும் மலைக்காட்சியை ரசித்தனர்.

பின் இரவிக்குளம் நேஷனல் பார்க் சென்று அங்கு உள்ள விலங்குகளை பார்வை இட்டனர். மாலை நேரம் பள்ளிவாசல் நீர்வீழ்ச்சி சென்று குதூகலித்தனர்.

ஏன் எல்லா இடத்திற்கும் ஒரே நாளில் செல்கிறோம் என ரிது நினைத்தாலும் அந்த இடம் அவளுக்கு பிடித்து போனதால் அதை பற்றி அவனிடம் கேட்கவில்லை.

ரிதுவுடன் உண்டான முதல் தனி பயணம் அதை மிகவும் ரசித்து அனுபவித்தான் ஆனந்த்.

உண்மையில் சொல்ல வேண்டுமானால் அவனுக்கும் புரியவில்லை ஏன் ஒரே நாளில் இவ்வளவு தூரம் செல்கிறோம் என்று.

அவனுக்குள் அவளை எப்படி நெருங்குவது ஏன புரியாமல் அவளை பார்த்து கொண்டு ஹோட்டலில் இருக்க முடியாமல் தான் சுத்தி கொண்டிருந்தான்.

ஆனால் இயற்கையின் அழகு இருவரையயும் ஈர்த்தது. மீண்டும் ஹோட்டல் வந்த போது இரவு 10 மணி.

ரூமிற்கு உணவை ஆர்டர் செய்து விட்டு ஆனந்த் குளிக்க செல்ல ரிதுவும் பின்னால் இருந்த பால்கனியில் நின்று அந்த இடத்தை ரசித்து கொண்டிருந்தாள்.

குளித்து வந்தவன் அவள் பின்னால் இருப்பது தெரிந்து அங்கு செல்ல அவனை பார்த்து ஒரு நொடி யோசித்தவள் பின் உள்ளே சென்றுவந்து அவன் கையில் ஒரு பார்சலை நீட்டினாள்.

"என்ன அம்மு?" என அவன் கேட்க, அவள் கண் சிமிட்டினாள்.

இங்கு வந்ததில் இருந்து அவள் அருகாமை அவனை ஒரு வழி ஆக்கிக் கொண்டிருக்க அவளின் இந்த கண் சிமிட்டல் கூட அவனை மிகவும் இம்சித்தது.

'அடியேய் நானே வந்ததில் இருந்து நொந்து போய் இருக்கேன். ஏண்டீ' என மனதோடு கூறியவன், தலையை இடது வலமாக ஆட்டி சிரித்து அதை பிரித்தான்.

அதன் உள்ளே ஒரு ஹார்டின் வடிவ மோதிரம் அதில் ஒரு பெண் உருவமும் ஒரு ஆண் உருவமும் இணைந்தவாறு. மற்றும் மஞ்சள் நிறத்தில் இடது புறம் பட்டனுடன் கூடிய குர்தா இருந்தது.

"வாவ்! எப்படி ரிது?" என அவன் கேட்க,

அவன் கலர் பிடித்ததால் கேட்கிறான் என நினைத்து, "உங்களுக்கு இந்த கலர் நல்லா இருக்கும் தோணிச்சு அதான் வாங்கினேன்.பிடிச்சிருக்கா? " என அவள் கேட்க,

"அய்யோ அம்மு! உன்கிட்ட எப்படி சொல்ல? ம்ம் ஆமா இது எப்போ வாங்கின?" என்றான்.

"பர்ஸ்ட் புடிச்சிருக்கா சொல்லுங்க. அப்புறம் நான் சொல்றேன்"

"அம்மு நீ குடுத்து எனக்கு பிடிக்காம போகுமா? காரணம் இருக்கு சொல்லு எப்போ வாங்கின!".

"அது.. அது வந்து.. அன்னைக்கு விக்ரம் அண்ணா, ஜோதி, லாவண்யா எல்லாரும் ஷாப்பிங் போனோமே? நீங்கள் கூட சுரேஷ் அண்ணா கூட வந்தீங்கல்ல? அப்போ தான்".

"அடிப்பாவி! அப்போ அப்பவே உனக்கு கோபம் இல்லையா? நான்தான் இவ்வளவு நாள் வேஸ்ட் பண்ணிட்டேனா?"

"ஹிஹி கோபம் இருந்துச்சி. ஆனாலும் உங்களுக்காக தான் வாங்கினேன். இன்னைக்கு தான் குடுக்க முடிஞ்சது. இன்னொரு விஷயம்.. இவ்வளவு நாள் மட்டும் இல்லை இந்த நிமிஷம் வரை வேஸ்ட் தான் பண்ணிட்டு இருக்கீங்க" என்றவள் அவள் கூறியதை அவன் உணரும் முன்னே ஓடி குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் கூறியதை இரு நொடி தாமதமாக புரிந்து கொண்டவனோ தன் தலையிலேயே கொட்டி கொண்டு அறைக்குள் ஓட, அவள் தரிசனம் கிடைக்கவில்லை.

குளியல் அறை கதவை தட்டி, "மேடம் வெளியே வந்து தான் ஆகணும்" என கூறிவிட்டு கட்டிலில் அமர்ந்து அவன் கொண்டு வந்த பேகை பிரித்தான்.

காலிங் பெல் சத்ததில் வெளியே சென்று உணவை வாங்கி வந்தவன் அவன் பேகில் இருந்து ஒரு கவரை எடுத்து கட்டிலில் வைத்து விட்டு உணவுடன் டைனிங் அறைக்கு சென்றான்.

பின் அதை அப்படியே வைத்து விட்டு அவள் கொடுத்த உடையை மாற்றி கொண்டு உணவுடன் கார்டனில் இருந்த குடையுடன் கூடிய சேரில் அமர்ந்து அவன் முன் இருந்த டேபிள் மேல் உணவை பிரித்தான்.

வெளியே வந்தவள் கட்டிலில் இருந்த கவரை பிரித்து பார்த்தாள். அவன் மீண்டும் மீண்டும் எப்போது வாங்கினாய்? என கேட்ட கேள்வியின் அர்த்தம் புரிந்தது.

அவள் கொடுத்த அதே மஞ்சள் வண்ணத்தில் கை வேலைப்பாடு உடைய தங்க நிற ஜரிகைகளுடன் கூடிய அழகிய புடவை பார்க்கும் போதே கண்களை ஈர்த்தது.

அதனுடன் ஹார்டின் டாலருடன் கூடிய செயின். அவன் அங்கு இல்லை என்றதும் அதை மாற்றி கொண்டவள் கிளம்பி கார்டனுக்கு சென்றாள்.

இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் கவர்ந்து இருந்தது.

"லுக் சோ ப்ரெட்டி அம்மு. புடிச்சிருக்கா" என்க.

"புடிச்சிருக்கு எல்லாமே" என்றாள்.

அந்த ஹார்டினை வாங்கி அவன் அவள் கழுத்தில் மாட்டப்போகும் முன்,

"அதை திறந்து பாரு" என்றான்.

திறந்தவள் மேலும் இன்பமாய் அதிர்ந்தாள்.

அதை இரண்டாக திறந்தால் பிரிந்து நான்காக விரிந்து அதில் விக்ரம் ரிசெப்சன் அன்று அனைவரும் இருந்த புகைப்படத்தை எடிட் செய்து இவர்கள் இருவரும் மட்டும் இருக்கும்படி வைக்கப்பட்டிருந்தது.

அவன் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருக்க அவள் அவனை பார்த்து கொண்டிருக்கும் படம்.

"அதில் நீ கோபமா என்னை பார்த்தாலும் அந்த முகத்தில ரசனை தெரியுது அம்மு. என் மூஞ்சை பாரேன். உர்ர்ருனு.. ஆனாலும் ஏன் இந்த போட்டோ செயின்ல வச்சேன் தெரியுமா?. உன்னோட அன்பு தான் எப்பவும் பெஸ்ட் அதை நான் எப்பவும் இழந்துட கூடாது அதனால தான். நான் அதை பார்த்துட்டே இருக்கணும்" என்று கூறி அவளுக்கு அதை அணிவித்தான்.

"அன்பு எப்பவுமே பொய் ஆகாது அத்து. அன்பு இருக்கிற இடத்தில தான் கோபமும் இருக்கும். உங்க அன்பு என்னைக்கும் எனக்கு மட்டும் தான்" என்றவள்,

"அத்து நம்ம நிறைய போட்டோ எடுத்துக்கலாம். டெய்லி ஒரு போட்டோ எடுக்கணும். நம்ம பெட் ரூம் புல்லா போட்டோஸ் மாட்டணும் சரியா. இதுவும் உங்களுக்கு பனிஷ்மென்ட் தான்" என்று அவள் கூற,

தண்டனை வேண்டும் என்று அவன் கேட்டதில் இருந்து இதுபோல அவளது ஆசைகளை கூறி அதை நிறைவேற்றுவதை தண்டனையாக அவனுக்கு வழங்குவதை நினைத்து சிரித்துக் கொண்டான்.

அவன் மோதிரத்தை அவளிடம் கொடுக்க, "இந்த மோதிரம் உங்க கையில் இருக்கிற மாதிரி எப்பவும் நீங்க என்கூடவே இருக்கனும்" என்று கூறி அதை அவனுக்கு அணிவித்தாள்.

கடலில் மீனாக..
இருந்தவள் நான்! உனக்கென
கரை தாண்டி வந்தவள் தான்..
துடித்திருந்தேன் தரையினிலே..
திரும்பிவிட்டேன் என் கடலிடமே!

தொலை தூரத்தில்..
வெளிச்சம் நீ! உனை நோக்கியே
எனை ஈர்க்கிறாயே..
மேலும் மேலும்
உருகி உருகி உன்னை எண்ணி
ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்?
ஓ ஓ உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்!..

பின் இருவரும் அமர்ந்து சாப்பிட அந்த இடத்தில் மௌனம் மட்டுமே.

சாப்பிட்டு முடித்து அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து அந்த குளிர் காற்றை அனுபவித்தனர்.

"அம்மு குளிர் அதிகமாகுது. ரூம்க்கு போலாமா? ". என்ற கேள்விக்கு "ம்ம்" மட்டுமே பதில் வந்தது.

பின் அவள் எழுந்து அறைக்கு செல்ல அவள் பின் முகம் முழுதும் ரசனையுடன் சென்றான் ஆனந்த்.

கதவை தாளிட்டு இவன் உள் செல்ல ஏற்கனவே பார்த்த அறையை சுற்றி சுற்றி பார்த்து கொண்டிருந்தாள் ரிது.

"அம்மு எவ்வளவு நேரம் இந்த ரூமை புதுசா பார்க்குற மாதிரி இப்படி பார்த்துட்டு இருக்க போற?" என சிரிப்புடன் கேட்டு கொண்டே அவளை பிடித்து திருப்பினான்.

வெக்கத்தில் சிவந்து இருந்த அவள் கன்னங்களை பார்த்ததும் அன்று அவன் அவளை அடித்தது ஞாபகம் வர, "ப்ச் சாரி அம்மு" என்றான் கவலையுடன்.

எதை எதையோ எதிர்பார்த்தவள், அவன் பேசியதில் ஒன்றும் புரியாமல் அவனை பார்க்க, "ரொம்ப வலிச்சுதா அன்னிக்கு?" என்றான்.

அதை கேட்டு ஒரு நொடி புரியாமல் நின்றவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கலகலவென சிரித்தாள்.

"ஏய்ய்ய் ஏண்டீ ராத்திரில இப்படி பேய் மாதிரி சிரிக்கிற?".

"ஹாஹா அய்யோ முடியலை அத்து".

"யாராச்சும் வந்திட போறாங்க. ஷ்ஷு.. அம்மு.. சிரிக்காதடி" என அவன் அவள் வாயை மூட சிரிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தாள்.

"இப்போ சொல்லு. எவ்வளவு சீரியஸ்சா கேட்டேன்! ஏன் சிரிச்ச?" என்றதும், மறுபடியும் வந்த சிரிப்பை அடக்கியவள்,

"அத்து, நீங்கள்.. நீங்கள்.. நீங்கள் சரியான தயிர் சாதம் அத்து" என்று கூறிவிட்டு மீண்டும் சிரிக்க, இந்த நேரத்தில் தான் இந்த கேள்வியை கேட்டதை தான் அவள் அப்படி சொல்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன் தலையில் அடித்து சிரிக்க அவளும் சிரித்தவாறே கட்டிலில் அமர்ந்தாள்.

"அம்மு உன்னை.." என்றவாறு அவளை அனைத்து கொண்டவன் பின் அவளை பேசவும் விடவில்லை.

கல்யாணத்தின் பின்பும் காதலர்களாக திரிந்தவர்கள் என்றோ மனதால் இணைந்தாலும் இன்று உடலாலும் கணவன் மனைவியாக இணைந்தனர்.

அடுத்த நாளில் இருந்து நான்கு நாட்களும் மூணாரை மறந்து ஹனிமூனை மட்டுமே ரசித்தனர்.

முதல் நாளிலேயே சுற்றி பார்த்தது நல்லது தானோ எனும் அளவுக்கு அடுத்த நாட்களில் இருந்து அவர்களுக்கே அவர்களுக்கான நேரங்கள் அனைத்தும்.

இனி அவள் மட்டுமே உலகம் என்று அவனும் அவன் அன்பு எனக்கு மட்டுமே என்று அவளும்.

இது அவர்களுக்கான ரகசிய நாட்கள்! இருவரும் அன்பின் முகவரியை பகிர்ந்து கொண்ட நாட்கள்.

காதல் தொடரும்...
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom