• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 35

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 35


ரிது கரடி பொம்மையுடன் பேசுவதை ஆரம்பத்தில் இருந்து ஒரு வார்த்தை விடாமல் ரசித்து வாசலில் நின்று கேட்டுக் கொண்டு இருந்தான் அவள் கணவன்.


இன்னும் அவள் முனகிக் கொண்டே இருக்க சிரிப்புடன் அவள் அருகில் சென்று சோஃபாவில் அமர்ந்தான் அவளவன்.


"அந்த பொம்மைக்கு வாய் இருந்தா அழுதிருக்கும் அம்மு. நான் வந்த அப்பறம் உன் கோபத்தை என்கிட்ட காட்ட வேண்டியது தானே ஏன் பொம்மையை கஷ்டப்படுத்துற?" என அவன் கேட்க,


தான் பேசியதை கேட்டு விட்டான் என்ற அதிர்ச்சியே இல்லாமல் முகத்தை திருப்பி கொண்டாள் கோபத்தில்.


"ஓஹ்! உன் பேச்சை கேட்டா தான் பேசுவேன்னு சொன்னல்ல? ஆனால் நான் அம்முக்கு ஒரு குட் நியூஸ்சோட வந்துருக்கேனே? அம்மு பேசலைனா எப்படி சொல்றது?" என அவனும் பொம்மையை கையில் வைத்து கொண்டு பேசினான்.


என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் இருந்தாலும் அதை எப்படி கேட்பது? காலையில் இருந்து காக்க வைத்து விட்டானே என்ற கோபத்தில் திரும்பாமலே இருந்தால் ரிது.


"சரி அப்போ நானும் உன்கிட்டயே சொல்றேன். நீ என் அம்முகிட்ட சொல்லிடு" என அவன் பொம்மையிடம் கூற, ரிது காதை தீட்டி வைத்து கொண்டாள் அவன் பக்கம்.


"நானும் என் அம்முவும் இன்னும் நாலு நாள்ல எங்க வீட்டுக்கு போக போறோம். அதுக்குள்ள என் அம்மு என்கிட்ட பேசிடுவா தெரியுமா! எப்படினு கேட்குறியா? நான் தான் இனி என் அம்மு பேச்சை மட்டும் தானே கேட்க போறேன்" என அவன் பேச, அவள் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டு இருந்தது.


அதை அறிந்தது போல அவளின் மறுபக்கம் சென்று அமர்ந்தான் ஆனந்த்.


"ஓய்! நீ என்கிட்ட கோபப்பட எல்லா உரிமையும் இருக்கு. அதை நம்ம வீட்டில் போய் காட்டலாம் ஓகேவா" என கண் சிமிட்டி அவன் கேட்க கண்ணீருடன் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.


"அச்சச்சோ பிடிக்கலைனா வரவேண்டாம் டா" என அவன் கிண்டல் செய்ய,


"நான் சொன்னேனா? நான் சொன்னேனா? போடா" என அவன் நெஞ்சில் அடிக்க சிரித்தபடி அனைத்து கொண்டான் அவன்.


சிறிது நேரம் அந்த நேரத்தை ரசித்து அமர்ந்திருக்க, "ஆமா எனக்கு புதுசா பெயர் எல்லாம் வச்சிருக்க போல. ஹ்ம்! மரியாதையும் போச்சு. பரவாயில்லை இது கூட நல்லா தான் இருக்கு. இப்படியே பேசு அம்மு"


"எனக்கு கோபம் வந்தா எப்படி வேணா கூப்பிடுவேன்" என்றபடி அவனுக்கு ஒழுங்கு காட்டினாள் ரிது.


கல்யாணத்தை ஒரு மாதம் தள்ளி வைக்கலாம் என ஆனந்த் மூலம் விக்ரம் வீட்டில் காரணம் கூறாமல் சுரேஷ் கூறி பெரும் பஞ்சாயத்து ஒன்று ஓடியது.


அப்போது விக்ரம் பொதுவில் பேசாமல் இருந்ததால் அந்த கோபத்தை தான் இரவில் தனிமையில் அவனிடம் காட்டிக் கொண்டிருந்தாள் லாவண்யா.


ஆனால் விக்ரம் தனியாக சுரேஷை அழைத்து இனி யார் வாழ்விலும் எந்த குறையும் இருக்க போவதில்லை. இன்னும் ஒரு மாதத்தில் எல்லாம் சரியாகும் என பலவிதமாக கூறி அவனை ஒருநிலைக்கு கொண்டு வந்தான்.


ஆனந்த்தும் விக்ரமுடன் சேர்ந்து பேசியதால் தான் சுரேஷ் இதற்கு ஒத்து கொண்டான்.


வீட்டிற்கு வந்த விக்ரம் உடன் லாவண்யாவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.


"நான் என்ன டி பண்ணுனேன். சிவனேனு நீங்க பண்றதெல்லாம் பார்த்துட்டு சும்மாதானே இருக்கேன். ஏன் என்மேல கோபப்படுற?"


"பேசாதீங்க விக்ரம். இப்போ எதுக்கு கல்யாணத்தை தள்ளி வைக்கணும்?"


"அடியேய் அது உன் பாசமிகு சகோதரன் சொன்னது டி. என்னை ஏன் கேக்குற?"


"ஆமா அதான் மூணு பேரும் ஒன்னு சேர்ந்துட்டிங்களே? அது போதாது! உங்களுக்கு தெரியாமலா இருக்கும்? எனக்கு தெரியாது கல்யாணம் ஒரு மாசத்துல நடக்கணும்".


"அட இவ ஒருத்தி! ஏண்டீ? இது அவன் கல்யாணம். எப்போ வேணா நடத்திட்டு போறான். நீ ஏன் இந்த ராத்திரி நேரத்துல என் மூட்ட ஸ்பாயில் பண்ற?"


"அவனை பத்தி தெரிஞ்சும் இப்படி அக்கறை இல்லாமல் பேசுறீங்க? முதல்ல நம்ம கல்யாணத்துக்காக வெயிட் பன்னினான். அடுத்து ஆனந்த் ரிது சேரணும்னு வெயிட் பன்னினான். இப்போது தான் எல்லாம் ஓரளவு சால்வ் ஆகிட்டே? இன்னும் என்னவாம் அந்த மடையனுக்கு?"


"ஓரளவுனு நீயே சொல்றியே!" என்றவனை லாவண்யா முறைத்ததும்,


"இப்படிலாம் முறைக்கப்டாது செல்லம். நீ இப்படி பேசுவனு இந்த மாமாக்கு தெரியாதா? அதான் அந்த மடையன்கிட்ட ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டேன். அடுத்த மாசம் கல்யாணம் கண்டிப்பா நடக்கும். ஒழுங்கா வந்து சேருனு" என்றதும், லாவண்யா அவனை ஆச்சர்யமாக பார்க்க,


"ஹேய் ஏண்டி இப்படி பாக்குற? உங்களுக்கு மட்டும் தான் மூளை இருக்குனு நினைச்சிங்களா? நாங்களும் எங்க கடமைய கரெக்ட்டா செய்வோம்" என அவன் கெத்தாக கூற,


"மாமான்னா மாமா தான்" என அவளும் கொஞ்சிக் கொண்டாள்.


களைத்து வந்த ஆனந்த், "ரிது ஒரு காபி" என சொல்லி முடிக்கும் முன், அவன் முன் காபியுடன் நின்றாள் ரிது.


சொன்னது போல இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அம்மா அப்பாவுடன் சென்று ரிதுவை அழைத்து வந்திருந்தான்.


எவ்வளவு அழைத்தும் ராஜ்குமார் அவர்கள் உடன் வர மறுத்து விட, வாராவாரம் உன்னை இங்கே அழைத்து வருகிறேன் என ரிதுவை சமாதானப்படுத்தி அழைத்து வந்தான்.


வந்த அன்றே குலதெய்வ கோவிலுக்கு செல்லாததால் தான் இவ்வளவு பிரச்சனை என்று கூறி சுகன்யா அனைவரையும் அழைத்து சென்றார் கோவிலுக்கு.


கரூர் அருகே இருந்த கோவிலுக்கு அன்று மாலை கிளம்பியவர்கள் அடுத்த நாள் தான் போய் சேர்ந்தனர்.


பூஜை அனைத்தும் முடிந்து அன்று இரவு கிளம்பி அடுத்த நாள் காலை ஊருக்கு வந்து சேர்ந்தனர்.


மொத்தத்தில் அவன் நினைத்தது போல அவளை அழைத்து வந்தும் இன்னும் இருவரும் பேச தனிமை கிடைக்கவில்லை.


இதில் வந்ததும் சுரேஷ் அழைத்து கல்யாணத்தை தள்ளி வைப்பதை பற்றி பேச விக்ரம் வீட்டிற்கு அழைத்து சென்றான்.


ஒருவழியாக சுரேஷை ஒருவழிக்கு கொண்டு வந்து மாலை தான் வீட்டிற்கு களைப்புடன் வந்தான் ஆனந்த்.


ரிது காபியை கொடுத்து விட்டு அவனையே பார்த்து கொண்டு நிற்க, அவன் ரிதுவை கவனிக்காமல் ஏதோ யோசனையில் இருப்பது போல தோன்றியது.


பின் இரவு உணவுக்கு தயார் செய்ய அவள் சென்று விட இவனும் அவனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.


தனிமை சில நேரங்களில் வரம், சில நேரங்களில் சாபம்.


ஆனந்த்திற்கு இது பொறுத்தமான ஒன்று. அவளை முதலில் காதலித்த போது அவன் தனிமையில் அவளை பற்றிய சிந்தனையுடன் காலத்தை நகர்த்தும் போது வரமாக தெரிந்த தனிமை அவள் அடிபட்டு ஹாஸ்பிடலில் இருந்து பின் அவள் வீட்டிற்கு சென்ற பின் இவனுக்கு சாபமாகவே தெரிந்தது.


இப்போது அவளை அழைத்து வந்தது பெரும் நிம்மதி என்றாலும் அவன் செய்த பாவங்களுக்கு தண்டனை இல்லாதது பெரும் சஞ்சலமாகவே அவனுக்கு தெரிந்தது.


அதுவும் இவ்வளவு செய்தும் அவனை விரும்பும் அவளின் அன்பிற்கு தான் எப்படி என்ன செய்தால் தகும்?


இதை அவளிடம் பேசிய பின்னாவது தன்னால் இந்த குற்ற உணர்ச்சியில் இருந்து வெளி வர முடியுமா? என தான் அவன் பல நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தான்.


ரிதுவும் அவனுடன் பேச தனிமையை தான் தேடிக் கொண்டிருந்தாள். அவளுக்கு அவன் போல அவனிடம் எந்த கேள்வியும் இல்லை. அவன் மனதில் இருக்கும் பழைய கஷ்டங்களை துடைக்க வேண்டும் என்பது தான் அவளின் எண்ணம்.


வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா!
பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா!


வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்!
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்!


தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை?


வானிலவை நீ கேளு கூறும் என் வேதனை!


எனைத்தான் அன்பே மறந்தாயோ?
மறப்பேன் என்றே நினைத்தாயோ!


என்னையே தந்தேன் உனக்காக! ஜென்மமே கொண்டேன் அதற்காக!


சுந்தரி கண்ணால் ஒரு சேதி... சொல்லடி இந்நாள் நல்ல தேதி...



இரவு உணவை முடித்தவன் ரிதுவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறைக்கு செல்ல, அவளும் அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு சீக்கிரமே அறைக்கு சென்றாள்.


கட்டிலில் அமர்ந்தவாறே தலையை சாய்த்து கண் மூடி இருந்தான் ஆனந்த்.


"அத்து.. பால்" என்று அவன் முன் நீட்ட அவளை பார்க்காமல் அவளுக்கு பின் பார்வையை செலுத்தினான்.


என்னவென்று அவள் பார்வையால் வினவ லாக் போடு என்று கையில் சைகை செய்து பாலை வாங்கி கொண்டான்.


அவளும் அவன் சொன்னதை செய்துவிட்டு அவன் அருகே அமர பாலை டேபிள் மேல் வைத்து விட்டு அவளை தன் மடியில் சாய்த்து கொண்டான்.


காதல் தொடரும்..
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom