• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 34

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 34


“மாரி..மாரி” என்ற சுரேஷ் குரல் அந்த குடோனில் எதிரொலித்தது.


“சார் இங்குன இருக்கேன்” என்றவாறு குரல் கொடுத்தான் மாரி.


குரல் வந்த திசையில் சுரேஷ் செல்ல அங்கே இருந்தவனை பார்த்த ஆனந்த் ஆத்திரத்துடன் ஓடினான்.


மாரி என்றவன் சுரேஷ் அருகே வந்து நின்று கொண்டான்.


“ஏன்டா உனக்கு நான் என்ன டா கெடுதல் பன்னினேன்? நீ ஒவ்வொரு முறை தப்பு பண்ணும் போதும் உன்னை மன்னிச்சு தானே விட்டேன். உன் அப்பனுக்கு தான் அறிவில்ல? உனக்குமா? இதுக்காக தான் வெளிநாடு போய் படிச்சுட்டு வந்தியா?” என பேசிக் கொண்டே அவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்தான்.


“ச்சீ! கனவுல கூட நான் இப்படி எல்லாம் நடந்துப்பேன்னு நினச்சதில்லை. உன்னால இதுக்கு மேல பிரச்சனை வரக் கூடாதுனு தானே என் அப்பா உன்னை ஜெயில்க்கு அனுப்பினார்? ஏன்டா அதுவும் நீ பண்ணின தப்புக்காக தானே டா அனுப்பினார்? ஏன்டா ரிதுவை இப்படி பண்ணின?” என்றவாறு விஜயனை அடிக்க கை தூக்க அதை தடுத்தான் சுரேஷ்.


“விடு சுரேஷ். இவனை சும்மா விட கூடாது. உன்னை சும்மாவிட்டதுக்கு உன் புத்தியை காட்டிட்டல்ல? என்னை இந்த அளவுக்கு இறங்கி போக வச்சுட்டல்ல? பாவம் டா அவ! ஒருவேளை அன்னைக்கு நீ என்னை ஏதாவது பண்ணியிருந்தா கூட நான் பண்ணின தப்புக்கு எல்லாம் தண்டனைனு நினச்சு சந்தோசமா இருந்திருப்பேன். நீயும் சந்தோசமா இருந்திருக்கலாம். நீ ஒளிஞ்சுகிட்டா கண்டுபிடிக்க முடியாதுனு நினைச்சியா? உன்னை எல்லாம் உயிரோடவே விட கூடாது டா” என அவனை கால் முட்டியில் மிதிக்க கட்டி இருந்த சேரோடு சாய்ந்தான் அவன்.. விஜயன்.


“ஆனந்த் ப்ளீஸ் ரிலாக்ஸ்” என மீண்டும் அவனை தடுத்த சுரேஷ்,


”இப்போ கூட உன்னை எதுவும் பண்ண போறதில்ல. ஆனால் நீ உயிரோட இருக்கனும்னா இத்தோட நிறுத்திக்கோ. இனி என் வீட்ல ஒருத்தர்க்கு சின்ன அடினா கூட உன் உயிர் உன் கையில இல்ல. மிரட்டிட்டு விட்டுட்டோம் நினச்சு எதாவது பன்ணிடாத! சத்தியமா சொல்றேன் கொன்னுடுவேன்” என மிரட்ட, ஆனந்த் மீது இருந்த பயத்தை விட சுரேஷை பார்த்து இன்னும் நடுங்கினான் அவன்.


ஆனந்த் முறைப்பதை பார்த்து பயம் இருந்தாலும், “சாரி ஆனந்த். அப்பா பேச்சை கேட்டு நான் குருட்டு தனமா கேவலமா நடந்துகிட்டேன். மூணு நாளா என்னை இங்கே வச்சிருந்ததும் நான் உயிரோட திரும்ப போவேன்னு நினைக்கவே இல்லை” என அவன் முகத்தை பார்க்க அவன் இவன் பேச்சை காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.


சுரேஷை பார்த்தவன், “அன்னைக்கு ஆனந்த் வண்டிய மோதணும்னு தான் போனேன். ஆனால் அந்த பொண்ணுதான் இவன் பொண்டாட்டினு தெரிஞ்சதும் என் மூளை தப்பா யோசிச்சிடுச்சி. நான் இந்த அளவுக்கு அசிங்கமா நடந்தது எனக்கே பிடிக்காம தான் இனி இங்க இருக்க கூடாது ஆனந்த்க்கு தொல்லை குடுக்க கூடாதுனு மறுபடியும் வெளிநாடு போனேன். அம்மா தவறிட்டாங்கனு தான் உடனே திரும்பிட்டேன்” என்றதும் ஆனந்த் சுரேஷ் இருவருமே அவன் அன்னைக்காக வருந்தினர்.


அந்த நிலையிலும் அவன் அன்னைக்காக வருந்தி மூன்று நாள் அவனை இங்கே அடைத்து வைத்தது தவறோ என்று நினைத்தான் ஆனந்த்.


"சாரி” என்ற ஒற்றை வார்த்தையுடன் அவன் வெளியே செல்ல சுரேஷ் அவனை அழைத்து அவன் வீட்டில் விட்டுவிடுமாறு மாரியிடம் கூறிவிட்டு ஆனந்தை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தான்.


அவனுக்கு குளிர்ந்த நீரை கொடுத்தவன் தானும் பருகிவிட்டு அமர்ந்து மணியை பார்க்க 11.55 என்று காட்டியது.


ஜோதி பலமுறை அழைத்து இறுதியில் குட் நைட் மெசேஜ் அனுப்பிவிட்டிருந்தாள்.


அதை பார்த்து சிரித்தவன் ஆனந்திடம், “உனக்கு எத்தனை மிஸ்ட் கால் டா” என கேட்க,


அவனும் சிரிப்புடன் மொபைலை பார்த்து பதினொன்னு என்றதும் இருவரும் சேர்ந்து சிரித்தனர்.


“அப்புறம் ரிதுவை எவ்வளவு நாள் கஷ்டப்படுதலாம்னு பிளான்?” என சுரேஷ் கேட்க அது வரை இருந்த மனநிலை மாறி இப்போது வருத்தம் வந்தது ஆனந்த் முகத்தில்.


“சொல்லு டா. இல்ல.. ரிது வேணாம்னா சொல்லிடு. நான் அவளுக்கு…”


“டேய் உளறாதே டா. நான் மட்டும் சந்தோசமா இருக்கிற மாதிரி தெரியுதா உனக்கு? என்ன? என்ன செய்ய போற அவளுக்கு?" என கடுப்புடன் கேட்க,


“ஸ்ஸ் எப்பா! இவ்வளவு கோபம் வருதில்ல? அப்புறம் ஏன்டா? கூட்டிட்டு போய் சந்தோசமா இருக்க வேண்டியது தானே? இன்னைக்கு எல்லாரும் முழு சந்தோசமா இருந்தாங்கனு நினைக்கிறியா? உன்னையும் சேர்த்து தான் சொல்றேன்?. ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ. எங்க கல்யாணத்துக்கு முன்னாடி நீ ரிது சந்தோசமா இருக்கனும். அப்படி இல்லனா.. எப்போ உங்களுக்குள்ள எல்லாம் சரி ஆகுதோ அப்ப நான் கல்யாணம் செய்துக்கறேன்” என்றதும்,


“ப்ச் ஹேய்! ஏன் இப்படிலாம் பேசுற. எங்களுக்குள்ள என்ன? இப்போ நாங்க சந்தோசமா தான் இருக்கோம். நீ சொன்ன மாதிரி உன் கல்யாணத்திற்கு முன்ன இன்னும் சந்தோசமா இருப்போம். போதுமா” என சிரிப்புடன் கூற,


இவனை எப்படி சரி பண்ணுவது என நினைத்து கலங்கி இருந்த சுரேஷ் மகிழ்ச்சியுடன் நிம்மதியானான்.


“உனக்கு தெரியாம இருக்காது டா ஆனாலும் சொல்றேன். இன்னைக்கு ரிது முகத்தில எதையும் காட்டிக்கலைனாலும் அவ உன்னை எவ்வளவு முறை பார்த்துட்டே இருந்தா தெரியுமா? உன்னை ரொம்ப மிஸ் பண்றா டா. அண்ட் ஐ க்நொவ் நீயும் மிஸ் பண்றனு தெரியும். பட் நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து என்னோட கல்யாணத்தை முழு மனசோட வாழ்த்தனும். அது தான் எனக்கு தேவை” என்றதும் ஒரு அழகான புன்னகையுடன் அணைத்து கொண்டான் ஆனந்த்.


“நீ சொல்லி கேட்காம இருப்பேனா? எனக்கு பயம் இருந்தது உண்மை தான். ஆனால் நாங்க நிறைய குழப்பத்தில லைஃப்ஐ விட்டுட்டோம் டா. இனி ரிது என் வீட்டுக்கு வரும்போது அவளோட மனசுல எந்த ஒரு நெகடிவ் தாட்டும் இல்லாம என்னோட மனைவியா முழு சந்தோசத்தோட வரணும். அதுக்காக தான் இந்த இடைவெளி. நான் அவளை விட்டு பிரிஞ்சா தான் அவளுக்கு நல்லதுனு தப்பா ஒரு முடிவை அன்னைக்கு எடுத்துட்டேன். அப்புறம் யோசிச்சப்போ தான் அது தப்புனு புரிஞ்சது. நான் எப்போவோ உணர்ந்துட்டேன் ரிது தான் என்னோட எல்லாமும்னு. ஆனால் ரிதுக்கு அப்படி இல்லை டா. அவளுக்கு சொல்லிக்கிற மாதிரி எந்த நல்லதும் நான் பண்ணல. நான் சாரி கேட்டு மட்டும் அதை சரி செய்ய முடியாது. அவளும் என்னை விரும்புறதால என்னை ஏத்துக்குவா தான். ஆனா அது மட்டும் போதாது. இனி என்னைக்கும் அவளை விட்டு நான் பிரிய மாட்டேனு அவளுக்கு நம்பிக்கை வரணும். அது நாங்க வாழற வாழ்க்கைல அவள் உணருவா. அதுக்காக தான் வெயிட்டிங்” என்று கூறி முடிக்க,


இவனை என்னவென்று சொல்வது என்ற உணர்வில் அவன் தோள்களை தட்டிக் கொடுத்தான் சுரேஷ்.


பின் இருவரும் பல கதைகளை பேசியவாறே நடு இரவுக்கு பின்னே உறங்கினர்.


உறங்குவதற்கு முன் ரிதுவிற்கு இரவு வணக்கம் அனுப்பிவிட்டே தூங்கினான் ஆனந்த்.


காலை எழுந்ததும் அன்றைய மீட்டிங் பற்றி அவனுடைய ஆபிஸ்ல் இருந்து அழைப்பு வர, ஒரு மணி நேரம் அதை தள்ளி வைக்குமாறு கூறிவிட்டு ரிதுவை பார்க்க கிளம்பினான்.


“ஓகே டா மீட்டிங் இருக்கு. நான் ரிதுவை பார்த்திட்டு அப்படியே ஆபிஸ் கிளம்புறேன்” என ஆனந்த் எழுந்து கொள்ள, அவனை பார்த்து சிரித்த சுரேஷ்


”இப்படியே தான் போக போறியா?” என்றான்.


குனிந்து தன்னையே பார்த்தவன், “ஏன்டா நேத்து பன்க்சன்க்கு வந்தது தானே! போதும் போதும்” என சலித்து கொள்ள,


“அய்யே! இப்படி போனீனா எப்படி ரிது உன்கிட்ட வருவா? ஏன்டா இப்படி மாறிட்ட? எவ்வளவு நீட்டா டிரஸ் பண்ணுவ? இப்போது என்ன ஆச்சுன்னு இப்படி பிகெவ் பண்ற? இரு” என்றவன் அவனுடைய கப்போர்டில் இருந்து ஒரு புது டிரஸ்சை கொடுக்க, அதை மாத்தி கொண்டு சிரித்தவாறு கிளம்பினான் ஆனந்த்.


ராஜ்குமார் வாசலில் பேப்பர் படித்து கொண்டிருந்தார்.


“குட் மார்னிங் மாமா” என்ற சத்தத்தில் திரும்பியவர்,


"வாங்க தம்பி! காலையிலே வந்துருக்கீங்க! இருங்க காபி போடுறேன்” என அவசரமாக ஏழ,


"இல்ல இல்ல மாமா. நேத்து சுரேஷ் வீட்லயே தூங்கிட்டேன். காபி சாப்பிட்டு தான் வரேன். ஆபிஸ்ல முக்கியமான மீட்டிங் அதான் ரிதுவை பார்த்துட்டு அப்டியே ஆபிஸ் போலாம்னு வந்தேன். எங்கே அவ?” என்றான்.


“இன்னும் எழுந்துக்கலை. பிரண்ட்ஸ் கூட என்ஜோய் பண்ணின சந்தோஷத்துல நைட் மாத்திரை கூட போடாம தூங்கிட்டா போல. நான் இப்ப தான் பார்த்தேன். நைட்டே கவனிக்காமல் விட்டுட்டேன்” என கூற,


"இவ ஏன் இவ்வளவு கேர்லெஸ்ஸா இருக்கிறா? சரி மாமா நான் போய் பார்க்கிறேன்” என்று அவள் அறைக்கு சென்றான்.


"குட் மார்னிங் அம்மு" என அவள் காதுக்குள் சொல்ல,


"அத்து இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கறேன்னே" என்றாள் தூக்கத்தில் கண்களை திறக்காமலே.


"அத்துவா! என்ன சொல்றா இவ?" என யோசித்தவன்,


"ஓஹ் ஆனந்த் ஷார்ட் பாஃர்ம்மா! அய்யோ அம்மு பின்ற டி" என கொஞ்சிக் கொண்டான்.


சிறிது நேரம் அவள் முகத்தை தூங்கும் அழகை பார்த்தவன் பின் அவளை தொந்தரவு செய்யாது காலை சாப்பிட வேண்டிய மாத்திரைகளை டேபிள் மேல் எடுத்து வைத்து விட்டு மதியம் வருவதாக மாமாவிடம் சொல்லி விட்டு கிளம்பினான்.


ஆபிஸ்ஸில் வேலைகள் இழுத்து கொண்டே போக நான்கு மணி அளவில் தான் கிளம்ப முடிந்தது.


அவ்வளவு வேளைகளிலும் அடிக்கடி அவன் மொபைலை செக் செய்தான் ரிது மெசேஜ் அனுப்புவாள் என்று.


அதுவரை எந்த மெசேஜ்ஜூம் வரவில்லை என்றதும் அவள் கோபம் புரிய, ஒரு புன்னகையுடன் கைகளில் சாவியை சூழற்றியவாறே வீட்டிற்குள் சென்றான்.


அவனுடன் அவன் வீட்டில் மனைவியாக ரிது இருக்கும் போதும் ஆபிஸ்ல் ஒன்றாக வேலை செய்யும் போதும் இல்லாத ஒரு புரிந்துணர்வும், நட்பும், காதலும், ஆசையும், அன்பும் என அனைத்தும் கடந்த சில நாட்களில் அவர்களுக்குள் அதிகமாகி இருந்தது.


தினமும் அவளுடன் செலவிடும் சில மணி நேரங்கள் வாழ்வின் வரமாக தோன்றியது.


அவர்களுக்குள் இருந்த கசப்பான நாட்களை மறக்கும் அளவுக்கு பேசினர் பேசினர் பேசிக் கொண்டே இருந்தனர்.


சுரேஷ் பேசிய பின் இன்னும் அவளை வருத்தக் கூடாது என்ற முடிவில் உறுதியானான் ஆனந்த்.


அதை பற்றி பேசி முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று தான் மதியம் வருவதாக கூறியது.


ஆனால் ஆபிஸ் வேலை பழி வாங்கிவிட அவன் அம்முவின் கோபத்தை கையாள சென்றான்.


"நீ என்னை ரொம்ப சோதிக்கிற அத்து. எப்பவாச்சும் என் பேச்சை கேட்குறீயா? உன் மெசேஜ்காக நான் முழிச்சிட்டு இருந்தா நீ நான் தூங்கின 10 நிமிஷம் கழிச்சு மெசேஜ் பண்ணுற. சரி மார்னிங் பார்த்துக்கலாம்னு பார்த்தா நான் எழுந்துக்கிறதுக்கு முன்ன வந்துட்டு போய்ட்ட!. இதுல டேப்லெட் எல்லாம் எடுத்து வச்சி அக்கறை இருக்கிற மாதிரி சீன் வேற. இன்னும் உனக்கு மதியம் ஆகலைல! வா உனக்கு இருக்கு இன்னைக்கு. நான் சொல்ற பேச்சை என்னைக்கு கேட்குறீயோ அன்னைக்கு தான் இனி உன்கிட்ட பேசுவேன் போடா" என ஹாலில் அவள் கையில் இருக்கும் கரடி பொம்மையுடன் பேசிக் கொண்டு இருந்தாள் ரிது.


காதல் தொடரும்..
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom