• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ?33

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 33


"ஹலோ மேடம்" என்ற குரலில் திரும்பியவள் சுரேஷை பார்த்ததும் மீண்டும் திரும்பி நின்று கொண்டாள்.


"ஹேய் என்ன ஆச்சு பேபி? ஏன் என் மேல கோபமாக இருக்குற? இந்த 10 நாளும் உன்கிட்ட பேசாம நான் தவிச்சுட்டு இருக்கேன் டி" என அவள் கோபத்தின் காரணம் புரியாமல் கேட்டான்.


"போங்க சுரேஷ். என்கிட்ட பேசாதீங்க. நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? ரெண்டு பேரும் சேர்ந்து தான் வீட்ல பேசி சம்மதம் வாங்கணும் நினச்சேன். ஆனால் அதுக்குள்ள என்னென்னவோ நடந்துடுச்சு. அண்ணா என்கிட்டே பேசவே மாட்றாங்க! நீங்க அடுத்த நாள் வந்து வீட்ல பேசுவீங்கனு எதிர் பார்த்தேன் ஆனால் நீங்கள் வர்ல. சும்மா போன் மட்டும் பேசினா போதுமா? எல்லாம் சரி ஆகிடுமா? " என அவள் கவலையை கூற,


"ஹேய் மக்கு ஜோ! நீ விக்ரம்க்கு தெரியும்னு சொன்னதுமே நான் உங்கள் வீட்ல பேசலாம்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்குள்ளே உங்கள் நொண்ணன் தான் மொத்தமா சொதப்பிட்டு இப்ப என் மேல கோபமா வேற இருக்கான். அது மட்டும் இல்லாம இங்க இவ்ளோ பிரச்சனைனு எனக்கு எப்படி தெரியும்? நீ என்கிட்டே சொன்னியா? எத்தனை டைம் போன் பன்னேன். லாவண்யா சொல்லலைனா இந்நேரம் இன்னும் பெரிய பிரச்சனை ஆகிருக்கும். பேச வேண்டிய நேரத்தில பேசாம இருந்துட்டு நீ என்னை சொல்றியா?" என அவன் விளக்க,


"ஸ்ஸ் ஆமால்ல! ச்ச நான் சொல்லாம உங்களுக்கு எப்படி தெரியும்? இதை நான் யோசிக்கவே இல்லை சுரேஷ். அண்ணா தப்பா நினச்சிருப்பாங்களோனு அதையே நினச்சுட்டு இருந்தேன்" என அவளே அவள் தலையில் தட்டி கொண்டு சொல்ல, ஒரு சிரிப்புடன் அவள் அருகில் நெருங்கினான் சுரேஷ்.


"இங்கே இந்த பிரச்சனை போயிட்டு இருக்கும் போது தான் ரிதுக்கும் அச்சிடேன்ட். தெரியும் தானே? நான் அவன்கூட இல்லைனா எப்படி? அன்னைக்கு நீ, லாவண்யா, விக்ரம் ஹாஸ்பிடல் வந்தப்போ கூட ரிது பத்தின கவலையில தான் எல்லாரும் பேசாம இருக்கீங்கனு நினச்சேன் . நீ ஒரு வார்த்தை சொல்லி இருந்தா அப்பவே விக்ரமை சமாளிச்சு இருப்பேன். அவன் இப்பவும் நான் முதல்ல பேசலனு தான் கோபமா சுத்திட்டு இருக்கான். உன் மேல கோபம் இருக்காது அவனுக்கு. லாவண்யா விஷயத்துல அவனை ஒதுக்கி வச்சிட்டோம்னு சார் பீலிங்ல இருக்கார். இரு இன்னைக்கு அவனை சரி பன்னிடுறேன்" என்றான் கொஞ்சமும் மாறாத சிரிப்புடன்.


அவன் நெருங்கி வந்ததோ, தன் தோளில் கை போட்டு பேசிக் கொண்டு இருந்ததோ அவள் உணரவே இல்லை..


அவள் மனம் யோசனையில் இருக்க, சுரேஷ் பேசியதை கவனத்துடன் கேட்டுக் கொண்டு இருந்தாள்.


அவள் இன்னும் இந்த உலகிற்கு வரவில்லை என்பதை தெரிந்து கொண்டான்.


இப்படி தான் அவள் மேல் கை போட்டு நிற்பதை கவனித்தபின் என்ன செய்வாள் என்ன நினைத்தவன் முகத்தில் புன்னகை வந்தது.


அவன் சத்தமாக சிரித்ததும், "ப்ச் இப்போ ஏன் சிரிக்கிறீங்க" என அவள் சலிப்புடன் கேட்க,


"இல்லை இன்னைக்கு என்ன ஃபன்க்ஸன்னு தெரியும்ல?" என கேட்டதும் தான் அவளுக்கு மொத்தமும் நினைவு வந்தது.


"ஐயையோ! ஆமா நீங்கள் எப்படி இங்கே வந்திங்க? என்னை ஏன் அவங்க அங்கே கூப்பிடல?" என கேட்டவள்


அப்போது தான் தாங்கள் இருவரும் நிற்கும் நிலையை உணர்ந்து விலக முயற்சித்தாள்.


"அச்சச்சோ ஏன் இப்படி பக்கத்துல வந்து நிக்குறீங்க? யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க?" என அவள் படபடக்க,


சத்தமாய் சிரித்தவன் "அடியேய் அரைமணி நேரமா இப்படி தான் நின்னு பேசிட்டு இருக்கோம். இப்போ மட்டும் என்னவாம்?" என அவன் அவளை விடாமல் பிடித்து அதே நிலையில் நிற்க,


"சுரேஷ் என்ன விளையாட்டு இது? வீட்ல எல்லாரும் இருக்காங்க. அண்ணனுக்கு இன்னும் கோபம் போகலை" என அவள் கூற,


"உன் அண்ணனை சமாளிக்க எனக்கு தெரியும். இப்ப நான் சொல்றதை செய் அப்ப தான் உன்னை விடுவேன். இல்ல எல்லாரும் தேடி வர்ற வரை இங்கேயே தான் இருக்கனும்" என்றான்.


பின் அவள் பார்த்த பார்வையில் "அப்படி பார்க்காத டி. உன் கன்னத்தை கடிச்சு வைக்கணும் போல இருக்கு" என அவன் கூற,


"ஓஹ் சார் இப்படி எல்லாம் பேசுவீங்களா?" என அவள் கண்களை விரித்து கேட்க,


"எனக்கு லைசென்ஸ் வரப் போகுது மேடம். எப்படி வேணாலும் பேசுவோம்".


இந்த சுரேஷ் அவளிற்கு புதிதாக தெரிந்தான். அருகில் வரவே யோசித்து பெர்மிஸ்ஸன் கேட்பவன் இவன் தானே என அவள் நினைத்ததை அவனிடமும் கூற,


"ஹாஹா அது வேற சுரேஷ். நீ விக்ரம் தங்கை. இது வேற சுரேஷ். நீ என்னோட பியான்சி" என அவன் கண்களில் காதலுடன் கூற மெய்மறந்து பார்த்தாள் ஜோ.


மெரூன் நிற சட்டையில் அதற்கு ஏற்ற பேண்ட் உடன் பார்க்க கம்பீரமாகவும் எப்பொழுதும் போல ஸ்டைலாக நிற்பவனை விழி அகற்றாமல் பார்க்க,


"என்ன! இந்த ரோஜாவுக்கு ஏத்த ஜோடியானு பார்க்குறியா?" என அவன் கேட்ட கேள்வியில் முகம் சிவந்து விழி தாழ்த்திக் கொண்டாள்.


"சரி ஓகே. அன்னைக்கு குடுத்த மாதிரி இல்லாம மெதுவா.. என் கண்ணை பார்த்து குடுத்துட்டு போ விட்டுடுறேன்".


"என்ன குடுக்கணும்?" என அவள் தெரியாதது போல் கேட்க,


"இரு உன் அண்ணன்கிட்ட கேட்கலாம்" என அவன் உள்ளே திரும்ப, அவன் விளையாட்டு தெரிந்தும் அன்று போல அவன் கன்னத்தில் சத்தம் இல்லாமல் முத்தம் கொடுத்துவிட்டு உள்ளே ஓட முயற்சிக்க, அவன் கைகளில் சிக்கி கொண்டது இவள் கை.


"ஒருமுறை மிஸ் பண்ணிட்டேன் அதுக்காக எப்பவும் மிஸ் பண்ணுவேனா?" என அவளை பார்த்து கண்ணடித்து கூற,


"ஐயோ விடுங்க சுரேஷ். நான் போனும்" என்று முகம் சிவந்தவாறே கூற,


அவள் எதிர்பார்க்காமல் அவளின் கையை பிடித்து இழுத்து அவன் மேல் விழ வைத்தவன் அவள் கொடுத்ததை இரண்டாக இரண்டு கன்னங்களிலும் கொடுத்துவிட்டு அவளுக்கு முன் உள்ளே சென்று விட்டான்.


சிரிப்புடன் ஹாலிற்கு வந்தவன் கண்களில் விக்ரம் பட, ஆனந்த் தூரமாக போன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.


அவனை கலாய்க்கலாம் என நினைத்தவன் பின் அவன் அருகில் சென்று அமர்ந்தான்.


அவன் சிரிப்புடன் வந்தது மகிழ்ச்சி தந்தாலும் அருகில் வந்ததும் விக்ரம் எழுந்து செல்ல முயல,


"அட உக்காரு டா! சும்மா சீன் போட்டுகிட்டு" என சுரேஷ் அவனை பிடித்து அமர வைக்க அப்போதும் முறைத்தவனை பார்த்து,


"ஏன்டா இப்படி முறைக்கிற? எனக்கு சிரிப்பா வருது" என்று சொல்லி சிரிக்க இன்னும் முறைத்தான் விக்ரம்.


"அட ஏன்டா? என்ன கோபம் உனக்கு? என்னை அடிக்கணுமா? அடி. இல்ல திட்டனுமா? திட்டு. சும்மா முறச்சிட்டே இருந்தா? என்கிட்ட பேசாம எவ்வளவு நாள் இருப்ப?" என்றதும் விக்ரமிற்கு கோபம் போய் இனம் புரியாத உணர்வு வந்தது.


"ஏன் இவ்வளவு பேசுறவன் இன்னைக்கு தான் பேசணும்னு தோணிச்சா?" என விக்ரம் கேட்க,


"ஓஹ் அதுவா! இல்ல முறைக்கும் போது நீ அழகா இருந்தியா. அதான் சைட் அடிச்சுட்டு இருந்தேன்" என சுரேஷ் கூற அதை கேட்டு சிரித்து கொண்டே வந்தான் ஆனந்த்.


"என்ன டா சமாதானம் ஆகிட்டீயா? என ஆனந்த் விக்ரமை கேட்க,


"தோ பாருடா! இவன் இந்த வீட்டு மாப்பிள்ளையா இருக்கலாம். அதுக்காக என்கிட்ட மரியாதை எல்லாம் கிடைக்காது. சொல்லி வை" என ஆனந்திடம் கூறினான்.


"ஆமா நீ மரியாதை கொடுக்கலைனு தான் நான் அழுறேன் பாரு" என சுரேஷ் கிண்டல் செய்ய மனம் இலகுவானது அங்கிருந்த மூவர்க்கும்.


"உன்னோட வருத்தம் எனக்கு புரியுது. பட் நான் எதுவும் பர்பஸ்சா பண்ணல டா. உனக்கு நல்லது நடக்கணும்னு தான் பன்னினேன். உன்கிட்ட மெதுவா சொல்லலாம் நினச்சேன்" என அவன் நினைத்ததை கூறினான் சுரேஷ்.


"மெதுவானா எப்போ நான் கிழவனான அப்பறம்மா?"


"ப்ளீஸ் மச்சி புரிஞ்சிக்கோ. லாவண்யா பத்தி இப்ப உனக்கு தெரிஞ்சிருக்கும். ஆனால் உனக்கு தெரியுறதுக்கு முன்னாடி எனக்கு தெரிஞ்ச அப்போ நல்ல பொண்ணை நீ மிஸ் பண்ணிடுவியோனு தான் எல்லாம் அவசரமா பிளான் பன்னோம் டா. உன்னை ஏன் டா ஒதுக்கனும்? நான் ஆனந்த்க்கு கூட தான் சொல்லல. அப்போ அது உன் பர்சனல்னு நினைச்சதால தானே?" என்று பேசிக் கொண்டே போக,


"டேய் அடங்கு. எனக்கு அதெல்லாம் பிரச்சனை இல்லை. இவ்வளவு நாள் ஆகியும் சொல்லாம இருந்ததை விட, இது எனக்கு தெரிஞ்ச அப்பறம் நீ பேசாமல் இருந்தது தான் எனக்கு கோபம்" என்று நிஜ வருத்தத்துடன் கூறினான்.


"ஏன்டா! அண்ணன் தங்கை எல்லாம் ஒரே மாதிரி லூசா இருக்கீங்க!" என்றதும் விக்ரம் முறைத்தான்.


அவன் முறைப்பில், "அய்யோ மறுபடியும் முதலில் இருந்தா! என்னால முடியாது டா சாமி" என ஆனந்த் கூற மூவரும் சிரித்துவிட்டனர்.


ஏய் நண்பனே, கோபம் கொள்ளாதே,
காதலை தூரம் தள்ளாதே,
பொய் கோபமா சும்மா போகாதே,
வாலிபம் மீண்டும் சிக்காதே,


நேற்று இன்றில்லை அறிந்து கொள்ளு,
நாளை உன்னை ஆளும் புரிந்து கொள்ளு,
இந்த காதலுக்கும் நட்பு உண்டு, உணர்ந்து கொள்ளு..



மதிய உணவையும் அங்கேயே முடித்து விட்டு அடுத்த மாதத்தில் திருமண தேதியும் குறித்து விட்டே கிளம்பினர்.


மூன்று மணி அளவில் கிளம்பியவர்கள் இரவு வரை சுரேஷ் வீட்டில் இருந்து விட்டு அதன் பின்னரே கிளம்பினர்.


ஆனந்த் மட்டும் சுரேஷ் உடன் தங்கி கொள்வதாக சொல்லி அனைவரையும் வீட்டில் இறக்கி விட்டு மீண்டும் சுரேஷ் உடன் இணைந்து கொண்டான்.


சுரேஷ் வீட்டிற்கு ஆனந்த் வரவும் சுரேஷ் வீட்டை பூட்டி விட்டு வரவும் சரியாக இருந்தது.


“போலாம் டா” என சுரேஷ் ஆனந்த் காரில் ஏறிக் கொள்ள கார் சுரேஷ் கம்பெனி குடோனிற்கு பறந்தது.


காதல் தொடரும்..
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom