• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 32

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 32


இந்த நேரத்தில் ஆனந்தை எதிர்பார்க்கா சுரேஷ் பதட்டத்துடன் எழுந்தவன், "என்னாச்சு ஆனந்த்? இப்போதானே வந்தேன். எனி ப்ரோப்லேம்?" என பதற,


"ஹேய் கூல் கூல் சுரேஷ். நான் சும்மா தான் வந்தேன்" என்றான்.


பதட்டம் தனிந்து உள்ளே அழைத்து சென்றான். காபி போடவா என்றவனிடம் வேண்டாம் என மறுத்து அமர்ந்து கொண்டான்.


"என்ன டா! ரிதுவை அங்கே விட்டது கவலையா?" என சுரேஷ் கேட்க,


"இவனுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது. அதை மறந்து தன்னை பற்றியே நினைக்கிறானே? என்ன மாதிரியான நட்பு இவனுடையது?" என்று நினைத்தவன் பெருமையும் கொண்டான்.


"அதெல்லாம் எதுவுமில்ல! உனக்கென்ன பிரச்சனை அதை சொல்லு".


"எனக்கென்ன டா? நான் ஜாலியா தானே இருக்கேன்" என்றதும், அவனை முறைத்தவன்


"ஜோதி கூட எதுவும் சண்டையா?" என்றான் தடாலடியாய்.


"ஆ" வென வாய் பிளந்து சுரேஷ் நிற்க, ஆனந்த் சிரித்து அவனருகில் வந்தான்.


"உனக்கு எப்படி டா தெரியும்? ரிது ஹாஸ்பிடல்ல இருக்கும் போது தானே பிரச்சனை? உனக்கு யார் அப்ப இதை சொன்னா?" என சுரேஷ் படபடக்க, குழம்பினான் ஆனந்த்.


"என்ன டா சொல்ற? ரிது ஹாஸ்பிடலில் இருக்கும் போதா? என்ன பிரச்சனை? ஏன் என்கிட்ட சொல்லலை?" என அடுக்க, சுரேஷிற்கு ஏதோ புரிவதும் புரியாதது போலவும் இருந்தது.


"முதல்ல உனக்கு எப்படி தெரியும்னு சொல்லு " என சுரேஷ் கூற,


அன்று போனில் 'ஜோ' பெயரை பார்த்தது, ரிது கூறியது என அனைத்தையும் கூறினான்.


விக்ரமிற்கு தெரியும் என்று சொல்லவா வேண்டாமா என யோசிக்க,


சுரேஷ் "அவ்வளவு தானா? " என்றதும்


"விக்ரம்க்கு கூட தெரியும்" என்று மட்டும் கூறினான்.


இப்போது வியப்பது சுரேஷ் முறையானது. 'அனைவருக்கும் முன்பே தெரியுமா? தெரிந்தே தன்னிடம் சகஜமாக பேசினார்களா? இவர்கள் நட்பு கிடைக்க நான் என்ன செய்தேன்? விக்ரம் தன்னை அடித்தாலும் வாங்கி கொள்ள வேண்டும்' என நினைத்து கொண்டான். (அடித்தாலும் பரவாயில்லை ஜோதியை விடுவதில்லை போல )


பின் அன்று சுரேஷ் வீட்டில் இருந்து வந்து விட்டு போன பிறகு விக்ரம் வீட்டில் நடந்தது, லாவண்யா பற்றிய உண்மை என அனைத்தையும் கூறினான் சுரேஷ். விக்ரம் ஜோதி பேசாததையும் கூட.


ஆனந்திற்கும் ஆச்சர்யம் தான். கண் எட்டும் தூரத்தில் இல்லாத போதும் கூட இவன் நண்பனின் நலனை தானே விரும்பி இருக்கிறான்!


ரிதுவிற்கு கூட புரிந்து இருக்கிறது தானே. ஏன் நான் மட்டும் இப்படி கண்டதே கோலம் கொண்டதே சாட்சி ஆனேன் என மீண்டும் கவலை கொண்டான்.


பின் சுரேஷை நினைத்தவன் இதற்கு நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டும் என எண்ணி செயல்பட துவங்கினான்.


"சுரேஷ் இன்னைக்கு திங்கள்கிழமை. நாம நாளன்னைக்கு அதாவது புதன் கிழமை ஜோதியை பொண்ணு பார்க்க போறோம். நான், அம்மா, அப்பா, ரிது, மாமா எல்லாரும் போறோம். கண்டிப்பா இதுல விக்ரம் லாவண்யா யாருக்கும் விருப்பம் இல்லாமல் இருக்காது. விக்ரம் அம்மா ஏதாவது சொல்லுவாங்களோனு கவலைப்பட வேண்டாம். அவங்களுக்கும் உன்னை பத்தி தெரியும் நல்லா. சோ நாம போறோம். அண்ட் இதை விக்ரம் ஜோதி லாவண்யா யார்கிட்டயும் சொல்ல வேண்டாம் ஓகே. இல்ல இல்ல சொல்ல வேண்டாம் இல்ல சொல்லக்கூடாது ஓகே" என்றவனை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் சுரேஷ்.


பின் தெளிந்து, "இல்ல ஆனந்த். கொஞ்ச நாள் போகட்டும். அங்கே எல்லாரும் என்ன நினைக்குறாங்கனு தெரியல. சோ கொஞ்சம் வெயிட் செய்வோம்" என்றான்.


"ப்ளீஸ் சுரேஷ் நான் சொல்றத கேளு. நீ ஏன் தயங்குறனு எனக்கு புரியுது. அப்போ நீ என்னோட அம்மா அப்பாவை பிரிச்சு பார்க்கிற அப்படித்தானே?" என்று கேட்பவனிடம் என்ன சொல்லிவிட முடியும் சுரேஷால்! சிரிப்புடன் சம்மதமாக தலையசைத்தான்.


அதன்பின் சுரேஷ் ஆனந்திற்கு சில பல அறிவுரையுடன் ஆலோசனையும் வழங்கினான்.


அவனுக்கு தெரியும் ரிதுவின் பிரிவைத் தவிர ஆனந்திற்கு வேறு என்ன கவலை இருக்கப் போகிறது.


அடுத்த நாள் விக்ரம் தன் வீட்டில் வந்து நிற்பான் என ஆனந்த் நினைக்கவில்லை.


சரி இனி அவனிடம் சொல்லி விடலாம் என அவன் நினைக்க விக்ரமும் அதைத்தான் கூறினான்.


"உனக்கு சுரேஷ் மேல எந்த கோபமும் இல்லை தானே?" என ஆனந்த் கேட்க, லாவண்யாவிடம் கூறிய "வருத்தம் மட்டுமே" என்ற பதிலையே இவனுக்கும் கூறினான்.


பின் சுரேஷிற்கு அழைத்து விக்ரம் கூறியதை ஆனந்த் கூற சுரேஷ் ஒரு புன்சிரிப்புடன் கேட்டுக்கொண்டான்.


விக்ரமிடம் பேசிவிட்டு ஆனந்த் ரிதுவை பார்க்க கிளம்பி சென்றான்.


அவள் கோபம் போல் முகத்தை வைத்துக்கொள்ள அது குழந்தையின் கோபமாகவே ஆனந்திற்கு தெரிந்தது.


பின் அவளுடன் தோட்டத்தில் உலாவியவன் அவளை சமாதானம் செய்து, சுரேஷ் தன்னிடம் கூறியதையும் விக்ரம் தன்னிடம் கூறியதையும் சொன்னவன் கண்டிப்பாக நாளை நாம் செல்கிறோம் என்றான்.


தோழியின் திருமணமாயிற்றே! ரிதுவிற்கும் சந்தோஷம்தான். ஏனோ தனக்கு இனி எல்லாம் நல்லதாகவே அமையும் என அவளுக்குத் தோன்றியது.


அதை அவனிடமும் சொல்ல அவனும் அதைப் புன்னகையுடன் கேட்டுக்கொண்டான்.


ஆனந்த் அம்மா அப்பாவிடம் சொன்னதும் அவர்களுக்கும் இதில் முழு மகிழ்ச்சி.


பெண் பார்க்க கொண்டு போக வேண்டிய பூ பழம் தொடங்கி ஏற்பாடு சிறப்பாக நடந்தது.


காலை சீக்கிரமே எழுந்து கிளம்பி ஆனந்த் வெளியே வரும்போது சுகன்யா ரகு கூட தயாராக இருந்தனர்.


நேரே ரிது வீட்டிற்கு சென்று அவளையும் ராஜ்குமாரையும் அழைத்து கொண்டு சுரேஷ் வீட்டில் இறங்கினர்.


சுரேஷ் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. அவனை தவிர அனைத்தும் ரெடி என்ற நிலை தான். எல்லாம் ஆனந்த் வீட்டினர் உபயம்.


"என்னடா இன்னும் கிளம்பலையா நீ? டைம் ஆச்சு மச்சி. போ போ சீக்கிரமா ரெடி ஆகு" என ஆனந்த் விரட்ட, சுகன்யா அவனிற்கு புது துணிகளை கொடுத்தார்.


"ம்மா! பொண்ணு பார்க்க ஏன் மா புது டிரஸ்லாம்?" என்க,


"டேய் உனக்கெல்லாம் பொண்ணு பார்க்குற ஃபன்க்சனே ஓவர் டா. போ போ! உன் அம்மாகிட்ட இப்படி கேட்பியா?" என்ற கேள்வியில் அமைதியாக உள்ளே சென்றான்.


பெற்றோர் இல்லை என்ற நினைவே அவனுக்கு வரக் கூடாது என ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்தனர்.


"இதெல்லாம் டூ மச் டா " என அவன் கூறியதை காதில் வாங்கினால் தானே!


அனைவரும் காரில் சென்று இறங்க விக்ரம், விக்ரம் அம்மா, லாவண்யா, விக்ரம் அப்பா அனைவரும் வரவேற்றனர்.


விக்ரம் சுரேஷை பார்த்ததும் முறைத்து விட்டு திரும்பி கொள்ள சுரேஷ் சிரிப்புடன் உள்ளே சென்றான்.


சம்பிரதாய முறைப்படி அங்கே பெண் பார்க்கும் படலம் சிறப்பாக அரங்கேறியது.


"சுரேஷ் உங்க அளவுக்கு இல்லைனாலும் எங்க பொண்ணுக்குனு நாங்க தனியாக சேர்த்தது எல்லாமே அவளுக்கு தான். அதில் நாங்க எந்த குறையும் வைக்க மாட்டோம்"என முழு பெண் வீட்டாராக விக்ரம் அம்மா பேச,


"அம்மா நீங்க இப்படி பேசுறது நிஜமாவே கஷ்டமா இருக்கு. ஆனந்த் சொன்னதுக்காக தான் இந்த பன்ச்ஸன்கு ஒத்துக்கிட்டேன். நீங்க பேசுறது என்னை தள்ளி வச்ச மாதிரி தோணுது. நீங்க எப்பவும் மாதிரி தான் இருக்கனும். நானும் இந்த வீட்டுக்கு நல்ல மகனா இருப்பேன்" என அவன் கடைசி வார்த்தையை அழுத்தமாக விக்ரமை பார்த்து கூற, அப்போதும் அவன் முறைத்து கொண்டு தான் இருந்தான்.


லாவண்யா சந்தோசத்தில் அங்கேயும் இங்கேயுமாக ஓடி வேலை பார்த்து கொண்டு இருந்தாள்.


விக்ரமிடம் பேசிய பின் தான் அவள் முழு சந்தோசத்தை அடைந்திருந்தாள்.


"டேய் என்ன டா பொண்ணு பார்க்குறத தவிர எல்லாம் நடக்குது?" என சுரேஷ் ஆனந்த் காதை கடிக்க,


"நீ தானே இந்த பார்மாலிட்டிஸ் எல்லாம் வேணாம் சொன்ன? அதான் அதை மட்டும் இன்னைக்கு கட் பண்ணிட்டோம்" என அவனும் வம்பு செய்ய,


"டேய்! டேய்! 10 நாள் ஆச்சி டா அவகிட்ட பேசி. என்ன மாதிரி மைண்ட் செட்ல இருக்கானு கூட தெரியல. உங்க எல்லாருக்கும் புண்ணியமா போகும்! தயவு செஞ்சு அவளை பார்க்க விடுங்க" என்றான்.


"அம்மா ஜோதி எங்கே? ஆல்ரெடி தெரிஞ்சவங்க தானே! அவங்க வேணா தனியாக பேசட்டுமே?" என ஆனந்த் சுரேஷிற்கு உதவிக்கு வர விக்ரம் ஆனந்தை முறைத்தான்.


"இவன் வேற என்னவோ வில்லன பார்க்குற மாதிரி முறைச்சுகிட்டு.." என நினைத்த சுரேஷ் விக்ரமை கடுப்பேத்த என எழுந்து ஹாலில் இருந்து வீட்டிற்குள் செல்ல அனைவரும் சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தனர்.


விக்ரம் அம்மாவிற்கு இது பிடித்தம் இல்லை என்றாலும் சுரேஷை முன் இருந்தே தெரியும் என்றதாலும், இப்போது அவன் பேசியதும் அவருக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி இருந்ததால் அவரும் சிரித்து விட்டு சமையல் அறைக்கு சென்று விட்டார்.


விக்ரம் மட்டும், 'மவனே மாப்பிள்ளை கெத்தை என்கிட்டயே காட்டுறியா? உனக்கு இருக்கு டா' என்ன நினைத்து கொண்டு ஆனந்த் உடன் நின்று கொண்டான்.


லாவண்யா ரிது இருவரும் கதை அளந்தவாறே சமையலறையில் விக்ரம் அம்மாவிற்கும் சுகன்யாவிற்கும் உதவி செய்தனர்.


விக்ரம் அப்பா, ராஜ்குமார், ரகு அனைவரும் பேசிக் கொண்டு இருந்தனர்.


எப்போதும் வந்து செல்லும் வீடு என்ற தைரியத்தில் எழுந்து வந்தவன் அவள் அறை தெரிந்தும் அங்கு செல்லாமல் வீட்டின் பின்புறம் சென்றான் சுரேஷ்.


அங்கு இருந்த பல வண்ண ரோஜாக்களுடன் அடர் சிவப்பு நிற பட்டில் முழு அலங்காரத்துடன் கிணற்றில் சாய்ந்து நின்றிருந்தாள் அவனின் ஜோ.


காதல் தொடரும்..
 

Baby

Active member
Member
பார்றா... ஹீரோ ஆனந்தை விட சுரேஷ் அண்ட் ஜோ ஜோடி ஸ்கோர் பன்றாங்களே😍😍😍😍😍
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom