• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 30

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 30


விடிந்து 10 மணி அளவில் ரிது கண்விழித்ததாக நர்ஸ் வெளியே வந்து கூறி ஒவ்வொருவராக பார்த்து வரும்படி கூறினார்.


அனைவரும் ஆனந்தை பார்க்க அவன் தலையை இடது வலமாக அசைத்தான்.


அவனை வற்புறுத்தாது ராஜ்குமார் மற்றும் ரகு உள்ளே செல்ல சிறிது நேரத்தில் நிம்மதியுடன் வெளியே வந்தார் ராஜ்குமார்.


சுகன்யா ஜோதியுடன் அடுத்தாக செல்ல அப்போதும் உள்ளே வராத ஆனந்தை எண்ணிக் கொண்டாள் ரிது.


அதிகம் தொந்தரவு செய்யாது நல விசாரிப்போடு அனைவரும் வெளியேறி விட ஆனந்த் மனதில் கலக்கத்துடன் அந்த அறையில் நுழைந்தான் இறுதியாக.


வாசலில் நின்று அவளை பார்க்க அவள் கண்களும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தது.


தலையில் இருந்த கட்டு அவளை தலையசைக்க கூட விடவில்லை.


அவள் அருகே சென்றவன் அதே சேரை இழுத்து அவள் அருகில் போட்டு கொண்டு அமர்ந்து அவள் கைகளை பிடித்து கொண்டு மெத்தையில் தலை கவிழ்த்தான்.


மிகவும் முயன்று அவள் எதுவோ பேசவர, கைகளிள் அழுத்தம் கொடுத்தவன் அவளை பேச விடாது அதே மோன நிலையைத் தொடர்ந்தான்.


பின் சிறிது நேரத்தில் எழுந்தவன் அவளை பார்த்து மெலிதாய் சிரிக்க அவளும் சிரித்தாள்.


அவள் தலையில் இருந்த கட்டில் கை வைத்தவன் மெதுவாக வருட "ஸ்ஸ்ஸ்" என்ற முனகல் அவள் வலியை உணர்த்தியது.


"டேக் ரெஸ்ட் டா" என்ற வார்த்தையுடன் செல்ல இருந்தவன் கைகளை பிடித்துக் கொண்டாள்.


அவள் முகம் பார்த்தவனிடம் கண்களால் வா என்று அழைக்க அவள் முகம் அருகே சென்றவன் முகத்தில் ஒரு முத்தம் வைத்தாள்.


இருவருக்குமான முதல் முத்தம். அவளுக்கு எப்படியோ அவனுக்கு கண்களில் இருந்து அந்த கணமே நீர் வந்து விட்டது.


முகத்தை அவளிடம் மறைத்து உடனே வெளியேறிவிட்டான்.


அடுத்து ஒரு வாரம் அவள் ஹாஸ்பிடல் வாசம் தான். பகலில் மாறி மாறி இருந்தாலும் இரவில் ஆனந்த் மட்டுமே அவளை பார்த்துக் கொண்டான்.


அவளிடம் சாதாரணமாக பேசினான். காலையில் மாத்திரை கொடுக்கும் வரை அருகில் இருப்பவன் பின் சென்று விட்டு இருட்டும் முன் இரவு மாத்திரை கொடுக்க வந்து விடுவான்.


மதியம் மட்டும் அன்னையிடம் பலநூறு முறை பத்திரம் சொல்லி போன் செய்வான்.


"இவ்வளவு அக்கறை இருக்கிறவன் இப்ப ஆபீஸ் போகலனு யார் கேட்டா? நூறு தரம் போன் பன்றான். போனுக்கு வாய் இருந்தா அழுத்திருக்கும்" என சுகன்யா கிண்டல் பேச ரிது சிரிப்பாள்.


ராஜ்குமாரை சுகன்யா ஹாஸ்பிடலில் தங்க அனுமதிக்கவே இல்லை.


"உங்க உடம்பை பார்த்துக்கோங்க அண்ணா. ரிதுவுக்கு குழந்தை பொறந்ததும் அதை பார்த்துக்க உங்களுக்கு தெம்பு வேண்டாம்? இவ எனக்கு மக அதுக்கு அப்புறம் தான் மருமக" என்றுவிட, தினமும் வந்து பார்த்துவிட்டு செல்லுவார் ராஜ்குமார்.


அன்று சீக்கிரம் மாலையே ஆனந்த் வந்துவிட அவனிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினார் சுகன்யா.


"ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?" ரிது.


"வேலை அதிகம் டா" ஆனந்த்.


"அப்ப வீட்டுல ரெஸ்ட் எடுக்கலாம்ல" என்றவளுக்கு எதுவும் சொல்லாமல் எப்போதும் போல அவள் கைகளை பிடித்துக் கொண்டு அவள் முகம் அருகே தலை வைத்து படுத்துக் கொண்டான்.


இந்த ஒரு வார பழக்கம் இது.


மதியம் உணவு மட்டும் எப்போதும் விக்ரம் வீட்டில் இருந்து தான். சுகன்யா மறுத்தும் விக்ரம் அன்னை கேட்க மாட்டார். ரிது எனக்கு இன்னொரு மக என்றுவிட அதற்கு மேல் மறுக்க முடியுமா?


ஒரு வாரம் முடிந்து அன்று வீட்டிற்கு செல்லலாம் என டாக்டர் கூற ஆனந்த் கூடவே இருந்தான்.


அவன் முகம் சரி இல்லை என்பதை முந்தய நாள் இரவே ரிது கண்டு கொண்டு அவனிடம் கேட்க அதற்கும் ஒரு ஏக்க பார்வையுடன் மெல்லிய புன்னகை மட்டுமே.


சரி வீட்டில் போய் கேட்டு கொள்ளலாம் என ரிதுவும் விட்டுவிட்டாள்.


ஆனந்த் பில் செட்டில் செய்து அறைக்கு வர அங்கு சுகன்யா அனைத்தையும் எடுத்து பேக் செய்து வைத்தார்.


"ஆனந்த் இதை எல்லாம் கார்க்கு எடுத்துட்டு போ. நான் டாக்டரைபார்த்துட்டு ரிதுவை கூட்டிட்டு வரேன் " என சுகன்யா கூற,


"நீங்கள் டாக்டரை பார்த்துட்டு வாங்க மா" என்றவன் சுவரில் ஒரு காலை ஊன்றி கைகளை கட்டி நின்று விட அவனை ஒரு பார்வை பார்த்தவர் வெளியே சென்று விட்டார்.


கண்மூடி அப்படியே சாய்ந்து நின்றவன் அருகே மெல்ல நடந்து ரிது வர ஓசை கேட்டும் கண் விழிக்கவில்லை அவன்.


அவன் கைகளை ரிது தொட கண் விழித்தவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தி, "நடக்க முடியும் தானே? தலை பாரமா இருக்கா? பார்த்து இருந்துக்கோ" என்று கூற எதற்கு கூறுகிறான் என்று தெரியாமலே தலை அசைத்தாள்.


முகத்தில் இருந்து கைகளை எடுத்தவன் மெதுவாக மிகவும் மிருதுவாக அவளுக்கு வலிக்குமோ என்று பூவை அணைப்பது போல அனைத்தவன் நெற்றியில் முத்தமிட்டு விருப்பமே இல்லாமல் சில நிமிடங்கள் கழித்தே விடுவித்தான்.


"அம்மு! ஐம் சாரி டா. உனக்கு எதுவும் ஆக கூடாது. நீ நிம்மதியா இருக்கனும்" இன்னும் என்னென்னவோ சொல்ல,


ரிதுவிற்கு அந்த கனவு இப்போது ஞாபகம் வந்து கண்ணீர் சேர்ந்தது. 'நான் போய்டுறேன் அம்மு. நான் உனக்கு வேண்டாம்'.


ஆம் மயக்கத்தில் இருந்தவளுக்கு ஆனந்த் பேசியது பாதித்திருந்தது. அதை கனவு என்றே இன்றளவும் நினைத்து இருந்தாள்.


அவள் கண்ணீரை துடைத்தவன் அவள் கைகளை பிடித்து கொண்டு காருக்கு அழைத்து செல்ல சில நிமிடங்களில் கையில் பைகளுடன் வந்தார் சுகன்யா. அவரை அழைத்து கொண்டு கிளம்பினான்.


"ஏன்டா இந்த ரோட்ல வர்ற?" கார் வேறு திசையில் செல்வதை உணர்ந்து சுகன்யா கேட்க ரிதுவும் புருவம் சுருங்க அவன் முகத்தை பார்த்தாள்.


ஏதோ புரிவது போல அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்.


சில நொடிகளிலேயே அந்த பாதையின் முடிவு எங்கே என்பதை தெரிந்து கொண்டவள் முகம் இறுகியது.


சுகன்யா கேள்விக்கு பதில் சொல்லாமல் ஆனந்த் நேராக ரிது வீட்டு வாசலில் நிறுத்தினான்.


அவனையே பார்த்து கொண்டிருந்த ரிதுவிடம் இறங்கு என்றதும் அவனை பார்த்து கொண்டே இறங்கினாள்.


இப்போது 'அது கனவாக இருக்காதோ' என்று தான் தோன்றியது.


வாசலில் ஆரத்தி தட்டுடன் ஜோதி நிற்க லாவண்யா விக்ரம், சுரேஷ், ராஜ் குமார் என அனைவரும் அங்கே நின்றனர்.


ஆரத்தி எடுத்து அவளை உள்ளே அழைத்து செல்ல அனைவரும் ஹாலில் அமர்ந்தனர்.


சுகன்யா ஆனந்தை கேள்வியாக நோக்க அவர் பார்வையை தவிர்த்தான் அவன்.


இப்போது அவருக்கும் கூட அவன் எண்ணம் புரிந்து விட்டதோ! ஆனாலும் அமைதி காத்தார்.


அனைவருக்கும் லாவண்யா காபி கொடுத்து விட்டு, "ரிது உன் ரூம் மேல இருந்தா மாதிரியே கீழே அந்த லாஸ்ட்ல இருக்கு. கொஞ்ச நாள் மாடிக்கு போக வேணாம். அப்புறம் சமையலுக்கு கூட உங்க ஆபீஸ்ல வேலை பாக்குற லட்சுமி அக்கா வந்துடுவாங்க. நீ எந்த வேலையும் பார்க்க வேண்டாம். நல்லா ரெஸ்ட் எடு" என்று கூறினாள்.


சுகன்யாவிற்கு இப்போது அனைத்தும் புரிந்தாலும் அமைதியாக இருந்தார்.


சுரேஷ் மூலம் அந்த ஒரு வாரத்தில் ரிது வீட்டில் சில மாற்றத்தை கொண்டு வந்து இருந்தான் ஆனந்த்.


மாடியில் இருந்த அவள் அறை போலவே கீழே ஒரு அறையை ரெடி செய்தவன் கூடுதலாக ஒரு AC யும் மாட்டினான். பின் அவள் நடைப்பயில வீட்டிற்கு பின்னால் சிறு தோட்டத்தையும் ரெடி செய்தான்.


சமையலுக்கும் ஆளை ஏற்பாடு செய்து விட்டான். ஆனாலும் ஏதோ குறை என்று தோன்றியது.


ஒரு வாரமும் பகலில் அவளை கவனிக்க முடியாமல் போனதிற்க்கு இதுவே காரணம்.


ரிதுவிற்கு இதை அனைத்தையும் பார்த்ததும் தெரிந்து விட்டது அன்று அவள் கண்டது கனவு இல்லை என்று.


பின் சுரேஷ் கிளம்பிவிட விக்ரம் லாவண்யாவுடன் கிளம்பினான். ஜோதி அங்கே இருந்து விட்டு மாலை வருவதாக சொல்லி விட்டாள்.


அங்கு இருந்த வரையில் சுரேஷ் விக்ரம் லாவண்யா ஜோதி யாரும் ஒருவர்க்கு ஒருவர் பேசவில்லை என்பதை ஆனந்த் கவனிக்கவில்லை. அவன் நினைவு முழுதும் ரிது மட்டுமே.


சுரேஷிடம் விக்ரம் பேசவே இல்லை. கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் வந்தது.


அவன் தங்கை ஜோதி அவனை விடவும் ஒரு படி மேல் சென்று அவன் நிற்கும் இடத்தில் கூட அவள் நிற்கவில்லை.


மனம் என்னவோ செய்யவும் அங்கிருந்து உடனே கிளம்பிவிட்டான் சுரேஷ்.


ரிது ஜோதியுடன் தோட்டத்திற்கு செல்ல இங்கே சுகன்யா, ராஜ்குமார், ஆனந்த் மட்டும் இருந்தனர்.


"மாமா உங்களுக்கு ஒன்னும் கஷ்டம் இல்லையே" ஆனந்த் கேட்க,


"அவளுக்காக நீங்க செய்யறதை பார்க்கும் போது சந்தோசமா இருக்கு தம்பி. கொஞ்ச நாள் தானே. அவ சரியாகும் வரை இங்கேயே இருக்கட்டும்" என அவர் கூற சுகன்யா ஆனந்தை முறைத்தாள்.


சுகன்யா விடைபெற்று கிளம்பி காருக்கு செல்ல போக,


"நீங்க கார்ல இருங்கம்மா! இப்ப வந்துடுறேன்" என்று ஆனந்த் சொல்லவும்,


அருகில் யாரும் இல்லை என்று உறுதி படுத்திக்கொண்ட சுகன்யா "ஏன் அதான் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டல்ல! அப்புறம் என்ன? கடைசியா குட் பை சொல்ல போறியா? என்ற கேள்வியில் துடித்து திரும்பினான்.


'இந்த வார்த்தையையே தாங்க முடியாத நீ இந்த முடிவை எடுத்திருக்க கூடாது' என்று அவனை பார்த்தவர் வாசலை நோக்கி நடக்க, கண்களை மூடி திறந்து தன்னை உலுக்கிக் கொண்டவன் ரிது அறை நோக்கி சென்றான்.


அவன் வருவான் என தெரிந்தது போலவே அமர்ந்திருந்தாள் ரிது.


வந்தவன் எதுவும் பேசாமல் அவளருகில் அமர இதுவரை இருந்த கோபத்தை இப்போது அவனிடமே காட்டினாள்.


காதல் தொடரும்..
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom