• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 29

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 29


லாரி தன் காரின் வலது புறம் திரும்பிய பின்தான் ஆனந்திற்கு மூச்சே வந்தது.


மூச்சை இழுத்து விட்டவன் முகத்தை அழுந்த துடைத்து கைவிரல்களை மெதுவாக முகத்தில் இருந்து எடுத்து கொண்டிருக்க அதே நேரம் தன் கார் முன் விழுந்திருந்தாள் ரிது.


"ரிது... " என்ற அலறலுடன் அவன் காரில் இருந்து இறங்க அங்கே பெரும் கூட்டமே கூடியது.


தலையில் இருந்து ரத்தம் வடிய ஆனந்த் ஓடி வருவதை பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணீர் மறைத்த கண்களுடன் ரிது.


அவளருகே வந்தவன் அவளை மடியில் அள்ளிக் கொண்டான்.


அவன் அருகில் லாரி வரும்போது வேலை நிறுத்தம் செய்த மூளை தன்னவளுக்கு என்றதும் துரிதமாக வேலை செய்தது.


அவளை தூக்கி கொண்டு கார் நோக்கி ஓடினான்.


"ஐ லவ் யூ ஆனந்த்" என அவள் சக்தி அனைத்தையும் திரட்டி கூறியவள் அவன் தோளிலேயே சாய்ந்து கண் மூடி இருந்தாள்.


அவன் நெஞ்சை யாரோ கத்தி கொண்டு கீறிய வழி. கண்களில் கண்ணீர் வடிய காரில் அவளை சேர்த்தான்.


பூ விற்ற பாட்டி அங்கு கூடி நின்றவர்களை பார்த்து, "யாராவது அந்த வண்டியை எடுங்கலேய்" என கத்த ஒருவன் வேகமாக முன் வந்து டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஓட்டினான்.


அவளை அனைத்து கொண்டு அமர்ந்தவனோ "ஏய்ய்ய்! ஏன்டீ இப்படி பண்ணின? என்னை நிம்மதியா இருக்கவே விடமாட்டல்ல? நீ என்னை பத்தி நினைக்கவே மாட்டியாடீ?" என அழ ஆரம்பித்தவன் அவள் முகத்தை கைகளால் தாங்கி புலம்பிக் கொண்டே இருந்தான் ஹாஸ்பிடல் வரும்வரை.


ஹாஸ்பிடல் ஐசீயூவில் அவளை அழைத்து செல்ல அந்த வாசலில் முகத்தை கைகளில் புதைத்து தரையில் மடங்கினான்.


அவன் கண்களில் கண்ணீர் வற்றாத ஆறாக ஓடிக் கொண்டிருந்தது.


அவன் இதயம் துடிப்பது வெளியே கேட்டது. காரை ஓட்டி வந்தவன் சாவியை அவனிடம் கொடுப்பதற்கு வர அவன் நிலை பார்த்து தயங்கி நின்றான்.


வழியிலேயே ஆனந்த் புலம்பல்களை எல்லாம் கேட்டவன் அல்லவா!


பின் அங்கு வேறு யாரும் இல்லாததால் அவனை தட்டி எழுப்ப நிமிர்ந்தவன் முன் சாவியை நீட்டி விட்டு வீட்டில் இருப்பவர்களுக்கு அழைத்து சொல்லுமாறு கூறிவிட்டு சென்றான்.


வீட்டிற்கு அழைத்து சொல்லும் தைரியம் சிறிதும் இல்லாமல் சுரேஷ் ஞாபகம் வர அவனிற்கு அழைத்தான்.


"சொல்லுடா வீட்டிற்கு போயாச்சா?" என சுரேஷ் சாதாரணமாக வினவினாலும், 'இப்போது தானே கிளம்பினான். ஏன் அழைக்கிறான்?' என நினைக்காமல் இல்லை.


"சுரேஷ்.. ரிது... ரிது" என அவன் அழுது திக்கி கொண்டிருக்க அவன் அழும் குரலில் படுத்திருந்த சுரேஷ் பதறி எழுந்தான்.


"ஆனந்த்! என்னாச்சு டா? அழுறியா? ரிதுக்கு என்ன?" என அவன் படபடக்க,


"ரிதுக்கு அச்சிடேன்ட் டா" என அவன் சொல்வதற்கு சில நிமிடம் ஆனது.


துளி நேரம் தாமதிக்காமல் ஹாஸ்பிடல் விபரம் கேட்டுக்கொண்டு விரைந்து வந்தான் சுரேஷ்.


வரவேற்பில் அறை கேட்டு ஓடி வந்தவன் அங்கு சுருண்டு அமர்ந்திருந்தவனை பார்த்து மனம் வலித்தாலும் இப்போது அவனை தேற்றும் பொறுப்பை கையில் எடுத்தான்.


அவனை கண்டதும் ஆனந்த் கட்டிக் கொண்டு அழ அவனை தேற்ற முற்பட்டான்.


வீட்டிற்கு சொல்லவில்லை என்றதும் சுரேஷ் ஆனந்த் வீட்டிற்கு அழைத்து தெளிவாக சொல்லாமல் ஹாஸ்பிடல் வரும்படிமட்டும் கூறிவிட்டு வைத்தான்.


பின் விக்ரம் வருவதும் உதவியாக இருக்கும் என நினைத்தவன் அவனிற்கு அழைத்து கூறிவிட்டு ஆனந்தை பார்த்து கொண்டிருந்தான்.


சுகன்யா ரகு மற்றும் ராஜ்குமார் பதறியபடி ஹாஸ்பிடல் உள்ளே நுழைந்தனர்.


"டேய் என்னடா ஆச்சு? என்னடா பண்ண அவளை? உன்னை நம்பி தானே அனுப்பினேன்? இப்போதான் டா உங்களை நினச்சு சந்தோசப்பட்டுட்டு இருந்தேன். அதுக்குள்ள ஏன்டா இப்படி ஆச்சு? அவளை ஏன்டா நிம்மதியாவே இருக்க விட மாட்டுற? ஐய்யோ!" என தனது ஆற்றாமையை அழுது புலம்பி மட்டுமே தள்ள முடிந்தது சுகன்யாவிற்கு.


அவரை அனைத்து கொண்டவனுக்கோ யாரிடமும் பேசும் சக்தி இல்லை. கண்ணீரும் நின்றபாடில்லை.


'அவளை ஏன்டா நிம்மதியா இருக்க விட மாட்டுற?' ஏற்கனவே இறந்து கொண்டிருந்தவனுக்கு இந்த வார்த்தையில் சகலமும் நின்று போனது.


ரகு இருவரையும் சமாதானமாக அணைத்தாலும் அவருக்கும் அந்நிலையில் கண் கலங்கியது.


ஐசீயூ அறையில் இருந்து வெளியே வந்த டாக்டர் அருகே வேகமாக ஆனந்த் வர, "பேசண்ட்க்கு ரொம்ப பிளட் லாஸ் ஆகிருக்கு. தலையில் பலமா அடிபட்டதால உடனே ஆபரேஷன் செஞ்சே ஆகணும்" என கூற ஆனந்த் சிலை போல நின்றுவிட்டான்.


நர்ஸ் வந்து கையெழுத்து கேட்க அவன் அதை உணரும் நிலையில் இல்லை. அவனை அறிந்த ரகு அவரே கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார்.


சுரேஷ் ஆனந்தை உலுக்க அப்போதும் அவன் தெளியவில்லை. அவன் நிலை புரிந்து கொண்டவன் கண்கள் கலங்க அவனை அனைத்து அழைத்து வந்து அமர வைத்தான்.


ராஜ்குமார் எதுவும் பேசவில்லை. அவரின் மனம் மொத்தமாக நொறுங்கி போய் இருந்தது. அவரை பார்த்த பின் தான் ரகுவிற்கு அவர் நிலை புரிய அவர் தோளில் கை வைத்தார்.


திரும்பி அவரை பார்த்த ராஜ் சில நொடிகள் பார்த்து கொண்டே இருந்தார்.


"தப்பு பண்ணிட்டேனே ரகு. அன்னைக்கு நான் போய் சேர்ந்திருந்தா இதெல்லாம் பார்க்க வேண்டிய நிலைமை எனக்கு வந்திருக்குமா? இதெல்லாம் பார்க்கவா அந்த கடவுள் எனக்கு உயிர் பிச்சை கொடுத்தான்" என அழுது புலம்பினார்.


அடுத்த 15 நிமிடத்தில் வந்து சேர்ந்தனர் விக்ரம், லாவண்யா மற்றும் ஜோதி. அனைத்தையும் சுரேஷ் கூற
விக்ரம் தன் நண்பனை ஆறுதலாய் அனைத்தான்.


ஜோதி கண்ணீர் சிந்தியபடி சுகன்யா அருகில் அமர்ந்து அவர் கைகளை பற்றி கொண்டாள்.


லாவண்யாவிற்கு விக்ரம் மூலம் ஆனந்த் ரிது வாழ்க்கை பற்றி தெரிந்திருந்ததால் அவளும் ஆனந்த் நிலை எண்ணி கவலை கொண்டாள்.


சிறிது நேரத்தில் அங்கு வந்த டாக்டரிடம் லாவண்யா பேசி ரிதுவின் நிலையை தெரிந்து கொண்டவள் கண்கள் தன்னையும் மீறி கலங்கி ஆனந்தை பார்க்க அதை கண்ட விக்ரம் புரிந்து கொண்டான் ரிதுவின் நிலையை.


பிளட் லாஸ் ஆனதால ரத்தம் தேவை என டாக்டர் சொல்லவும் அந்த பிரிவு ரத்தம் ஸ்டாக் இல்லை என்று கூற அதே பிரிவுதான் என் ரத்தமும் என கூறி சுரேஷ் உள்ளே சென்றான்.


முழுதாய் மூன்று மணி நேரம் காக்க வைத்து வெளியே வந்த டாக்டர் அவர் பதிலை எதிர் பார்த்து காத்து கொண்டிருந்தவர்களிடம்


"அவங்க உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என்று கூறிய பின் தான் அனைவருக்கும் உயிரே வந்தது.


"மயக்கம் தெளிய கொஞ்சம் நேரம் ஆகும். காலையில போய் நீங்க பார்க்கலாம்" என்று சொல்லிச் சென்றார்.


அந்த இரவெல்லாம் அனைவருக்கும் தூங்கா இரவாக போனது. ஆனந்த் இருந்த இடத்தில் இருந்து நகரவே இல்லை.


அதன் பின் ரிது ஐசீயூவில் இருந்து தனி ரூம் மாற்றினாலும் உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை.


ரத்தம் கொடுத்து விட்டு வந்த சுரேஷ் சிறிது நேரம் இருந்து விட்டு விக்ரமுடன் வெளியில் சென்றவன் அனைவருக்கும் காபி வாங்கி கொண்டு வந்தனர்.


வேண்டாம் என சொன்னவர்களை லாவண்யா ஜோதி அருகில் இருந்து ஆறுதல் கொடுத்து குடிக்க செய்தனர்.


ஆனந்த் அப்போதும் அசையவில்லை. விக்ரம் சுரேஷ் பேசியது அவன் காதுகளில் விழுந்ததாக கூட தெரியவில்லை.


அதிகாலை 4 மணி அளவில் ஆனந்த் எழுந்து ரிது இருந்த அறைக்குள் நுழைய அங்கிருந்த அனைவரும் பார்த்தாலும் யாரும் அவனை தடுக்கவில்லை.


உள்ளே இருந்த நர்ஸ் அவனிடம் பேசியதை அவன் கண்டுகொள்ளவே இல்லை.


ரிது அருகில் வெகு நேரம் நின்று அவள் முகத்தை பார்த்து கொண்டிருந்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளிடம் எந்த அசைவும் இல்லை.


அவளருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தவன் அவளின் கைகளை தன் கைகளில் ஏந்தி கொண்டான்.


"நான் பேசுறது கேட்குதா அம்மு? ரொம்ப கஷ்டமா இருக்கு டீ. நான் தானே தப்பு பண்ணேன். ஏன்டீ உனக்கு இவ்ளோ வேதனை? வேண்டாம் அம்மு எதுவுமே வேண்டாம். எனக்கு நீ வேணும்னு நினச்சதில் இருந்து உன்னோட சந்தோசத்தை மொத்தமா எடுத்துகிட்டேன்னு தோணுது. எப்பவுமே சொல்வேன்ல என்கூட நீ இருந்தா போதும்னு! எவ்ளோ சுயநலம்ல எனக்கு? இனி அப்படி சொல்லமாட்டேன்டா. நீ சந்தோசமா இருக்கணும். அதுக்கு நான் உன் வாழ்க்கைய விட்டு போகணும். போயிட்றேன் அம்மு. நீ நல்லபடியா திரும்பி வா" கண்ணீர் கரைந்து ஓட இரவு முழுதும் அவன் நினைத்தை கூறி விட்டான்.


சிறிது நேரம் அமைதியாக அவளை பார்த்தவன் அவள் தலை கோதி கொண்டே, "நீ சொன்னது எனக்கு கேட்டுச்சு டீ. 'ஐ லவ் யூ ஆனந்த்'. எனக்கு இது எவ்ளோ பிரிசீயஸ் வர்ட்ஸ் தெரியுமா. இது போதும் அம்மு எனக்கு. இது போதும். ஆனா.. ஆனா.. நான் உனக்கு வேணாம் டா" என சொல்லும் பொழுது அவன் கைகள் நடுங்க அழுகையில் உடல் குலுங்கியது.


அவன் அழுவதை பார்த்து நர்ஸ் வெளியில் சென்று சத்தம் போட சுரேஷ் விக்ரம் அவனை வெளியே அழைத்து வந்தனர்.


அப்போதும் அழுது கொண்டிருந்தவனை பார்த்து அனைவருக்கும் கண்கள் கலங்கியது.


சுகன்யா அவன் அருகில் அமர்ந்து அவனை தன் மடியில் சாய்த்து கொண்டு ஆறுதலாய் தட்டி கொடுத்தார். அவர் மனம் மகனுக்காக வருந்தியது.


காதல் தொடரும்..
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom