• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 28

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 28


மூச்சு விட சிரமமாக இருக்க கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது லாவண்யாவிற்கு.


கண்டிப்பாக விக்ரமை கலாய்க்கத் தான் போகிறாள் என நினைத்து சுரேஷ் வேறு புறம் திரும்பி இருந்தான்.


சில நிமிடங்களுக்கு பிறகும் பதில் வராமல் போக அவளை திரும்பி பார்த்தவன் அதிர்ந்தான்.


"ஹேய் என்னாச்சு? ஏன் அழுற?" என பதறி எழுந்து அவள் அருகே செல்ல வர அதற்குள் எதுவும் சொல்லாமல் அழுது கொண்டே எழுந்து ஓடினாள் லாவண்யா.


துளியும் லாவண்யா செயல்களை எதிர் பார்க்காதவன் அதே இடத்தில் அதிர்ச்சியுடன் நின்றான் சில நிமிடம்.


"ஏன் இவ்வளவு எமோஷனல் ஆகுறா? விக்ரம் போட்டோ தானே காண்பித்தேன்?" என மேலும் குழம்பியவன் ஜோதிக்கு அழைத்து விஷயத்தை கூற அவளுக்கும் ஒன்றும் புரியவில்லை.


தொடர்ந்து ஒரு வாரம் இருவரும் மாற்றி மாற்றி கால் செய்தும் லாவண்யா அவர்களிடம் பேசவில்லை.


சுரேஷ் அதில் மிகவும் கடுப்பாகி போனான். அடுத்த நாள் அதே போல் கால் செய்ய அப்போதும் எடுக்கவில்லை என்றதும் அவளுக்கு மெசேஜ் ஒன்றை தட்டினான்.


"இப்போது பேசவில்லை என்றால் எப்போதும் பேச வேண்டாம்" என இரத்தின சுருக்கமாக.


லாவண்யா ஒரே வாரத்தில் என்ன வாழ்க்கை எனும் அளவிற்கு வெறுத்து போனாள்.


யாரிடமும் பேசவில்லை. கிளாஸ் போகவும் பிடிக்கவில்லை. அறையிலே இருந்தாள்.


தனியாக இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம் என்பது போல் பல எண்ணங்கள்.


அவள் ஒரு மனோதத்துவ மருத்துவராக இல்லாமல் இருந்து இருந்தால்? ஆனால் இப்போது அவளால் தவறான முடிவு எடுக்க இயலவில்லை.


மனம் முரண்டு பிடித்தாலும் மூளை வேலை செய்தது ஒரு மருத்துவர் என்ற முறையில்.


ஒரே நாள் தான் அதுவும் சில மணி நேரம் தான் என்றாலும் விக்ரம் அந்த கணமே இவளுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டான்.


இந்தளவு அவனை விரும்பினோமா? என்று அவளுக்கு அன்று சுரேஷ் போட்டோவை காண்பித்ததும் தான் அவளுக்கு புரிந்தது.


சுரேஷ் மெசேஜ் பார்த்தவள் சிறு கண் அறியா புன்னகையுடன் சந்திக்கும் நேரத்தை அனுப்பினாள்.


எப்போதும் சந்திக்கும் அந்த ஹோட்டலில் இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். முதலில் அவளே பேசட்டும் என அமைதி காத்தான்.


அவள் அவனிடம் எப்படி கூறுவது என தயங்கி கொண்டிருந்தாள். தன்னை பற்றி தவறாக நினைத்து விடுவானோ என்பது வேறு. இன்னொரு பெண்ணை காதலிப்பவனை நினைத்து இன்னும் வருந்துவதை அவன் எவ்வாறு எடுத்து கொள்வான்.


அவனுக்கு நெருங்கிய நண்பன் விக்ரம் என்பதும் சேர்ந்து அவள் கன்னங்களில் கண்ணீர் வடிந்தது.


வந்தது முதல் எதுவும் பேசாமல் அழுது கொண்டே இருப்பவளை பார்க்க பாவமாக இருந்தாலும் அவள் பேசும் வரை அமைதி காப்பதாக அமர்ந்திருந்தான்.


நேரம் ஆக ஆக அவள் அழுகை குறைவதாக இல்லை.


எரிச்சல் அடைந்தவன், "ஸ்டாப் இட் லாவண்யா. நீ டாக்டர் தான! என்ன பிரச்சனைனு கூட சொல்லாம அரை மணி நேரமா அழுறதுக்கு சின்ன குழந்தையா?".


"இப்ப பேசுறியா இல்லை நான் கிளம்பவா? " என அவன் எழுந்து கொள்ளஅவனை ஒரு பார்வை பார்த்தவள் தன் உள்ளங்கையை திறந்து அவனுக்கு காண்பித்தாள்.


அதை பார்த்து கொண்டே அமர்ந்தான் சுரேஷ். அவள் கையில் ஒரு பிரேஸ்லெட் இருந்தது. அது விக்ரம் உடையது என்பது சுரேஷிற்கு தெரியவில்லை.


அவளே கூறட்டும் என அமர்ந்தான். "இது உன் பிரென்ட்டோடது." என்றதும் அதை கையில் வாங்கியவன்


"அவனோடது உன்கிட்ட எப்படி? " என்று குழம்பியவாறு கேட்டான்.


அந்த பிரெஸ்லேட்டை கையில் வாங்கியவள் "ஜோதி அண்ணா விக்ரம்னு அன்னைக்கு போட்டோ காட்டினியே? அது தான் உன் பிரன்ட்னு நீ அடிக்கடி சொல்ற விக்ரம்மா?" என்றாள்.


ஆமாம் என்று தலையை மட்டும் ஆட்டி அவளை கூர்ந்து நோக்கினான். அவனுள் ஒரு பொறி தட்டியது.


"பிரதாப்கிட்ட நீ சொன்ன உன் லவ்...? " என்று அவன் இழுக்க அவள் வெற்று புன்னகையுடன் தலை ஆட்டினாள்.


"ஓஹ் மை காட்! நீ விக்ரமை விரும்பினயா?" என்று படபடத்தவன், "ஐயோ லாவண்யா ஏன் உன் காதலை அவன்கிட்ட சொல்லாம விட்ட?" என்று புலம்பி தவித்தான்.


லாவண்யா மேல் சுரேஷ் கொண்ட அபிமானம் அவனை புலம்ப வைத்தது.


அருமையான பெண்ணை நண்பன் இழந்து விட்டானே என்ற கவலை அவனை புலம்ப வைத்தது.


"ப்ச் இப்படி அமைதியா இருந்து என்னை குழப்பாதே லாவண்யா! ப்ளீஸ் உனக்கு எப்படி விக்ரமை தெரியும்? நீ விரும்பியும் ஏன் அவன்கிட்ட காதலை சொல்லலை?" என அவளிடம் பொறுமையிழந்து கத்தினான்.


அப்போது ஜோதி அழைக்க கட் செய்ய இருந்தவன் பின் ஏற்று காதில் வைத்தான். அவள் சுரேஷிடம் லாவண்யாவிடம் பேசினாயா ஏன கேட்க சிறிது நேரத்தில் அழைப்பதாக கூறி வைத்தான்.


பின் அனைத்தையும் லாவண்யா கூற கேட்டுக்கொண்டிருந்தவன் மிகவும் சோர்ந்து போனான்.


அந்த பிரெஸ்லேட்டை வேண்டும் என்று அவள் அவனிடம் இருந்து எடுக்க வில்லை. அன்று அவன் கைக்கு முதலுதவி செய்த போது அவன் கையில் இருந்து கழற்றியது.


அவர்களை சேர்க்க எதாவது வழி கிடைக்கும் என நினைத்து லாவண்யா பேசுவதை கேட்டவன் அவள் ஒருதலையாக காதலிப்பதை கூறியதும் வாடினான்.


பின் அவளே விக்ரம் சந்தோசமா இருந்தால் போதும். என்னை பற்றி நீ விக்ரமிடம் எதுவும் பேச வேண்டாம் என கூறியவள் அவன் கவலை முகத்தை பார்க்கவும், "நான் கோழை இல்லை சுரேஷ். இனி என் மனசுல எதையும் நினச்சு அழ மாட்டேன். உன்கிட்ட சொன்னது கூட கொஞ்சம் பாரம் இறங்கின மாதிரி தான் இருக்கு. விக்ரமை நல்லா பார்த்துக்கோங்க" என கூறிவிட்டு எழுந்தாள்.


சுரேஷ் அவளிடம், "இதுநாள் வரை நீ என்னை பிரன்ட்டா நினைச்சியானு எனக்கு தெரியாது. ஆனால் நான் உன்னை என் சிஸ்டர் மாதிரி தான் நினைக்கிறன். உனக்கு எப்பவும் நான் இருப்பேன். விக்ரம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு நீயும்" என்று அழுத்தமாக கூற அவள் புன்னகைத்தாள்.


விக்ரம் தன்னுடைய வீட்டில் தன் காதலை கூறி சம்மதம் வாங்கிய சில நாட்களில் அவன் விரும்பியவள் அவனை விட்டு வேறொருவனை விரும்புவதாக கூறி சென்று விட அடுத்த நாளே அவன் அவனுடைய முடிவை தேடி கொண்டான்.


அவனை ஹாஸ்பிடலில் சேர்த்த பின் செய்வதறியாது அவன் பெற்றோர் இருக்க சுரேஷை அழைத்து சொல்லும் எண்ணம் கூட இல்லாமல் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தாள் ஜோதி.


ஆனந்த் வந்து முதல் நாள் பார்த்துவிட்டு அவன் பெற்றோரும் வந்து பார்த்து கொண்டதால் ஜோதி சுயம் மறந்து இருந்தாள்.


விக்ரம் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிந்த பின் தான் அனைவருக்கும் மூச்சே வந்தது. அதற்கு பின் தான் சுரேஷிற்கு அழைத்து ஜோதி விஷயத்தை கூறினாள்.


முதலில் சுரேஷ் அதிர்ந்தான் தான். பின் விக்ரமிற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிந்து கொண்ட சுரேஷ், 'இந்த நிலையில் லாவண்யா அவன் வாழ்வில் வந்தால் என்ன?' என யோசிக்க ஆரம்பித்தான்.


லாவண்யா மறுத்தும் கேட்காமல் "விக்ரம் சந்தோசம் உனக்கு முக்கியம் இல்லையா? கண்டிப்பா அவனுக்கு நீ தான் ஏற்ற ஜோடி. உன்னால் தான் அவனை மாற்ற முடியும்" என்று வசனம் பேசி அடுத்த நாளே அவளை இந்தியாவில் இறக்கினான்.


தந்தைக்கு இருந்த மதிப்பு மூலம் லாவண்யா விக்ரம் அட்மிட் ஆகியிருந்த ஹாஸ்பிடலில் வேலைக்கு சேர்ந்து அவனை பார்த்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றாள்.


நடந்த அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மனநிலை வெவ்வேறாக இருந்தது.


விக்ரம் அம்மாவிற்கு மருமகளை நினைத்து நிம்மதி தான். தன் மகனை நல்வழிக்கு கொண்டு வந்தவள் ஆயிற்றே.


விக்ரம் முகத்தில் இருந்து மட்டும் எதையும் அறிய முடியவில்லை. அவன் நின்ற இடத்திலே அசையாமல் நின்றான்.


விக்ரம் மொபைல் அலறும் வரை அந்த நால்வர் இடையில் அமைதி மட்டுமே. விக்ரம் கையில் இருந்த மொபைலை பார்த்தான்.


அழைப்பது சுரேஷ் என்றதும் சற்றுமுன் வரை கூறிய அனைத்தும் மனதில் ஓட எதுவும் பேசாமல் காதில் வைத்தான்.


அந்த பக்கம் சுரேஷ் கூறிய செய்தியில் இருந்த கொஞ்ச பலமும் இழந்து அதே இடத்தில் தொப்பென விழுந்தான்.


அனைவரும் அவனை சூழ்ந்து என்னவென கேட்க சுயநினைவு வந்தவன் "ரிதுவுக்கு அச்சிடேன்ட்டாம்" என்றதும் அனைவருக்குமே அதிர்ச்சி.


எந்த ஹாஸ்பிடல் எனக் கேட்டு கொண்டு அங்கு விரைந்தான் விக்ரம்.


வேண்டாம் என மறுத்தும் கேட்காமல் ஜோதியும் லாவண்யாவும் அவனுடன் கிளம்பினர் தோழிக்காக.


காதல் தொடரும்..
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom