• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 20

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 20


சுரேஷ் கல்லூரி படிக்கும் போதே ஜோதி மேல் அவனுக்கு ஆர்வம் உண்டு.


அவள் சின்ன பெண் என அவனை அவனே தலையில் குட்டி கொள்வான். உடனே நண்பன் முகமும் மணக்கண்ணில் தோன்றும்.


ஆனாலும் விக்ரம் வீட்டிற்கு செல்லும் போது அவளை தேடும் கண்களை என்ன செய்ய முடியும்?


சுரேஷ் பெற்றோரை இழந்த தினம் தான் ஜோதிக்கும் சுரேஷ் மேல் சொல்ல தெரியாத ஒரு உணர்வு தோன்றியது.


அன்று விக்ரம் குடும்பம் சுரேஷ் வீட்டில் தான் இருந்தனர். ஆனந்த் அம்மா அப்பா ராமேஸ்வரம் சென்றிருந்த நேரம் அது.


எங்கோ வெறித்து பார்த்து பித்து பிடித்தவன் போல இருந்த சுரேஷ் ஜோதி கண்களில் ஆழமாய் பதிந்து போனான்.


அவள் பள்ளி இறுதி ஆண்டில் இருந்தாள். எப்போதும் அண்ணனுடன் புன்னகையுடன் வலம் வருபவனை இந்த கோலத்தில் அவளால் பார்க்க முடியவில்லை.


வீட்டிற்கு வந்த பின் கூட சுரேஷ் முகம் அவளை நிம்மதி இல்லாமல் இருக்க செய்ய கண்முன் வந்து கொண்டே இருந்தது.


ஒரு வாரம் ஓடியிருக்க கல்லூரி செல்லாமல் வீட்டிலேயே அடைந்திருந்தான் சுரேஷ்.


அவனுக்கு உறவுகள் என சொல்லி கொள்ள கூட யாரும் கிடையாது. சுரேஷ் பெற்றோர் காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டவர்கள்.


ஆனந்த் விக்ரமும் கல்லூரி செல்லாமல் முழு நேரமும் சுரேஷுடன் இருந்தனர்.


சுகன்யா சமைத்து சுரேஷ் வீட்டிற்கும் கொடுத்து விட ஆனந்த் மற்றும் விக்ரம் வற்புறுத்தலால் தான் அவன் சாப்பிடுவான்.


ஒருவாரம் கடந்திருக்க இருவரின் அன்பின் மூலம் சிறிது தெளிந்திருந்த சுரேஷ் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.


அப்போது அவன் மொபைல் ஒலி எழுப்ப எடுத்தவன் யோசனையுடன் “சொல்லு மச்சி” என்றான். குரலில் அசதி அதிகமாய் இருந்தது.


“நா.. நான் ஜோ.. ஜோதி” என்று தயங்கி தயங்கி பேசினாள்.


விக்ரம் வீட்டு லண்ட்லைன் நம்பர் பார்த்ததும் அதிலிருந்து இதுவரை விக்ரம் அழைத்தது இல்லை என யோசித்து கொண்டு தான் அழைப்பை ஏற்றான்.


ஜோதி குரல் கேட்டதும் இதயம் தாருமாறாய் துடிக்க இதழிடையில் சிறு புன்னகை கூட.


‘இவள் எப்படி எனக்கு அழைத்தாள்?' என யோசனையில் அவன் இருக்க “ஹலோ” என மீண்டும் அழைத்தாள்.


அவள் குரலில் மீண்டும் தொலைய இருந்தவன் முயன்று “ஹான் சொல்லுங்க” என்றான்.


அவன் மரியாதையில் முகம் சுண்டி போனது பெண்ணுக்கு. இருந்தும் “இல்லை சும்மாதான். அது.. இப்போ நீங்கள் ஒகே வா” என என்ன கேட்பது எப்படி கேட்பது என தெரியாமல் தடுமாறிப் பேசினாள்.


அவளின் ஆறுதல் மிகப்பெரிய மருந்து அவனுக்கு. அன்னைக்கு பின் அவன் நேசித்த முதல் பெண் அல்லவா.


இப்போது கவலைகள் அனைத்தும் கனமாய் இல்லாமல் மனம் லேசானது அவனுக்கு.


“பெட்டெர் பேபி” என தன்னை அறியாமல் அவன் மனதுள் அழைக்கும் ‘பேபி’ வெளியே வந்தது.


சிறகில்லாமல் பறந்து கொண்டிருந்தாள் ஜோதி.


அடுத்து என்ன பேச என அவள் யோசிக்க அவனோ இவள் பேசியதிலேயே நெகிழ்ந்து கொண்டிருந்தான்.


“சரி நான் வச்சிடறேன்” என அவள் கூற,


"திரும்ப பேசுவியா பேபி” என்றான்.


அவன் குரலில் இருந்த ஏக்கம் அவளை சரி என சொல்ல வைத்தது.


கல்லூரி முடிந்து அவன் வெளிநாடு சென்றாலும் தனக்கென யாரும் இல்லை என அவன் நினைக்காமல் இருக்க அவனின் ஜோ மட்டுமே காரணம்.


அவன் தனிமையை உணரும் நேரமெல்லாம் அவன் சொல்லாமலே நானிருக்கிறேன் என அவள் சரியாக அழைத்து விடுவாள். அவளுக்காக மட்டுமே அவன் இப்போதும் எப்போதும்.


இதை யோசித்து கொண்டே சிரிப்புடன் அவன் அமர்ந்திருக்க கார் ஒரு பெரிய மாலில் வந்து நின்றது.


ஆனந்த் தான் கார் ஒட்டி வந்தான். சுரேஷ் ஏதோ யோசனையில் வர ஆனந்த் அவனை தொந்தரவு செய்யவில்லை.


“டேய்” என ஆனந்த் உலுக்க கனவில் இருந்து மீண்டான் சுரேஷ். சிரிப்புடன் இறங்கியவனை வித்தியாசமாய் பார்த்தான் ஆனந்த்.


இருவரும் உள்ளே செல்ல மதிய நேரம் ஆனதால் முதலில் சாப்பிட அமர்ந்தனர்.


சாப்பிட்டு கொண்டிருந்த ஆனந்த் தற்செயலாக முன்னே பார்க்க அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை.


ரிது கையில் ஜூஸ்டன் வர அவளை பார்த்தது பார்த்த படியே இருந்தான்.


இவன் அருகே வந்து கொண்டிருந்தவள் தனக்கு எதிரே இருந்த டேபிள் மேல் ஜூஸ்ஸை வைத்து விட்டு பேசிய படியே அமர்ந்தாள்.


யார் அது என ஆனந்த் எட்டிப்
பார்க்க அங்கே விக்ரம் லாவண்யா, ஜோதி, ரிது நால்வரும் அமர்ந்திருந்தனர்.


அதை பார்த்ததும் முறைத்தவன் சுரேஷிடம் சொல்லலாம் என திரும்ப அவன் இன்னும் கனவுலகில் இருந்து வராமல் சிரித்து கொண்டிருந்தான்.


தலையில் அடித்து கொண்டவன் அவன் முகத்தில் லேசாய் தண்ணீர் தெளிக்க “ஹேய்ய்” என பதறி எழுந்தான்.


“ஏன்டா இப்படி பண்ணுன” என்றவனிடம் அவன் கையை காட்ட அங்கு நால்வரையும் பார்த்தவன் இனிதாய் அதிர்ந்தான்.


பின்னே எப்போதும் இப்படி தானே! தான் எப்போது அதிகமாய் சந்தோசம் கொண்டாலும் வருத்தம் கொண்டாலும் தன் தேவதைக்கு தானே முதலில் அது தெரியும்.


ஜோதியும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள்.


‘இது சரி படாது’ என நினைத்த ஆனந்த் அவனே எழுந்து சுரேஷை அழைத்து கொண்டு எதிர் டேபிளிற்க்கு சென்றான்.


அவர்களை பார்த்ததும் விக்ரம் தலையில் கை வைத்து ‘அட ராமா! இது என்ன டா எனக்கு வந்த சோதனை’ என நினைக்க, ஆனந்த் விக்ரமை முறைத்து கொண்டிருந்தான்.


சுரேஷ் ஜோதியை பார்த்து ‘நீ எங்க போறேன்னு சொன்ன? இப்ப இங்கே வந்திருக்க?’ என கண்களால் பேசிக் கொண்டிருக்க ரிது ஆனந்தை பார்த்துவிட்டு குனிந்து கொண்டாள்.


லாவண்யா தான் “ஹாய் சுரேஷ்” என முதலில் வரவேற்று அனைவரையும் நினைவுலகிற்கு கொண்டு வந்தாள்.


அனைவருமே ஒவ்வொரு யோசனையில் இருந்ததால் லாவண்யா உரிமையுடன் சுரேஷை அழைத்து பேசியதை யாரும் கவனிக்கவில்லை.


தொடர்ந்து விக்ரம் முறைப்புடனும் பெண்கள் சிரிப்புடனும் இருக்க காரணம் இருந்தது.


சில மணி நேரங்களுக்கு முன்பு....


விக்ரம் இன்று விடுமுறை எடுத்திருந்தான். அதுவும் லாவண்யாவுடன் தனியே வெளியே சென்று வரலாம் என நினைத்து.


அதை அவளிடம் சொல்ல உடனே சரி என்று சொல்லி கிளம்ப தயாரானாள். இருவரும் கிளம்பி வெளியே வர ஜோதியும் அவள் அறையில் இருந்து வெளி வந்தாள்.


அவள் எங்கோ செல்ல கிளம்பியிருப்பதை பார்த்தவன் "இன்னைக்கு காலேஜ் இல்லையா ஜோதி? இந்நேரம் எங்க கிளம்பிட்ட?” என கேட்க,


அவளோ ‘அய்யயோ அண்ணா அண்ணி கூட தனியா போக பிளான் பன்னிருப்பாங்க போலயே’ என திருதிருவென முழித்தாள்.


பின்னால் வந்த லாவண்யா விக்ரமிற்கு தெரியாமல் வாயில் விரல் வைத்து ‘மூச்’ என சைகை காட்ட ஜோதி நெளிந்தாள்.


“என்ன நான் பேசிட்டே இருக்கேன் நீ பாத்துட்டே இருக்க?” என கேட்க,


முன்னே வந்த லாவண்யா “இப்போ என்ன உங்களுக்கு தெரியணும்” என்றாள்.


“இல்லை லாவி, ஜோதி எங்கேயோ.. ” என சொல்லும் முன்


"நான் தான் கிளம்ப சொன்னேன். அவளும் நம்மோட தான் வர்றா” என்றதும் விக்ரம் முகத்தை பார்க்கணுமே!!


வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கி கொண்டவள், “போய் உட்காருங்க” என்றதும் உர்ர்ர் என்ற முகத்துடன் “அதான் கிளம்பியாச்சுல வாங்க போகலாம்” என சொல்ல, சரியாக வாசலில் கார் வந்து நின்றது.


யார் என விக்ரம் எட்டி பார்க்க, ஜோதியும் லாவண்யாவும் சிரிப்பை அடக்க முடியாமல் போராடினர்.


அங்கே ரிது வர சிரிப்புடன் “வா டா” என வரவேற்று திரும்பிய விக்ரமிற்கு லாவண்யா ஜோதி முகத்திலும் இருந்த சிரிப்பு அவனுக்கு எதையோ கூற அவன் மீண்டும் முறைக்க ஆரம்பித்தான்.


அதில் லாவி வாய் விட்டு சிரிக்க ஜோதி அடக்கி வாசித்தாள்.


“என்ன சிரிப்பு சத்தம் வெளியே கேட்குது? கிளம்பலாமா” என ரிது கேட்க, ஏதும் சொல்லாமல் விக்ரம் முன்னே சென்று விட்டான்.


அவன் சென்றதும் இருவரும் வாய் விட்டு வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க என்ன என முகத்தை சுருக்கினாள் ரிது.


“அது ஒன்னும் இல்லை டீ. அண்ணா அண்ணி கூட தனியா போக பிளான் போட்ருக்கு. அண்ணி உன்னையும் என்னையும் சேர்த்து ஊரை கூட்டிட்டாங்க” என சொல்ல லாவண்யாவை முறைத்தாள் ரிது.


ரிசெப்சன் அன்றே மூவரும் நல்ல ஜோடியாய் மாறியிருந்ததால் வந்த விளைவு இது.


வரவே மாட்டேன் என ரிது எவ்வளவோ சொல்லியும் சுகன்யா மூலம் காரியத்தை சாதித்தாள் லாவண்யா.


“வீட்டுக்குள்ளே அடைஞ்சு தானே இருக்க போய்ட்டு வா” என்று அனுப்பி வைத்தார்.


மூவரும் சிரித்து கொண்டே வெளிவர அதே உர்ர்ர் என்ற நிலையில் நின்றிருந்தான் விக்ரம்.


“கார் புக் பண்ணிட்டீங்களா” என லாவண்யா கேட்க,


“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நம்ம பைக்ல போலாம். பின்னாடி ஜோதி ஸ்கூட்டில அவங்க வரட்டும்” என அவன் சொல்ல,


மறுத்து பேச வந்த லாவண்யாவிடம், “அண்ணி ஏன் வேஸ்ட்டா கார்? அண்ணா சொன்னா மாறியே போலாம்” என கண்ணை காட்ட அவளும் சரி என விட்டுவிட்டாள்.


அவன் வேறு பிளான் செய்திருக்க இப்போது இவர்களும் வருவதால் முதலில் மால் சென்றுவிட்டு அங்கேயே ஷாப்பிங் லஞ்ச் முடித்து பின் மாலை மங்கியதும் பீச் செல்லலாம் என முடிவெடுத்து வந்திருந்தனர்.


கொசுவத்தி சுருளை சுருட்டி முடித்தாள் லாவண்யா.


“எனக்கு மட்டும் எங்கிருந்து டா வர்றிங்க” என அவன் அலுத்து கொள்ள அனைவரும் அதற்கு வாய் விட்டு சிரித்தனர்.


அன்பு தொடரும்..
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom