• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 2

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 2


அன்று அனைவர்க்குமே இனிய நாளாக அமைந்தது.


காலையில் எழுந்ததும் ஜாக்கிங் செல்வதற்கு நடையில் ஒரு துள்ளலுடன் படியில் இறங்கிய மகனை சற்று வித்யாசமாகவே பார்க்க தோன்றியது சுகன்யாவிற்கு.


அதையே தன் கணவரும் சொல்ல புன்னகையுடன் யோசிக்க ஆரம்பித்தாள்.

ரகு பேப்பர் வாசித்து கொண்டிருந்த நேரம் ஜாக்கிங் முடித்து வந்த ஆனந்த் அவர் அருகில் அமர்ந்தான்.


சுகன்யா கொண்டு வந்த காபியை வாங்கி கொண்டு ரகுவிடம் தன்னுடைய கம்பெனியில் செய்ய இருக்கும் சில மாற்றங்கள் பற்றி பேசிவிட்டு அதற்கான காரணங்களையும் கூறினான்.


அதற்கு முழு சம்மதம் கூறியதும் தன் தாயிடம் திரும்பியவன்,


"காபி சூப்பர் அம்மா" என்று கப்பை நீட்டினான்.


"இன்னைக்கு ஏதாவது விஷேசமான நாள்தானா?" சுகன்யா கேட்க,


"ஏன்ம்மா?" என்று கேட்டதும்,


"உன் முகத்தில புதுசா ஏதோ ஒன்று தெரியுது டா" என்றவரை வியப்புடன் பார்த்தான் ஆனந்த்.


'தனக்கு மட்டும் தான் அப்படி தோன்றியது என்று நினைத்தால் அம்மா கூறும் அளவிற்கு நாம் வெளியே காட்டி கொள்கிறோமா?' மனதுள் நினைத்தவன்,


"அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா" என்று விட்டு தன் அறைக்கு சென்றான்.


எப்போதும் தான் சுறுசுறுப்பாக இருப்பவன் தான். ஆனால் இன்று தனக்கு இருக்கும் இந்த சந்தோசம் ஏன் என்று யோசித்தவனுக்கு உடனே ரிதுவின் முகம் ஞாபகம் வந்தது.


திடுக்கிட்டவன், 'தான் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்?' என்று யோசித்தவனுக்கு,


'இது சரி இல்லை. நான் தவறு செய்கிறேன்' என்று நினைக்க ஆரம்பித்தான்.


அந்த பெண் இப்போது தான் கல்லூரி முடித்து வேலைக்கு வருகிறாள். இப்படி எண்ணுவது அவளுக்கு தெரிந்தால் தன்னை என்ன நினைப்பாள்?.


அவளை ஏன் எனக்கு பிடித்திருக்கிறது? அவள் அழகாக இருக்கிறாள் என்றா? இல்லை என்று மனம் கூறினாலும் பின் அவளை பற்றி உனக்கு என்ன தெரியும் என்று புத்தி கேட்டது.


ஒரு வித குழப்பத்தில் தான் ஆபீஸ் கிளம்பினான் ஆனந்த்.


ரிதுவிற்கும் சந்தோசம் தாங்க முடியவில்லை தான்.


'தான் சொல்லி கேட்காத அப்பாவை அழகாக பணி நிறைவேற செய்த ஆனந்த் சார்க்கு இன்று கண்டிப்பாக நன்றி கூற வேண்டும்' என்று நினைத்து கொண்டாள்.


ராஜ்குமாரும் தன் மகளின் சந்தோஷமான முகத்தை பார்த்ததும் இதுவே போதும் என்று நினைத்து தனது பணி நாளின் இறுதி நாளைக்கு கிளம்பினார்.


"போலாமா ப்பா?" என்று வந்த ரிதுவிடம்,


"நீ போ டா. நான் வர கொஞ்சம் நேரம் ஆகும்" என்று அவர் கூற, அவரை உற்று நோக்கியவள் பின் எதுவும் கூறாமல் கிளம்பிவிட்டாள்.

தன் மனைவியின் புகைப்படம் அருகே வந்தார் ராஜ்குமார். மனைவி தன்னை பார்த்து சிரிப்பது போல தோன்றியது.


"நம்ம ரிதுவுக்கு ஒரு கல்யாணம் பண்ணிட்டா எனக்கு என்ன ஆனாலும் நான் கவலை படமாட்டேன் ஜெயா. நீ தான் அதுக்கு சரியான வழி சொல்லணும்" என்று புகைப்படம் முன் பேசிக் கொண்டவர்,


'அவளுக்கு ஒரு நல்லது செய்யாமல் தன் உயிர் பிரியாது' என்று சொல்லிக் கொண்டு கிளம்பினார்.


ஜெயா அர்த்தமுடன் சிரிப்பது போல் தோன்றியது.


ஆபீஸ் கிளம்பிய ஆனந்த் மாடி படியில் இறங்கும் போது சுகன்யா சாப்பிட அழைத்தார்.


பேசாமல் அமைதியாக அமர்ந்து சாப்பிடுபவனை வினோதமாகவே பார்த்தார் மீண்டும்.


அம்மா தன்னை பார்ப்பது தெரிந்தாலும் எதையும் காட்டி கொள்ளாமல் சாப்பிட்டு எழுந்து கொண்டான்.


"கண்ணா! இன்னைக்கு நானும் வரணுமா என்ன?" சுகன்யா கேட்க,


"ஏன்மா? ராஜ் சார்னா அப்பாவுக்கு எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கு தெரியாதா?"


"அது சரி தான்டா. ஆனால் என்னவோ எனக்கு இன்னைக்கு கோவில் போகணும்னு தோணுது"


"இதெல்லாம் ஒரு விஷயமா அம்மா? சீக்கிரம் கிளம்புங்க. நானே கோவிலுக்கு கூட்டிட்டு போய்ட்டு நானே பார்ட்டிக்கும் கூட்டிட்டு போறேன். சிம்பிள்!" என்று அவன் சொல்ல,


"அதுவும் சரிதான்" என்று சம்மதித்தார்.


ஆனால் மனம் மட்டும் ஏனோ அடித்துக் கொண்டே இருந்தது ஆனந்த்திற்கு. எப்போதும் இருக்கும் ஆனந்த் நீ அல்ல என அவன் மனமே கூச்சல் போட்டது.


காரில் அமர்ந்தவன் தன்னை தானே சமன் செய்தான்.


'கூல் டா ஆனந்த். ஜஸ்ட் ரிலாக்ஸ் மேன்' என்று கூறி கொண்டவன் பெருமூச்சுடன் தலையை உலுக்கி காரை ஸ்டார்ட் செய்தான்.


எப்பொழுதும் போல காரில் விசில் அடித்து கொண்டே ரேடியோ ஆன் செய்ய அதில்


"என்னை கொஞ்சம் மாத்தி,
என் நெஞ்சில் உன்னை ஊற்றி,
நீ மெல்ல மெல்ல என்னை கொள்ளாதே
"


என்று பாடல் ஒலிக்க தன் தலையிலே அடித்து சிரித்துக் கொண்டவன் மனம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது யார் தவறோ?.


ஆனந்த் தன் காரை பார்க் செய்யும் நேரம் சரியாக உள்ளே ரிது தன் ஸ்கூட்டியில் நுழைந்தாள்.


அழகான லாவண்டர் கலர் காலர் நெக் சுடிதாரில் வந்தவள் வண்டியை பார்க் செய்து விட்டு அங்கிருந்தே மொபைலில் யாருக்கோ அழைப்பது தெரிந்தது.


ஒரு நொடி என்றாலும் ரசித்து நின்ற காதல் கொண்ட ஆனந்தின் மனம் அவள் மொபைல் அழைப்பை பார்த்து யோசனையுடன் புருவம் சுருக்கியது.


"ஒருவேளை பாய்பிரண்ட் ஆக இருக்குமோ?" நினைத்தவன்


"அட ச்சே! என்ன புத்தி டா உன் புத்தி? முன்ன பின்ன தெரியாத பொண்ணை தப்பா நினைக்கிறியா" என்று தன்னையே நொந்து கொண்டான்.


அவன் வெளியில் வராமல் கார் உள்ளேயே இருந்ததால் ரிது அவனை கவனிக்கவும் இல்லை.


அவள் 'அப்பா' என்று மொபைலில் அழைத்ததும் தன்னையே சாடியவன், அவள் பேசும் அழகை ரசித்து கொண்டிருந்தான்.


அவனால் அந்த நிமிடம் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.


"நான் அவளை காதலிக்கிறேன்".


வேறு எதையும் அவனால் யோசிக்கவும் முடியவில்லை. அந்த உணர்வில் இருந்து மீளவும் முயலவில்லை. அந்த நிமிடத்தை ரசித்தான்.


அன்று மேனேஜரிடம் கூறி பிரிவு உபசரிப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தான் ஆனந்த்.


காலையில் தன்னை எம்டி அழைப்பதாக மேனேஜர் சொல்லிவிட்டு சென்றதும் ரிது என்னவாக இருக்கும் என்று எண்ணியவாறே அவனது அறை கதவை மெதுவாக தட்டி விட்டு,


"மே ஐ கம் இன் சார்" என்றாள்.


வந்திருப்பது அவள் தான் என்றதும் தன்னை ஒருமுறை நிலைப்படுத்திக் கொண்டு


"எஸ் கம் இன்" என்றான்.


அவள் வந்ததும் அவனுக்கே உரிய அந்த அழகிய சிரிப்புடன்


"வெல்கம் டு அவர் ARS கம்பெனி" என்று வாழ்த்தி கை கொடுத்தான்.


நேற்று முழுதும் ஏதும் சொல்லாமல் இன்று கை கொடுப்பவனை யோசித்தபடியே கை கொடுத்து


"தேங்க் யூ சார்" என்றாள்.


ஆனால் நொடியில் அவள் முகத்தில் இருந்த கேள்வியை உணர்ந்தவன்


"நேத்து மார்னிங் கொஞ்சம் பிஸி அண்ட் மதியம் மீட்டிங். சோ உங்கள மீட் பண்ண முடியல" என்றான்.


"இட்ஸ் ஓகே சார்" என்றவள் தன் தந்தைக்காக நன்றி கூறினாள்.


"ராஜ் சார் இந்த கம்பெனில பல வருடமாக இருக்குற நல்ல திறமைசாலி. அவரோட ஹெல்த் இஸ்ஸுஸ் முன்னாடியே அப்பா சொல்லிருக்காங்க"


"அண்ட் இன்னும் 2 வருஷம் இருந்தாலுமே நீங்க இங்க ஜாயின் பண்றது கான்போர்ம் ஆனதால் தான் எங்களால இந்த டிஸிஷன் இப்ப எடுக்க முடிஞ்சது. சோ உங்க நன்றிய நீங்க உங்களுக்கு தான் சொல்லிக்கனும்" என்றதும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.


"சோ ஒன்ஸ் அகைன் ஆல் தி பெஸ்ட் மிஸ் ரிது பர்ணா"


"தேங்க் யூ சோ மச் சார்" என்றவள் தன் கேபின் திரும்பிவிட்டாள்.


'ப்பா! வாய் பேசவே வேண்டாம் போல. அவ கண்ணே அவ என்ன நினைக்குறானு சொல்லிடுது' ஆனந்த் சிரிப்புடன் நினைக்க,


'எப்பவுமே எல்லார்கிட்டயும் இப்படி தான் சிரிச்சு சிரிச்சு பேசுவாரா?' என ஆராயும் மூளையுடன் நினைத்த ரிது,


தன் தலையில் தட்டி 'அப்பா தான் சொல்லியிருக்கார் இல்ல! ஹி இஸ் ஜெம்' தனக்குள் சொல்லி சிரித்துக் கொண்டாள்.

மதியம் விழாவில் ரகுவே அதிகம் பேசினார்.


"ராஜ் குமாரை உங்க எல்லாருக்கும் இங்க ஒர்க் பண்ற ஒரு எம்பிளாயா தான் தெரியும். பட் மோர்ஓவர் ஹி இஸ் மை மேன். நல்ல நண்பன். எனக்கான வாழ்க்கையை கொடுத்தவன். இவன் எனக்காக நிறைய செஞ்சிருக்கான்"


என்று பேசிக் கொண்டே செல்ல, ராஜ் குமார் அவர் கைகளை பிடித்து கண்களால் சமாதானம் வழங்கி அணைத்துக் கொண்டார்.


சுகன்யா ஆனந்த் ரிது மூவருமே அருகில் நின்று ரசனையுடன் அவர்களை பார்த்து நிற்க, அழகான அந்த தருணம் புகைப்படக்காரரால் படம் பிடிக்கப்பட்டது.


ராஜ் குமாருக்கு நன்றி கூறி விழா நிறைவடையும் போது ஆனந்த் அடுத்த அறிவிப்பு தெரிவித்தான்.


"இன்னொரு குட் நியூஸ் கூட இருக்கு. அது என்னன்னா.. இனி ராஜ் சார் இருந்த பொசிஷன்ல அவங்க பொண்ணு மிஸ் ரிது பர்ணாவை தான் அஸ்ஸைன் பண்ணி இருக்கோம்" என்றதும் அனைவரும் கைதட்ட ரிதுவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.


தன்னை விட சீனியர் நிறைய இருந்தும் தனக்கு இந்த வாய்ப்பு எப்படி என்று அவள் யோசிக்க, ராஜ்குமாரோ அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.


அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க, அப்போது ஆனந்த் ராஜ் சாரிடம் பேசி கொண்டிருந்தார்.


ரிது ஆனந்திடம் வந்து அந்த போஸ்ட்க்கு தன்னை நியமித்து இருப்பது பற்றி கேட்டாள்.


"எப்படி சார் நான் அந்த போஸ்ட்க்கு... எனக்கு எக்ஸ்பிரியன்ஸ் எதுவும் இல்லையே?" என்று இழுக்க,


"உங்களால முடியும்னு நம்பிக்கை இருக்கு மிஸ் ரிது" என்று கூறியவன்,


அதற்கு மேல் அங்கு இருந்தால் ஏதும் உளறி விடுவோம் என்று நகர்ந்து சென்றான்.


ரிதுவும் அவர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.


சுகன்யாவிற்கு மகனை தெரிந்த வரையில் அவனிடம் இப்போது இருக்கும் இந்த சந்தோஷத்தின் காரணம் தெரியாவிட்டாலும் மனம் நிம்மதியுடன் இருந்தார்.


ரிதுவை அந்த போஸ்ட்டில் நியமித்தது ஆனந்த் அல்ல என்பதை அவன் கூறவும் இல்லை ரிதுவிற்கு தெரிய போவதும் இல்லை.


அன்பு தொடரும்..
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom