• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 18

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 18


நேற்று முகம் முழுதும் புன்னகையுடன் இருந்தவன் இவன் தானா? என எண்ணும் அளவு விக்ரம் முகம் மாறியிருந்தது ஆனந்த் பேச்சை கேட்டு.


சுரேஷ் விக்ரமிடம், "என்னடா நீ இவ்ளோ பீல் பண்ற. இதையெல்லாம் ஈசியா சால்வ் பண்லாம். கூல் மச்சி" என்றான்.


ஆனால் விக்ரம் முகம் மாறவில்லை. "சாரி ஆனந்த் என்னால தான் டா எல்லாம்" என்க,


"இல்லடா நான் தான் சாரி சொல்லணும் எல்லார்கிட்டயும். முதலில் இருந்து எல்லாமே என் தவறு மட்டும் தான்" என்றான்.


அவன் பேசட்டும் என இருவரும் அமைதி காக்க, "நான் என்னோட மைண்ட் செட் மாத்தாதது தான்டா காரணம். அன்னிக்கு உன்னை அந்த நிலைமையில் பார்த்ததும் கோபம் அதான் உன் வீட்டுக்கு போனேன்".


அந்த பர்ஸ் அதிலிருந்த போட்டோ என அனைத்தையும் கூற சிரிக்கவா கோபப்படவா என விக்ரம் முழிக்க,


சுரேஷ் "என்ன டா" என்றான்.


"ஏன் டா பர்ஸ்ல ஒரு போட்டோ இருக்கிறது குத்தமா டா " என அந்த நிலையிலும் விக்ரம் வாயை விட, சுரேஷ் அவனை முறைத்தான்.


"பின்ன என்ன டா! சொல்றான் பாரு கேவலமா ஒரு ரீசன்"என அவன் ஆனந்தை முறைக்க அவன் தலை குனிந்தான்.


விக்ரமே ஓர் இறுகிய முகத்துடன் பேச ஆரம்பித்தான்.


"அவ பேரு உமா. இப்ப அவ என் வாழ்க்கைல இல்லை. இதை சொல்றதுல எனக்கு எந்த வருத்தமோ கஷ்டமோ இல்லை. நிஜம் தான் டா! உமா மட்டும் தான் வாழ்க்கை. அவ போனதும் எல்லாம் என்ன விட்டு போச்சினு தான் நினச்சேன்".


"சத்தியமா லாவண்யா எடத்துல இன்னொரு பொண்ணு இருந்து அவளுக்காக எங்க வீட்டுல பேசியிருந்தால் ஒத்துட்ருக்கவே மாட்டேன் டா".


"காதல்ன்றது ஒரு உணர்வு மச்சி. அது ஒரு முறை தான் வரணும்னு இல்லை. அதுக்காக நான் என்னை நியாயப்படுத்த சொல்லலை".


"லாவண்யா என்னை எந்த அளவு புரிஞ்சு வச்சிருக்கானு அவளோட நான் பேசின அந்த அரை மணி நேரத்தில் புரிஞ்சிக்கிட்டேன் டா. நான் உமாவ விரும்புறதுக்கு முன்னாடி இருந்தே அவ என்னை விரும்பி இருக்கா. ஆனாலும் என்னோட காதலுக்கு மதிப்பு கொடுத்தா டா. அவள் என்னை எப்படி அப்ரோச் பண்ணினா தெரியுமா. அவங்க அப்பா வந்து என் பதிலுக்கு காத்திருந்தாங்க டா. அவ்ளோ பெரிய மனுஷன் ஏன்டா எனக்காக என்னோட பதிலுக்கு காத்திருக்கனும்!" என்றான்.


பின் கண்களை மூடி சாய்ந்து, "நீ லவ் பண்ணி இருந்தா என்னோட பீலிங்ஸ் உனக்கு புரிஞ்சிருக்கும். அப்பா சொன்னாங்கனு ஒரு பொண்ணோட வாழ்க்கைல விளையாடிருக்க" என்று சற்று கோபமாகவே கூறி முடித்தான்.


அப்போது ஏதும் பதில் வராமல் போக திரும்பி ஆனந்த் முகத்தை பார்த்த இருவரும் அதிர்ந்தனர்.


கண்களில் கண்ணீருடன் ரத்தமென சிவந்த முகத்துடன் இருந்தவனை பார்த்து.


தான் கூறியது அவனை மிகவும் பாதித்து உள்ளது என புரிந்து கொண்டவன் எந்த வார்த்தை அவனை காயப்படுத்தியது என புரிந்து கொள்ளவில்லை.


"சாரி டா! நீ என்னை தப்பா நினைக்கிறத என்னால தாங்க முடியல. டேய் நீயும் நானும் ஒன்னா தானே படிச்சோம். எந்த பெண்ணையாச்சும் நான் திரும்பி பார்த்துருப்பேனா! அது ஜோதி யூஸ் பண்ற பர்ஸ். என்கிட்ட கேட்ருந்தா நானே சொல்லியிருப்பேன். ஆனால் நீ ப்ச்....." என கொஞ்சம் கோபமாகவே கூறினான் விக்ரம்.


'எது ஜோ வா? அடிப்பாவி அப்ப நீ தான் இந்த பிரச்சனைக்கு காரணமா' மனதிற்குள் நினைத்துக் கொண்டான் சுரேஷ்.


விக்ரம் காதலை உணர்ந்து கொண்ட ஆனந்த் தன் காதலை எண்ணி வெட்கினான்.


"தயவு செஞ்சு என்னை புரிஞ்சிக்கோ மச்சி" கெஞ்சலில் முடித்தான் விக்ரம்.


ஆனந்திற்கு இப்போது ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது. விக்ரம் வாழ்க்கைக்கு லாவண்யா தான் சரி. இனி அவனுக்கு எந்த கஷ்டமும் இல்லை என.


அவள் வந்து தானே தன் நண்பன் எப்போதும் போல மாறினான். அதனால் இனி எந்த சந்தேகமும் அவர்களிடம் தான் கொள்ள கூடாது என முடிவு செய்து கொண்டான் அவன் சோகங்களை மறந்து.


காதலித்து இருந்தால் உனக்கு புரியும் என விக்ரம் கூற்றை உணர்ந்தவன், தன் காதலை இவர்களிடம் சொல்லவே தனக்கு தகுதி இருக்கிறதா? என்ற சுயபட்சாபத்திற்கு ஆளானான்.


எனக்குள் இவ்வளவு அழுக்கை வைத்து கொண்டா விக்ரம் லாவண்யா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்?


அப்போ என்னை என்ன செய்வது? தவறே செய்யாதவர்களை கோபித்தேனே! காதலித்த பெண்ணை சந்தேகம் கொண்ட என்னை என் செய்வது?


நான் காதலித்த பெண்ணும் ரிது! என் வீட்டில் எனக்காக பார்த்த பெண்ணும் ரிது! என்னை காதலித்தவளும் ரிது!.


இவை அனைத்தும் மொத்தமாய் அழிய காரணம் ஆனந்த் என்ற ஒருவனே!.


'எந்த முகத்தை வைத்து கொண்டு ரிது தன்னை மன்னிப்பாள் என நினைக்கிறேன்? எனக்கு தண்டனை தான் என்ன?' என்று மூளை அவனிடம் கேள்வி கேட்டு கொண்டிருக்க சுரேஷ் அவனை உலுக்கினான்.


சுரேஷிற்கு ஆனந்த் நிலை புரிவதாய் இருக்க விக்ரம் புரியாமல் குழம்பினான்.


ஆனந்தை உலுக்கி, "என் கெஸ் சரின்னா நீ ரிதுவை விரும்பி இருக்கனும். ரைட்?" என்றான் சுரேஷ்.


"என்னடா சொல்ற? " என விக்ரம் சுரேஷை பிடித்து திருப்ப அவர்களை எதிர்கொள்ளும் தைரியம் அற்றவனாய் தலை குனிந்தான் ஆனந்த்.


சிறிது நேரம் தன்னையே ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் இருவரையும் நிமிர்ந்து பார்த்தான்.


இருவரும் கேள்வியாய் நோக்க, "நான் அவளை உயிரா விரும்புறேன் டா. பார்த்த செகண்ட்ல இருந்து அவ முகம் தவிர என் மைன்ட்ல எதுமே இல்லை!".


"என்னோட அவசர புத்தியால எங்க என்னை விட்டு தூரமா போய்டுவாளோனு பயமா இருக்கு டா" என முகத்தை மூடி கொண்டான் கைகளால்.


கைகளில் பிசுபிசுப்பை உணர்ந்து எடுத்தவனை அதிர்ச்சியுடன் இருவரும் பார்த்தனர்.


"ஆனந்த் அழுகிறானா?"


"டேய் என்ன டா சின்ன குழந்தை மாதிரி" என சுரேஷ் அவன் கண்களை துடைத்து அருகில் அமர்ந்து ஆறுதல் படுத்த ஆனந்த் கண்ணீரை கண்ட விக்ரம் உறைந்து அமர்ந்திருந்தான்.


'ஒரு பெண்ணுக்காக அழுகிறான்!' என்ற எண்ணமே அவனின் அந்நிலைக்கு காரணம்.


"எனக்கே எனக்குன்னு வர்ற என்னோட மனைவி மட்டுமே என்னோட உணர்வுகளை என்னோட மனநிலையை உணரணும். வேற யாருக்கும் புரியணும்னு அவசியம் இல்லை".


கல்லூரி படிக்கும் போது ஆனந்த் கூறியது ஞாபகம் வந்தது விக்ரமிற்கு. அவனின் மனநிலை இப்போது தெளிவானது விக்ரமிடம்.


"நான் அவளை நம்பி காதலிச்சேன் கைவிட்டுட்டா. நீ காதலிச்ச பொண்ண நம்பலை. இது தான் விதியா டா?" என்றவன் பெருமூச்சோடு அமைதியானான் விக்ரம்.


'அவள் இவன் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டுமானால் இவனை மன்னிக்க வேண்டுமே? இவ்வளவு விரும்புபவன் செய்ததும் சிறு தவறில்லை' எப்படி கையாள்வது என யோசிக்கலானான்.


ஆனந்த் சிறிது ரிலாக்ஸ் ஆக அவனே பேசினான். "நான் செய்தது பெரிய தப்பு தான். ஆனால் அவளை இழக்க எனக்கு முடியாது டா. எனக்கு அவ வேணும். என்கூடவே இருந்து ஆயுசு முழுக்க என்ன தண்டனை கொடுத்தாலும் பரவாயில்லை" என அவன் எங்கோ பார்த்து பேச அவன் மனநிலை புரிந்து இருவரும் அமைதியாகினர்.


அனைத்தையும் கொட்டி தீர்த்த பின் ஏதோ சிறு தெளிவு பிறக்க மூன்று நாட்களாக தொலைத்த உறக்கம் அன்று அவனுக்கு தேவையானது.


சுரேஷ் அறைக்கு நேராக சென்றவன் படுத்தததும் தூங்கியும் விட்டான்.


விக்ரம் அங்கு இருக்க நினைத்தாலும் ஒரு புறம் மனைவி ஞாபகம் தோன்றியது.


உமா பற்றி பேசியது முதல் லாவண்யாவை பார்க்க மனம் ஏங்கியது.


அவன் யோசனையில் இருக்க சுரேஷ் அவனிடம் வந்தான்.


"நீ கிளம்பு டா. நான் பார்த்துக்கறேன்" என்றதும்,


"தப்பா நினச்சிக்காதே டா" என விக்ரம் கூற,


"ஹேய் ச்சீ உளறாம கிளம்பு டா" என சிரித்தபடி வழியனுப்பி வைத்தான்.


பல நாட்களுக்கு பின் நிம்மதியான உறக்கம் கிடைத்தது ஆனந்த்திற்கு. நண்பர்களிடம் பாரத்தை இறக்கியாதாலோ ரிதுவிடம் எப்படியும் சமாதானம் செய்ய முடியும் என்ற தைரியத்தாலோ.


விடிந்து 11 மணி அளவில் ஆனந்த் எழுந்ததும் சுரேஷ் காபியுடன் வர தெளிவான மனதுடன் புன்னகைத்தான் ஆனந்த்.


அதில் நிம்மதியுற்றவன் "அம்மா கிட்ட சொல்லிட்டு வந்த தானே?" என்ற சுரேஷ் கேள்வியில் முகம் வாடினான்.


அதை புரிந்தவனாக, "சரி வெளில போலாமா டா. நான் வந்து டென் டேஸ் ஆச்சு. இன்னும் எங்கயும் போகல. நீ கம்பெனி குடுக்கிறதா இருந்தா நம்ம போகலாம்" என்றான்.


அப்போது தான் சுரேஷ் பற்றி சிந்தித்தான் ஆனந்த். அம்மா அப்பா இருவரையும் கல்லூரி படிக்கும் போது அச்சிடேன்ட்டில் இழந்து தனியாக இருக்கிறான்.


பல மடங்கு சொத்து இருந்தும் கல்லூரி முடியும் வரை நண்பர்களுடன் நாட்களை கழித்தவன் பின் கல்லூரி முடித்த ஒரு வாரத்தில் வெளிநாடு கிளம்பிவிட்டான்.


இப்போது வந்தது விக்ரம் திருமணத்திற்கு தான் என நினைத்து கொண்டான் ஆனந்த்.


"டேய் ஏன்டா முழிச்சிட்டே கனவு காணுற?" என்றதும் சுய நினைவு வந்தவன்,


"சாரி டா. போகலாம். நான் வீட்டுக்கு போய்ட்டு கொஞ்சம் ரெஃபிரேஷ் பன்னிட்டு வந்துடறேன்" என்றான் ஆனந்த்.


சுகன்யா வாசலில் நின்றாலும் ஏதும் பேசாமல் மாடிப்படி ஏறி சென்றவன் தனதறைக்கு செல்லாமல் எதிரே இருந்த ராஜ்குமார் அறைக்குள் நுழைந்தான்.


அம்மா தன்னை புரிந்து கொள்வார்கள் என்று தெரியும். ரிது இப்பொது இங்கிருக்க காரணம் அவளது அப்பா தான். முதலில் அவருக்கு விளக்கம் கொடுப்பது தான் சரி.


கண்டிப்பாக அன்று தான் ரிதுவிடம் நடந்து கொண்டது அவருக்கும் தெரிந்திருக்கும். அதில் அவர் மனம் பலவாறு யோசித்தால்? அவரிடம் பேசியே ஆக வேண்டும் என்று உள்ளே சென்றான்.


கட்டிலில் சாய்ந்து ஏதோ யோசனையில் இருந்தவர் ஆனந்த் வந்ததும் எழுந்து அமர்ந்தார்.


"வாங்க தம்பி".


"சாரி மாமா! நீங்கள் தூங்கினா டிஸ்டர்ப் பண்ணாம போய்டணும்னு தான் கதவை தட்டாமல் வந்துட்டேன்" என்றான்.


அவனது மாமா என்ற அழைப்பு அவரின் மனதை பாதி தெளிய வைத்திருந்தது. (பின் திருமணத்திற்கு பிறகு இன்று தானே அவ்வாறு அழைக்கிறான்).


"சாப்பிட்டீங்களா" என பொதுவாக பேச ஆரம்பித்தான். அவருக்கு தெரியுமே விஷயம் இல்லாமல் அவன் வரவில்லை என்று.


முதலில் எவ்வாறு பேச என தயங்கியவன் பின் ஒருவாறு மனதுக்குள் சொல்லி பார்த்து கொண்டு பேச ஆரம்பித்தான்.


காதல் தொடரும்..
 

Rajam

Well-known member
Member
தெளிவு வந்தாச்சு.
இனி ரிது என்ன முடிவு எடுக்கறாளோ
பார்க்கலாம்.
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom