• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 17

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 17


வீட்டை விட்டு செல்ல இருந்தவளை கைப்பிடித்து தடுத்து இருந்தான் ஆனந்த்.


அவள் வலி உணர்ந்தான் தான் ஆனாலும் அவளை விட்டுவிடும் எண்ணம் இல்லை.


தன் மனதை இப்போது இருக்கும் சூழலுக்கு கொண்டு வந்தான் வலுக்கட்டாயமாக.


இப்போது தான் கூறினாலும் அவள் கேட்கும் நிலையில் இல்லை. அதைவிட எந்த நியாமான காரணமும் சொல்வதற்கும் இல்லை.


'தன் மீது தவறு எனும் போது அவள் வெளி செல்வது நியாயமா?' என நினைத்தவன் முதலில் இந்த அறையில் இருந்து அவளை வெளியேறாமல் தடுக்க வேண்டும் என நினைத்து உணர்ச்சி துடைத்த குரலில் பேச ஆரம்பித்தான்.


"ரிது நம்ம பிரச்சனை பேசிக்கலாம் அதுக்கு நேரம் இருக்கு. இப்போது நீ வெளியில போனா உங்கள் அப்பாவை நினைச்சு பார்த்தியா?
அவருக்கு இப்போது தான் உடல்நலம் சரியாகி வருது. இப்போது போய் அவர் முன்ன இதெல்லாம் சொன்னால் அவர் நிலைமையை நினச்சு பாரு" என்று சரியான அம்பை எய்தான்.


கையை விடாமல் பிடித்திருந்த அவனை முறைத்து கொண்டிருந்தவள் அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்து அமைதியானாள்.


அதில் நிம்மதி அடைந்தவன் "ப்ளீஸ் ரிது! நான் எவ்வளவு கில்ட்டியா பீல் பன்றேன்னு உனக்கு சொல்லி புரியவைக்க முடியல. ஆனால்...."


அவன் முடிக்கும் முன், "போதும் நான் எதையும் கேட்க விரும்பல. நான் ஒன்னும் உங்கள் மனைவின்னோ, இந்த வீட்டு மருமகள்னோ இங்க தங்கலை. என் அப்பாவோட பிரண்ட் வீடு அப்டின்ற முறையில தான் இங்கே இருக்க போறேன்" என்றதும் அமைதியாகினான் ஆனந்த்.


"தேங்க்ஸ் ரிது. எனக்கு ஒரே ஒரு சான்ஸ் குடேன். உன்கிட்ட நான்.. நீ என்னை விரும்பினது..."


"வேண்டாம்! எதுவுமே வேண்டாம்! அந்த தப்பை எப்பவோ உணர்ந்து நான் திருந்திட்டேன். தயவு செஞ்சு அதை சொல்லி என்னை கூனி குறுக வைக்காதிங்க" என்றவள் தலையணையுடன் கீழே படுத்து கொண்டாள்.


முகத்தில் அடி வாங்கிய உணர்வு அவனுக்கு. ஆனால் தான் செய்த தவறின் முன் அவள் பேசுவது ஒன்றும் அதிகம் இல்லையே!


தூக்கம் வராது பால்கனி சென்றான். 'சந்தேகம் கொண்டது தவறு தான். அதற்கும் சேர்த்து மொத்தமாக என் காதலால் அவள் காயத்தை ஆற்றுகிறேன். அவள் என்னை விட்டு செல்ல அனுமதிக்க முடியாது' என எண்ணிக் கொண்டான்.


அவளை எவ்வாறு சமாதானப் படுத்துவது என யோசிக்க அப்போது ஆனந்த் மொபைல் அலறியது.


அழைப்பது விக்ரம் என்றதும் சலிப்புடன் ஆன் செய்து காதில் வைத்தான்.


அழைப்பை எடுத்த உடனே, "மச்சி நான் செம்ம ஹாப்பி டா" என அவன் நிலைமை தெரியாமல் வெறுப்பேற்ற.


"டேய் அசிங்கமா ஏதாச்சும் சொல்லிட போறேன்" என கோபத்தில் பல்லை கடித்தான் ஆனந்த்.


அதிர்ந்த விக்ரம் ஒருவேளை நம்பர் தவறாக போய்விட்டதோ என்று மொபைலை பார்க்க அது ஆனந்த் நம்பரை தான் காட்டியது.


"ஹலோ ஆனந்த் மொபைல் தானே" என்றான் தெளிவுபடுத்திக் கொள்ள.


அதில் மீண்டும் கடுப்பானவன் "பரதேசி நீ மட்டும் இப்ப என் கைல கிடைச்ச.." என மீண்டும் உருமினான்.


சந்தேகமே இல்லை இது அவனே தான் என தெளிவானவன், "நீ ஏதோ நல்ல மூட்ல இருக்கிற போல நான் அப்புறம் பேசுறேன் டா " என அவன் பதில் பேசும் முன் வைத்து விட்டான்.


மொபைலை கீழே போட்ட விக்ரம் 'ஏன் இவ்ளோ கடுப்பா இருக்கான்? ஒருவேளை தங்கச்சிகிட்ட அர்ச்சனை வாங்கியிருப்பானோ' என்று நினைத்து திரும்ப அங்கே லாவண்யா இடுப்பில் கை வைத்து அவனை முறைத்து கொண்டிருந்தாள்.


அசிங்கப்பட்டது தெரியக்கூடாதே என "ஆனந்த் தான்! விருந்துக்கு கூப்பிடுறான்" என வாய்க்கு வந்ததை உளறினான்.


நம்பிவிட்டேன் என்ற பார்வை பார்த்தவள் "வழியுது தொடச்சிக்கோங்க" என அவள் முந்தானையை நீட்டினாள்.


இதற்கெல்லாம் அசருவேனா என கெத்தாக அவள் முந்தானை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்தான் லாவியின் கணவன்.


வீட்டிற்கு வந்த விக்ரம், ஜோதி மூலம் ரிது ஆனந்த் திருமண நிகழ்வை தெரிந்து கொண்டான்.


அந்த மகிழ்ச்சியில் தான் உடனே நண்பனுக்கு அழைத்து ஆர்வத்தை வெளிப்படுத்தினான்.


ஆனந்த் பேசியதில் அவனுக்கு எந்த கோபமும் இல்லை.


ஆனந்த் ரிது இருவருமே நல்லவர்கள். நல்ல பொருத்தமும் கூட. அவர்கள் நல்வாழ்விற்கு வேண்டி கொண்டவன் உடனே சுரேஷை அழைத்து அவனிடமும் தனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொண்டான்.


சுரேஷிற்கு தெரியாது என நினைத்து ஆனந்த்தும் விக்ரமும் மாறி மாறி நடந்தவைகளை எல்லாம் அவனிடம் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.


ஆனந்த் ரிது திருமணம் தவிர்த்து அனைத்தும் ஏன் விக்ரம் தற்போதைய திருமணம் வரையில் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் சுரேஷின் தலையீடு இருப்பது அவர்களுக்கு தெரியாமல் போனதும் ஒரு வகையில் நல்லதே!


அடுத்த இரண்டு நாட்கள் ஆனந்த் ரிதுவின் கண்களில் படவே இல்லை. காலையில் எழுந்து செல்பவன் இரவு வெகு நேரம் கழித்தே வருவான்.


அவன் குடித்து விட்டு வருவானோ என்ற அச்சத்தில் சுகன்யா அறையில் ரிது முடங்கிக் கொள்வாள்.


சுகன்யா தடுக்கவும் இல்லை. அவன் மேல் இருந்த கோபத்தில் ரிதுவிடம் அவனை பற்றி எடுத்து சொல்லவும் தோன்றவில்லை.


தன் தவறை உணர்ந்த நொடியில் இருந்து அவன் மனம் வெகுவாய் கலங்கியது அவனுக்கு. ரிதுவினை ரொம்பவே நாடியது அவன் மனம்.


'எனக்கு தண்டனை தேவை தான் அம்மு அதை என் அருகில் இருந்து தர முடியாதா?' என தனக்குள் கேட்டுக் கொண்டான்.


இரண்டு நாட்கள் கடந்திருக்க இரவு எட்டும் நேரம் ஆபீஸ்ல் இருந்தவனுக்கு வீட்டிற்கு செல்ல மனம் இல்லை.


கோபம் என்றால் என்ன எனும் அளவுக்கு சுத்தமாக மாறியிருந்தான் ஆனந்த்.


தன் மேல் தவறு இருக்கும் போது யாரிடம் கோபம் கொள்ள முடியும்?.


வீட்டில் அனைவரும் பேசாமல் இருப்பது என்னவோ போல ஆக சுரேஷிடம் பேசலாம் என கார் சாவியை எடுத்து கொண்டு கிளம்பினான்.


போனில் சுரேஷிடம் தகவல் கூறிவிட்டு கிளம்பினான். ஆனந்த் வருவதாக கூறவும் சுரேஷ் விக்ரம் நம்பர்க்கு அழைத்தான்.


"சொல்லு டா".


"உடனே கிளம்பி வா" என சுரேஷ் கூற,


"டேய் என்ன விளையாடறியா?" என்றதும்,


"நான் என்ன லூசா உன்னோட விளையாட? ஆனந்த் வந்திட்ருக்கான். நீயும் வந்து சேரு" என்றவன் போனை வைத்து விட
விக்ரம் கடுப்பானான்.


'அவன் வர்றான்னா அவனோட பேச வேண்டியது தானே! என்னை ஏன் கூப்பிட்றான்' என சிறு பிள்ளைத்தனமாக நினைத்தவன் லாவண்யாவை விட்டு நகர அடம்பிடித்தான்.


பின் ரிது ஆனந்த் பற்றி அறிந்தவன் அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை என நினைத்தவன் முடிந்தால் எதாவது உதவலாம் என வீட்டில் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.


"சாரி மச்சி! நான் உன்னை பர்ஸ்ட்லேர்ந்து மண்டபத்தில வாட்ச் பண்ணேன். ரிதுவை நீ பார்த்த பார்வை... அது எனக்கு லவ்னு தோணிச்சு. பட் எனக்கு கொஞ்சம் ஸ்டார்டிங் ட்ரபுள்" என சுரேஷ் கூறிக்கொண்டிருக்க,


அப்போது உள்ளே நுழைந்த விக்ரம், 'இட்ஸ் யுவர் டர்ன் டா விக்ரம்' தனக்கு தானே சொல்லிக் கொண்டு,


"மச்சி உனக்கு ஸ்டார்டிங் தான் ட்ரபுள்! ஆனால் இவனுக்கு ஸ்டார்டிங்லேர்ந்து எல்லாமே ட்ரபுள். ஹா ஹா ஹா" என வில்லன் போல சிரிக்க மற்ற இருவரும் இவனை வெட்டவா குத்தவா என கொலைவெறியோடு பார்த்தனர்.


ஜோதி மூலம் அவர்களின் திருமண தகவல் அறிந்து அதை சுரேஷிடமும் சொல்லியிருந்தான் விக்ரம். அவனுக்கு இன்னும் கூட ஆனந்த் செய்து வைத்த வினை எல்லாம் தெரியாது.


ஆனால் ஏதோ பிரச்சனை என்று மட்டும் அறிந்து இவ்வாறு உளறி கொண்டிருந்தான் விக்ரம்.


சுரேஷ், 'ஆனந்த் மனைவி என்று தெரியாமல் தான் என்ன நினைத்தோம் என்று ஆனந்திடம் சொல்லிவிட வேண்டும்'.


மேலும் நேற்று விக்ரமிடம், "க்ரீன் கலர் சாரி யார்?" என்று தான் கேட்டதை நண்பன் தவறாக நினைத்திருப்பானோ என்று அவனை சமாதானப்படுத்த பேச துவங்கும் போது தான் வந்து சேர்ந்தான் விக்ரம்.


விக்ரமை முறைத்தவர்கள் பின் மீண்டும் சுரேஷ் பேச துவங்க அதை தடுத்த ஆனந்த் தன் தவறை கூற தொடங்கினான்.


முதலில் தயங்கி அமர்ந்தவன் ஒருவாறு தன்னை சமாளித்து அனைத்தையும் சொல்லி முடித்தான். அவன் காதலித்ததை தவிர.


ஆனந்த் பற்றி இருவருக்கும் நன்றாக தெரியும். அனைத்தையும் மிக சரியாக செய்பவன்.


ஆனால் அவன் மிகவும் சொதப்புவது எதையும் ஆராயாமல் அப்படியே எடுத்து கொள்வான். இதுவரை இது அவனையோ மற்றவர்களையோ பாதித்ததில்லை.


ஆனால் இன்று அவன் செய்த ஏதோ ஒன்று அவனையும் ரிதுவையும் பெரிதாக பாதித்து இருக்கிறது என்று மனதுக்குள் விக்ரம் ஆனந்த் பற்றி எண்ணிக் கொண்டிருக்க ஆனந்த் நடந்ததை கூறினான்.


இப்போது ஷாக் ஆனது விக்ரம் தான். சுரேஷ் எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக் கொண்டான்.


விக்ரம் தன்னையே நொந்து கொண்டு கவலை முகத்துடன் அங்கிருந்த சோஃபாவில் விழு, திடீரென விக்ரம் முகபாவனை மாற்றத்தில் ஆனந்த், சுரேஷ் அவனையே பார்த்திருந்தனர்.


"நான் செஞ்ச பாவம் ஏன்டா எல்லாரையும் துரத்தி வருது" என அவன் சீரியசாக பேச நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அவன் அருகில் வந்தனர்.


காதல் தொடரும்..
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom