• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 16

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 16


ஆனந்த் திருமணம் பற்றி இன்னும் சுரேஷ் விக்ரம் இருவரும் அறிந்திருக்கவில்லை.


ஆனந்த் வீட்டில் செய்த கலவரத்தில் அவள் நெற்றி வகிட்டில் குங்குமம் இடவில்லை. மெல்லிய கயிறு மட்டுமே அதையும் சேரீயில் மறைத்து இருந்தாள்.


அதைவிடவும் புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாமலே இருந்தனரே ஆனந்த் ரிது!.


தாலி செயின் மாற்றும் வரை மஞ்சள் கயிற்றை தான் போட்டிருக்க வேண்டும் என சுகன்யா சொல்லி விட, பட்டு சாரீ என்பதால் அதற்குள் போட்டிருந்த கயிறு வெளியே தெரியவே இல்லை. எனவே இதை லவ் என்றே நினைத்திருந்தான் சுரேஷ்.


ஆனால் தங்கை என்று விக்ரம் சொன்னதும் ஏன் ஆனந்த் அவன் சட்டையை பற்ற வேண்டும்?


ஆனந்த் தன் சட்டையை பற்றியதும் அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்திருந்தான் விக்ரம்.


ஒரே ஒரு நொடி ஷாக்கானாலும் சுரேஷ் தான் முதலில் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்து அடுத்தவர் கண்கள் கவராத படி இதை தடுத்து இருந்தான்.


ஆனந்த் அப்போதும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருப்பதை கண்ட சுரேஷ் அவனை உலுக்கி,


"டேய் சிஸ்டர்னு தானே சொன்னான்! அதுக்கு ஏன்டா இப்படி பிஹவ் பண்ற? வாட்ஸ் யுவர் ப்ரோப்லேம்?" என்று கேட்டு கொண்டிருக்க ஆனந்த் அசையாமல் அமர்ந்திருந்தான்.


விக்ரம் நிலை அதற்கும் மேல். நண்பனின் திடிர் தாக்குதல் ஏன் என புரியாமல் அவனை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.


சில நிமிடம் அமைதி மட்டுமே அந்த மூவருக்குள். ஆனந்திற்கு உள்ளுக்குள் இன்ப அலையும் துன்ப அலையும் மாறி மாறி உருவாக சில நிமிடங்களில் நிமிர்ந்து விக்ரமை பார்த்தான்.


அவன் இன்னும் ஆனந்தை பரிதாபமாக தான் பார்த்துக் கொண்டிருந்தான்.


நிதானமாக அவனிடம் ரிதுவை பற்றி கேட்க ஆரம்பித்தான்.


"ரிது உனக்கு சிஸ்டரா? அவளை எப்படி உனக்கு தெரியும்?" அவன் குரலில் இருந்த அழுத்தம் ஏன் என சுரேஷிற்கு புரியவில்லை.


இப்போது விக்ரமிற்கும் ஏதோ புரிவது போல இருந்தது. ஆனந்த் ஆபீஸிள் ரிது வேலை செய்வது தெரியும் என்பதால் அதில் பழக்கமோ! என ஆனந்த்தை ஆராயும் பார்வை பார்த்தவன் பின் ரிதுவை பற்றிய விவரங்களை கூறினான்.


மேலும் ரிது, அவள் அப்பா இருவரையும் காணவில்லை என ஜோதிதான் மிகவும் வருந்தியதை கூறியவன் தானும் இன்விடேஷன் கொடுக்க சென்று அவர்களை காணாமல் வந்ததை கூறினான்.


பின் விக்ரம் திரும்பி தன் தங்கையை பார்த்தான். அவளுக்கு இவர்களை பற்றி ஏதேனும் தெரியுமா என யோசித்து கொண்டே.


அனைத்தையும் கேட்டுக் கொண்டவன் முகத்தில் சொல்ல முடியாத வலி. உடனே திரும்பி ரிதுவை அவன் கண்கள் தேட அங்கே லாவண்யா, ஜோதி மட்டுமே இருந்தனர்.


நண்பர்களை மறந்து அவர்களிடம் ஓடியவன் ரிதுவை கேட்டான். அவள் சென்று விட்டதாக கூற, எப்படி சென்றிருப்பாள் என்ற கவலை வந்தது.


அன்னை போன் செய்தது ஞாபகம் வந்தது. அவன் மேல் கோபமாக இருந்ததால் அவனை பற்றி ஏதும் கேட்காமல் எடுத்த உடனே, "ரிது அங்க தான் இருக்கா. முடிஞ்சா உன்கூட கூட்டி வா" என்று வைத்து விட்டார்.


அப்போது அதை அலட்சியம் செய்தவன் இப்போது வருந்தினான்.


அதற்கு மேலும் அங்கே இருக்க முடியாமல் வெளியேற, சுரேஷ் விக்ரமை ஆறுதல் கொடுத்து வீட்டிற்கு செல்லுமாறு கூறினான்.


விக்ரமும் கவலை படிந்த முகத்துடன் கிளம்பினான்.


விக்ரம் குடும்பத்துடன் கிளம்பும் நேரம் சுரேஷ் ஜோதியிடம் சிறு தலை அசைப்புடன் விடைபெற்றான்.


ஆனந்த் வழி எங்கும் அவள் தென்படுகிறாளா என தேடி கொண்டே சென்றவன் அவள் இல்லாது போகவும் சோர்வுடனும் அவளை எப்படி இனி தன்னால் எதிர்கொள்ள முடியும் என்ற குற்ற உணர்ச்சியுடனும் வீடு வந்து சேர்ந்தான்.


அங்கு முதலில் அவன் தேடியது ரிதுவை தான். பால் கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தவள் அவன் வரவை பொருட்படுத்தாது அப்பாவின் மாத்திரைகளை கொடுத்து அவர் அறைக்குள் அழைத்து சென்றாள்.


வந்தவன் ஏதும் பேசாமல் அங்கேயே அமர பாலை குடித்து கொண்டிருந்த சுகன்யா அவனை பார்த்துவிட்டு அறைக்குள் சென்றுவிட்டார்.


தனது மகன் இப்படி ஒரு செயலை செய்வான் என அவர் கனவில் கூட நினைத்திருக்க மாட்டாரே!.


ரகுவும் அவனிடம் ஏதும் பேசாமல் சென்றுவிட ஆனந்த் தான் தன் தவறை எண்ணி மருகினான்.


அவளை அடித்ததற்கு தான் இந்த தண்டனை. அவளை இன்னும் தான் படுத்தியபாடு தெரிந்தால்?.


அம்மாவின் ஆறுதலை மனம் தேட வெகுவாய் கலங்கியவன் ஏதும் செய்ய இயலாமல் தன் அறைக்கு சென்றான்.


சுகன்யா மதியம் நடந்ததை நினைத்து கொண்டிருந்தார்.


"அம்மா" என்று ரிது கத்தியவுடன் அனைவரும் பதறி அவள் அறை கதவை தட்ட, தட்ட தட்ட திறக்காமல் வெகு நேரம் கழித்து திறந்து கோபத்துடன் வெளியேறி இருந்தான் ஆனந்த்.


உள்ளே நுழைந்த அனைவரும் பார்த்தது கன்னத்தை கையில் பிடித்தபடி இருந்த ரிதுவை தான்.


சுகன்யா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ராஜ்குமார் நிலையோ மகளை எண்ணி கலங்கியது.


தனக்கு நல்லது நடக்க எண்ணி மகள் வாழ்க்கையை கெடுத்துவிட்டோமோ என்று நினைத்தவர் கண்கள் கூட கலங்கிட நெஞ்சில் கைவைத்துவிட்டார்.


சில நிமிடங்களில் சுதாரித்து தன்னிலை அடைந்தவள், அனைத்தையும் விட்டு(மறைத்து) அனைவரையும் பார்த்து புன்னகைத்து "கிளம்பலாமா?" என்று கேட்க,


பெரியவர்கள் அனைவருக்கும் பலத்த அடி. அவளே சொல்ல விருப்பம் இல்லாதபோது யாரும் அவளிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.


ரிது தந்தையிடம் சொல்லி விட்டு அத்தை மாமாவுடன் கிளம்பிவிட்டாள்.


நினைக்க நினைக்க சுகன்யா கோபம் ஆனந்த் மேல் பெருகியது. அங்கேயே இருந்தால் அவனை அடித்து விடுவோமோ என்று தான் ஆனந்தை பார்த்ததும் தன் அறைக்குள் சென்றுவிட்டார்.


ரகுவிற்கும் ஆனந்த் மேல் கோபம் தான். இதுநாள் வரை தான் பார்த்த ஆனந்த் தானா என்று.


ஆனாலும் அவன் இதற்கு வருந்துவது அவன் கண்களில் தெரிய இப்போது ஏதும் பேச வேண்டாம் என்று அவரும் அறைக்குள் நுழைந்து கொண்டார்.


மீதியிருந்த உயிரும் அற்றவனாய் தன் அறைக்கு படி ஏறினான் ஆனந்த்.


பேசும் தைரியமோ திடமோ சிறிதும் இல்லை. ஆனாலும் ஏதோ நப்பாசை போல. மன்னிப்பை யாசிக்க சென்றான்.


தரையில் படுக்கை விரித்து படுக்க செல்ல இருந்தவள், "ஒரு நிமிஷம் ரிது" என்ற வார்த்தைகளில் திரும்பாமல் அப்படியே நின்றாள்.


அசைவில்லாமல் நிற்பவளின் கோபம் புரிய தானே அவள் முன் சென்று நின்றான்.


சிவந்த அவளின் கன்னங்கள் அவனை எரிக்க அவள் முகம் பார்க்க கூட தயங்கி தலை குனிந்தான்.


"சா... சாரி ரிது! இந்த வார்த்தை சொல்ல கூட எனக்கு தகுதி இல்லனு தெரியும்" என்றவன் நிமிர்ந்து அவள் முகம் பார்க்க, அதன் பாவனை என்னவென்று புரிந்துகொள்ள இயலவில்லை.


ஆனாலும் தொடர்ந்தவன் அவள் கண்களின் மொழியில் தடுமாறினான்.


"ரிது, விக்ரம்.. சூஸைட்.. அந்த.. பொண்ணு.. பணம்.." என வார்த்தை கோர்க்க முடியாமல் தடுமாறினான்.


மூச்சு முட்டுவது போல தோன்ற பேச முடியாத தன்னிலையை தானே நொந்து கட்டிலில் தொப்பென அமர்ந்தான்.


ரிதுவிற்கு அவன் பேசியதில் ஓரளவு புரிந்தது போல இருந்தது. அன்று நம்பர் ஒன் விக்ரம் என்று கூறியது விக்ரம் அண்ணாவை தானா என்று இப்போது தோன்றியது.


ஏற்கனவே அவன் செய்த செயல்களுக்கு முழு விபரம் தெரியாமல் குழம்பி இருந்தவள் அவன் நகைக்காக திருமணத்தை நடத்திக் கொண்டதாக சொல்லவுமே அவளுக்குள் மலர ஆரம்பித்திருந்த காதல் கருக ஆரம்பித்தது.


மேலும் அவன் அடுத்தடுத்து செய்த அனைத்தையும் யோசித்தவள், அவனுக்கு தன்னை புரிய வைத்துவிட்டு இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்ற முடிவையும் எடுக்க வைத்திருந்தது.


இப்போது அனைத்தையும் விக்ரம் அண்ணா சொல்லிவிட்டார் போல என முழுதாய் தெளிந்தவள் முடிவுடன் அவன்முன் பேசினாள்.


"அவசரப்படாதிங்க மிஸ்டர் ஆனந்த். இப்பவே சாரி சொல்லிட்டா எப்படி? விக்ரம் என்னோட லிஸ்ட்ல இல்லைனு கவலைப்படாதீங்க. அதுதான் நீங்கள் அடுத்தடுத்து இன்னும் என்னென்ன பெயர்களோ சொன்னீர்களே?, ம்ம்ம்,... ப்ச்! சரியா ஞாபகம் வரமாட்டுது. ஹான் ஞாபகம் வந்துட்டு! அப்பாடக்கர். அது யார்னு தெரியணும்ல. அப்புறம் ஆபீஸ்ல் கேட்ட விஜயன் பத்தின டீடெயில்ஸ் தெரிஞ்சிக்கனும்! எல்லாம் தெரியட்டும். அப்புறம் சாவகாசமா பேசிக்கலாம் ம்ம்ம். இப்ப வழி ப்ளீஸ். நான் தூங்கணும்" என்று நக்கல் தொனியில் அவனுக்கு பதிலடி கொடுத்தாள்.


அவள் பேச பேச ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் இருந்தவன் அவள் எவ்வளவு வலி பட்டிருப்பாள் என எண்ணி எண்ணியே கூனி குறுகினான்.


எவ்வளவு மோசமான வார்த்தைகள்? தன்னுடையது தான். தான் பேசியது தான். இப்போது கேட்க கேட்க சொல்லொண்ணா துயரமும் அழுத்த எங்கோ மீதி வைத்திருந்த சக்தியும் வடிந்து போனது.


"ரிது ப்ளீஸ் இனி தயவு செய்து இந்த வார்த்தைகளை பேசாதே. நான் ஒரு அடி முட்டாள். நண்பனுக்குன்னு நினச்சு... பணத்தை மையமா வச்சு... உன்னை வதைத்து ப்ச்!" என்று அதற்கு மேல் பேச முடியாது தலையை கையில் தாங்கி கொண்டு அமர்ந்தான்.


"போதும்! இனி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை உங்களுக்கு. இவ்ளோ நாள் ஆபீஸ்ல் நீங்க என்னை பார்த்து கோபப்படும் போதெல்லாம் ஏதோ தவறாக புரிஞ்சிருக்கீங்க அது சரி ஆகிடும் நினச்சேன்"


"ஆனால் என்னை போய் பணத்துக்காக நடிக்கறேனு.... ச்ச! எவ்ளோ கீழ்த்தரமான எண்ணம்" என்று கொதித்தாள் ரிது.


"உங்கள எவ்ளோ உயரத்தில வச்சிருந்தேன் தெரியுமா?. உங்களை எப்படியெல்லாம் நினைச்சிருந்தேன் தெரியுமா?" என்று அவள் கத்தியதில் காயப்பட்ட வலியில் சுருண்டிருந்தான் ஆனந்த்.


"நான் ஒரு பைத்தியக்காரி இது தெரியாம உங்கள போய் காதலிச்சு.." என்றவள் தலையில் கை வைத்து அமர்ந்து விட, அவளின் கடைசி வார்த்தைகளில் அவன் இதயம் சுக்கு நூறாக உடைந்தது.


மேலும் அதே நிலையில் அமர்ந்து "ஆமா வாழ்க்கைல நான் பண்ணின ஒரே தப்பு உங்களை காதலிச்சது. நீங்கள் என்ன சொல்றது! நான் சொல்றேன். இங்க இருக்கிற அத்தனை பேர் முன்னாடியும் நீங்கள் மன்னிப்பு கேட்டாலும் இந்த குடிகாரனோட அதுவும் சந்தேக பேய் புடிச்ச குடிகாரனோட வாழ எனக்கு விருப்பம் இல்லை" என்றாள்.


ஆனந்த் அறிந்த ரிது இவள் இல்லை என்பது போல அவள் குரலில் அவ்வளவு ஆவேசம். தகுதியில்லாதவனிடம் மனதை கொடுத்துவிட்டோமே என்ற ஆதங்கம்.


அவளும் தன்னை விரும்பினாள் என்று தெரிந்த போது ஆனந்த் கண்களில் ஒரு மின்னல் எழுந்தது. அடுத்து அவள் பேசியதில் மொத்தமாய் மாண்டு தான் போனான்.


அவளுக்கு புரிய வைத்து விடும் நோக்கில் "ரிது " என்று அவன் அவளை சமாதானப் படுத்த முயல,


அவனை தீயென முறைத்தவள், "எங்க கிட்ட காசு பணம் இல்லாம இருக்கலாம். ஆனால் என் அப்பாவோட நான் எவ்ளோ சந்தோசமா இருந்தேன் தெரியுமா? என்னோட சந்தோஷத்த உங்களால இந்த பணத்தால் வாங்கி தர முடியுமா"


"இந்த வீட்ல இப்ப நான் இருக்கிறது முள் மேல நிக்கிற மாதிரி இருக்கு. இந்த பணத்துக்காக தான் உங்கள கல்யாணம் பண்ணேனு நினச்சுட்டீங்கல்ல? என்னால இங்க ஒரு நிமிஷம் கூட இனி இருக்க முடியாது" என்று கூறியவள் அதை செயல்படுத்த வெளியேற போன நேரம் அவள் கைப்பிடித்து நிறுத்தினான் ஆனந்த்.


அன்பு தொடரும்..
 

Rajam

Well-known member
Member
ஆனந்த் ஒரு முட்டாள.
பேசறதை எல்லாம் பேசிட்டு
இப்போ உண்மை தெரிந்து
மன்னிப்பு கேட்டு என்ன பயன்.
ரிது கோபம் நியாயம் தான்.
 

ரித்தி

Active member
Member
K
ஆனந்த் ஒரு முட்டாள.
பேசறதை எல்லாம் பேசிட்டு
இப்போ உண்மை தெரிந்து
மன்னிப்பு கேட்டு என்ன பயன்.
ரிது கோபம் நியாயம் தான்.
கண்டிப்பா sis..
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom